Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    MALE(புருஷோத்தமர் கண்ணன்)க்கும் மேலான FEMALE(ஆண்டாள்)….!

    171231 -Tiruppavai 15-watercolour lr NAnedanAyiduga -24x32cms  Rama, Kuvalayapida, Vaishnavas, trapped in samsara, absence of vairagyam.
    171231 -Tiruppavai 15-watercolour lr NAnedanAyiduga -24x32cms Rama, Kuvalayapida, Vaishnavas, trapped in samsara, absence of vairagyam.

    ’’திருப்பாவை தந்த திருவில்லிப் புத்தூர்
    குருப்பார்வை கொண்டனள் கேசவ் -விருப்பத்தால்,
    மானைத்தன் சீடனாக்கி மாதாண்டாள் தாணுர்ந்த
    ஆணை(புருஷோத்தமர்)’’நான்’’ என்றாள் அவள்’’….கிரேசி மோகன்….கேசவ் சரியா….!

    Share
  • 2017 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் எவை?

    பவள சங்கரி

    தலையங்கம்

    2017இல் உலகளவிலும், இந்தியாவிலும் நடந்துள்ள பல்வேறு நிகழ்வுகள் இந்த ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக ஆக்கியுள்ளது. உலகளவில் பார்க்கும்போது ரொஹீங்கியா அகதிகள் பிரச்சனை நமது கிழக்காசியாவிலும், அரேபிய நாடுகளில் இன்றும் நடைபெற்று வரும் போர்களும், சிரியாவிலிருந்து உலகளவில் சென்ற அகதிகள் பிரச்சனையும், அமெரிக்காவில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் அவர்களின், ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையும், ஆறு நாடுகளைச் சார்ந்த இசுலாமிய மக்கள் தங்கள் நாட்டிற்குள் வருவதைத் தடை செய்தும், அமெரிக்காவில் அளிக்கப்படும் எச்.1பி விசாவும், உடன் வரும் வாழ்க்கைத் துணைவர்கள் பணிக்குச் செல்லத் தடை விதித்தும் வெளியிட்ட அறிவிப்புகளால் சீனா மற்றும் இந்தியாவைச் சார்ந்த தொழில் வல்லுநர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளன. சிரியா நாட்டின் அகதிகள் ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்குக் குடிபெயர்ந்தும், சில நாடுகள் அவர்களை ஏற்க மறுத்தும் கடலில் பல ஆயிரம் பேர் இறந்ததும், உருசியாவில் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்தலில் போட்டியிடாமல் தடை செய்யப்பட்டும் உலக அரங்கில் இதுபோன்று பல்வேறு நிகழ்வுகள் குறிப்பிடும்படியாக நிகழ்ந்துள்ளன.

    இதே ரொஹீங்கியா அகதிகளை இந்தியாவும் ஏற்க மறுத்தது. பொருளாதாரத்தில் நம் இந்தியப் பிரதமரின் அதிரடியான அறிவிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையும் தமிழகத்தைப் பொருத்தவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த இந்த ஓராண்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், தமிழக அரசியலிலும் ஏற்பட்ட பல மாற்றங்களும் மிகுந்த விவாதங்களுக்குரியதாகும். பல ஆண்டுகளாக போக்குக் காட்டிவந்த நடிகர் திரு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகவும், தனிக்கட்சி தொடங்குவதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து, காலங்கடந்த முடிவெடுத்துள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏறு தழுவுவதற்காகத் தமிழக மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்திய போராட்டங்களும், தமிழ் இளைஞர்கள் கண்ணியமானவர்கள், கலாச்சாரத்திற்காகப் போராடுபவர்கள் என்று உலக அரங்கில் இந்த இளைஞர்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்ததும் இந்த ஆண்டுதான். இதையொட்டி கர்நாடகாவில் எருது விழாவும் தொடங்கப்பட்டதும் இந்த ஆண்டுதான். புயலால் சென்னை பாதிக்கப்பட்டும், மீண்டும் குமரியில் புயல் வந்தபோதும் அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்காததால் பல ஆயிரம் மீனவத் தோழர்கள் மறைந்தும், பலர் காணாமல் போயிருப்பதால் இன்றும் தேடும் படலம் தொடர்ந்தவாறே உள்ள நிலையில் கேரள அரசின் மனிதாபிமான செயல்பாடுகளும் இந்த ஆண்டில் வரவேற்கத்தக்க வகையில் நடைபெற்றுள்ளன. வரும் புத்தாண்டில் அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்வும், வளமான வாழ்வும் வழங்கக்கூடிய ஆண்டாக 2018 ஆம் ஆண்டு அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்ற அதே வேளையில் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இளைஞர்களைப் பாராட்டி வாழ்த்தி, உற்சாகப்படுத்துவோம்.

    Share
  • 2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்

    unnamed (1)

    [February 27, 2017]
    We are excited to announce that SpaceX has been approached to fly two private citizens on a trip around the Moon late next year. They have already paid a significant deposit to do a Moon Return Trip. 
     
     
    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
     
     
    ++++++++++++
     
     
    Space X Spacecraft Cruise to Moon 2018
     
    ++++++++++
     
     
    நிலவில் தடம் வைத்துக் கால்
    நீண்டு அடுத்து
    செந்நிறக் கோள் செவ்வாயில்
    எட்டு வைக்கும்
    திட்டம் தயாராகி விட்டது !
    இன்னும்
    பத்தாண்டுகளில்
    செவ்வாய்க் குடியிருப்பு
    கட்டுமானம்
    காட்சித் தங்கு தளமாய்
    ஆட்சியாளர்
    கைவசம் ஆகிவிடும் !
    செல்வந்தர்
    குடிபோகும் புதியதோர்
    காலனியாய்ச்
    செவ்வாய்க்  கோளாகி
    சிவப்பொளி
    விண்வெளி யுகத்தில்
    சுடரப் போகுது !
    கவரப் போகுது !
    தென்னாப்பிரிகா  தீரர்
    ஏலாம் முஸ்க்கின்
    உன்னத விண்வெளித் திட்டம்.
    புதிய படைப்பு.
     
    +++++++++++
    +++++++++
    Dragon Spacecraft Launch & Recovery
     
     
    This year 2017, SpaceX will execute some key flight tests of Crew Dragon, a vehicle designed to carry astronauts, in preparation for our first human
    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    SPOUSE(S)
    CHILDREN 6
    PARENT(S)
    RELATIVES
    SIGNATURE
    Elon Musk
    2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோள்  சுற்றுலாப் பயணப் போக்குவரத்து துவங்கும் திட்டம்.
     
    2025 ஆண்டில் அமெரிக்கா, ரஷ்யா, சைனா, ஐரோப்பிய நாடுகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்கு மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பலை ஏவும் முயற்சியில் முனைந்துள்ள போது, தனியார் தன்னார்வத்தில்  அதே குறிக்கோளை குறைந்த செலவில், மிகுந்த ஆற்றலில், வெகு விரைவாகச் செய்ய முனைகிறார் தென்னாப்பிரிக்க அமெரிக்கர் ஏலான் ரீவ் முஸ்க் [Elon Reeve Musk].  அவர் பிறந்தது : ஜுன் 28, 1071.  வயது 46.  அவர் ஓர் எஞ்சினியர், கண்டுபிடிப்பவர், கனயந்திரத் தொழில் அதிபர்.  உலகிலே பெரிய செல்வந்தர்.  அவரது உடைமை 20.8 பில்லியன் டாலர் [2017]   சூரிய நகர், டெல்ஸா, அண்டவெளிக் காலனி  [SolarCity, Tesla, and SpaceX]  நிறுவனங்களின் முதன்மை அதிபதி.
    Image result for spacex heavy lift rocket
    உன்னத செல்வந்தர் ஏலாம் முஸ்க்கின் ஞான ஒளி & குறிக்கோள்  [Vision & Mission] இவைதான் :
     
    1.  பூமிமேல் ஒரு முரண்கோள் வீழ்ச்சியோ அல்லது பூத எரிமலை வெடிப்போ நம்மை எல்லாம் அழித்து விடும்.  ஒரு நூதனப் படைப்பு வைரஸோ, கடுகளவு கருந்துளையோ,  கடும் பூகோளச் சூடேற்றமோ,  நமக்குத் தெரியாத ஓர் பேரழிவுப் போராயுதமோ நமக்கு மரணத்தை உண்டாக்கி விடலாம். மனித இனம் பல மில்லியன் ஆண்டுகளாகத் தோன்றி வளர்ச்சி அடைந்துள்ளது.  ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக அணுக்கரு வெடிப்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு , நாமே நம்மை அழித்துக் கொல்லத் துணிந்து விட்டோம்.  நாம் பூமியை விட்டு  அப்பால் கடந்து சென்று, வெளியேற வேண்டும்.
    2.  ஏலான் முஸ்க்கின் குறிக்கோள் :  மனிதப் பயண விண்கப்பல் செலவு 10 மடங்கு குறைய வேண்டும்.  இன்னும் 10 – 20  ஆண்டு களில் மனிதரைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்ப முடியும் என்று நம்புகிறார்.  2040 ஆண்டுக்குள் 80,000 மனிதர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்புக் காலனியைச் செவ்வாயில் நிறுவகம் செய்ய முனைகிறேன்.  செவ ்வாய்க் கோள் சூழ்வெளியில் உயிர்வாயு [Oxygen] குன்றி யுள்ளதால், பயணப் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மின்சக்தியில் இயங்கிவரும்.  2022 ஆண்டில்  முதல் மனிதரற்ற ] செவ்வாய்க் காலனி வாகனம் [MCT – Mars Colonial Transporter] அனுப்பப்படும்.  2024 ஆம் ஆண்டில் முதல் மனிதர் இயக்கும் செவ்வாய்க் காலனி வாகனம் ஏவப்பட்டு, செவ்வாயில் மனிதர் குடியேற வசதிகள் அமைக்கப்படும்.
    அண்டவெளிப் பூத ஏவுகணைச் சோதனை.  
    ++++++++++++++++++++
    Image result for spacex heavy lift rocket
     
     
    ஸ்பேஸ் X  துணைகணை பூமிக்கு மீள்கிறது
     [தொடரும்]

    +++++++++++++++++++++++++++

    Proton -M Rocket

    A Russian Proton-M rocket carrying the European-Russian ExoMars 2016 spacecraft blasts off from the launch pad at Baikonur cosmodrome

    [Prototype Testing]

     

    Image result for erxomars mission 2020 with russia proton-m rocket

    செவ்வாய்க் கோள் செல்ல ஈசாவின் திட்டம்

    Exo-Mars Mission Path

    2020 ஆண்டில் செவ்வாய்க் கோள் செல்லும் ஐரோப்பியத் திட்டம்

    2020 ஜூலை 24 ஆம் தேதி ஈரோப்பிய தளவுளவியைச் சுமந்து கொண்டு ரஷ்ய ராக்கெட் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு விஞ்ஞான ஆணையகத்தின் தலைவர், டானியல் ரோடியோனாவ் 2017 அக்டோபர் 10 இல் அறிவித்தார்.   சுமந்து செல்லும் ஈரோப் தயாரித்த செவ்வாய்த் தளவுளவியும் [Mars Rover], ரஷ்யாவின் இறங்கு தளப்பீடமும் [Landing Platform] 2020 மே மாதம் ரஷ்யன் ஏவுகணைத் தளத்தில் வந்து இறங்கும் என்று கூறினார்.  அத்திட்டம் செவ்வாய்க் கோளில் செம்மண் அடிப்பைத் [Dust Storm] தவிர்க்க 2018 ஆண்டிலிருந்து 2020 ஆண்டுக்குத் தள்ளி வைக்கப் பட்டது என்றும் குறிப்பிட்டார்.

    Image result for erxomars mission 2020 with russia proton-m rocket

    ரஷ்ய புரோட்டான் -M  ராக்கெட் கட்டமைப்பு

    Orbiter, Lander Module, Rover

    ஈசாவின் விண்சுற்றி & தளவுளவி

    செவ்வாய்த் தளவுளவி சுமார் 8 அல்லது 10 மாதங்கள் திட்டமிட்ட பணிகளைப் புரியும்.  முக்கியப் பணி செவ்வாய்த் தளத்தில் 2 மீடர் [7 அடி] துளைகளைத் தோண்டி, உயிரின மூலவிகள் ஒரு காலத்தில் இருந்தனவா என்று சோதிக்கும்.  சோதிக்கும் இரண்டு கருவிகள் : லாரா & ஹாபிட் [LARA & HABIT].  கருவிகளைத் தயார் செய்தவை : ஐரோப்பிய நாடுகள். இத்திட்டம் ஈரோப் விண்வெளி ஆணையகம், ரஷ்யன் ராஸ்கோமாஸ் விண்வெளி ஆணையகம் [ESA – Euroean Space Agency & Russian Roscosmos Space Corporation] ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியே.  திட்டத்தின் முக்கிய குறிக்கோள் செவ்வாய்ச் சூழ்வெளியில் மீதேன் இருப்பது,  ஒரு காலத்தில் உயிரின மூலவிகள் தோன்றக் காரணமானது என்பதை எடுத்துக் காட்டத்தான்.

    Lander Module -5

    Lander Module -6

    2017 ஆண்டு ஆரம்பத்தில் முதன்முறை செய்த ஏவுகணைக் கட்டமைப்புப் பயண முயற்சி, செவ்வாய்க் கோள் அருகில் சென்றவுடன் தவறுகள் நேர்ந்து தோல்வியுற்றது.  2017 மார்ச் 14 ஆம் தேதி பைகோனூர் விண்வெளி ஏவுதளத்தி லிருந்து முதலில் ஏவப்பட்ட செவ்வாய் விண்சுற்றியும், தளவுளவி இறக்கியும் [Mars Orbiter & Landing Modules] ஏதோ சாதனப் பழுதாகி, 2017 அக்டோபர் 16 இல் செவ்வாய்க் கோளை அடையாது வழி தவறி விட்டன.  ஈசா தளவுளவி செவ்வாயில் விழுந்து முறிந்ததாக உறுதி செய்தது.

    Image result for ESA EXOMARS 2020

    Image result for erxomars mission 2020 with russia proton-m rocket

    ஈசா செவ்வாய்த் தளவுளவி & இறங்கு தளப்பீடம்

    ++++++++++++++++++++

    olympus-mons-volcano-5

    செவ்வாய்க் கோளில் எழுந்த பூர்வீகப் பூத எரிமலை

    mars-volcano-olympus-mons

    அது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள்  அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West Africa (NWA) 7635] எனப் பெயரிடப்பட்டு, செவ்வாய்க் கோள் மாதிரிகளாக அறியப் படுகின்றன.  NWA 7635 எறிகற்கள் 1.1 மில்லியன் ஆண்டுகள் அகிலக் கதிர்களால் [Cosmic Rays] தாக்கப்பட்டுச் செவ்வாய்க் கோளிலிருந்து வீழ்ந்தவை என்று ஆராயப்பட்டுள்ளன.  எறிகற்கள் 500 மில்லியன் ஆண்டு கட்கு முற்பட்டவை என்று அறிந்தோம்.  அதாவது செவ்வாய்க் கோளில் 2 பில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலைப் பாறைக் குழம்பு [Magma] ஒரே தளத்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது.  அதுபோல் பூமியில் எங்கும் எரிமலையில் நிகழ்ந்ததில்லை.

    மார்க்  காஃப்ஃபி [Marc Caffee, Professor of Astronomy, Purdue University, USA]

    olympus-mons-volcano-8

    olympus-mons-volcano-10

    செவ்வாய்க் கோளிலிருந்த வீழ்ந்த ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலைக் கற்கள்

    2012 ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் ஓர் அபூர்வ விண்கல் [Meteorite] கண்டு எடுக்கப்பட்டது.  அந்த எறிகல்தான் செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகள் இருந்திருப்பதை விஞ்ஞானிகளுக்கு உறுதி செய்துள்ளது. அந்த மாதிரி விண்கல் இதுவரைப் பூமியில் காணப்பட வில்லை.  6.9 அவுன்ஸ் எடையுள்ள அந்த எறிகல்லை அகில உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, செவ்வாய்க் கோளில் ஒரு பூத எரிமலை 2 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்து பொங்கி எழுந்துள்ள நிகழ்ச்சி தெரிய வருகிறது.

    ஓவ்வோர் ஆண்டும் 1000 மேற்பட்ட எறிகற்கள் அண்டார்க்டிகா, மற்றும் பாலைவனங்களில் செவ்வாய்க் கோளிலிருந்தோ , நிலவிலிருந்தோ விழுகின்றன.  அவற்றில் சாதாரண மாதிரி விண்கற்கள் ஆய்வுக்காக ஸ்மித்சோனியன் ஆய்வுக் கூடத்துக்கும், அபூர்வமானவை நாசா விண்வெளி ஆணையகத்துக்கும் அனுப்பப் படுகின்றன.  அவற்றில் 100 எறிகற்கள் செவ்வாய்க் கோளிலிருந்து விழுந்துள்ளதாக அறியப் பட்டுள்ளன.  அவற்றுக்கு வடமேற்கு ஆஃபிரிக்க [North West Africa NWA 7635] மாதிரிகள் என்று பெயர் இட்டுள்ளார்.  2012 இல் கண்டு பிடிக்கப்பட்ட அந்த 11 எறிகற்கள் ஒரே மாதிரி இரசாயனத் தாதுக்கள் பெற்று செர்கோட்டைட் [Shergottite] என்னும் எரிமலைப் பாறையைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டது.

    olympus-mons-volcano-4

    ஒலிம்பிக் மான்ஸ் எரிமலை வாய்

    செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை மிகவும் தணிவானது.  அத்துடன் அதன் மேற்தளத்து மெல்லிய வாயுச் சூழ்வெளியால், கோள் மீது தாக்கி எறியப்படும், துண்டு துணுக்குகள் வெகு எளிதில் வெளியேற ஏதுவாகிறது. மேலும் அந்த எறிகற்கள் நேரடியாகப் பூமிமேல் பாய்ந்து விழுவதில்லை. செவ்வாய்க் கோளின் எறிகற்கள் விண்வெளியில் பல மில்லியன் ஆண்டு களாய்ப் பாதைகளில் சுற்றிவந்து, ஏதோ ஒரு மாற்றத்தில் நம் பூமி மீது பாய்ந்து விழுந்துள்ளன.

    olympus-mons-meteorite

    விஞ்ஞானி மார்க் காஃப்ஃபி காணப்பட்ட 100 எறிகற்களில் 30 மாதிரிகளை பர்தேவ் அரிய ஏகமூலப் பரிமாண ஆய்வுக்கூட  [Purdue Rare Isotope Measurement Laboratory] [PRIME LAB] ஆய்வுக்காகக் கொண்டுவந்தார். அவை செவ்வாய்க் கோளில் நேர்ந்த பூர்வீக நிகழ்ச்சிகளால் எறியப் பட்டவை என்று முடிவில் தீர்மானித்தார்.  அவற்றில் 11 மாதிரிகள் ஒரே சமயத்தில் செவ்வாய்க் கோளிலிருந்து எறியப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டார். அவற்றில் 10 மாதிரிகள் சுமார் 500 மில்லியன் முன்பு, எரிமலைக் குழம்பு [Magma] வெப்பம் தணிந்து வீழ்ந்தவை என்று ஆய்வில் கண்டுபிடித்தார். அவை செவ்வாய்க் கோளில் காணப்பட்ட எரிமலையின் [NWA 7635] எறிகற்கள் என்றும், எரிமலை 2.4 பில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் ஆய்வில் கண்டு தெரிவித்தார்.

    அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசியர் டாம் லேபன் [ Tom Lapen] 2017 பிப்ரவரி முதல் தேதி விஞ்ஞான முன்னேற்ற வெளியீட்டில்  [Journal Science Advances] செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகளின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, எவ்விதம் கோளானது தோன்றியது என்று புதிய கருத்துக்களைக் கூறுகிறார்.

    olympus-mons-volcano

    நமது சூரிய மண்டலத்தில் செவ்வாய்க் கோளில் மட்டும்தான் மகத்தான பெருநிறை எரிமலைகள் இருந்திருப்பதாக அறியப்படுகின்றன.  காரணம் செவ்வாய்க் கோளில் பூமிபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Activities] இல்லை. ஈர்ப்பு விசை தணிவானதால், செவ்வாய்க் கோளில் எரிமலைக் குழம்பு ஓட்டம் நெடுங்காலம் நீடித்துள்ளது.  எல்லாவற்றிலும் மிகப் பெரியது“ஒலிம்பஸ் மான்ஸ்” [Olympus Mons] என்னும் பூத எரிமலை.  அது ஒரு “கவச எரிமலை”  [Shield Volcano] என்று அழைக்கப்படுகிறது. ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை 16 மைல் [25 கி.மீ.] உயரம் உள்ளது. பீட  விட்டம் 374 மைல் [624 கி.மீ.].  அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பரப்பளவு உள்ளது.  ஏறக்குறைய பிரான்ஸ் பரப்பளவுக்கு ஒப்பானது.  அது 4 மைல் [6 கி.மீ.] உயரப் பட்டை [Rim] கொண்டது. சிகரத்தில் எரிமலை வாய் [Caldera] 50 மைல் [80 கி.மீ.]  அகண்டது.  பூமியில் ஹாவாயித் தீவுகளில் ஒன்றான “மௌனா லோவா” [Mauna Loa] மலையை விட 100 மடங்கு பெரியது.

    olympus-mons-volcano-9

    Ocean of Mars

    செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து.  அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..

    கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.

    விண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன  இருக்க முடியும்?  மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.

    லொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]

    Mars Ocean

    நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில்  உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில்  இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]

    செவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன.   இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.

    லிண்டா கா [Linda Kah, Associate Professor of Earth & Planetary Science, University of Tennessee, Knoxville]

    Clues for water in Mars

    1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான் : அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன ! முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது !

    தற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.

    Water flow in Mars -1

    சிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு.   இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது.   ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.

    பேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]

    நெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள்  உருவாக ஏதுவாகும்.  அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும்.  பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது.   இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம்.  அவற்றின்   அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார்.   தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ்.

    Pebbles in Mars

    நீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு  செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது

    ஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory]  150 கி.மீ. அகண்ட  (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும்,  அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது.  கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன.   கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன.   அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst]  தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார்.   இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.

    Martian water

    செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

    ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]

    “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

    டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

    Water flow in Mars -2

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o  

    [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    “ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

    “ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

    ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்

    “பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.

    ‘ ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

    செவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா ? 

    கடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது.    விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.    இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை.   முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும்.   2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    Methane Detection in Mars

    அதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை.   மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர்.   செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுவதாகக் கூறினர்.   ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின.  40 ஆண்டுகளாக  செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது.  மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.   நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன. நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி   இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது.   தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.

    Kasei Valles Maps of Mars

    நாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

    2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !

    fig-1b-maven-spacecraft-instruments

    செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !

    ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது ! பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்க லாம் என்று  ஊகிக்கிறார்கள் !

    fig-1c-climate-orbiter-equipment

    மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன ?

    2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்

    1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற் றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.

    2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவு களை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.

    3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது. 4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.

    மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்

    செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங் களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப் படும். நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

    Flood waters on Mars -1

    புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும்.  அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :

    1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.

    2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.

    Kasei Valles of Mars

    3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.

    4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.

    5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.

    6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)

    7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.

    8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.

    9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.

    10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).

    fig-1g-climate-orbiter-details

    முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

    ஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கி லிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :

    . . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.

    . . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)

    . . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)

    . . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)

    . . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

    fig-2-mars-earth-atmospheres

    ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !

    செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !

    1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

    (தொடரும்)Mars Exploration

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: ESA, NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace  By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html(Mars Probe Spacecrafts) 20 (A) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)

    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html(செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html(செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html(செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html(செவ்வாய்க் கோளுக்கு ஃபீனிக்ஸ் தளவுளவி)

    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html(செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)

    26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]

    27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)

    28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)

    29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)

    30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)

    31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)

    33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)

    34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)

    35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)

    37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher [Oct 13, 2008]

    38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)

    39. https://jayabarathan.wordpress.com/2012/08/10/curiosity-2/ NASA’s Land Probe -Curiosity [August 2012]

    40. Daily galaxy : Mar’s Methane Debate – A Sign of Life or a Mirage ? [September 11, 2012]

    41. Wired Science : Life on Mars ? Non-Detection of Methane Suggests No Modern-Day Microbes. [November 2, 2012]

    42. NASA Land Probe Curiosity Close to Solving Mystery of Mars’ Missing Atmosphere [November 2, 2012]

    43.  http://news.nationalgeographic.com/news/2012/09/120927-nasa-mars-science-laboratory-curiosity-rover-water-life-jpl/ [September 27, 2012]

    44.  http://www.nasa.gov/mission_pages/msl/news/msl20120927.html   [September 27, 2012]

    45.   http://www.utk.edu/tntoday/2013/05/30/mars-curiosity-rover-strong-evidence-flowing-water/ [May 30, 2013]

    46.  http://www.thehindu.com/sci-tech/science/rounded-pebbles-on-mars-point-to-water-flow/article4769911.ece  [June 1, 2013]

    47.http://www.naturalnews.com/040610_water_on_Mars_pebbles_space_exploration.html [June 4, 2013]

    48.http://www.esa.int/Our_Activities/Space_Science/Mars_Express/The_floodwaters_of_Mars[June 6, 2013]

    49.  http://en.wikipedia.org/wiki/Viking_program  [February 2, 2014]

    50. www.dailygalaxy.com/my_weblog/2014/02/image-of-the-day-clues-found-that-liquid-water-may-exist-on-mars-today-.html  [February 12, 2014]

    51.  www.dailygalaxy.com/my_weblog/2014/02/a-vast-oceanus-borealis-may-have-once-covered-13-of-mars.html  [February 17, 2014]

    52. http://www.space.com/20133-olympus-mons-giant-mountain-of-mars.html  [March 8, 2013]

    53.  https://en.wikipedia.org/wiki/Olympus_Mons  [January 29, 2017]

    54. http://marsprogram.jpl.nasa.gov/gallery/atlas/olympus-mons.html

    55. http://www.marsdaily.com/reports/UH_research_finds_evidence_of_2_billion_years_of_volcanic_activity_on_Mars_999.html?mc_cid=ecba864f25&mc_eid=bb33fe70f4  [February 3, 2017]

    56. http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/-monster-mars-volcano-erupted-continuously-for-two-billion-years-unlike-anything-ever-seen-on-earth.html  [February 6, 2017]

    57.  https://www.universetoday.com/128689/exomars-rover-postponed/ [may 3, 2016]

    58. https://en.wikipedia.org/wiki/ExoMars  [September 26, 2017]

    59. http://www.marsdaily.com/reports/Russian_Space_Research_Institute_Announces_July_2020_Date_for_Mission_to_Mars_999.html  [October 10, 2017]

    60. https://www.space.com/35876-how-spacex-moon-flight-will-work.html [March 1, 2017]

    61. https://www.space.com/37668-spacex-first-falcon-heavy-launch-in-november.html [July 30, 2017]

    62. https://en.wikipedia.org/wiki/SpaceX_Mars_transportation_infrastructure [December 27, 2017]

    63.  https://en.wikipedia.org/wiki/Falcon_Heavy  [December 29, 2017]

    64. https://en.wikipedia.org/wiki/Elon_Musk  [December 29, 2017]

    ++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  Dcember 30, 2017  [R-3]

    https://jayabarathan.wordpress.com/

    Share
  • 2017 ஒரு பார்வை!

    -சக்தி சக்திதாசன்

    வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன்.எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக உங்கள் முன்றிலிலும் விழுகிறது.

    முதலாவதாகச் சர்வதேச அரங்கை எடுத்துப் பார்க்கிறேன். 2017ஆம் ஆண்டின் ஆரம்பம் அனைத்து உள்ளங்களையும் வித்தியாசமான உணர்வுகளால் தாக்கியது. ஜனநாயக அரசியலில் முன்னணியில் நிற்கும் மேலை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறது? எனும் கேள்வி அரசியல் ஆர்வலர்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை சர்வதேச அளவில் மிகப்பெரிய கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தனது தேர்தல் பிரசார மேடைகளில் மிகத் தீவிரமான வலதுசாரப் போக்கைக் கடைப்பிடித்த அமெரிக்க ஜனாதிபது ட்ரம்ப் அவர்கள் பயணிக்கப் போகும் பாதையும், அப்பாதையினால் ஏற்படப்போகும் சர்வதேசத் தாக்கத்தைப் பற்றிய ஒருவிதமான அச்ச உணர்வும் மக்களிடையே பரவியிருந்தது. இன்றைய சூழலில் அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகும் நிலையில் அவரின் அதிகாரம் நான் எதிர்பார்த்ததை விடக் குறைந்த அளவிலான சர்வதேசத் தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளின் மீதான அவரது செயற்பாடுகளும், அமெரிக்க உள்நாட்டு இனவாதப் பிரச்சனைகளின் மேலோக்கத்திற்குத் துணை போகும் அவரது சில செயற்பாடுகளையும் தவிர இதுவரை மட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே திரு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

    நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொண்டால் 2016 நடைபெற்ற “ப்ரெக்ஸிட்” எனும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் சர்வதேச வாக்கெடுப்பின் முடிவே இன்றுவரை இங்கிலாந்தின் அரசியலில் முன்னணியில் நிற்கிறது என்பதுவே உண்மை. இதன் எதிரொலியாக ஒரு தேர்தலை இங்கிலாந்து எதிர்கொண்டதும், ஒரு மைனாரிட்டி அரசாங்கம் அமைய வேண்டிய நிலை ஏற்பட்டதும் இங்கிலாந்து அரசியலில் 2017 பதித்த முத்திரைகள் என்றால் மிகையாகாது. இந்த ப்ரெக்ஸிட் என்பது ஐரோப்பிய முன்னணியின் மீதுதான் தாக்கம் ஏற்படுத்தியது என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து மக்களின் அரசியல் களத்தையே இரு பாதிகளாகப் பிரித்துள்ளது என்பதும், ஒரு விதமான இனத்துவேஷத்தை மக்கள் மனங்களில் தூவியிருக்கிறது என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகின்றன.

    இவ்வரசியல் பிரிவு என்பது கட்சிரீதியானது மட்டுமல்ல கட்சி பேதங்களைக் கடந்து வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை சில சமயங்களில் இணைத்திருக்கிறது என்பதும் உண்மை. 2017ஆம் ஆண்டு இதுவரை மூன்று அமைச்சர்களைக் காவு கொண்டிருக்கிறது. வெவ்வேறு காரணங்களுக்காக இதுவரை மூன்று அமைச்சர்கள் இதுவரை தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்கள். இங்கிலாந்துப் பிரதமரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே தொங்கிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் எதிர்காலப் பொருளாதாரம் ஒரு பின்னடைவைத் தற்காலிகமாகவேனும் எதிர்கொள்ளப் போகிறது என்பது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் உண்மையாகிறது. 2018 எமக்கு என்ன கொண்டு வரப்போகிறது என்பது . . .

    மற்றைய ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால், அதில் முன்னணி வகிக்கும் ஜேர்மனி, பிரான்சு, ஆஸ்ட்ரியா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளிநாட்டவருக்கெதிரான ஒருவகை இனத்துவேஷ அடிப்படையிலான அரசியலே மேன்மை வகிக்கிறது என்பது கவலைக்குரிய விடயமாகவே இருக்கிறது 2017இல் தலைதூக்கிய இப்பிரச்சனை 2018இல் எத்தகைய வடிவத்தை எடுக்கப் போகிறது என்பதை அரசியல் அவதானிகள் மிகவும் அவதானத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 2017 ஜேர்மனிய, பிரான்சு தேர்தல்களில் ஒரு புதுவிதமான அரசியல் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

    வடகொரியாவின் தொடரும் அச்சுறுத்தல்கள் எங்கே உலக அமைதிக்குப் பங்கம் விளைவித்து விடுமோ எனும் அச்சம் அனைவரின் மனங்களிலும் மேலோங்கியுள்ளது. சிரியா நாட்டின் போர் ஓரளவுக்கு அடக்கப்பட்டு விட்டாலும் மக்கள் முழுமையான விடிவுக்குள் நுழைந்து விட்டார்களா? என்பது கேள்விக்குறியே! அமேரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய செயற்பாட்டினால் இஸ்ரேலிய, பாலஸ்தீன அமைதிப் பேச்சுக்கள் பின்னடைந்தது போன்றதோர் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியின் முழுத்தாக்கமும் 2018இல் தான் உணரப்படும் போன்றே தோன்றுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைதியின்மைக்கு 2018 ஒரு விடிவை நல்குமா? என்பது உலக நலம் விரும்பிகள் அனைவரின் மனங்களிலும் ஆவலோடு மேலோங்கும் கேள்வியாகிறது. ரஸ்ய நாட்டின் அரசியல் பாதை, சீனாவின் பொருளாதார மேன்மை என்பன சர்வதேச அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? இதற்கான விடைகளும் 2018க்குள் தான் ஒளிந்து கிடக்கின்றன.

    2017 இயற்கை அனர்த்தங்களையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும், வாரி வழங்கித்தான் இருக்கின்றது. இங்கிலாந்தில் மன்செஸ்டர், லண்டன் நகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும், அமெரிக்க நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும் மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் நிகழ்ந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களும் 2017ஆம் ஆண்டு மக்கள் மனதில் நீங்கா வடுக்களைப் பதித்திருக்கின்றது. இயற்கை அன்னை மக்களின் பேராசையின் பால் கொண்ட ஆவேசம் தான் இயற்கை அனர்த்தங்களாக உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

    அதேநேரம் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் துயருறும் மனங்களுக்கு ஒருவிதமான ஆறுதலை நல்குகின்றது என்பதும் உண்மையே. ஆனால் இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றங்கள் அடிமட்ட மக்களுக்குச் சென்றடையும் வேகம்2018இல் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைத்து மனங்களினதும் மாறாத அவா என்பதும் உண்மையே! தமிழ்நாட்டின் அரசியல்களம் 2017இல் மிகவும் வேதனையளிப்பதாகவே உள்ளது. அரசியல் நிலை சீரடைந்து 2018இல் மக்கள் ஒரு ஸ்திரமான நிர்வாகத்தினைக் காணவேண்டும் என்பது பிரார்த்தனையாகவே உள்ளது.

    எனது பிரத்தியேக வாழ்வினைப் பொறுத்தவரை 2017 ஒரு மிதமான ஆண்டாகவே இருந்திருக்கிறது . நான் விருப்ப ஓய்வூதியம் எடுத்து இது மூன்றாவது ஆண்டாகும்.  இருப்பினும் பல இன்னோரன்ன காரணங்களினால் எனது எழுத்துப் பணி நான் எதிர்பார்த்த வகையில் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. சிறிது மந்தமாகவே இருந்திருக்கிறது. 2017ஆம் ஆண்டின் சிகரமாக விளங்கியது யூலை மாதம் கனடாவில் நான் கலந்து கொண்ட எனது யாழ் மத்திய கல்லூரி 70களின் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வே ! அடுத்து என் வாழ்வில் புதுவரவாக 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்மிடையே வந்துதித்த எனது இனிய பேத்தியின் உறவே 2017ஆம் ஆண்டு என் மனத்தினை மகிழ்வால் நிறைத்தது என்றால் மிகையாகாது. என்னால் முடியாது என்று எண்ணியிருந்த சிலவற்றை முடித்ததும்,முடிக்கக்கூடிய பலவற்றை முடிக்காமல் விட்டதும் 2017இல் என்பதும் உண்மை. நவம்பர் நாம் மேற்கொண்ட பத்துநாட்கள் கப்பற் பயணம் கொடுத்த அனுபவங்களின் தளம் 2017 என்பதும் ஒரு மறக்க முடியா இன்ப அனுபவமே!

    வாழ்க்கை என்பது அனுபவமே! அகவை ஒவ்வொன்றும் அவசரமாய் ஓடி எனது 61வது அகவையின் நடுவில் 2018க்குள் நுழைகிறேன். 2017ஐ விட 2018 மகிழ்ச்சிகரமானதாக அமையும் எனும் நம்பிக்கையின் அடித்தளமே வாழக்கையை நடத்துகிறது. அதற்காக 2018இல் துன்பங்கள் எதுவுமே அண்டாது என்று கூறிவிட முடியுமா? எது வந்தாலும் அதிலுள்ள நன்மைகளை எடுத்து தீமைகளைத் தவிர்த்துப் பார்க்க எம்மை பக்குவப்படுத்திக் கொள்வதே சரியான மார்க்கமாகும்.

    ஆண்டொன்று போனால்
    வயதொன்று போகும்
    அதற்கு முன்னாலே வா! வா 
    அழகுடன் இளமை தொடர்ந்து வராது
    இருக்கின்ற போதே வா! வா!

    என்கிறது கவியரசரின் பாடல் வரிகள். இளமையைத் தொலைத்து விட்டு முதுமையின் வாயிலில் நிற்பவன் நான். இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் தரும் இனிமைகளை மனத்தில் தேக்கி வைத்து அதன் வலிமையோடு புதுவருடத்தினுள் நுழைவது ஒன்றே எமக்கு இருக்கும் ஒரே வழி.

    இளையோர், முதியோர் அனைவருக்கும் இப்பாமரனின் எளிமையான புதுவருட வாழ்த்துக்கள்.

    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    30.12.1017

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -16

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கச்சியூர்

    அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்

    cg103p006707

    வெள்ளைத் தாமரை வெறிச்சென நின்றது

    வீணையின் நரம்புகள் தளர்ந்தே துடித்தன

    வேதங்கள் ஒலியில் வாட்டமும் தெரிந்தது

    வாணியின சினத்தினில வானமே இருண்டது !

     

    வேகத்தில் வந்தாள் வேள்வியைத் தடுக்க

    வேதவன் நான்முகன் வேதனை கொள்ள

    வேகவதி வழியை வாமனன் தடுத்து

    வேதங்கள் காத்து வரதனாய் நின்றான்

     

    நான்முகன் வேள்வியை நசுக்கிடத் துடித்த

    நாமகள் தூதர்கள் நடுங்கிட வைக்க

    நாரணன் வலிமையை நானிலம் கண்டது

    நாதத்தின் தேவி நல்லெண்ணம் பெறவே !

     

    வரையின்றித் தருபவனே வரதப்பா வைகுந்தா

    நிறைவான மனம் வேண்டும் நீதருவாய் !

    குறையாத பேரின்பம் குலம்காக்கும் நல்லெண்ணம்

    மறைக்காட்டும் நல்வழியும் தருவாயே நன்மதியே !

     

    அலர்மேல் மங்கையவள் அன்போடு துணையிருக்க

    அசையாத விழியோடு  அமரர்கள் பார்த்திருக்க

    ஆதிசேடன் குடைபிடிக்க அமர்ந்தாயே அழகாக

    அடியார்கள் குறைகேட்க அருளாளா வைகுந்தா

     

    மல்லாண்ட தோளுடையோய் ! மலைவாழும் பேறுடையோய் !

    மனையாளை இதயத்தில் ஆட்கொண்ட மாண்புடையோய் !

    மதியறிந்த மலரெல்லாம் மணம்நிறையச் சேர்த்துவைத்து

    மலரடியில் வைத்தாலும் மங்கிடுதே நின்னொளியில் !

     

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (21)

     

    மீ.விசுவநாதன்

     

     

    பகுதி: 21

     

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்

    “மிதிலைக்குப் பயணம்”

    சங்கம உதய காலை

    சரியாய்த் தன்கடன் செய்ய

    மங்கல மூர்த்தி கதிரோன்

    மரங்கள் நதிகள் மீது

    தங்கமாய் ஒளியைப் பரப்பி

    தர்ம ரதத்தில் வந்தான்

    தங்களின் கடமை முடித்து

    தவத்தோன் மிதிலை நடந்தார் !

    ஜனகரின் மிதிலை நகர்க்குச்

    சரியாய்க் கொஞ்சம் முன்னால்

    வனத்தினைக் கண்ட ராமன்

    மனங்கொள் இந்தக் காட்டின்

    வனப்பினைக் காணும் போது

    வாழ்ந்த முனிகள் பேறு

    நினைவிலே வருகு தென்று

    தெளிந்த குருவைப் பார்த்தான் !

    “கௌதம முனிவரின் ஆஸ்ரமம்”

    இத்தனை அழகு கொண்ட

    இந்தக் காட்டில் முன்பு

    முத்தியைக் கொள்ளும் எண்ண

    முனிவர் நற்கௌ தமரே

    பத்தினி அகலி கையைப்

    பக்கம் வைத்தி ருந்தார் !

    சித்தமே குளிரும் வண்ணம்

    சிறப்புடன் வாழ்ந்து வந்தார் !

    “தவத்தின் வலிமையையும், பயமும்”

    வந்தனைக் குரிய முனியின்

    வளர்ந்திடும் தவத்தின் சக்தி

    இந்திரன் மனத்தில் பயத்தை

    எழுப்பி விட்ட தாலே

    அந்தவோர் முனிக்குக் கோபம்

    அலைபோல் பொங்கச் செய்ய

    சிந்தனை செய்த வேளை

    சிறுமை பொங்கி நின்றான்.

    “கௌதமர் போல் வந்த இந்திரன்”

    அகலிகை அழகில் மயங்கி

    அவளின் கணவன் போல

    முகமதை மாயம் செய்து

    மோக முடனே வந்தான்

    அகமதில் அழகா ணவத்தால்

    அவளும் வீழ்ந்து பட்டாள் !

    நகநுனி அழுக்கு அங்கே

    நாவில் நஞ்சு ஆச்சு !

    “முனிவர் தந்த சாபம்”

    முனிவரும் வந்தார் உடனே

    முகத்தில் கோபம் சீற

    “இனிஉன் ஆண்மை நீங்கி

    இன்னல் கொள்வாய்” என்று

    தனியொரு தேவ ராஜன்

    சாபம் கொள்ள வைத்தார் !

    இனிதொரு மனைவி பார்த்து

    இழிவாம் காம இச்சைப்

    பழியிலே வீழ்ந்த நீயோ

    “காற்றை மட்டும் உண்டு

    வழியிலே யார்க்கும் தெரியா

    வகையில் வனத்தில் வாழ்வாய் !

    பழியிலா இராமன் பார்வை

    பட்ட வேளை மற்றோர்

    விழிகளில் தெரிவாய்” என்று

    இமயம் சென்று விட்டார் !

    “அகலிகை சாபம் நீங்கியது”

    இப்படிப் பட்ட காட்டில்

    இராமா உள்ளே வாவா !

    தப்படி வைத்த பெண்ணை

    தயைசெய் தருள்வாய் என்று

    செப்பிய குருவை வணங்கி

    சென்றான் காட்டிற் குள்ளே !

    அப்பிய சாபம் நீங்கி

    அகலி கைத்”தாய்” தெரிந்தாள் !

    “இராமன் அம்மா என்று அழைத்தான்”

    இருகையைக் கூப்பிக் கொண்டு

    இராமன் “அம்மா” என்று

    திருவடி தொழுது நின்றான் !

    தேவர் குலமும் வாழ்த்த

    குருமுனி, இராமன் யார்க்கும்

    பூசை செய்து பணிந்தாள் !

    கருமமே தவமாய் வாழும்

    கௌத மரும்பூ சித்தார் !

    “மிதிலை நகருக்குப் பயணம்”

    முறைப்படி பூசை ஏற்று

    முன்னம் திட்டப் படியே

    கறையிலா சனக மன்னர்

    கனிவாய் ஆளும் நாடாம்

    நிறைமொழி பெரியோ ராலே

    நிறைந்த மிதிலை நோக்கி

    மறைமொழி அறிந்த குருவின்

    வழியில் நடந்தான் இராமன்.

     

    (தர்ம சரிதம் வளரும்)

     

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 48,49ம் பகுதி நிறைந்தது)

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -15

    க. பாலசுப்பிரமணியன்

    திருக்காவலம்பாடி

    அருள்மிகு கோபாலகிருஷ்ணப்  பெருமாள் திருக்கோவில்

     297199_124390817667684_114669075306525_115432_136719534_n

    கவளச் சோறைக் களிப்புடன் ஏற்கும்

    கரியின் துயரைக் கண்ணனே துடைக்கக்

    கலியினை நீக்கும் காவலன் புகழைக்

    கற்களில் வடித்த காவலம் பாடி !

     

    நெருப்பினில் பிறந்தவள் நெருப்பாய் எரிந்திட

    நினைப்பாய் நின்றவள் நினைவாய் மறைந்திட

    உமையாள் நினைவில் உருத்திரன் ஆடினான்

    இமைகள் அசையா அமரர்கள் நடுங்கிட !

     

    சினத்தில் சிவந்தது சிவனின் சிந்தை

    சிதறிய கனலாய் சிகையும் வீழ்ந்திடச்

    சீறிய நெருப்பில் பதினோரு சிவனே

    சீற்றத்தை தணித்திட சேர்ந்தனர் அமரரே !

     

    அமரர்கள் வேண்டிட அரங்கனும்  வந்தான்

    அமைதியைக் காக்க  அரனிடம்  வேண்டினான்

    அச்சுதன் கண்டே அமைதியைப் பெற்றான்

    ஆடியபாதன் வேண்டினான் அரங்கனின் அருளே !

     

    பதினோரு வடிவில் கண்ணனின் கருணை

    பாலகன் கோவிந்தன் பசுவுடை கோபாலன்

    பரவசம் கொடுக்கும் பதினோரு வடிவங்கள்

    பார்த்ததும் சிவனே பதுமையாய் நின்றான்.!

     

    மனத்துள்ளே நீயிருந்தால் மங்கலமே பொங்கிவிடும்

    மலரடிகள் நீதந்தால் மாயையெல்லாம் விலகிவிடும்

    மாதவனே ! யாதவனே ! மனமிரங்கி அருள்தருவாய்

    மார்கழியில் பேரருளை உனையன்றி யார்தருவார் ?

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102

    அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம், அனாத்தோலியா, துருக்கி

    முனைவர் சுபாஷிணி

    அப்ரோடைட் தெய்வத்தின் பெயரில் அப்ரோடையாஸிஸ் என்ற ஒரு நகரம் துருக்கியின் அனாத்தோலியா பகுதியில் உள்ளது. மிகப் பழமையானதொரு நகரம் என இது இப்பகுதியில் நிகழ்ந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் வழி கண்டறியப்பட்டது. கி.மு. 5800 வாக்கில் இங்கு ஒரு கோயில் இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்த குடியானவ மக்கள் இங்கு இக்கோயிலுக்கு வந்து வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர். அதிலும் மிக முக்கியமாகத் தாய் தெய்வம் இங்கே தலைமை தெய்வமாக வழிபடப்பட்டது என்றும் தாய்மை, மக்கள் பெருக்கம், பயிர்களின் விளைச்சல் ஆகியவற்றிற்காக இங்கே வழிபாடுகள் செய்யப்பட்டன. படிப்படியாக ஏறக்குறைய கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தக் கோயில் கிரேக்க தெய்வமான அப்ரோடைட் தெய்வத்திற்கான ஆலயமாக படிப்படியாக உருமாற்றம் கண்டது.

    unnamed (1)

    அப்ரோடைட் (Aphrodite) கிரேக்கத்தின் காதல் தெய்வம். இத்தெய்வம் அழகுக்கும் காதலுக்கும் இலக்கணமானவள். இவளே அழகு . இந்தத் தெய்வத்தின் பெயரில் ஓர் ஊர். அப்படியென்றால் எத்தனை அழகு நிரம்பியதாக அந்த ஊர் இருக்க வேண்டும் என்று நம்மால் ஊகிக்க முடிகின்றதா?

    unnamed (2)

    பல ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்த அப்ரோடைட் தெய்வத்திற்கான இக்கோயில் கி.மு.74 வாக்கில் ரோமானியர்கள் துருக்கியின் இப்பகுதிக்கு வந்து தங்கள் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்தப் பின்னர் மேலும் செழிப்புற்றது. அப்ரோடையாஸிஸ் நகரம் ஒரு கலாச்சார மையமாக படிப்படியாக விரிவாக்கம் கண்டது. அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைசண்டைன் காலத்தில், இந்த அப்ரோடையாஸிஸ் நகரின் அப்ரோடைட் தெய்வம் வீழ்ச்சி கண்டது. அப்ரோடைட் கோயில் கிருத்துவ தேவாலயமாக மாற்றம் பெற்றது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் இதன் சிறப்பும் புகழும் மங்கிக் குறையத்தொடங்கின. துருக்கி முழுமையான இஸ்லாமிய மத நாடாக உருமாற்றம் கண்டது. இன்று அப்ரோடையாஸிஸ் ஒரு கிராமமாகவே அறியப்படுகின்றது. ஆயினும் இங்கு நிகழ்த்தப்பட்ட விரிவான அகழ்வாராய்ச்சியின் வழி அறியப்பட்ட பண்டைய நகரம் இன்று இப்பகுதியைத் துருக்கியின் முக்கியமானதொரு சுற்றுலா தளங்களில் ஒன்றாகப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.

    நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியின் அண்டாலியா நகர் சென்றிருந்தபோது ஒரு நாள் பயணமாக அப்ரோடையாஸிஸ் நகருக்கும் அதன் அருகே உள்ள பமுக்காலே நீரூற்று பகுதிக்கும் சென்று வந்தேன். உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக இடம்பெறுவது பமுக்காலே. இதனைப் பார்த்து விட்டு அப்ரோடையாஸிஸ் நகர் வந்து அங்கு காணப்படும் சிதிலமடைந்த அப்ரோடைட் காதல் தெய்வத்தின் கோயிலைப் பார்த்து அங்கிருக்கும் அருங்காட்சியகம் வந்து இங்கு சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது.

    அப்ரோடைட் ஆலயம் இருக்கும் அப்பெரும் வளாகம் முழுமையும் அருங்காட்சியகம் பகுதியில் அடங்குகின்றது. இன்று நாம் காணும் அப்ரோடைட் கோயிலின் சிதிலமடைந்த பகுதிகள் அனைத்துமே கி.பி.1ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்ட அப்ரோடைட் ஆலயத்தின் பகுதிகளாகும்.

    unnamed (3)

    அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக 1979ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்ரோடையாஸிஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த அரும்பொருட்களே இங்கே ஆவணப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடங்கப்பட்டபோது பதியப்பட்ட ஆவணக்குறிப்பின் அடிப்படையில் ஏறக்குறைய 13,000 அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இவற்றுள் கி.மு.5000 வாக்கில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் அடங்கும் என்பது இப்பகுதி மிகப்பழமையானதொரு மக்கள் குடியிருப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாகின்றது அல்லவா?

    அனாத்தோலியாவில் உள்ள இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் சிலர் இப்பகுதியை அடையாளங்கண்டு இதனைப்பற்றிய செய்திகளை இங்கிலாந்தில் வெளியிட்டனர். வில்லியம் ஷெரார்ட் என்பவர் அப்ரோடையாஸிஸ் ஆலயத்தின் சிதலமடைந்த பகுதிகளின் சுவர்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகளை 1705ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிட்டார். 1812ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து சென்ற ஒரு குழு இப்பகுதியை ஓவியமாக வரைந்து வந்தது.

    unnamed (4)

    அதன் பின்னர் பிரெஞ்சுக்குழு ஒன்றும் இப்பகுதிக்குச் சென்று இங்குள்ள ஆவணங்களைப் பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தி அறிக்கைகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டது. இங்கு முதல் அகழாய்வுப் பணி 1904ஆம் ஆண்டு ஒரு பிரஞ்சுக்குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட குளியல் தொட்டிகள், கி.மு.27ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக அறியப்படும் நாடக மேடை (Theater) ஆகியவற்றை ஆலய வளாகத்தில் வெளிப்புறத்தில் இன்றும் காணலாம். முதல் அகழாய்வுப்பணிக்குப் பின்னர் மீண்டும் பல அகழ்வாய்வுப் பணிகள் இங்கேயும் இதன் அருகாமை நகர்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இன்றைய தேதி வரை. ஒவ்வொரு ஆய்வும் பண்டைய நாகரிகங்களை அடையாளப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் பலப் பல அரும்பொருட்களை நமக்கு வெளிக்காட்டுவனவாக அமைகின்றன.

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
    Geyre Mahallesi, 09385 Karacasu/Aydın Province, Turkey

    unnamed (5)

    வார நாட்களில் திங்கட்கிழமை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கின்றது. இப்பகுதிக்குச் சென்று கோயில் வளாகம், நாடகமேடை, அருங்காட்சியகம் என அனைத்தையும் பார்த்து விட்டு வரும்போது இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வுகளுடன் தான் திரும்பி வருவோம். சில ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட இன்றும் என் மனதில் பசுமையாகக் காட்சியளிக்கின்றது அப்ரோட்டைட் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த அப்ரோடையாஸிஸ் கிராமம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171229 - Tiruppavai 14 - Sing the supreme within - (Ambalvai koovinakaN) -watercolour 24x32cms - for Vaikuntha ekadasi lr
    171229 – Tiruppavai 14 – Sing the supreme within – (Ambalvai koovinakaN) -watercolour 24x32cms – for Vaikuntha ekadasi lr

    ”புழக்கடை தோட்டத்துப் பூக்களைகேட் டுப்பார்
    வழக்கிடும் தூங்காய் வனிதா, -கிழக்கிடை
    ஆதித்யன் தோன்றிவிட்டான் அம்பலம் சென்றோது
    சோதிவட்டச் சங்கன் சிறப்பு’’….கிரேசி மோகன்….!

    ’’சோதிவட்டம் -சுழலும் சுதர்ஸனத் திகிரி’’….!
    சங்கன் -சங்கு உடையவர்….!

    ”சங்குக் கழுத்தினள், சாரங்க நாணிடையாள்,
    பொங்கோதப் பாற்கடல் பேச்சுடையாள் , -பொங்காக்கண்(இரவெல்லாம் விழித்து எழுதியும் ‘’பொங்காக்கண்’’….!)
    மைகொண்ட மாதாண்டாள் மாதவர்மேல் காதலுற்றாள்,
    வைகுண்ட வாசல் விரி’’….கிரேசி மோகன்….!

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 17

    -மேகலா இராமமூர்த்தி

    மறுநாட் காலை தோழியும் தலைவியும் கண்விழித்துப் பார்த்தபோது வீட்டில் தலைவனைக் காணவில்லை. அதிர்ந்த அவர்கள் வீட்டுக்கு வெளியேவந்து பார்த்தனர். தலைவனின் தேரையும் காணவில்லை. தான் விரும்பியபடியே பொருள்தேடச் சென்றுவிட்டான் அவன் என்பதை அறிந்து இருவரும் ஏமாற்றத்தோடு வீட்டுக்குள் வந்தனர். அப்போது சாளரத்தின் ஓரமாய் ஓர் ஓலை நறுக்கைக் கண்டனர்.

    ”அன்புக் கண்மணி! பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நீ அறியாதவள் அல்லள்! கார்காலம் வருவதற்குள் மீண்டிடுவேன் பொருளோடு! அருமைத் தோழி! இயலுமாயின் தலைவியொடு உறை; நான் திரும்பி வரும்வரை!” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

    தலைவனின் செயலறிந்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள் தலைவி.

    தன்னைத் தேற்றிக்கொள்ள அவள் எவ்வளவோ முயன்றும் அம்முயற்சியில் தோற்றுத்தான் போனாள். கணவனைப் பிரிந்த ஏக்கத்தால் அவள் தூக்கம் கெட்டது; துக்கம் தீயாய்ச் சுட்டது! கடத்தற்கரிய துன்ப வெள்ளத்தில் அவள் நீந்திக்கொண்டிருந்த வேளையில், அருமைத் தோழி அருகிருந்தது அவளுக்குப் பெரும் ஆறுதலளித்தது. அவளிடம் தன் வேதனையை மனந்திறந்து வெளிப்படுத்தலானாள்…

    “வைகல் வைகல் வைகவும் வாரார்
    எல்லா
    வெல்லை எல்லையுந் தோன்றார்
    யாண்டுளர்
    கொல்லோ தோழி யீண்டிவர்
    சொல்லிய
    பருவமோ விதுவே பல்லூழ்
    புன்புறப்
     பெடையொடு  பயிரி  யின்புற
    இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
    ஊனசைஇ  யொருபருந்  திருக்கும்
    வானுயர்
     பிறங்கன்  மலையிறந்  தோரே. (குறுந்: 285 – பூதத்தேவன்)

    ”தோழி! இனிய ஆண் புறாவானது  புல்லிய புறத்தை உடைய பெண் புறாவைப் பலமுறையழைத்து, pegeonsஇமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை உடையதாக ஆகின்றது! அவை இங்ஙனம் மகிழ்ந்திருப்பவும், ஞெமை மரத்தின் உச்சியில் இறந்தோரது தசையை விரும்பி, ஒற்றைப் பருந்து இருக்கின்ற, வானளவும் உயர்ந்த விளக்கத்தை உடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர், நாள் தோறும் விடியற் காலம் நீங்கிப் பகல் வரவும் அப்பகல் காலத்தில் வந்திலர்; எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் மீண்டு வந்து தோன்றார்; எங்கே இருக்கின்றாரோ? இங்கே அவர் மீண்டு வருவேன் என்று சொல்லிய பருவம் இதுவே” என்றாள் வேதனையோடு.  

    தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் அண்மித்து விட்டதை எண்ணித் தலைவி கவன்று வேறுபட்டாள். அப்பொழுது தோழி, “தலைவர் விரைவில் மீண்டு வருவார்; நீ ஆற்றியிரு” என்று வற்புறுத்தினாள். அது கேட்ட தலைவி “ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் அவர் வரவை எதிர்பார்த்து நிற்கின்றேன். இரவு வந்தால் விடிந்தால் வருவர் என்று எண்ணுவேன்; ஆயினும் விடிந்த பின் அவர் வந்திலர்; அது கண்டு பகல் கழிந்தால் தோன்றுவர் என எண்ணுவேன்; அப்பொழுதும் வந்திலர்” என்று தன் ஆற்றாமையை இப்பாடலில் வெளிப்படுத்துகின்றாள். 

    சின்னாட்கள் சென்றன. கார்காலம் தொடங்கியது.

    கார் வந்துவிட்டது; தலைவனின் தேர் இன்னும் வரவில்லையே என்று வெதும்பிய தலைவியின் விழிகளில் நீர் திரண்டது. கொல்லைப்புறம் சென்றாள். அங்கே அவள் ஆசையாய் வளர்த்திருந்த முல்லைக்கொடி பூத்திருந்தது.

    தலைவி முல்லைப் பூவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதுகண்ட தோழி அவள் தோளைத் தொட்டாள். உடனே தலைவி, “பார்த்தாயாJasmine-Flower தோழி! இளமையின் அருமையை எண்ணிப்பாராமல், பொருளைவிரும்பி என்னைப் பிரிந்துசென்ற தலைவர் இன்னும் இவ்விடம் வந்து சேரவில்லை. எவ்விடத்து உள்ளாரோ… தெரியவில்லையே என்று நான் எண்ணியிருப்ப, நறிய தண்ணிய கார்காலமானது, மழையால் பாதுகாக்கப்பெற்ற பூங்கொடி முல்லையின் தொக்கமுகைகளையே தன் பற்களாகக் கொண்டு “உன் தலைவன் இன்னும் சொன்னபடி இல்லம் திரும்பவில்லையா?” என்று என்னைக் கேலிசெய்வதுபோல் நகைக்கிறது” என்றாள் நாத்தழுதழுக்க.

    இளமை  பாரார்  வளநசைஇச்  சென்றோர்
    இவணும்  வாரார்  எவண  ரோவெனப்
    பெயல்புறந்  தந்த  பூங்கொடி  முல்லைத்
    தொகுமுகை  இலங்கெயி  றாக
    நகுமே  தோழி  நறுந்தண்  காரே.    (குறுந்: 126 – ஒக்கூர் மாசாத்தியார்)

    இதே பொருள்பட வினைமுற்றி மீளும் தலைவன் முல்லைக்கொடியைக் காட்டிடையே கண்டு வினவும் பாடலொன்றும் குறுந்தொகை 162இல் காணக் கிடைக்கின்றது. தலைவன் தலைவி இருவருக்குமே முல்லையின் முகைகள் தமைப்பார்த்து நகைப்பதுபோலவே தோன்றுவது வியப்புக்குரிய உளவொற்றுமையே!

    கார்புறந்  தந்த  நீருடை  வியன்புலத்துப்
    பலர்புகு
     தரூஉம்  புல்லென்  மாலை
    முல்லை
     வாழியோ  முல்லை  நீநின்
    சிறுவெண்
     முகையின்  முறுவல்  கொண்டனை
    நகுவை
     போலக்  காட்டல்
    தகுமோ
     மற்றிது  தமியோர் மாட்டே.   (குறுந்: 162 – கருவூர்ப் பவுத்திரன்)

    ”…முகைவாய் திறந்த நகைவாய் முல்லை” எனும் (அகம்: 244) பாடல் அடியும் இங்கே ஒப்புநோக்கத் தக்கதே.

    கொல்லைப்புறம் அகன்று வாசல் திண்ணையில் வந்தமர்ந்தாள் தலைவி. அப்போது சடசடவென்ற சத்தத்துடன் கார்காலத் தலைப்பெயல் (முதல் மழை) தொடங்கியது.

    கானிடை நின்றிருந்த கவின் மயில்கள் வான்மழைக்கேற்பத் தம் தோகையை விரித்து ஆடத் தொடங்கின. வெளிப்புற நிகழ்வுகள் அனைத்துமே தலைவியின்  அகவாட்டத்தை அதிகப்படுத்திவருவதனைக் கண்டாள் தோழி. இனியும் வாளாவிருத்தல் முறையன்று என்று முடிவுசெய்தவளாய்,

    ”கண்ணே! சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சியிருந்த peacockபழைய நீரை, புதிய நீரைக் கொள்ளும் பொருட்டுச் சொரிகின்ற, அயன்மை உடைய மேகத்தினது ஓசையைக் கேட்டு, கரிய மயிற்கூட்டங்கள் கார்ப்பருவத்துக்குரிய மழை பெய்தது என்று தவறாக எண்ணி, அம் மழைக்கு எதிரே ஆடுதலைச் செய்தன; பிடாச்செடிகளும் மலர்ந்தன. அவை நம்மைப்போல் ஆறறிவு படைத்தவை அல்லவே. அதனால் இவ்வுண்மையை உணராத அறியாமை உடையன. இது மெய்யான கார்காலம் அன்று! ஆதலால் நீ கவலை ஒழி” என்றாள்.

    மடவ  வாழி  மஞ்ஞை  மாயினம்
    கால  மாரி  பெய்தென  அதனெதிர்
    ஆலலு  மாலின  பிடவும்  பூத்தன
    காரன்று இகுளை  தீர்கநின்  படரே
    கழிந்த  மாரிக்  கொழிந்த  பழநீர்
    புதுநீர்  கொளீஇய  வுகுத்தரும்
    நொதுமல்  வானத்து  முழங்குகுரல்  கேட்டே (குறுந்: 251 – இடைக்காடனார்)

    இஃது உண்மையான கார்காலந்தான் என்பது தோழிக்கும் தெரியும். எனினும் தலைவியின் மனத்துக்குச் சமாதானம் தரும்வகையில் ஏதேனும் உரைத்து, அவள் துயரைச் சிறுபொழுதேனும் ஆற்றக்கூடுமானால் நன்றாயிருக்குமே எனும் அவளின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடே இப்பொய்யுரை.

    இதனைப் பொய்யுரை என்று கூறுவதுகூடப் பொருத்தமானதன்று.

    ஆம்,
    பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கு மெனின்.
    (குறள்: 292) என்று பொய்யில் புலவரே கூறியிருக்க, தலைவியின் நன்மை கருதித் தோழியுரைத்த பொய்யை ’வாய்மை’ என்றே நாமும் நவில்வோம்.

    தோழியின் சாதுரியமொழி கேட்ட தலைவி அவள் கரத்தைப் பற்றி மீண்டும் கொல்லைப்புறம் அழைத்துப் போனாள். அங்கே கொன்றையும் குருந்தும் அரும்பு கட்டியிருப்பதைத் தோழிக்குச் சுட்டிக்காட்டி,

    ”செல்வர்வீட்டுச் சிறு பிள்ளைகளுடைய சிறிய அடியின்கண் விளங்கும் தவளையின் வாய்போன்ற வாயுடைய பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசையொத்த பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றையும் குருந்தும் (காற்றில்) சுழலும், மிக்க தண்மையையுடைய பருவத்தையும் கார் காலமன்று என்று நீ கூறுவாயாயின் பின் இங்ஙனம் தோன்றுவது கனவோ என்று யான் உன்னைக் கேட்பேன்…பதில் கூறுவாயாக” என்றாள்.

    செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
    தவளை
    வாய பொலஞ்செய் கிண்கிணிக்
    காசி
    னன்ன போதீன் கொன்றை
    குருந்தோ
    டலம்வரும் பெருந்தண் காலையும்
    காரன்
    றென்றி யாயிற்
    கனவோ
    மற்றிது வினவுவல் யானே.  (குறுந்: 148 – இளங்கீரந்தையார்)

    தன் சாதுரியம் தலைவியிடம் எடுபடாமல் போனதை அறிந்து பேச்சிழந்து நின்றாள் தோழி.

    [தொடரும்]

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -14

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருதலைச்சங்க நாண்மதியம்

    அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில்

     

    OLYMPUS DIGITAL CAMERA

    நல்லதே நடக்கும் நாரணன் நினைப்பால்

    நன்மையைப் பெருக்கிடும் நாண்மதியனே !

    நலங்கிட்ட நங்கை நாச்சியார் துணைவன்

    நாமங்கள் ஆயிரம் கொண்ட நாதமூலனே !

     

    பேதங்கள் இல்லாப் பாற்கடல் மன்னன்

    சேதங்கள் இல்லாச் சிந்தையைத் தருவான்

    வேடங்கள் போடும் வேடிக்கை வாடிக்கை

    வேதங்கள் போற்றும் வைகுந்த நாயகன் !

     

    சந்திரன் சாபங்கள் சடுதியில் விலகிட

    சரணம் அடைந்தான் சாம்பனின் அருளால்

    சாபங்கள் நீக்கிச் சங்கடம் விலக்கிட

    சன்மதி பெற்றே வான்மதி வளர்ந்தான் !

     

    சங்கினைப் பரிசாய் சங்கரன் தந்திட

    அங்கத்தின் ஒளியில் அதுவும் சேரும்

    சமரினில் ஒலிக்கும் சங்கொலி கேட்ட

    அரக்கர்கள் வாழ்வோ விதையின்றி வீழும் !

     

    தலைச்சங்கப்  பெருமாள் தரணியைக் காக்க

    தலைமுதல் தாள்வரை போற்றியே நின்றால்

    அலைமகள் துணையுடன் அருள்தர வருவான்

    நிலமகள் கருணையும் தடையின்றிக் கிடைக்கும் !

     

    மலரும் மாலையும் கனிகளும் வேண்டாம்

    மாதவன் நினைப்பே  மனந்தனில் போதும்

    மாலையும் காலையும் மனதினில் நிறுத்த

    மார்கழி மணாளன் மனநலம் தருவான் !

    Share
  • பெட்டையும் முட்டையும்!

    மீனாட்சி பாலகணேஷ்

    முருகன் குறிஞ்சிமலையின் தலைவன்; அந்நிலத்துக்கு இறைவன். இருப்பினும் ஐவகை நிலங்களிலும் முருகப்பெருமான் செய்த விளையாடல்கள் பற்றிய அழகான பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்களில் நாம் கண்டுகளிக்கலாம்.

    முருகனின் திருவிளையாடலாகப் பாலைநிலத்தில் நடைபெற்ற ஒரு அழகான கதை!

    panpoli

    துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடவே மாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவேனோ?” எனக்கூறி மறுத்துவிட்டார். இப்புலவர் ஒருமுறை மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் காக்கவேண்டிப் புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றார். இப்படிப்பட்ட வாய்ப்பிற்காகக் காத்திருந்த முருகன் அவர் செல்லும் காட்டுவழியில் ஒரு வேடச்சிறுவனாக உருக்கொண்டு புலவரை வழிமறித்தான். “நானொரு புலவன்,” எனப் பயந்தவண்ணம் கூறிய புலவரிடம், ஒரு கவிதை பாட வேண்டினான் கள்ளச்சிறுவன். ‘நமது உயிருக்கு இவனால் ஆபத்தில்லை; தமிழின் அருமை உணர்ந்த கள்ளன் போலும்!’ என மகிழ்ந்த புலவரிடம், “என்மீது சுரம்போக்காக ஒரு கவி பாடுக,” என்றான் வேட்டுவச் சிறுவன். “உன் பெயரென்ன அப்பா?” எனக்கேட்ட புலவரிடம், முன்பு அவர் கூறியதனை நினைவில் கொண்டு, “என் பெயர் முட்டை,” என்றான் குறும்புக்காரக் குமரன். புரிந்துகொள்ளவில்லை புலவர் பெருமகனார்!

    சுரம்போக்குத் துறையாக ஒரு பாடலைப் பாடினார்.

    ‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே

    என்பேதை செல்லற் கிசைந்தனளே- மின்போலு

    மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்

    கானவேள் முட்டைக்குங் காடு.’

    அதாவது கள்ளிச்செடியின் பொன்போன்ற நெருப்புப்பொறி பறக்கும் கானலாகிய சுரத்தே (பாலைநிலத்தே) தலைவனுடன் பேதைப்பெண் செல்ல விரும்பினாளே! அது எப்படிப்பட்ட பாலை நிலம் தெரியுமா? மின்னலைப் போன்ற ஒளிவீசும் வேலினை ஏந்திய முட்டை என்பவனுடைய பகைவர் அவனிடம் தோற்றோடுகின்றனர். அங்ஙனம் ஓடும்போது காட்டிலுள்ள கருவேலமரத்து முட்கள் அவர்கள் பாதங்களில் குத்தி வருத்தும் தகைமைத்தது இக்காடு என்பது பொருள்.

    Poyyamozhi-pulavar-_-murugan-Encounter

    வேடச்சிறுவனாக வந்த முருகன் இதில் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறினான். வெட்டிப்போட்டாலும் காயாத வேலமுள் நாள்பட்டுக் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது. அப்படிப்பட்ட முள் கள்ளி வெந்து பொறியாகப் பறக்கும் பாலையில், பச்சையாக வேகாமல் இருந்து காலில் தைக்கும் எனக்கூறுவது பொருந்துமோ? (காய்ந்து உலர்ந்து வெந்தமுள் குத்தவியலாது) ‘இப்படிப்பட்ட பொருட்குற்றம் உடைய பாடலைப் புலவராகிய நீர் பாடலாகுமோ?’ என்றான் வேடச்சிறுவன். பொய்யாமொழியார் பேச்சற்றுத் திகைத்து நின்றார்.

    “நான் பாடுகிறேன், நீர் கேளும்,” எனப் பாடலானான் சிறுவன்:

    ‘விழுந்ததுளி யந்தரத்தே வேமென்றும் வீழின்

    எழுந்த சுடர்சுடுமென் றேங்கிச்-செழுங் கொண்டல்

    பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே

    பொய்யா மொழிப் பகைஞர் போல்.’

    ‘மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளியானது தரையை அடையும் முன்பே பாலைவனத்தின் வெம்மையால் ஆகாயத்திலேயே வெந்து ஆவியாகிவிடும்; அம்மேகம் தாழச் சென்றாலோ பாலையினின்று எழும் வெப்பம்- நெருப்பு- தன்னைச் சுட்டுவிடும் என்றும் ஏக்கம்கொண்டு மேகம் ஒருகாலத்திலும் மழைபொழியாது: அத்தகைய கொடிய பாலைவனக் காட்டினிலே கையில் வளையலணிந்த பெண் தனது தலைவனுடன் சென்றாளே! அது பொய்யாமொழிப் புலவர் எனும் பகைவரின் செயல் போலுள்ளதே!’ எனப்பாடி, பெட்டை- முட்டை பற்றிய நினைவினைப் புலவருக்கு வரச்செய்து மறைந்தான் வேடச்சிறுவனாக வந்த முருகப்பிரான்.

    14512160555_9aaac54115_b

    வரகவி மார்க்கசகாயதேவர் தாமியற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

    ‘எனது பெயர் முட்டையெனப் பாடும்,’ என்று சிறுவன் கூறியபோதிலும் கருத்துணராத புலவர் ‘பொன்போலும்,’ எனப்பாடினார். “இது வெம்மையான பாலைநிலத்திற்குப் பொருந்தாது. உம்பெயர் என்னவென்று கூறும்,” எனக்கேட்டு ‘விழுந்ததுளி’ என அவர்மீது ஒரு பாடலைப் பாடிய முருகனே! அதுகேட்டு ஐயமுற்ற புலவர் ‘நீ யார் அப்பா?’ என வினவ, உன் அழகுத் திருவுருவைக் காட்டி, புலவரின் நாவில் உன் வேல்கொண்டு பொறித்து மறைந்த முருகப்பெருமானே! அறிவிற் சிறந்த சதுரனே!” என முருகப்பிரானை வாழ்த்தி அவனைச் சப்பாணிகொட்ட வேண்டுகிறார் புலவனார்.

    ‘பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்

    புரக்கவெழு நாள்மறவனாய்

    புறவற வளைத்தெனது பெயர்முட்டை பாடெனப்

    பொன்போலு மென்றுபாட

    வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி

    ளம்பென…’

    (திருவிரிஞ்சை முருகன் பி. த.- சப்பாணிப்பருவம்- வரகவி மார்க்க சகாய தேவர்)

    இதே கருத்தினை கவிராச பண்டாரத்தையா அவர்களும் தாமியற்றியுள்ள திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் சிறுபறைப்பருவப் பாடலொன்றில் குறிப்பிட்டுள்ளது வியப்பினையளிக்கின்றது.

    ‘மக்கள் நடமாட்டமற்ற சுரமாகிய பாலை நிலத்தில் பொய்யாமொழிப்புலவருக்கு முன்பு தோன்றி அவர்பாடிய பாடலில் குற்றங்கண்டு பின்பு நீயொரு செழுங்கவிதை பாடினாய்!’ என்கிறார் பண்டாரத்தையா. அத்தகைய முருகனை, மறைகள் முழங்கும் திருமலையிலுறைபவனைச் சிறுபறைகொட்ட வேண்டுகிறார்.

    மருவாத பாலையில் பொய்யா மொழிக்குமுன்

    வந்தொரு செழுங்கவி தையு

    ………………………………………………

    செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர

    சிறுபறை முழக்கியருளே.

    (திருமலை முருகன் பி. த.- சிறுபறைப்பருவம்- கவிராச பண்டாரத்தையா)

    எத்தனை விதமான நயங்கள்! அழகுகள்; கற்பனைகள். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் நற்றமிழின் இனிய வளங்களைக் காட்டி மகிழ்விக்கும் இலக்கியச் சுரங்கங்கள் அல்லவோ?

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,

    தமிழ்த்துறைத் தலைவர்,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,

    கோயம்புத்தூர்- 21.}

    ************

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(258)

    அன்பினியவர்களே!

    அன்பினிய வணக்கங்கள். 2017ஆம் ஆண்டின் இறுதி மடலில் உங்களிடையே வந்து விழுகின்றேன். ஆம், அடுத்த எனது மடல் வரும்போது நீங்களனைவரும் 2018ஆம் ஆண்டின் மடியில் தவழ்ந்து கொண்டிருப்பீர்கள். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இதோ இவ்வருடத்தின் முடிவில் வந்து நிற்கிறோம். தைவ்வருடத்தின் முன்றிலில் நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான வித்தியாசமான அனுபவங்களினூடாக ஊர்ந்து வந்திருக்கிறோம். அடுத்த ஆண்டினுள் நாம் நுழையும்போது எமது அகவையில் மட்டுமல்ல எமது அனுபவத்திலும் நாம் முதிர்வடைந்தவர்களாகின்றோம்.

    கடந்து கொண்டு முடிவில் வந்துநிற்கும் இந்த ஆண்டில் நாம் பெற்றவை பல. இழந்தவை பல. பொருளையிழந்திருக்கிறோம், உறவுகளை இழந்திருக்கிறோம், நட்புகளை இழந்திருக்கிறோம் அதேபோல உறவுகளைப் பெற்றிருக்கிறோம், பொருளீட்டி இருக்கிறோம். ஆம் வரவும், செலவும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள். வரவில் மகிழ்வதும், செலவில் அழுவதும் மனிதவாழ்வின் இயற்கை நியதி. 2000 எனும் மைல்கல்லைத் தொட்டு இப்போது 17 வருடங்கள் ஓடி முடிந்துவிட்டன. ஓடியதில் வருடங்கள் களைத்து விட்டனவா? இல்லையே! ஒவ்வொரு வருடமும் ஒரு புது மலரைப் போல பல வர்ணங்களைத் தன்னுள் அடக்கிய வண்ணம் மலர்கின்றது. அவற்றினுள் நாம் அறிந்திடாத, இனிமேல் அறியப் போகும் பல புதுமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. அவை காலம் கனியும் போது எம்முன்னே மலர்ந்து விரிகின்றன. அதேபோல பல துயர்தரும் நிகழ்வுகளையும் அது தன்னுள் வைத்துக் கொண்டுதான் மலர்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்வை நாம் மகிழ்ச்சிகரமாக புதுவருடத்தில் தொடங்க வேண்டுமேயானால் நேரிய நம்பிக்கைகளை எதிர்நோக்கியே புது ஆண்டினுள் பிரவேசிக்க வேண்டும்.

    எத்தனையோ விதமான மனிதர்களையும், பல்வேறு கலாசாரங்களையும் கொண்டுள்ள இப்பூகோள உருண்டை எப்போதும் போலத்தான் உருண்டு கொண்டிருக்கிறது. அதனுள் வாழும் நாம்மட்டும் எமது உணர்வுகளின் மாற்றம்தரும் தாக்கத்தினால் எமக்குள்ளே பல பேதங்களை வளர்த்து எம்மை நாமே துயருக்குள்ளாக்குக்கிறோம். ஆணவம், அகங்காரம், மமதை எனும் அதீத குணங்களை ஏனோ அதிக வேகத்துடன் வளர்த்துக் கொள்கிறோம்.

    இருப்பவர், இல்லாதவர் எனும் பேதத்தின் அடிப்படையில் எமது வாழ்வின் தராதரங்களை நிர்ணயித்துக் கொள்கிறோம். போகும் பாதை வெவ்வேறாயினும் நாம் போகுமிடம் ஒன்றுதான் என்பதை நினைவிற் கொள்ள மறந்துவிடுகிறோம். நாம் விரைந்து அவசரமாக ஓடுவது எமது வாழ்வின் முடிவு எனும் கரையைத் தொடவே என்பதுவே உண்மை. ஆனால் அவ்வெல்லையைத் தேடிஓடும் பயணத்தில் சிலர் மாபெரும் செல்வந்தர்களாக, பலவிதமான வசதிகளுடன் பயணிக்கிறார்கள். பலர் பசியுடனும், தாகத்துடனும் வாழ்வின் அடிப்படை வசதிகளற்ற நிலையில் அப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். இவ்வோட்டப் போட்டியில் வசதியற்ற சிலர் வசதியற்ற காரணத்தினால் விரைவாக எல்லையைத்தொட்டு வெற்றி கொள்கிறார்கள். ஆனால் அதை வெற்றியாக யாரும் பார்ப்பதில்லை. இதுவே வாழ்க்கையின் யதார்த்த நிலையாகிறது.

    சாதனைகள் எதுவுமின்றி, சோதனைகளைத் தாங்குவதை மட்டுமே சாதனையாக்கிக் கொண்ட பலர் ஒருவராலும் அறியப்படாமலே புதைக்கப்படுகிறார்கள். சரித்திரப் புத்தகத்தில் ஒருவரி கூட இவர்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுவதில்லை. ஆனால் அதற்காக அவர்கள் வாழ்வோடு தாம் தினமும் நடத்தும் போராட்டத்தைக் கைவிட்டு விடுகிறார்களா? அளவுக்கதிகமான செல்வத்தில் திளைத்துச் செய்வதறியாது மகிழ்ச்சி எனும் பெயரில் பணத்தைத் தண்ணீர்போல வாரியிறைக்கும் கூட்டம் ஒரு புறம், உயிரை உடலோடு தக்க வைத்துக் கொள்வதற்கு குடிப்பதற்கு இரு குவளை சுத்தமான நீர் கிடைக்காமல் கண்ணீரும் வறண்டு போன நிலையில் வாடும் கூட்டம் மறுபுறம். இவர்கள் இருவரையும் வைத்துப் பிழைப்புநடத்தி வாழ்வை ஓட்டு கூட்டம் இடையில் இவர்கள் அனைவரையும் தன்னோடு சுமந்து கொண்டுதான் 2017ஆம் ஆண்டு தன்னுடைய முடிவில் வந்து நிற்கிறது. ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் மடியில் கிடக்கும் அனைவரையும் 2018இன் மடியில் தள்ளிவிடக் காத்து நிற்கிறது.

    இவர்களுக்கெல்லாம் 2018 எவ்வகையில் விடியப் போகிறது என்பதனை ஒருவரும் வரையறுத்துக் கூற முடியாது. ஆயினும் வென்று விடுவோம் எனும் நம்பிக்கையில் தான் அனைவரும் அடுத்த வருடத்தினுள் கால் வைத்தாக வேண்டியிருக்கிறது. இருப்பவரோடு இல்லாதவர் சமதளத்தில் நின்றுதான் போராட வேண்டி இருக்கிறது. நம்பிக்கை இருக்குமட்டும் அனைவருக்கும் அடுத்த ஆண்டு ஆறுதலைக் கொண்டு வரட்டும் என்னும் பிரார்த்தனையோடு 2018இல் உங்களிடையே வருவேன்.

    அன்பினிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    உருண்டு போகுது
    வருடமொன்று
    உள்ளே அழைக்குது
    வருடமொன்று

    போனது தந்த
    ஏக்கத்தினால்
    போவதா? இல்லையா?
    என்றே தயங்கும்
    எளியோர் கூட்டமொன்று

    கண்டது எல்லாம்
    மகிழ்ச்சி என்றே
    கதவைத் தள்ளித்
    திறக்க முயலுது
    அடுத்தொரு கூட்டம்

    வந்ததும் போனதும்
    போதும் என்றே
    பந்தங்கள் அறுத்து
    விடுதலையான
    பிறவிகள் சில
    சிரிக்குது
    சிலரின் வெறுமையைக்
    கண்டே . . .

    புதிதாய்ப் பிறந்த
    மழலைகள்
    அறிவரோ . . .
    வருடங்கள் தம்முள்
    வைத்திருக்கும் விந்தைகளை?

    பிரியப் போகுது
    வருடமொன்று
    பிறக்கப் போகுது
    வருடமொன்று
    பிரியும் வருடத்தோடு
    பிரியட்டும் சோதனைகள்
    பிறக்கும் வருடத்தோடு
    பிறக்கட்டும் சாதனைகள்

    உள்ளத்தோடு
    உறைந்திட்ட என்
    உன்னத உறவுகளுக்கு
    உளமார ஊறிடும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கனவுகள் சிறக்கட்டும்
    காவியங்கள் மலரட்டும்
    வாழிய! வாழிய!
    மகிழ்வு நிறைந்திட வாழ்ந்திடுக!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • மலேசியாவில்  விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி

    -முனைவர் மு.இளங்கோவன்

    மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் SRI_5878வெளியீட்டு நிகழ்ச்சி 26.12.2017 மாலை சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாசார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    SRI_5898மலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவுநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

    திரு. ம. மன்னர் மன்னன் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். SRI_5915தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். தான்ஸ்ரீ  குமரன் அவர்கள் ஆவணப்படதின் சிறப்பினைக் குறித்து உரையாறிறனார்.

    மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு.SRI_5928 நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப்படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர்SRI_5958 முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபுவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.

    *****

    இந்தியாவில் ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: muelangovan@gmail.com
    0091 9442029053

    Share
  • தூக்கும் பாவும்: சிறப்பும் பொதுவும்

    – முனைவர் ம.பிரபாகரன்

    யாப்பிலக்கண வரலாற்றில் முதன்முதலில் யாப்பருங்கல விருத்தியுரை, சங்கயாப்புடையார்,  செப்பலோசை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படும் என்று கூறுவதாகக்  கூறுகிறது.  இது குறித்த சங்க யாப்பு சூத்திரங்களாவது:
                       “வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
                          ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர் 

                           இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
                          தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்     

                         வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
                         ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்

     என்றார் சங்க யாப்புடையார். (பக். 227, யாப்பருங்கலம் விருத்தியுரையுடன், இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976)  இவ்விடத்தில்  ஓசை தொடர்பாகச் சில செய்திகள் விவாதிக்கப்படவேண்டியுள்ளது. இவ்விவாதமே இக்கட்டுரையின் பொருளாகிறது.  ஏந்திசைச் செப்பல் முதலான ஓசைகள் தளை அடிப்படையில் அமைந்தவை. இவ்வோசை குறித்த செய்திகளை யாப்பருங்கலம் தளை ஓத்தில் அமைக்காமல் செய்யுளியலில் எடுத்துக் கூறியுள்ளது. இதற்கு உரைவரைந்த யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் இந்த ஏந்திசை முதலான ஓசைகளைத் தளை ஓத்தில் சிறிதும்  குறிப்பிடாமல் செய்யுளியலில் வைத்தே விளக்குகிறார்.  எழுத்தோத்தில் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும்போது அமிதசாகரர், 

          ”எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
           இழுக்கா நடைய தியாப்பென மொழிப (சூ.1)   என்று கூறுவார்.  இச்சூத்திரத்தில் கூறியவற்றுள்ளுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றிற்கு முறையே எழுத்தோத்து, அசையோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்று தனித்தனி ஓத்து அமைக்கும் அமுதசாகரர் ஏன் தூக்கு என்னும் உறுப்பிற்கு தூக்கோத்து என்று தனி ஓத்து அமைக்கவில்லை என்பது இத்தொடர்பில் எழும் மற்றொரு வினாவாகும். தளையைக் கூறும் இடத்திலேயே ஓசையைக் கூறுவது பொருத்தமானதாகும். தளையோத்தில் ஓசையை விளக்காததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழும்பினால்   தூக்கு என்ற ஓர் உறுப்புக் கூறியுள்ளதால் தூக்கோத்தில் ஓசையை விளக்குவார் என்று சமாதானம் கூறிக்கொள்ளலாம். ஆனால் தூக்கோத்து என்று  ஒரு ஓத்தே நூலில் இல்லை. அப்படியெனில் அமிதசாகரர் ஏன் தூக்கை செய்யுள் உறுப்பில் ஒன்றாகக் கூறினார்?

    நிற்க. யாப்பருங்கலத்தை எழுதிய அமிதசாகரர்தான் யாப்பருங்கலக் காரிகையையும் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற ஆறு உறுப்புக்களையே கூறியுள்ளார். அமிதசாகரிடம் ஏன் இந்த மாற்றம் காணப்படுகிறது? யாப்பருங்கலத்தில் செய்யுள் உறுப்பு எழுத்து முதலாக தூக்கு ஈறாகக் மொத்தம் ஏழு உறுப்புக்களைக் கூறும் அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகையில் ஏன் எழுத்து முதலாக தொடை ஈறாக ஆறு உறுப்புக்களையே கூறுகிறார்?  அவர் ஏன் இப்படி குழப்புகிறார்? உண்மையில் அவர் குழப்பவில்லை. யாப்பருங்கலத்தில் அவர் செய்யுள் உறுப்புக்களுள் தூக்கை ஒன்றாகக் கொண்டதற்குக் காரணம்  நற்றத்தனாரும், பல்காயனாரும் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறியுள்ளதனால் ஆகலாம். யாப்பருங்கல விருத்தியின் மூலம் அறிய வரும் இது குறித்த இவ்விருவரின் சூத்திரங்களாவன:

                 ”யாப்பெனப் படுவ தியாதென வினவின்
                   தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும்
           நோக்கிற் றென்ப நுணங்கி யோரே”   என்றார் நற்றத்தனார்.

                 ”இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
                   தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி
                   யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
                  எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
                  இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
                  ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே என்றார் பல்காயனார். (பக். 16, 17; மேலது)

     மேலே கண்ட  இருசூத்திரங்களில் தூக்கு ஓர் உறுப்பாகக் கொள்ளப்பட்டிருப்பினும் இரண்டாவது சூத்திரமான பல்காயனாரின் உறுப்புக் கோட்பாடே யாப்பருங்கலத்தோடு ஒத்து அமைகிறது. ஏனெனில் பல்காயனாரே எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழ் உறுப்புக்களையும் கூறுகிறார். இவ்வேழு உறுப்புக்களும்தான் யாப்பருங்கலத்திலும் கூறப்பெற்றுள்ளது. இத்தொடர்பில் பல்காயனாரை அமிதசாகரர் பின்பற்றினாரா? அல்லது அமிதசாகரைப் பல்காயனார் பின்பற்றினாரா?.  யாப்பருங்கலம் 10-ஆம்  நூற்றாண்டைச் சார்ந்தது; ஆனால் யாப்பருங்கல விருத்தியுரை 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது  என்பதால் இவ்வுரையில் எடுத்துக்காட்டபெற்றுள்ள நற்றத்தனார், பல்காயனார் ஆகியோர் சூத்திரங்கள் யாப்பருங்கலத்திற்குப் பின்னரும் எழுதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அல்லது யாப்பருங்கலத்திற்கு முன்னரும் எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது யாப்பருங்கலத்தாரும், பல்காயனாரும், நற்றத்தனாரும் சமகாலத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வாய்ப்புண்டு. அங்ஙனம்  அமிதசாகரரும் பல்காயனாரும் சமகாலத்தவராக (நற்றத்தனார் குறித்து தனியே விவாதிக்கிறோம்) இருந்தவர்களாக நாம் கொண்டால் இவர்கள் இருவரும்  தூக்கையும் சேர்த்து யாப்பு  உறுப்புக்கள் ஏழு என்று வேறு ஏதேனும் பொதுமூலத்தைப் பின்பற்றிக்  கூறிருக்கலாம்.

    நற்றத்தனாரைப் பொறுத்தவரை தூக்கு, தொடை, அடி ஆகிய மூன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார். இதில் தூக்கு என்ற உறுப்பை அவர் முதலில் வைத்துக் கூறுவதைக் கவனிக்க. தூக்கு என்னும் உறுப்பிற்கு முதன்மை கொடுத்து முதலில் நூல் இயற்றியவர் நற்றத்தனாரா? அல்லது அவர் வேறு ஏதேனும் ஒரு மூலநூலை பின்பற்றிக் கூறினாரா? யாப்பருங்கல விருத்தி தரும் சூத்திரங்களை மட்டும்  வைத்துக்கொண்டு நம்மால் இவற்றையெல்லாம் உறுதியாகக் கூற இயலாது. அமிதசாகரர் தூக்கை நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரைப் பின்பற்றித்தான் யாப்பு உறுப்பாகக் கூறினாரா? நற்றத்தனார் தூக்கை முதல் உறுப்பாகக் கூறியிருக்க ஏன் அமிதசாகரர் பல்காயத்தைப் போலத் தூக்கைக் கடைசி உறுப்பாகக் கொள்கிறார்? எங்கனமாயினும் தூக்கை ஓர் உறுப்பாக அமைத்துக் கொள்வதில் அமிதசாகருக்கு நற்றத்தம் ஓர் உந்துதலாக இருந்திருக்கலாம்; அல்லது யாப்பருங்கலம் நற்றத்ததிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம். ஆனால் தூக்கையும் சேர்த்து யாப்பு உறுப்புக்கள் ஏழு என்று கூறுவதில் யாப்பருங்கலம் பல்காயத்தையே பின்பற்றுகிறது அல்லது பல்காயம் யாப்பருங்கலத்தையே பின்பற்றுகிறது. ஆக இங்கு நமக்கு எழும் சிறிய குழப்பம் பல்காயம் முந்தையதா? யாப்பருங்கலம் முந்தையதா? (நற்றத்தம் முந்தையதா?) என்பதாகும். பல்காயம் முந்தையது என்று ஒத்துக்கொண்டு ஆய்ந்தால் நாம் யாப்பருங்கலத்திற்குப் பதிலாக பல்காயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தூக்கு பற்றிய ஆராய்ச்சியை நடத்தலாமே? என்ற கேள்வி எழும். யாப்பருங்கலம்தான் முந்தையது  என்றால் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தூக்கு குறித்த ஆராய்ச்சியை நடத்தலாம். ஏனென்றால் காலநோக்கில் தூக்கையும் சேர்த்து ஏழு உறுப்புகள் என்று கூறும் முதல் நூல் எது என்பதே முக்கியமானது. ஏனெனில் அம்முதல் நூலே இவ்வுறுப்புக் கோட்டை முதன்முதலில் உருவாக்கியிருக்கும். இது ஒரு பக்கம் இருக்க இக்கட்டுரை தூக்கு பற்றியதாக இருப்பதால் நற்றத்ததையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. தூக்கைக் கடைசி உறுப்பாகச் சேர்த்து பல்காயமும், யாப்பருங்கலமும் கூறுகின்றன என்பது முக்கியமானததுதான். ஆனால் தூக்கை முதல் உறுப்பாகக் கூறும் நற்றத்தம் இவ்விரு நூல்களைவிட முதன்மை பெறுகிறது என்பதில்  ஐயமில்லை.  நற்றத்தம் யாப்பருங்கலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ அமைய வாய்ப்புண்டு என்பதை முன்னர் பார்த்தோம். எனினும் யாப்பருங்கலத் தூக்குக் கோட்பாட்டைக் கணிப்பதில் நற்றத்தம் துணைமைச் சான்றாகவே நமக்குப் பயன்படும். நாம்  தூக்கு பற்றிய இந்த ஆராய்ச்சியை யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே செய்கிறோம். ஏனெனில் பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது; யாப்பருங்கலம் அதைப் பின்பற்றியது என்ற ஒரு வாய்ப்பை (Possibility) நாம் ஏற்றுக்கொண்டு ஏன் பல்காயம் தூக்கை ஏழு உறுப்புக்களில் ஒன்றாகக் கூறிவிட்டு, அதை விளக்க தூக்கோத்து என்ற ஒன்று அமைக்காமல் செய்யுளியலில் வைத்து விளக்குகிறது? என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் பல்காயம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழு உறுப்புக்களைக்  கூறியுள்ளமை மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. அந்நூலில் யாப்பருங்கலத்தைப் போல எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து முதலியவையும், இயல்களும் அமைந்திருந்ததா என்று அறிய முடியவில்லை. எனவே நாம் பல்காயத்தை அடிப்படையாக வைத்து இவ்வாராய்ச்சியை செய்ய இயலாது. பல்காயமும், யாப்பருங்கலமும் தூக்கை விளக்குவதில்  ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்பை நாம் ஏற்றுக் கொண்டாலும் பல்காயத்திற்கு நாம் எழுப்பிய கேள்விகள் பெரும்பாலும் அந்தப் பொது மூலத்திற்கும் பொருந்துகிறது அதாவது  அந்தப் பொது மூலம் எது? அவற்றில் எத்தனை இயல்கள் அமைந்திருந்தன? என்பன  போன்ற பிரச்சனைகள் வரும். பல்காயத்திற்காவது சூத்திரங்கள் கிடைக்கின்றன. ஆனால் நாம் ஊகம் செய்த பொது மூலத்தைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. எனவே நாம் தூக்குப் பற்றிய ஆராய்ச்சியை நமக்கு கிடைக்கும் யாப்பருங்கலத்தில் இருந்துதான் செய்ய வேண்டியிருக்கிறது; செய்ய முடிகிறது.   யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்த ஆராய்ச்சியை செய்தாலும், தூக்குப் பற்றிய யாப்பருங்கலத்தின் சிந்தனை- பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது அல்லது இரண்டும் ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்புக்களின் நோக்கில்-   பல்காயத்தின் சிந்தனையையோ அல்லது நாம் கருதிய  பொது மூலத்தின் சிந்தனையையோ  மீட்டுருவாக்கப் பயன்படும் என்று நாம் கருதுகிறோம்.

    யாப்பருங்கலமே தூக்கு பற்றிய இச்சிந்தனையை முதலில் கூறியது என்ற வாய்ப்பை நாம் ஏற்றுகொண்டாலும் தூக்கு குறித்த யாப்பருங்கல மரபின் நுட்பமான சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும். எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிடிலும் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே அதாவது யாப்பருங்கலத்தை முதல் நூலாகக் கொண்டே இவ்வாராய்ச்சியைச் செய்ய வேண்டியிருக்கிறது; செய்கிறோம்.

    யாப்பருங்கலத்தில்  ‘தூக்கை’ச் செய்யுள் உறுப்பாகக் கூறும் அமிதசாகரர்  அதை ஏன் செய்யுளியலில் விளக்குகிறார் என்பதை  யாப்பருங்கல விருத்தியுரைகாரர் எழுத்தோத்து உரையில் தரும், (இக்கட்டுரையில் முன்னர் கண்ட   ஆசிரியர்களான)   நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரின்   சூத்திரங்கள்  உணர்த்துகின்றன:

    தூக்கு எனினும் பாட்டு எனினும் ‘ பா ‘ எனினும் ஒக்கும்.

                      ”தூக்கு பாட்டும் பாவும் ஒன்றென
                        நோக்கிற் றென்ப நுணங்கி யோரே  என்றார் பல்காயனார் ஆகலானும்,

                     ” பாவென மொழியினும் தூக்கினது பெயரே   என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க. (பக். 17,18; மேலது)

    இங்கு தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்று விருத்தியுரைகாரர் பல்காயனார் மற்றும் நற்றத்தனார் ஆகியோரது சூத்திரங்களை எடுத்துக்காட்டி விளக்குவதைக் காண்க. எனவே அமிதசாகரர் தூக்கை ஒரு செய்யுளுறுப்பாக எடுத்துக்கூறியிருந்தாலும்  தூக்கு என்பது பாவே என்பதனால் தூக்கோத்து என்று ஒரு தனி இயல் அமைக்காமல் ‘ பா ‘வை விளக்கும் செய்யுளியலிலேயே தூக்கையும் அதாவது பாக்களுடைய ஓசையையும் விளக்குகிறார் என்று கொள்ள வேண்டும். இத்தொடர்பில் எழும் மற்றொரு கேள்வி  தூக்கைச் செய்யுளுறுப்பாக விளக்காமலேயே அதைச் செய்யுளியலில்  விளக்கியிருக்கலாமே? என்பதாகும்.  விளக்கியிருக்கலாம்.  ஆனால் செய்யுளில் ஓசை என்பது மிகவும் முக்கியமானதாகையால் அதன் முக்கியத்துவத்தைக் காட்ட முன்னோர்களைப் பின்பற்றி அமிதசாகரர் தூக்கைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகச் சுட்டிக்காட்டினார் எனலாம்.

    யாப்பருங்கலத்திற்குப் பிறகு யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாகச் சுட்டாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் இத்துடன் எழும். அமிதசாகரர்  ஏற்கெனவே யாப்பருங்கலத்தில் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறிவிட்டதால் யாப்பருங்கலக்காரிகையில் அதனை மீட்டும் ஓர் உறுப்பாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று கருதியிருக்க வேண்டும். அப்படியெனில் எழுத்து முதலான பிற உறுப்புக்களையும் அவர் யாப்பருங்கலக்காரிகையில் விளக்காமல் விட்டிருக்கலாமே என்று ஒருவர் கேட்கலாம். எழுத்து முதலான ஆறு உறுப்புக்களும் தனித்தனி உறுப்புக்கள்; ஓசை என்பது இவை அனைத்தும் சேர்வதால் உருவாவதாகும். அதாவது எழுத்து முதலானவை பகுதிகள் எனில் ஓசை என்பது முழுமையாகும். எனவேதான் அமிதசாகரர்  தூக்கு என்பதைப் பிற உறுப்புக்களைப் போல கொள்ளவில்லை. இதை அறிய அமிதசாகரின் தூக்கு பற்றிய சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    யாப்பருங்கல முதற்சூத்திரத்தில், தூக்கு என்பது மற்ற உறுப்புக்களைப் போலாது ஓசையின் முழுமை நோக்கிய ஒன்றாக  இருப்பதால்  முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும் என்று கருதிய அமிதசாகரர் தூக்கை ஓர் உறுப்பாக அறிவிக்கிறார்.  பாவே ஓசையாக இருப்பதால் தனி உறுப்பாக கூற வேண்டிய அவசியம் இல்லை  என்று அவர்  நினைத்திருந்தாலும் எல்லா பாக்களது ஓசையும் ஒரே ஓசை அன்று. எனவே பொதுவாகத் தூக்கைப் பா என்று கூறினாலும் அது வேறுபாட்டைத் தம்முள் அடக்கியதாகும். எனவே சிறப்புநிலையில் தூக்கு பாக்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை அறிவுறுத்த தூக்கை முதலில் உறுப்பாகக் கூறுகிறார். இது அவரின் முதல்நிலை. அடுத்து,  தூக்கோத்து அமைத்தாலும் செய்யுளியலில் மீண்டும் அவற்றைக் கூறவேண்டிய நிலை ஏற்படும்; எனவே இது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். எனவே தூக்கோத்தைத் தன் நூலில் ஒரு தனி இயலாக அமைப்பதைத் தவிர்க்கிறார். இது இரண்டாம் நிலை. மூன்றாவது யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது யாப்பருங்கலத்தின் பயிற்றுமுறைக்கும்  யாப்பருங்கலக்காரிகையின் பயிற்றுமுறைக்கும் இடையேயுள்ள  வேற்றுமையினாலும் அதாவது   யாப்பருங்கலக் காரிகை தொன்மை யாப்புநூலில் பயிற்சி இல்லாதவர்களுக்குப் பயிற்சி ஏற்பட  எழுதப்பட்டமையால் அதில்  செய்யுள் உறுப்புக்களில் நுட்பமான  தூக்கை ஒன்றாகக் கூறவேண்டிய தேவையின்மையாலும், அவர்   தூக்கை ஓர் உறுப்பாகக் கூறாமல் விடுவது மூன்றாவது நிலை.  (யாப்பருங்கலம் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களிருந்தும், யாப்பருங்கலக் காரிகை படித்த மாணவர்கள் வேறானவர்கள்  அதாவது யாப்பருங்கலம் யாப்பு தொடர்பான ஆராய்ச்சி மாணவர்களுக்கும், யாப்பருங்கலக்காரிகை யாப்பு தொடர்பான தொடக்கநிலை மாணவர்களுக்கும் எழுதப்பட்டிருக்க வேண்டும்). இதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.  இத் தொடர்பில்  யாப்பருங்கலத்தில் விளக்கப்பட்டு யாப்பருங்கலக்காரிகையில் விளக்கப்பாடாத கூறுகள் எவை எவை என்பதும் யாப்பருங்கலத்தின் விளக்குமுறையும் யாப்பருங்கலக்காரிகையின் விளக்குமுறையும் எத்தன்மையன என்பதும்  ஒப்பிட்டு  விளக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. இது வேறொரு கட்டுரைக்கான செய்தி ஆதலால் இதை இங்கு விரிவாகச் செய்ய முடியாது. எனினும் இங்கு   யாப்பருங்கலத்தையும், யாப்பருங்கலக்காரிகையையும்  ஒப்பிட்டு ஓர் உதாரணத்தை மட்டும்  சுட்டிக்காட்டமுடியும். அமிதசாகரர் யாப்பருங்கலக் காரிகையில்  முதற்காரிகையில்  அசைக்கு உறுப்பாகும் 13 எழுத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு அடுத்து அசைகளின் வகைகளாகிய நேரசை, நிரையசை ஆகியவற்றை விளக்கச் சென்றுவிடுகிறார். ஆனால் அவர் யாப்பருங்கலத்தில் அப்படி அசைக்கு உறுப்பாகும் எழுத்துக்களின் எண்ணிக்கையை மட்டும் கூறிவிட்டு அசைகளை விளக்கச் சென்று விடாமல்  சில எழுத்துகளுக்குரிய சிறப்புவிதிகளையும் கூறுகிறார். இதை யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் ஆகியவற்றின் எழுத்துக்கள் குறித்த காரிகையையும் சூத்திரங்களையும் எடுத்துக்காட்டுவதின் வழி தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்:

    யாப்பருங்கலக் காரிகை:

    குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே              மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்           சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
    அறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவனவே (கா.4)

    இங்கு அசைக்கு உறுப்பாக மொத்தம் 13 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. எழுத்துக்களின் விளக்கம்  பற்றிய சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையில்  இது ஒன்றே ஆகும்.

    யாப்பருங்கலம்:

                        உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
                        குறிலே நெடிலே அளபெடை யென்றா
                        வன்மை மென்மை இடைமை யென்றா
                       சார்பில் தோன்றும் தன்மைய வென்றா
                       ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு
                       ஐம்மூ வெழுத்தும் ஆம்அசைக் குறுப்பே (சூத்.2)

    இங்கு அசைக்கு உறுப்பாக 15 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. இச்சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையைப் போல அசைக்கு உறுப்பாக உள்ள எழுத்துக்களைத் தொகுத்துகூறும் சூத்திரம் ஆகும். இதற்குப் பிறகு  யாப்பருங்கலம்  சில எழுத்துக்களின் சிறப்பு விதிகளை மேலும் இரண்டு சூத்திரத்தில் கூறுகிறது:

                     தனிநிலை ஒற்றிவை தாமல  கிலவே
                     அளபெடை அல்லாக் காலை யான (சூத். 3)

                     தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
                    குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
                   அளபெடை ஆவியும் அலகியல் பிலவே (சூத்.4)

    இவ்விரு சூத்திரச் செய்திகளும் யாப்பருங்கலக் காரிகையில் இல்லாததை கண்டு கொள்ள முடிகிறது. இதற்கான காரணம் மேலே விளக்கப்பெற்றது.  நாம் மேலே காட்டியுள்ளமை போன்று  யாப்பருங்கலத்தில் வரும்  அனைத்து இயல்களையும் யாப்பருங்கலக் காரிகையில் உள்ள இயல்களோடு  ஒப்பிட்டுக் காண வேண்டியது முக்கிய தேவையாகும்.

    தூக்கு, பாதொல்காப்பியம், யாப்பருங்கல மரபு ஒப்பீடு:

     தொல்காப்பியத்தில் தூக்கு என்பதும் பா என்பதும் தனித்தனி உறுப்புக்களாகச் சுட்டபெற்றிருக்க, யாப்பருங்கலத்தில் பா என்பதை விடுத்து தூக்கை மட்டும் உறுப்பாக ஏன் அமிதசாகரர் கொண்டிருக்கிறார்? என்பதும் இத்தொடர்பில் முக்கியத்துவம் பெறும் வினாவாகும். தூக்கு குறித்தும் பா குறித்தும் தொல்காப்பியத்தில் என்ன கூறப்பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்:

                    அகவ லென்ப தாசிரிய யம்மே (செய். சூத். 79)
                    அஃதன் றென்ப வெண்பா யாப்பே  (80)
                  துள்ளலோசை கலியென மொழிப     (81)
                     தூங்க லோசை வஞ்சி யாகும்          (82)
                     மருட்பா வேனை யிருசா ரல்லது
                    தானிது வென்னுந் தன்மை யின்றே  (83)
                   அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார் (84)
                  தூக்கியல் வகையே யாங்கென மொழிப ( 85)

                மேற்கண்ட நூற்பாக்கள் தூக்கு பற்றிய தொல்காப்பிய நூற்பாக்கள். தொல்காப்பியம் தூக்கு என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை. மேலேகண்ட வண்ணம் தூக்கு என்பதன் வகைகளையே தருகிறது. அதாவது ஆசிரியத்திற்கு அகவல் ஓசை; வெண்பாவிற்கு அகவல் அல்லாத ஓசை; கலிக்குத்துள்ளலோசை; வஞ்சிக்குத் தூங்கலோசை; மருட்பாவிற்கு ஆசிரியம், வெண்பா ஆகியவற்றின் கலப்பு ஓசையே யன்றி அதற்கென்று தனித்த ஓசை இல்லை; இதோடு கூட  இவ்வோசைகள் இல்லாமல் பாட்டினை யாரும் கூற மாட்டார்கள் என்ற ஒரு கூடுதல் குறிப்பினையும் (84) தொல்காப்பியம் தருகிறது. தூக்கு என்பதற்கு ஏன் தொல்காப்பியம் வரையறை தரவில்லை. அப்படித் தராமல் ஏன் தூக்கின் வகைகளை மட்டும் கூறிச் செல்கிறது? இது குறித்து,  பா என்பதற்கு தொல்காப்பியம் என்ன விளக்கம் தருகிறது என்பதைப் பார்த்துவிட்டு அவ்விளக்கத்தையும் உட்படுத்தி விவாதிப்போம்; பா குறித்து தொல்காப்பியம் என்ன கூறுகிறது?:

    தொல்காப்பியம்,

    ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
     நாலியற் றென்ப பாவகை விரியே (செய். 103)

    என்று நான்குவகைப் பாக்களின் விரியைக் கூறிவிட்டு,
    பாக்களின் பொருண்மை பற்றி அடுத்த சூத்திரத்தில்,

    அந்நிலை மருங்கின் னறமுத லாகிய                         மும்முதற் பொருட் முரிய வென்ப (104)

                        என்று கூறுகிறது. அடுத்த இரு சூத்திரங்களில் விரித்துக் கூறிய பாவகையை தொகுத்துக் கூறுகிறது:

                  பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்                        ஆசிரி யப்பா வெண்பா வென்றாங்கு                                        ஆயிரு பாவினு ளடங்கு மென்ப ” (105)                                  ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை
                வெண்பா நடைத்தே கலியென  மொழிப ( 106)

    இதற்கடுத்தடுத்த  சூத்திரங்கள் பாக்களின் பொருண்மைகுறித்துப் பேசி செல்கின்றன. தூக்கிற்கு எழுப்பிய அதே வினாவை நாம் பாவிற்கும் எழுப்ப வேண்டியதிருக்கிறது: ஏன் தூக்கினைப் போல் தொல்காப்பியம் பாவிற்கும் விளக்கம் தராமல் பாவின் விரியையும், தொகையையும் தருகிறது. தொல்காப்பியர் தூக்கு என்பதற்கும் பா என்பதற்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் காட்டுகிறார்? தூக்கு என்பதையும் பா என்பதையும் ஏன் தனித்தனி உறுப்பாகக் காட்டினார்? ஏனெனில்  தொல்காப்பியர் செய்யுட்களில்  ஓசைகளின் வேறுபாட்டைத் அதாவது செய்யுளின் ஓசைகளைச் சிறப்புத்தன்மையில் குறிக்கத் தூக்கு என்பதையும் பொதுத் தன்மையில்  குறிக்கப் பா என்பதையும் பயன்படுத்துகிறார்.  அதாவது அகவல், அகவல் அல்லாதவை, துள்ளல், தூங்கல் ஆகிய ஓசையின் வெவ்வேறு வகைகளைத்  தனித்தனியே சுட்ட  தூக்கு என்ற உறுப்பைப் படைக்கிறார்; இதனையே நாம்  ”சிறப்பு நிலை” என்கிறோம். ஓசைகளை அகவல் முதலிய தனித்தன்மை கொண்டல்லாமல் அதாவது சிறப்புநிலையில் சுட்டாமல்  ஓசையின் வெவ்வேறு வகைகளின் மொத்தத்துவத்தைக் குறிக்க  ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயர்களைக் கையாள்கிறார்  . இதை நாம் ”பொதுநிலை” என்று கூறுகிறோம்.   தூக்கு ஓசையின் தனித்தன்மையை அறிவுறுத்த உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், பா செய்யுளின் மொத்தத் தன்மையை அறிவுறுத்த படைக்கப்பட்டது என்பதையும்  பேராசிரியர் தரும் விளக்கங்கள் மூலம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் கூறுவதாவது:

     தூக்கு:

     அகவலோசைக்கண் தூக்குவருங்கால் இருசீர் முதலா எண்சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையை நாற்சீர்க்கண்ணே துணித்துக்கொள்ள, அஃது ஆசிரியத் தூக்காமென்றவாறு. இருசீரால் துணிப்ப ஆசிரிய வோசையாகாது; முச்சீரால் துணிப்பினும் ஆசிரியவோசையாம்; என்னை? ஈற்றயலடி முச்சீர்த்தாமெனவும் இடையும் வரையாரெனவும் கூறினமையின் அஃதேல் அடிவகையானே அறுதியுணர்த்துமாகலின் தூக்கு எவன் செய்யுமெனின் – அவ்வடியினையுந் தூக்கானன்றி உணர்த்தலாகாது; என்னை? இருசீர் முதலாகப் பலசீர் தொடர்ந்த வழித் தூக்கு அறுப்புக்கொண்டன்றி இத்துணைச்சீர்கொண்ட அடி இஃதென்பது அறியலாகாமையின். அல்லதூஉம், ஆசிரியத்துள் எண்சீர் தொடர்ந்தும் பாச்சென்றவழி அதற்கு வருமெனப்பட்ட முச்சீரடியும் ஐஞ்சீரடியுமாகாது நாற்சீரடி இரண்டென்று அறிதற்குக் கருவி தூக்கென்பது கொள்க. அல்லாக்கால் 

             உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
             யலங்குகுலை யிந்தின் சிலம்பிபொதி செங்காய்

    என்றவழி, ‘ உள்ளார்’, ‘ முள்ளுடை ‘ என்பன அடியெதுகையாக முச்சீரடியும் ஐஞ்சீரடியு மெனக்கொண்டு மயக்கமாமென்பது.

       நரந்த நாறுந் தன்கையாற்
       புலவுநாறு மென்றலை தைவரு மன்னே

        என்றவழி, எண்சீரான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடுமன்றே தூக்கின்றாயினென்பது (பக். 379, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பியம் செய்யுளியல் பேராசிரியர் உரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007)

     இங்குப் பேராசிரியர் குறிப்பிடும் துணித்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அடிகளைத் துணித்து நிறுத்துதல் என்பது பாக்களின் ஓசைக்கு மிகவும் இன்றியமையாதது. அடிகளைத் துணித்து நிறுத்துவதன் மூலமே குறிப்பிட்ட ஓசைகளைப் பெற முடியும் என்று பேராசிரியர் மேலே கண்ட பகுதியில் கூறுவது ஓசையின் சிறப்பு நிலையைக் குறிப்பதாகும். எண்சீர் தொடர்ந்து  அகவற்பா சென்ற வழித் தூக்கு என்ற உறுப்பு இல்லை என்றால் அங்கு ஆசிரிய ஓசையைப் பெற முடியாது.  அங்கு நான்கு சீரில் துணித்து அகவலோசையைப் பெற தூக்கு முக்கியம்.  அடிகளைத் துணித்தல் என்பதே தூக்கின் தனித்தன்மை அல்லது சிறப்புத்தன்மை அதனாலேயே தூக்கு தனி உறுப்பாகத் தொல்காப்பியராலும் நற்றத்தனாராலும், பல்காயனாராலும், யாப்பருங்கலத்தாராலும் கருதப்பட்டது. எனினும் பின்னால் நற்றத்தனாரும் பல்காயனாரும் தூக்கும் பாவும் என்ற ஒன்றே என்று முரண்படுவதையும் யாப்பருங்கல விருத்தி மூலம் அறிய முடிகிறது. அது ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது. 

    பா என்பதற்கான பேராசிரியர் விளக்கம்: 

    பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமல் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. (பக்.205; மேலது)

     இவ்விளக்கம் நமக்கு உணர்த்துவது:  சேட்புலத்தில் இருந்தில் இருந்து   ஒருவர் பாடம் ஓதும்போது  அவர் பாடம் ஓதுவது   இன்னச் செய்யுள் என்பதை ஓசையின் மொத்ததுவத்தை வைத்துப்   அதைக் கேட்பவர் புரிந்து கொள்கிறார் . இவ்விளக்கத்தில்   பேராசிரியர் ஓசையின் மொத்தத்துவமாகிய ‘ பா’ வைப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்று குறிக்கிறார். இது நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஓசைக்குரிய பொது நிலையாகும்.

    இறுதியாக,  தொல்காப்பியர் ஓசையின் சிறப்புத்தன்மையையும், பொதுத்தன்மையையும் விளக்கப் பயன்படுத்திய  உத்தியைத்தான் அமிதசாகரர் தன் யாப்பருங்கல நூலில் பின்பற்றுகிறார். தூக்கும், பாவும் வேறு என்ற சிந்தனையை அவர் தொல்காப்பியர் வழியாகப் பெற்றிருந்தாலும் தூக்கையும் பாவையும் குறிக்க ஏன் இரு சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? இரண்டையும் இரண்டாகக் கருதி ஏன் தனி விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டும்? அதனால் பயன் என்ன? அதனால்  கால விரயம்தான் மிஞ்சும்;  பாக்களைக் கூறும் போதே தூக்கு கிடைக்கும் அதனால் தூக்கிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை; அதை ஓர் உறுப்பாகவும் குறிக்கத் தேவையில்லை; தூக்கை ஓர் உறுப்பாகக் கூறி யாப்பு உறுப்புக்களின் எண்ணிக்கையைப் பெருக்காமல் தூக்கே பா என்று கூறுவதே சிறந்தது என்ற சிந்தனை வலுபெற்ற காலக்கட்டத்தைச் சார்ந்தவராக அவர் இருந்ததால் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் தூக்கு பற்றிய தர்க்கத்தையும் புறக்கணிக்க முடியாமலும் அதே நேரத்தில் தூக்கை முற்றிலும் விட முடியாமலும் இரண்டிற்கும் நடுவே ஊஞ்சல் ஆடிய அமிதசாகரரின் தூக்கு பற்றிய சிந்தனையைத்தான் அவரது நூலில் நாம் காண்கிறோம்.  அதாவது தூக்கு ஓர் உறுப்பாகக் குறிக்கப்பட வேண்டும் அதற்கான அறிவியல் அடிப்படையில் அமைந்த நியாயம் அவரை தூக்கைச் செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாக யாப்பருங்கலத்தில் குறிக்கச் செய்தது; ஆனால் தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்ற அவரது காலகட்டத்தின் தர்க்கம் அவரை தூக்கிற்கென்று ‘ தூக்கோத்து’ என்ற தனி ஓத்து அமைக்கவிடாமல் தடுத்து, அதனை செய்யுளியலிலேயே விளக்கும்படிச் செய்தது. எனினும் இது ஆய்விற்குரியது.

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

    1. அமிதசாகரர் – யாப்பருங்கலம் விருத்தியுரையுடன் , இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976.
    2. அமிதசாகரர் – யாப்பருங்கலக்காரிகை, குணசாகரர் இயற்றிய உரையுடன், உல்ரிக்கே நிகோலஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு, EFEO, புதுச்சேரி: 1993.
    3. தொல்காப்பிய மூலம் பாடவேற்பாடுகள்: ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடசுப்பையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் பள்ளி, திருவனந்தபுரம்: 1996.

        4. தொல்காப்பியர் – தொல்காப்பியம் செய்யுளியல்
    பேராசிரியர் உரை, சி.கணேசய்யர் பதிப்பு,  உலகத்
    தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007

    *****

    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO),
    புதுச்சேரி.

     

     

     

     

     

     

     

    Share