Blog

  • படக் கவிதைப் போட்டி – 3

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    16720185552_5ebd517bcb_o

    புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • திருவாசகக் கருத்துப் புலப்பாட்டில் உணவுப் பொருட்கள்

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர்,

    அரசுகலைக் கல்லூரி,

    சேலம்-7

    திருவாசகம் சைவர்களின் வேதம் என்று போற்றப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அனுபவப் பழமொழி. அதன் சிறப்பிற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மொழியமைப்பும் கருத்துப் புலப்பாட்டுத் திறனும் முக்கியப் பங்காற்றுகின்றன. உணவுப் பொருட்சொற்களைக் கருத்துப் புலப்பாட்டுத் திறனுக்குப் பயன்படுத்தி மாணிக்கவாசகர் நம் மனதை பக்குவப்படுத்தும் முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார்.

    images (1)

    கருத்துப் புலப்பாடு

    கருத்துப் புலப்பாடு என்பது, ‘ஒரு செய்தியை மற்றவர் அறிய நன்றாகத் தெரிவித்தல்‘ என்பதாகும். இரெ.குமரன் அவர்கள்,காலம்,.இடம், பொருள், கேட்குநர் திறம் ஆகிய அனைத்தையும் அறிந்து மொழியினை ஆள வேண்டும் என்பதே கருத்துப்புலப்பாட்டிற்கு அடிப்படை என்கிறார்….என்பது ஒரு கருத்தைக் கூறுபவர், தான் சொல்ல வந்த கருத்தைக் கேட்பவர் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற முறையில்    அவரது சூழ்நிலைக்கேற்ப அவர் அறிந்துள்ள பொருட்களின் வழி எளிமையாகக் கூறும்  முறையாகும். இலக்கியத்தின் பாடுபொருளை விளக்குவதற்கு ஏற்ற வகையில் உள்ள எந்த ஒரு செய்தியையும்  கூறுபவர் பயன்படுத்தலாம்.அந்தச் செய்திக் கூறுபவரின் ஆற்றலால் பயன் நல்கிக் கருத்தாகிறது.அவரவர் மனநிலைக்கேற்பக் கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.
    உணவுப்பொருட்கள்

    உணவுப் பொருட்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உணவு உடல் வளர்ச்சிக்கும்,நம் இயக்கத்திற்கும் காரணமானது.

    உணவில்லையேல் உயிர்களில்லை. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.மானம் அழிந்து மதி கெட்டு மனிதன் உயரிய குணங்கள் அத்தனையையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.அந்நிலையில் உணவு கொடுப்போர் உயிர் கொடுத்தோராகக் (மணிமேகலை.11.95)கருதப்படுகிறார்.உயிர் மற்றும் உடல் வளர்ச்சிக்குக் காரணமான உணவுப்பொருட்களை உயர் நிலையாம் சன்மார்க்க நெறி விளக்கத்திற்குப் பயன்படுத்துகிறார்.

    தேன் , பால்,கரும்பு  

    தாய் தன் குழந்தையைத் தேனே அமுதே கரும்பே எனப் பலப்படப் பாராட்டிக் கொஞ்சுகிறாள்.தேன் பால் கரும்பு இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடையவை.எனவே,தாய் ஒன்றன் சுவையை மட்டும் குழந்தையின்பத்தை ஒப்பிடப் பயன்படுத்தாமல் பலசுவையுடன் குழந்தையின்பத்தை ஒப்பிடுகிறாள்.இவ்வாறு ஒப்பிடுவது குழந்தையின்பம் ஒப்பிட முடியாத அளவு இன்பம் பயக்கக்கூடியது என்பதைக் காட்டுகிறது. தேனை விடப் பால் இனிமையானது. பாலைவிடக் கரும்பு இனிமையானது. எனவேதான், தாய் ஒன்றைவிட உயர்ந்த ஒன்றைக் குழந்தைக்கு உவமை காட்டி மகிழ்கிறாள்.

    மாணிக்கவாசகரும் இதே நிலையிலிருந்தே, சிவன் அருளை,அருமையைச் சிவனை நினைக்கும் போது ஏற்படும் இன்பத்தை இவ்வகை உயர்ந்த பொருட்களோடு ஒப்பிட்டு உவக்கிறார். முதலில் இறைவனைத் தேனமுது (5.58)என்கிறார். பின்னர்த் தேனோடு பால் கலந்து பருகுவது இனிமையானது, மேலும், சுவையுடையது என்பதால் இறைவனைத் தேனைப்பாலை (5.58), தேனோடுபால்(5.36) என்கிறார். தேனோடு பால் கலந்த இக்கலவை உடலுக்கு ஆக்கம் தருவதுபோல், சிவன் அருள் உயிருக்கு ஆக்கம்  தரக்கூடியது.இது மாணிக்கவாசகருக்கு  இன்னமுதாகத்  தோன்றுவதால் தேனைப்பாலை நிறையின்அமுதை அமுதின்சுவையை(27.4) என்றெல்லாம் இதைப் போற்றுவதோடு இறைவனின் திருவடியை இன்னமுது(8.9), ‘ஆராமுதின் அருள்தாளினைப்பாடி‘(16.1)என்று  உவக்கிறார்.

     தனித்தனிச் சுவைகளோடு ஒப்பிடுவதைவிட ஒரு பொருளின் பல சுவைகளை எடுத்துக்காட்டி  ஒப்பிடுவது, சிவனின் அருமையை உணர்த்தும் என்பதால், இறைவனைக் கரும்போடு ஒப்பிடும்பொழுது கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.‘கரும்பு தரு சுவையே’ (38-1) ‘கரும்பின் தெளிவே’(5-55),‘தீக்கரும்பின் கட்டியே’(8-10) எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார். இரும்பு தரு மனத்தேனை ஈர்த்தென் என்புருக்கிக்கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை’(38-1) என்றும் கரும்பின் தெளிவே(9-90),கன்னலின் தெளிவே’(6-58),தெளிவந்த தேறல்(8-118),தீக்கரும்பின் கட்டியுமாய்’(8-18)எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.

    இறையருள் இச்சுவைகளையெல்லாம் விட உயர்ந்தது,இவை ஒவ்வொன்றும் தனித்தனி சுவையுடையவை. இறையருளோ இவ்வெல்லாச் சுவைகளையும் விட மிக உயர்ந்தது. இதை உணர்த்த,‘தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்தினிய கோன்’(8-14) என அனைத்துப் பொருட்களையும் இணைத்து இறைவனின் சிறப்பை மேலும் மேலும் ஒப்பிட்டு உவக்கிறார்.

    இதன்மூலம் இறையருள் அனைத்து சுவையுடைய பொருட்களையும் விட உயர்ந்தது மதிப்பிடமுடியாத இனிமை தருவது. என உணர்த்துகிறார். தேன்,பால்,கரும்பு என வரிசைப்படுத்தியிருக்கும் முறையைப் பண்டிதமணி  அவர்கள், “இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்….தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்துக் இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (1985.285-286)என்று வியக்கிறார்.மாணிக்கவாசகர் பொருட்களின் தன்மையை நுட்பமாக உணர்ந்த காரணத்தினாலே தான் தேன்,பால்,கரும்பின் வரிசையை முறைப்பட அமைத்து இறையருளோடு பொருத்தமுற ஒப்பிடுகிறார்.

    பழங்களோடு ஒப்பிடல்

    உடல்,உள நல ஆரோக்கியத்திற்கு உகந்தவை கனி வகைகளே. தூய இனிப்புச்சுவை கனி வகைககளில்தான் உள்ளது.உடலுக்கு உயிர்சக்தியைக் கொடுக்கக்கூடியது ஆதலால் தான் நோயுற்றவர்களுக்குக் கனி வகைகளைக் கொடுக்கின்றனர். உலகப் பற்றுகள் என்னும் நோய் பீடித்தவர்கள் உயிர் நலம் பெற, முக்தி நலம் பெற இறையருள்தான் கனிச்சாறாகும். ஆனால், இங்குச் சிவனோ கனிச்சாறாகவே இருக்கிறான் என்கிறார். இறைவனை,

    பழச்சுவை(20-7,9-15) 
      செங்கனி(9-14), 
      மதுரக்கனி(32-10)
      கன்னற்கனி(3-17)
    என்றெல்லாம் பலப்படப் போற்றுகிறார்.

    பலா-வாழை

    பெண்ணாசை,மண்ணாசை,பொன்னாசை இம்மூன்று ஆசைகளும் தான் உலகப்பற்றுக்குக் காரணம். இப்பற்றுக்களில் ஈடுபாடுகொண்டவர்களின் மனம் கல்லைப்போல இறுகி விடும். அத்தகையவர்களின் மனதை கனிவிக்கும் அருட்திறம் உடையவன் இறைவன் ஒருவனே. உலகப்பற்றுக்களில் ‘பலாப்பலத்து ஈ’ போலப் பற்றிக் கிடந்த தன்னை, தன் மனதை இறைவன் தன் கருணைத்திறத்தால் ஆட் கொண்டு உண்மைப்பொருளை உணரவைத்துவிட்டான். தில்லைக்கூத்தனை என்னுள் ஏற்றுக்கொண்ட பிறகு என்கூடும்,உயிரும் கனிந்து மகிழ்வால் கும்மாளமிடத் தொடங்கிவிட்டன என்கிறார். உலகப்பற்றுக்களில் மூழ்கி பலாப்பலத்து ஈ போல இறுகிக்கிடந்த தன்னை இறைவன் தன் அருட்திறத்தால் கனிவித்து ஆட்கொண்ட தன்மையை வியக்கும் நிலையில் இறைவனையே கனியாக்கி ‘கல்நார்உரித்த கனியே’(14-97)என்கிறார்.

     மனம் ஆணவம் நீங்கி கனிந்த தன்மை பெற்றதை  வாழைப்பழத்தோடு ஒப்பிடுகிறார். இறைவன் என் மனதை வாழைப்பழம் போல கனியவைத்துவிட்டான் என்கிறார். வாழைப்பழத்தின் மனம் கனிவித்து’(96-34)என்ற தொடரில் இதை உணர்த்துகிறார். தானே கனியாக இருக்கும் இறைவன், தன் அன்பர்களின் மனதைக் கனிவிக்கும் திறமுடையவனாகவும் விளங்குகிறான்.

    நெல்லிக்கனி 

    நெல்லிக்கனி மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடியது .அதுபோல இறைவன் எளிதாக மாணிக்கவாசகருக்குக் கிடைத்துவிட்டான். இறைவன் மிக எளியவன். அன்பருக்கு அன்பனாய்,தொண்டருக்குத் தொண்டராய்த் தானே வந்து அருள் செய்பவன். இக்கருணை வள்ளல்,மாணிக்கவாசகருக்காகப் பிட்டு சுமந்தும், குதிரைச்சேவககனாய் வந்தும் அருள் செய்தவர். சமயக் குரவர்களில் மாணிக்கவாசகர் ஒருவரே இவ்வாறு இறைவனைத் தொண்டராய் அடையும் பேறு பெற்றவர்.தனக்கு எளியனாய் வந்து அருட்செய்ததை எளிய பழமொழி மூலம் விளக்குகிறார்.
    தடக்கையின் நெல்லிக்கனியாயினான் (3-162)
    எளியன் என்று தான் கூறிய சொல்,தன் வாழ்க்கையில்  நடந்த நிகழ்வுகளின் வழி ஊரறிந்த இரகசியமாகவும் உள்ளது என்பதை இவ்வடிகளின் மூலம் புலப்படுத்துகிறார். மக்கள் அன்றாடம் பேச்சு வழக்கில் பயனபடுத்தும் தொடர்களை இலக்கியத்தில் கையாள்வது ஒருவகை உத்தியாகும். பலாப்பலத்து ஈ, உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற பழமொழிகளை இடம் நோக்கி கருத்துப் புலப்பாட்டின் எளிமைக்காகத் திறம்படக் கையாண்டுள்ளார்.

    புளியம்பழம்

       தமிழர்கள் இனிப்புச்சுவைக்கு அடுத்து புளிப்புச் சுவையையே பெரிதும் விரும்புகின்றனர். புளிப்புச் சுவையுடைய இயற்கைப் பொருட்களில் புளியங்காய் முதலிடம் பெறும். இது முற்றும்போது இனிப்புச்சுவையுடைய புளியம்பழம் ஆகிறது. காயாக இருக்கும் போது தோலும் உள்சதையும் இணைந்து பிரிக்க முடியாத நிலையில் இருக்கும். ஆனால், பழமாகும்போது தோல் முற்றி விடும்.சதைப்பகுதிப் பழமாகி தோலிலிருந்து விடுபட்டுக் காணப்படும். எளிதாக ஓட்டுப் பகுதியை பிரித்து விடலாம்.

    மாணிக்கவாசகர் இவ்விரு நிலைகளையும் தன் வாழ்க்கை அனுபவத்தோடு ஒப்பிடுகிறார். திருப்பெருந்துறையில் இறைவனாகிய குருநாதரைச் சந்திக்கின்ற வரையில் அவர் உலக இன்பத்தில் மூழ்கியிருந்தார். பல பற்றுக்களால் பற்றப்பட்டிருந்தார். அவற்றிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வுகூட அவரிடம் இல்லை.  ஆனால், குதிரை வாங்கச் சென்ற வழியில் இறைவன் அவரை ஆட்கொண்டார். மாணிக்க வாசகர் குதிரை வாங்கவே பெருந்துறை சென்றார். இறைவனைத் தரிசிக்கும் நோக்கத்துடன் செல்லவில்லை.ஆனால் இறைவனாகிய குருநாதரைக் கண்டவுடன் மிக இயல்பாக வசப்பட்டு விட்டார்.இந்நிலையில் அவரைப் பற்றியிருந்த அவர் பற்றியிருந்த பற்றுக்களெல்லாம் தீயிலிட்ட பங்சினைப் போல மறைந்து போய்விட்டன.பற்றற்ற நிலையில் பற்றுக்களாகிய புளியம் ஓட்டினை விட்டு, இறைமை உணர்வுடன் இனிப்புச் சுவையுடைய பயன்பாட்டிற்குரிய புளியம்பழம் நிலைக்கு அவரது உயிர் கனிந்து விட்டது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், தானிருந்த நிலையைப் புளியம் பழமொத்திருந்தேன் என்கிறார்.தன் பற்றுக்களுக்கும், இவ்வுலக வாழ்விற்கும் காரணமான உடலைப் புளியந்தோடு என்கிறார்.

     ”அளி புண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடைய
    யாக்கை புளியம் பழமொத்திருந்தேன்”(25-5) இறைவனின் திருவடியை அடையும் வேட்கையினால், இப்பரு உடலைவிட்டு நீங்கி இறைவனடியை சேர விரும்பும் உயிரின் ஆசையை, இப்பாடல் வரிகளில் புலப்படுத்துகிறார்.

    திருமந்திரப்பாலொன்றும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
    “அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
    புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கி”(திருமந்திரப் பாடல்.2920)என்ற பாடல் பற்றறுத்து பக்குவப்பட்ட உயிர்கள் ஓட்டிலிருந்து நீக்கிய புளியம்பழம் போன்றவை. கனிந்த நிலையிலுள்ள அவ்வுயிர்களையே பராசக்தி பற்றுவாள் என்கிறது.

     இதே நிலையினைக் குலாப்பத்தில்,இறைவனாகிய குருநாதரைச் சந்திக்குமுன் அமைச்சராக இருந்தபோது பட்டாடையும் பொற்கலமுமே உறவு என நினைத்து வாழ்ந்திருந்தேன. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின் ஓடும் கவுந்தியுமே உறவாகிவிட்டது. பட்டாடையும் பொற்கலமும்  அமைச்சர் பதவியும் தராத   மகிழ்வை ஓடும் கவந்தியும் தந்து விட்டன.ஆனந்தக் கூத்தனைச் சிவனை  என்னுள் ஏற்றுக் கொண்டபிறகு என் கூடாகிய உடலும், உயிரும் மகிழ்வால் கும்மாளமிடத்தொடங்கிவிட்டன.

    குலாப்பத்திலும்,

    “தேடும்பொருளும் சிவன்கழலே எனத்தெளிந்து
     நாடும் உயிரும் குமண்டையிடக் குனிந்து அடியேன்
     ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.(4-1)
    என்று தன் உயிரின் நிலையை உணர்த்துகிறார்.

    இறை ஒன்றே நிலையானது. மற்ற அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர்த்த விரும்பிய மாணிக்கவாசகர், மேற்கண்டவாறு பழங்களின் தன்மையோடு வாழ்க்கையை ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.பூவாகி பின் பழமாகி அதுவும் மாறி அழுகி மண்ணில் வீழும் பழங்களின் வாழ்க்கையோடு மனித வாழ்க்கையை ஒப்பிடுகிறார்.   ”அரும்பாய்க் கவிமலராய்க் காயாகி வம்பு பழுத்து உடலம் மாண்டு” (40-6)என்று அரும்பாகி, மலராகி, காயாகி, பழுத்து, பின் பழம் வீழ்ந்து அழிவது போல நம் உடலும் அழிந்துவிடும் என்கிறார்.   ‘பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்‘ எனத் தொடங்கும் குண்டலகேசிப் பாடலும் இதே உண்மையை உணர்த்துகிறது.

    தயிர்

    மாணிக்கவாசகர் உள்ளம்,முதலில்  இறைக் கருணையைப் பற்றாமல் புலன்களால் அலைப்புண்டு அவரையும் அலைக்கழிக்கிறது. தன் உள்ளம் தன்னைப் படுத்தும் பாட்டை  மத்திடு தயிராகி (5-10) என்ற உவமை மூலம் விளக்குகிறார். “மத்துறு  தண் தயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி” (6-30) என்றும் ”மத்திட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன்” என்றும்  கூறுகிறார்.ஐம்புலன்களைப் பலமுகம் கொண்ட மத்தாகவும், உள்ளத்தைத் தயிராகவும் உவமிக்கிறார். திருநாவுக்கரசரும் “மத்துறு தயிர் போல் மறுகும் உன் சிந்தை” (4-96-3) என்று புலன்களின் வழி சென்ற  தன் உள்ளம் படும் பாட்டை எடுத்துரைக்கிறார்.

    நெய்

    இறைவனை ஆவின் பால் என்றழைக்கிறார். ஆன்நெய்(5-38).பசுவின் நெய் தூயது.பக்கவிளைவுகளற்றது.ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தக்கூடியது. நெய் பாலில் மறைந்திருகக்கூடியது. அதுபோல இறைவனும் உயிர்களின் ஆன்மாதோறும் மறைந்துள்ளான். பாலில் மறைந்துள்ள நெய் பின் வெளிப்படுவது போல வாய்ப்பு நேரும்பொழுது, இறைவனும் வெளிப்படுவான். சிவவாக்கியர் இந்நிலையை, ‘ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே‘ என்கிறார். மாணிக்கவாசகர் இந்நிலையை, ‘பாலில் நெய் போலப் பேசாதிருந்தாய்‘(21-5) என்கிறார்.இதே கருத்தை,”சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்ப பாயமு தாகிநின் றண்ணிக் கின்றானே”(திருமந்திரப் பாடல்.2365)”காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்      பாலினுள் நாற்றமும் போலுளன்”(பாடல் எண்.2639)முதலான இத்திருமந்திரப்பாடல்களும் இறைவன் கருப்பங்கட்டியுமாய்,பாலில் மறைந்த நெருப்பாய்,பழரசமாய்,பூவினுள் விரவிய மணமாய் விளங்குகிறான் என்கின்றன.
    பாலில் மறைந்துள்ள  நெய் பின் வெளிப்படுவது போல, வாய்ப்பு நேரும்பொழுது இறைவனும் வெளிப்படுவான். சிவவாக்கியர் அந்நிலையை ‘ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே‘ என்கிறார். மாணிக்கவாசகர் இந்நிலையைப் பாலில் நெய் போலப் பேசாதிருந்தாய்(21-5) என்கிறார்

    எள்ளும் எண்ணெயும்

    ‘எள் என்றால் எண்ணெயாக இருக்கவேண்டும்‘ என்பது தமிழில்  ஒரு பழமொழி. இப்பழமொழி வேகத்தையும்,செயல்திறனையும் குறிக்கிறது. சிவனை நினைத்தளவிலேயே அவனுடைய  அருள் அவனை நினைத்தவர்களுக்குக் கிடைத்துவிடும். சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனை, ‘எள்ளும் எண்ணெய் போல் நின்ற எந்தையெ (5-46) என்கிறார். அன்பர்கள் இறைவனை நினைத்தளவிலேயே வேண்டியதைக் கொடுக்கும் அருட்பேராற்றல் கொண்ட வள்ளல் என்பதை இதன் மூலம் புலப்படுத்துகிறார்.

    சிவனே ஓர்அமுதம் 

    உயிர்களுக்கெல்லாம் அமுது என விளங்கக் கூடியவன் சிவன் ஒருவனே. உயிர்களைக் காக்க வேண்டி ஆலாலவிடத்தையே அருந்தியவன். சிற்றுயிர்களுக்காக இவ்வுலகின் முதல்வனான சிவன் தாயாகிக் கருணையினால் தன் உயிரையும் பொருட்படுத்தாது விடம் அருந்திய திறத்தை, சிற்றுயிர்க்கிரங்கிக் காய்ச்சின ஆலமுண்டாய்(6-50) என்கிறார். சிற்றுயிர்களுக்காக மட்டுமின்றி,மிருமாலையும்,பிரமனையும்,தேவர்களையும் காக்கும் பொருட்டு ஆலமுண்டதை,“ஆலாலம் உண்டலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட மேலாயத் தேவரெல்லாம் வீடுவர் காண் சாழலோ “ என்கிறார்.

    பிறர் நலனுக்காக  ஆலாலத்தை அமுதாக உண்ட சிவனை ,

    வானோர்க்கு அமுதம்(5-69) 
    ஆலாலம் அமுது(13-12) 
     ஆலாலம் ஆரமுது(12-19)
     நஞ்சமுதாக்குங்கண்டன்(6-82) போன்ற தொடர்களால் குறிப்பிடுகிறார்.

    முடிவுரை

    சிவனின் பெருமை, அருட்தன்மை,தூய தன்மை,எளிமை, இருப்புநிலை முதலியவற்றோடு தன்நிலையையும் விளக்குவதற்கு எளிய மக்களும் புரிந்து கொள்வததற்கேற்ற வகையில் எளிய வகை உணவுப் பொருட்களின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்.உணர்ந்து உணர்ந்து, நினைந்து நினைந்து படித்து இன்புறத் தக்கவகையில் திருவாசகம் இருப்பதற்குக் காரணம் இதுபோன்ற எளிய உத்திகளே காரணம்.. இக்காரணம் பற்றியே திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. திருவாசகம் உணவுப் பொருட்களை வைத்து தன் கருத்தை எளிய மக்களும் புரிந்து கொள்ள உதவுவது அதன் சிறப்பு. அத்திருவாசகத்தையே வள்ளலார், நற்கருப்பஞ்சாற்றில் ,தேன்கலந்து ,பால்கலந்து,செழுங்கனி தீஞ்சுவை கலந்து செய்யப்பட்ட இனிப்புப் பதார்த்தமாகச்  சித்திரிக்கிறார்.ஆனால், உயிரில் கரைந்துவிடும் இத்தன்மையுடைய இந்த இனிப்பு உவட்டாமல் இனிக்கக்கூடியது என்று மேலும் இதனைச் சிறப்பிக்கிறார்.

    துணை நின்ற நூல்கள்

    1.குமரன்,இரெ., சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள்,அனன்யா பதிப்பகம்,தஞ்சாவூர்-மு.ப.-2001
    2.வரதராஜன்.ஜி,(உ.ஆ.,),திருமந்திரம் மணிவாசகர் பதிப்பகம்,சென்னை
    3.வெள்ளைவாரணம்.ம.திருவாசகம், காசித்திருமடம்,12ம. பதிப்பு -2003.

    Share
  • படக் கவிதைப் போட்டி – 2இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    ராபின் ராஜ் எடுத்த படம், பலரின் மன வயலில் கவிதைப் பயிர்களை வளர்த்துள்ளது. நாற்று நடும் உழவரின் கண்கள் என்ன சொல்கின்றன எனப் பலரும் எழுத்தால் படம் பிடித்தது, நல்ல முயற்சி. இது, மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்றதாலோ என்னவோ, சிலர் பயிர் சுமந்த நிலத்தையும் பெண்ணையும் ஒப்பிட்டு எழுதியிருந்தனர். நிலமென்னும் நல்லாள் நகும் என்ற வள்ளுவரின் வழியில் இவர்கள் நடை பயில்கின்றனர்.

    Robins_click
    நிலம் – பெண் என்ற வகைப் படைப்புகள் ஒரு புறம் இருக்க, விளைநிலங்கள் விலை நிலங்களாய் ஆகிவரும் நிலையும் பல கவிதைகளில் கவலையாகவும் ஆதங்கமாகவும் கோபமாகவும் வேண்டுகோளாகவும் பதிவாகியுள்ளன. அதே போல், நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழைய வசனத்தையும் பலரும் எதிரொலித்துள்ளனர்.

    இது, ஒரு வகையில் ஒரே வகையான எண்ணங்கள், பலரிடமிருந்தும் எழுவதற்கு ஒரு சான்றாகும். மேலும், படைப்புகளில் முந்தைய பின்னூட்டங்களின் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இது, படக் கவிதைப் போட்டியின் சவால்களில் ஒன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதாகவும் வலிமை மிகுந்ததாகவும் கூர்மை உடையதாகவும் அமையுமாறு எழுதுவது, ஒவ்வொருவரின் தனித் தன்மையை வெளிப்படுத்த உதவும்.

    இந்த வாரப் படைப்புகளை ஆராய்ந்ததில், ஜெயபாரதனின் முதல் பின்னூட்டம், நன்கு அமைந்துள்ளது.

    வானம் பார்த்த பூமி

    வானம் பார்த்த பூமி, எங்கள்
    மானம் காக்க வேண்டும் !
    வயலில் வேலைக்(கு) ஆளில்லை, இந்த
    வருடம் போதிய மழை யில்லை !
    நீரின்றி நடுவதா மாரி யாத்தா ?
    ஊரில் உதவிட யாரு மில்லை
    பச்சை நாற்றெல் லாம் காய்ந்திடுமோ ?
    அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை !
    பிச்சை எடுக்கவும் இச்சை யில்லை !
    நஞ்செய்ப் பயிரெல்லாம் வஞ்சனை யாளர்
    தஞ்சமாய்ப் போச்சு ! பஞ்சமாய் ஆச்சு !
    உழுதுண்டு வாழும் நாங்கள் தினம்தினம்
    அழுதுண்டு சாவோம் ! அரசு உதவுமா ?

    சி. ஜெயபாரதன்.

    வயலில் வேலைக்கு ஆளில்லை என்ற நிலையிலும், தளராது உழைக்கும் ஒருவரின் மன ஓட்டங்களை இந்தப் படைப்பு, சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. மாரியாத்தா என்ற விளி, உயிரோட்டத்தைக் கூட்டுகிறது. அதே நேரம், இரு பொருளையும் தருகிறது.

    ஆயினும், கடைசி நான்கு வரிகளும் எனக்கு உடன்பாடானது இல்லை. நிலத்தை விற்பது என்பது பல இடங்களில் நில உரிமையாளரின் உடன்பாட்டோடும் அவரின் பேராசையின் காரணமாகவும் நிகழ்கின்றது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கருத்தை நாம் சரியாக உள்வாங்கினால், அடுத்தவரின் மீது முழுப் பழியையும் சுமத்த மாட்டோம். அதே போன்று அரசு உதவுமா? என்ற கேள்வியும் கூட, இந்தச் சிக்கலுக்குச் சரியான தீர்வு இல்லை. நம்பிக்கையை இந்தக் கவிதை இன்னும் சிறப்பாக முன்னிறுத்தி இருக்கலாம். ஆயினும், அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை ! என்ற வரி, இந்தக் கவிதைக்கு வலுச் சேர்க்கிறது. எனவே, இதன் பொருட்டு, கவிஞர் சி.ஜெயபாரதன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறோம்.

    கல் விதைத்து
    மனை பிரித்து
    கட்டிடம் எழுப்பி
    கோடிகள் பார்க்கும் காலத்தில்
    நெல் விதைத்து
    நீர் வார்த்து
    நாற்று வளர்த்து
    நலிந்து போகிறான்
    என்னுடைய விவசாயி!

    எனச் சிறப்பாக ஒப்பிட்ட அமீரை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அடையாளம் காண்கிறோம் (அமீர், கட்டடம் என்பதே சரி).

    இவர்கள் இருவருக்கும் சிறப்புப் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • விண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக் கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3F_o5YxNi00

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9EdAgdMwnDE

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1-zqQSRw2-A

    http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU

    http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013]

    +++++++++++++

    ஊழி முதல்வன் மூச்சில்
    உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி
    சப்பி மீளும் ஒரு யுகத்தில் !
    விழுங்கும் கருந்துளைக் களஞ்சியத்தியில்
    மீள் உயிர்க்கும் ஒளி மீன்கள் !
    விண்வெளி  விரிவை விண்ணோக்கி காண
    கண்ணொளி நீண்டு செல்லும்!
    நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை
    ஊடுருவிக் காமிரா
    கண்வழிப் பூமிபோல் தெரியும்
    பேரளவுக் கோள்கள் பற்பல !
    ஓரிரு கோள்கள் சுற்றி வரும் இரட்டை,
    மூன்று, நான்கு பரிதிகள் கூட்டு
    ஏற்பாடு கண்டார் !
    இரட்டை விண்மீன்கள்  சுற்றும்
    தரணிகள் பற்பல !
    பூத விண்வெளியில் முதலாய்
    பூமியைப் போல்
    நீர்க்கோள்  இரண்டைப்
    பார்த்திடும் கெப்ளர் விண்ணோக்கி !
    சில்லியின் வானோக்கி மூலம்
    விண்வெளியில்
    கண்ட புவிக்கோள்கள் அநேகம் ! ஆயினும்
    இன்னும் சவாலாய்க்
    கண்ணுக்குத் தெரியாமல் நிபுணர்
    தேடிச் செல்லும் கோள்கள்
    கோடிக் கணக்கில் !

    +++++++++++++++

    Quadruple Star System

     

    நமது சூரியனைப் போன்ற விண்மீன்களில் 4 சதவீதம், நான்கு விண்மீன் குடும்ப அமைப்புகளை [Four Star Systems] ஒத்தவை.  அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததில் அவை தம்மைச் சீராகச் செம்மைப் படுத்தி வருவதைக் கண்டோம்.  புதிதாக நாங்கள் இப்போது கண்ட நான்கு பரிதிக் கோள் அமைப்பின் பெயர் 30 ஏரி [30 Ari].   அது 136 ஒளியாண்டு தூரத்தில்  உள்ள ஏரிஸ் தாரகை மந்தையில் [Constellation of Aries] அமைந்துள்ளது.

     ஆன்ரை  டோகோவினின் [Cerro Tololo Inter-American Observatory, Chile]

    பல்வேறு வடிவ அமைப்புகளில் விண்மீன் ஏற்பாடுகள் தோன்றுகின்றன.  அவை ஒற்றைப் பரிதி,  இரட்டைப் பரிதி, முப்பரிதி, நாற் பரிதி மண்டல ஏற்பாடுகளாய் அமையலாம்.   அவற்றை இயற்கை  அப்படி அமைப்பது விந்தையானது.   அவற்றை அண்டக் கோள்கள் நெருங்கிச் சுற்றி வருவது, பல்லடுக்கு பரிதிகள் இயக்க ஏற்பாட்டை மிகவும் வலுப்படுத்துகிறது.

    லூயிஸ் ராபர்ட்ஸ் [Jet Propulsion Lab, California]

     

    Four star system -1

    பன்முகப் பரிதி மண்டலத்தில் சுற்றும் அண்டக்கோள் அமைப்புகள்

    நமது சூரியக் குடும்பக் கோள்கள் போன்று ஒற்றைப் பரிதி மண்டல ஏற்பாடுகள் விண்வெளிக் காலக்ஸி  ஒளி மந்தைகளில்  பெரும் பான்மையாகக் காணப்பட்டாலும், அவற்றில் 4% எண்ணிக்கையில் இரட்டைப் பரிதி, முப்பரிதி, நாற்பரிதி அமைப்புகள் தோன்றி உள்ளது ஓர் விந்தை நிகழ்ச்சியே.   வானியல் விஞ்ஞானிகள் இந்த பன்முகப் பரிதிகள் மண்டலத் தோற்றத்துக்கு ஊக்க மூட்டும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கி ஆராய்ந்து வருகிறார்.    ஓரிரு அண்டக் கோள்கள் அவற்றைச் சுற்றி வருவது பரிதிக் கோள் பிணைப்புக்கு வலுவாக்கம் அளிக்கிறது.  இப்போது தெளிவாய் கண்டுபிடிக்கப் பட்டுள்ள நாற் பரிதிக் கோள் அமைப்பைக் காட்டியது ஸாண்டியாகோவில் உள்ள “பலோமர் நோக்ககமே” [Palomar Observatory, San Diego ]. நோக்ககத்தில் பயன்படும் கருவி  “ரோபோ” ஒளிக்காட்சி அமைப்பு [Robo-AO Adaptive Optics System].  அதை விருத்தி செய்தது காலிஃபோர்னியாவின் ஜெட் உந்துகணை ஆய்வகம்.

    இந்த நாற் பரிதிக் கோள் அமைப்பு இரண்டாவது கண்டுபிடிப்பு.   இது ஏற்கனவே முப்பரிதி அமைப்பெனத் தெரிந்த தாயினும்,  இப்போது நாற் பரிதி ஏற்பாடு எனச் சீராக்கப் பட்டுள்ளது.   முதல் நாற் பரிதிக் கோள் அமைப்பு [KIC 4862625] 2013 இல் நாசா கெப்ளர் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப் பட்டது.  புதிதாகத் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள நாற் பரிதிக் கோள் ஏற்பாடுக்கு 30 ஏரி [30 Ari] என்று பெயர்.   அது 136 ஒளியாண்டு தூரத்தில் ஏரிஸ் தாரகை ஒளி மந்தையில் [Constellation Aries] உள்ளது.  அவற்றைச் சுற்றி வரும் வாயுக்கோள் நமது பூதக் கோள் வியாழனை விட 10 மடங்கு பெரியது !  மிகச் சூடான அந்தப் புதிய கோள் பிரதமச் சூரியனை ஒருமுறைச் சுற்ற 335 நாட்கள் ஆகின்றன.

     

    Solar Sytem formation

     

    “அருகில் உள்ள இரு முகில் திரட்சிகள் முறியும் போது, இரட்டை விண்மீன் ஏற்பாடு [Binary Star System] ஒன்று தனித் தனி விண்மீனாக  உருவாகலாம்.   அவை மிக நெருங்கி இருந்தால், ஒன்றை ஒன்றை ஈர்க்கும் விசையால், ஒன்றை ஒன்று ஓர் சுற்றுவீதியில் சுற்ற ஆரம்பித்து, ஓர் ஈர்ப்பு சுழற்சிப் பந்தத்தை உண்டாக்கிக் கொள்கின்றன.     (சமீபத்தில் கண்டுபிடித்த)  விண்மீன் ஏற்பாடு [HD 106906 System]  சூரியனும் அதன் ஒற்றைக் கோளும் வாயு முகில் திரட்சி களிருந்து தனித்தனியாக முறிந்து உருவாகி உள்ளன.   ஏதோ ஓர் காரணத்தால் ஒரு கோளின் பூர்வ முன்னோடித் திரட்சி [Planet’s Progenitor Clump] ஈர்ப்புத் திரட்சியில் பெரிதாக முடியாது, பொறி தூண்ட இயலாது விண்மீன் ஆகாமல் வெறும் கோளாகப் போனது.”

    வனஸ்ஸா பெய்லி  [வானியல் துறை, அரிசோனா பல்கலைக் கழகம்]

    “பொதுவாக இரட்டை ஏற்பாட்டு விண்மீன்கள் [Binary System Stars] வடிவத்தில் 10:1 வீதத்திற்குக் கூடுதலாய் அமைந்தி ருக்காது.   தற்போதையக் கண்டுபிடிப்பில் அந்த இரட்டை ஏற்பாடு விண்மீன் – கோள் பிணைப்பு 100:1 வீதத்திற்கும் மேலாக இருப்பது வியப்பாக உள்ளது !   இம்மாதிரி பேரளவு வீத வடிவ அமைப்பு இரட்டை ஏற்பாடு விண்மீன் அமைப்பு நியதி விதிப்படிக் காணப்பட வில்லை.   அதுபோல் சுற்றும் கோள், மூலச் சூரியன் நிறையிலிருந்தும் உருவான தில்லை என்ற வேறு கோட்பாடுக்கும் விதி விலக்காய் உள்ளது. ”

    வனஸ்ஸா பெய்லி  [வானியல் துறை, அரிசோனா பல்கலைக் கழகம்]

    Chile Space Observatory that Discovered the Binary System Star HD 106906 B

    சில்லி விண்ணோக்கம் புதுவித இரட்டை ஏற்பாடு விண்மீன் – கோள் பிணைப்பைக் கண்டுபிடித்தது.

    2013 டிசம்பர் 4 ஆம் தேதி சில்லி விண்ணோக்கி ஒருவித விந்தையான இரட்டை ஏற்பாட்டு விண்மீன் – கோள்  [Binary System Star – Planet]  பிணைப்பைக் கண்டுபிடித்துள்ளது.   அதன் பெயர் [HD 106906 B] என்று குறிப்பிடப் பட்டுள்ளது.   அந்த இரட்டைப் பிணைப்பு ஏற்பாட்டில் உள்ள சூரியனை நமது பூதக்கோள் வியாழனைப் போல் 11 மடங்கு நிறையுள்ள ஒரு வாயுக் கோள் சுற்றி வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.   அவற்றிடையே உள்ள தூரம் : நமது பரிதி – பூமிக்குள்ள இடைவெளி போல் 650 மடங்கு தொலைத் தூரம் !   இதில் வியப்பென்ன வென்றால்,  சுற்றும் துணைக் கோள் மூல விண்மீன் நிறையி லிருந்து உருவான தில்லை !   இந்த இரட்டை ஏற்பாடு விண்மீன் – கோள் பிணைப்பைக் கண்டுபிடித்து ஆராய்ந்து வரும் குழுவினர் தலைவி :  வனெஸ்ஸா பைலி.  இவர் அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள வானியல் விஞ்ஞான மாணவி.  இந்த  இரட்டை ஏற்பாடு உதிப்பு விதியைத் தற்போதுள்ள எந்தக் கோட்பாட்டு நியதியும் விளக்க வில்லை.

    அருகில் உள்ள இரு முகில் திரட்சிகள் முறியும் போது, இரட்டை விண்மீன் ஏற்பாடு [Binary Star System] ஒன்று தனித் தனி விண்மீனாக  உருவாகலாம்.   அவை மிக நெருங்கி இருந்தால், ஒன்றை ஒன்றை ஈர்க்கும் விசையால், ஒன்றை ஒன்று ஓர் சுற்றுவீதியில் சுற்ற ஆரம்பித்து, ஓர் ஈர்ப்பு சுழற்சிப் பந்தத்தை உண்டாக்கிக் கொள்கின்றன.  சமீபத்தில் கண்டுபிடித்த  விண்மீன் ஏற்பாடு [HD 106906 System]  சூரியனும் அதன் ஒற்றைக் கோளும் வாயு முகில் திரட்சி களிருந்து தனித்தனியாக முறிந்து உருவாகி உள்ளன.   ஏதோ ஓர் காரணத்தால் ஒரு கோளின் பூர்வ முன்னோடித் திரட்சி [Planet’s Progenitor Clump] ஈர்ப்புத் திரட்சியில் பெரிதாக முடியாது, பொறி தூண்ட இயலாது விண்மீன் ஆகாமல் வெறும் கோளாகப் போனது.

    பொதுவாக இரட்டை ஏற்பாட்டு விண்மீன்கள் [Binary System Stars] வடிவத்தில் 10:1 வீதத்திற்குக் கூடுதலாய் அமைந்தி ருக்காது.   தற்போதையக் கண்டுபிடிப்பில் அந்த இரட்டை ஏற்பாடு விண்மீன் – கோள் பிணைப்பு 100:1 வீதத்திற்கும் மேலாக இருப்பது வியப்பாக உள்ளது !   இம்மாதிரி பேரளவு வீத வடிவ அமைப்பு இரட்டை ஏற்பாடு விண்மீன் அமைப்பு நியதி விதிப்படிக் காணப்பட வில்லை.   அதுபோல் சுற்றும் கோள், மூலச் சூரியன் நிறையிலிருந்தும் உருவான தில்லை என்ற வேறு கோட்பாடுக்கும் விதி விலக்காய் உள்ளது.

    Hunt for Earth like planets

    தோன்றி 13 மில்லியன் ஆண்டுகள் கடந்தும், மிச்சமுள்ள வடிவ வெப்பத்தால் இந்த இளமைக் கோள் இன்னும் வளர்ச்சி அடைந்து வருகிறது !   காரணம் :  மூல விண்மீனை விட இந்தக் கோள் 1500 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் [2700 டிகிரி F] குன்றிய குளிர்ச்சியில், வளர்ச்சி அடைகிறது.   ஒப்புநோக்க நமது பூமி 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பே தோன்ற ஆரம்பித்து, இன்னும் பூமியின் உட்கருவில் திரவ உலோகங்கள் கொதித்து வருகின்றன.   அவை பீச்சும் எரிமலைக் குழம்பாய்ப் பூமியில் துளையிட்டு வெளியேறி, ஹவாயி போன்ற தீவுகளை உருவாக்கி வருகிறன.   ஒப்பு நோக்கினால் நமது பூமி புதிய கோளை விட [HD 106906 B] 350 மடங்கு பூர்வீகமானது.  இந்த இரட்டை விண்மீன் -கோள் ஏற்பாடு தொடர்ந்து வானியல் விஞ்ஞானிகளால்  கண்காணிக்கப் படும்.

    “இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல.   அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை.    ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால்  அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை  உடையவரா என்பது தெரியாது.   இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான் நீடிக்க முடியும்.   ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும்.  மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”

    லீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]

    Blue Gaseous Planet -1

    கண்டுபிடித்த நீர்க் கோள்கள் கெப்ளர் -62e,  கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன.   அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன.  நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது.  கணனி மாடலின்படித் துருவம் வரை பூராவும் சூடான வெக்கை மயமானது [Warm and Humid].   தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு  வாயுவை மிகுதியாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது.   இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”

    டிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]

    Two Water Planets

    “ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”

    ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    Kepler -62 System

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது 

    2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது.   அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62].  விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது.  அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் :  கெப்ளர் -62e, கெப்ளர் -62f  [Kepler -62e and Kepler -62f].   நீர்க்கோள்  கெப்ளர் -62e,  அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்;  நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள்.  அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f  40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப் பட்டுள்ளன.  வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலமின்றிப் பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார்.   கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும்,  பூமியை விட மேகம் மூடியிருப்ப தாகவும் தெரிகிறது.  தூரத்தில் சுற்றும் நீர்க்கோள்  கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில் நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது.  இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக் கோள் ஆகியிருக்கும்.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

    2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள  அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b.   2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது.  2013  ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது.  நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியி லிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.   மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும்  நிலவு போல் காணப் பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கரமானது : 2000 டிகிரி F.  வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவ தில்லை.  அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது.  2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope]  விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F  என்று கணிக்கப் பட்டது.

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம்.  ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி !  அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas) ”

    பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

    ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

    Hubble Space Telescope

    “மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப் பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது.  அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்க ளில்லை.  ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம்.  பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”

    அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London’s Science Museum]

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென்  [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

    Total exoplanets 2012

    Size of Planets 2013

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்பு கிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

    “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது !   ஹப்பிள் விண்ணோக்கி  கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது !  எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் நமது காட்சிக்கு வரப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    பூமியைப் போன்ற வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிப்பு !

    250 ஆண்டுகளுக்கு முன்பே விண்கோள் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜெர்மன் மேதை இம்மானுவல் கென்ட் 1755 இல் அண்டக் கோள்கள் விண்மீனைச் சுற்றும் வாயுத் தூசித் தட்டிலிருந்து உதிக்கின்றன என்று முதன்முதலில் அறிவித்தார் !  இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை !  தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார்.  இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார்.  1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள்.  அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள்  [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !  புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது.  7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது !  ஆயினும் பூமியைப் போல் நீர்வளம் மிக்க நீர்க்கோள் ஒன்று இதுவரையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை !

    2006 நவம்பர் அமெரிக்க வானியல் இதழில் (American Astronomical Journal) பரிதியைப் போன்ற விண்மீன் எப்ஸிலான் எரிடானியை (Epsilon Eridani Star) பத்தரை ஒளியாண்டு தூரத்தில் விஞ்ஞானிகள் கண்டதாக அறிவிக்கப்பட்டது.  சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரிய வாயுத் தூசித் தட்டில் ஒரே சமயத்தில் உருண்டு திரண்டு உதித்தவை.  4.5 பில்லியன் வயதுடைய நமது பரிதி ஒரு நடு வயது விண்மீன் !  அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது !  ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது.  அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் !  ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது !  எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது !  அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு !  அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) !  அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன !  ஹப்பிள் தொலைநோக்கி முதலில் அந்த மங்கலான வாயுக் கோளைக் காண முடியா விட்டாலும், 2007 இல் பரிதி ஒளியைப் பிரதிபலித்த போது தெளிவாகப் படமெடுக்க முடிந்தது.


    சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதியதோர் பூமியைக் கண்டுபிடித்தார்

    ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் (ஏப்ரல் 25, 2007), சூரியனைப் போன்ற ஆனால் வேறான ஒரு சுயவொளி விண்மீனைச் சுற்றிவரும் மனித இனம் வாழத் தகுந்ததும், பூமியை ஒத்ததுமான ஓர் அண்டக்கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள்.  தென் அமெரிக்காவின் சில்லியில் உள்ள அடாகமா பாலைவனத்து ஈஸோ வானோக்கு ஆய்வகத்தின் [Atacama European Science Observatory, (ESO) La Silla, Chille, South America] 3.6 மீடர் (12 அடி விட்டம்) தொலைநோக்கியில் பிரெஞ்ச், சுவிஸ், போர்ச்சுகீஸ் விஞ்ஞானிகள் கூடிக் கண்டுபிடித்தது.  அந்த ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத கோள்களின் ஈர்ப்பாற்றல் விளைவால் ஏற்படும் “முன்-பின் திரிபைத்” [Back-and-Forth Wobble of Stars, caused by the gravitational effect of the unseen Planets] தொலைநோக்கி வழியாக மறைமுகமாக விண்மீனைக் காண்பது.  கண்டுபிடிக்கப்பட்ட கோள் நமது பூமியைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது;  அதன் விட்டம் 12,000 மைல்.  புதுக்கோளின் எடை நமது பூமியைப் போல் 5 மடங்கு.  அது சுற்றும் சுயவொளி விண்மீனின் பெயர்: கீலீஸ் 581 c [Gliese 581 c].  புதிய கோள், கிலீஸை ஒரு முறைச் சுற்றிவர 13 நாட்கள் எடுக்கிறது. கிலீஸா ஒளிமீன் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்தி லிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  ஒளியாண்டு என்பது தூர அளவு. ஓர் ஒளியாண்டு என்றால் ஒளிவேகத்தில் [விநாடிக்கு 186,000 மைல் வேகம்] ஓராண்டு காலம் செல்லும் தூரம்.  நாசா விண்வெளித் தேடலின் முடிவான, முக்கியக் குறிக்கோளும் அவ்விதக் கோள்களைக் கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் புரிவதே!

    பரிதி மண்டலத்தைத் தாண்டி இதுவரை [டிசம்பர் 10, 2013] 1051, 797 பரிதிக் குடும்பங்கள்]  வெளிப்புறக் கோள்கள் (Exoplanets) கண்டுபிடிக்கப் பட்டாலும், சமீபத்தில் கண்ட இந்தக் கோள்தான் சிறப்பாக நமது பூமியை ஒத்து உயிரின வாழ்வுக்கு ஏற்ற வெப்ப நிலை கொண்டதாக உள்ளது. மேலும் அந்த உஷ்ண நிலையில் நீர் திரவ வடிவிலிருக்க முடிகிறது.  கிலீஸ் விண்மீனைச் சுற்றிவரும் நெப்டியூன் நிறையுள்ள ஓர் வாயு அண்டக்கோள் ஏற்கனவே அறியப் பட்டுள்ளது.  பூமியைப் போன்று எட்டு மடங்கு நிறையுள்ள மூன்றாவது ஓர் அண்டக் கோள் இருக்க அழுத்தமான சான்றுகள் கிடைத்துள்ளன.  வானோக்கிகள் மூலமாகப் புதிய பூமியின் வாயு மண்டலத்தில் மீதேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா, நமது பூமியில் தென்படும் ஒளிச் சேர்க்கைக்கு வேண்டிய குளோரோ·பைல் காணப்படுகிறதா என்றும் ஆய்வுகள் மூலம் அறிய முற்படும்.

    Einstein Planet

    மறைமுக நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அண்டக்கோள்கள்

    2005 மார்ச் 17 ஆம் தேதி வார்ஸா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆன்டிரி உதல்ஸ்கி [Andrzej Udalski] முதன்முதலாக ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வு முறையில் [Optical Gravitational Lensing Experiment (OGLE)] பூமியிலிருந்து நமது காலாக்ஸியின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்று, அதற்கும் அப்பாலுள்ள விண்மீன் முன்பாக நகர்வதைத் தொலைநோக்கி வழியாகக் கண்டார்.  ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றை நோக்கிய போது விந்தை ஒன்றை விண்வெளி விஞ்ஞானி கண்டார்.  வெகு தொலைவிலிருந்த விண்மீன் வியப்பாக 100 மடங்கு வெளிச்சத்தில் மின்னியது.  அதாவது திடீரென வெளிச்சத் திண்மையில் திரிபு காணப்பட்டது.  அந்த வித விரைவு வெளிச்சத் திரிபு தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்:  அதாவது முன்னிருந்து ஒளித்திரிபை உண்டாக்கிய விண்மீன் ஐயமின்றி ஓர் அண்டக்கோளே!  அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே!  அதாவது புவி எடைக் கோள் ஒன்று அந்தப் பகுதியில் இருந்தால் நாம் தொலைநோக்கியில் அக்கோளைக் காணலாம்.  சில்லியின் லாஸ் காம்பனாஸ் வானோக்கு ஆய்வுக் கூடத்தின் 1.3 மீடர் [4 அடி விட்டம்] தொலைநோக்கியில் ஆண்டுக்கு 600 மேற்பட்ட நுண்ணோக்கு லென்ஸ் ஆய்வுகள் [Micro-lensing Experiments] நடத்தப் படுகின்றன.

    ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வுகள் என்றால் என்ன?

    நாம் வானிலை நூல்களில் பார்க்கும் அழகிய விண்மீன்கள் பெரும்பான்மை யானவை ஹப்பிள் தொலைநோக்கி மூலமாகவோ அல்லது மற்ற தொலைநோக்கிகள் வழியாகவோ குறிப்பிட்ட தூரத்தில் [உதாரணமாக 400 ஒளியாண்டு] பார்த்துப் படமெடுக்கப் பட்டவை.  அந்த தூரம் நமது பால்வீதி காலாக்ஸி விட்டத்தின் 1% தூரம்.  மற்ற காலாக்ஸிகள் பில்லியன் ஓளியாண்டுக்கும் அப்பால் உள்ளன.  1936 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விண்மீன் களின் ஈர்ப்பாற்றல் தளங்கள், ஒரு கண்ணாடி லென்ஸ் போல ஓளியை வளைக்கின்றன என்று கூறினார்.  ஈர்ப்பாற்றல் லென்ஸின் விளைவுகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் இப்போது காணப்படுகின்றன.  அம்முறை மூலமாக வெகு தூரத்தில் உள்ள ஒளிமீன்களைத் தெளிவாகக் காண முடிகிறது.  ஈர்ப்பாற்றல் லென்ஸ் விளைவின் அடிப்படை விளக்கம் இதுதான்:  பூமியின் தொலைநோக்கி மூலமாக இரண்டு விண்மீன்களை நேர் கோட்டில் கொண்டு வந்தால், அண்டையில் உள்ள விண்மீனின் ஈர்ப்பாற்றல் தளம் [லென்ஸ் போன்று] அப்பால் உள்ள விண்மீனின் ஒளியை வளைக்கிறது.  அவ்வளைவு ஒளி ஒரு வட்ட வடிவில் தெரிகிறது.  அதுவே “ஐன்ஸ்டைன் வளையம்” [Einstein Ring] என்று அழைக்கப் படுகிறது.  அந்த நுண்ணோக்கு லென்ஸ் ஈர்ப்பாற்றல் மூலமாகத்தான், புதிய பூமி இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடையே மாபெரும் புத்துணர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

     

    CHIO Observatory, Chile

    பரிதி மண்டலத்துக்கு அப்பால் கோள்களை நோக்கும் முறைகள்

    நேர்முறையில் நோக்க முடியாது பலவித மறைமுக முறைகளில் புறவெளிப் பரிதிக் கோள்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன.  தாய் விண்மீனைப் போல் ஒளியின்றி புறவெளிக் கோள்கள் மிக மிக மங்கலாகத் தெரிவதால் அவற்றைக் நோக்கி உளவுவது சிரமமான ஆராய்ச்சி.  மேலும் தாய்க் கோளின் ஒளி எதிரொளி (Glare) வேறு கொடுப்பதால், மங்கலான வெளிச்சமும் வெளுத்துப் போகிறது. புறவெளிக் கோள் கண்டுபிடிப்பு முறைகள் எவை ? வானியல் அளப்பு முறை, ஆரத்தின் வேக முறை, டாப்பிளர் விளைவு முறை, பல்ஸர் கால முறை, கடப்பு முறை, ஈர்ப்பாற்றல் நுட்ப லென்ஸ் முறை, விண்மீன் சுற்றும் தட்டு முறை, இரட்டைத் தடுப்பு முறை, சுற்றுவீதி நிலை முறை, மறைப்பு அளப்பு முறை (Astrometry, Radial Velocity or Doppler Method, Pulsar Timing, Tansit Method, Gravitational Micro-Lensing, Circumsteller Discs, Eclipsing Binary, Orbital Phase, Polarimerty) போன்றவை. ஹப்பிள் விண்வெளி நோக்கு முறையைத் தவிர இதுவரைப் பயன்படுத்தப்பட மற்ற முறைகள் யாவும் பூதள அமைப்புத் தொலை நோக்கிகள் மூலம் (Ground-Based Telescopes)  கண்ட முறைகளே.  அவற்றை விட மேம்பட்ட முறைகள் தொலைநோக்கிகளை அமைதியற்ற வாயு மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் அனுப்பிக் காணும் முறைகளே.

     

    1. 2006 டிசம்பரில் புறவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க ரஷ்யா அனுப்பிய ஐரோப்பிய கோரட் (COROT) விண்ணோக்கி ஊர்தி.

    2. ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கி இதுவரை ஒருசில புறவெளிக் கோள்களைப் படமெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாசா & ஈசா திட்டமிட்டுள்ள குறிப்பணிகள் :

    3. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி (Kepler Space Telescope) பிப்ரவரி 2009 இல் நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

    4. புதிய உலகங்கள் தேடும் திட்டம் (New Worlds Mission) ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.

    5. ஈசாவின் திட்டம் : டார்வின் உயிரினக் கோள் தேடும் திட்டம் (ESA’s Darwin Space Mission) (ஏவும் ஆண்டு : 2015)

    6. நாசாவின் விண்வெளிக் கோள் திட்டம் (Space Interferomerty Mission) (SIM) (திட்டம் ஆண்டு : 2015 or 2016)

    7. விண்வெளிக் கோள் நோக்கி (Terrestrial Planet Finder) (TRF) (ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.)

    8. பேகஸி (பறக்கும் குதிரைத்) திட்டம் : (PEGASE) PEGASE is a proposed space mission to build a double-aperture interferometer composed of three free-flying satellites. The goal of the mission is the study of Hot Jupiters (pegasids), brown dwarfs and the interior of protoplanetary disks  The mission would be performed by the Centre National d’tudes Spatiales and is currently being studied for launch around 2010-2012.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Are There Other Planets Like The Earth ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Science – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)

    21 National Geographic Magazine – Discovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)

    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]

    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40704261&format=html (திண்ணைக் கட்டுரை – பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்)

    25 National Geographic Magazine – Searching the Stars for New Earths (Dec 2004)

    26 Scientific American – Does Methane Point to Bacteria on Mars & Titan ? By : Sushil K. Atreya. (May 2007)

    27 News Week Magazine The New Solar System – Our Changing Way of the Universe -(Sep 2006)

    28 Cosmos Magazine – Three-Planet Solar System Detected (May 2006)

    29 Cosmos Magazine – Origin of Planets Confirmed (Oct 2006)

    30 Cosmos Magazine – Earth-Like Planet Await Discovery (Sep 2006)

    31 Cosmos Magazine – Distant Sun Has System of Five Planets (Nov 2007)

    32 Cosmos Magazine – Catalogue of Strange New Worlds (May 2007)

    33 Cosmos Magazine – New Earth-Like Planet May Hold Liquid Water (April 2007)

    34 Astronomy Magazine – Earth-Like Planets May Be Common (Dec 2003)

    35 Omnome Science – Earth -2 How to Find Earth-Like Planets (June 2006)

    36 Extra-Solar Planets By : Wikipedia [31 July 2008]

    36(a)  http://revolutionizingawareness.com/tag/space/  [December 24, 2011]

    36(b)  http://www.kavlifoundation.org/science-spotlights/searching-best-and-brightest  [2011]

    37  http://www.messagetoeagle.com/alienwaterworldskepler.php#.Uem1lo3VCPU  [April 18, 2013]

    38  http://www.dailygalaxy.com/my_weblog/2013/07/two-alien-planets-with-endless-oceans-unlike-anything-in-our-solar-system-.html  [July 11, 2013]

    39  http://www.scientificamerican.com/article.cfm?id=first-distant-planet-be-seen-in-color-blue&print=true  [July 11, 2013]

    40  http://science.gsfc.nasa.gov/sed/index.cfm?fuseAction=home.main&&navOrgCode=667  [NASA Sites for Exoplanets]

    41  http://www.spacedaily.com/reports/Hubble_Finds_a_Cobalt_Blue_Planet_999.html [July 12, 2013]

    42.   https://en.wikipedia.org/wiki/Exoplanet  [December 11, 2013]

    43.  http://en.wikipedia.org/wiki/HD_106906_b  [December 12, 2013]

    44.  http://www.centauri-dreams.org/?p=25100  [October 16, 2012]

    45.  http://io9.com/our-first-glimpse-of-a-quadruple-star-system-in-the-mak-1685379405  [February 12, 2015]

    46.  http://en.wikipedia.org/wiki/Star_system  [March 1, 2015]

    47.  http://news.discovery.com/space/alien-life-exoplanets/massive-exoplanet-evolved-in-extreme-4-star-system-150304.htm   [March 4, 2015]

    48.  http://www.sci-news.com/astronomy/science-30-ari-bb-super-jupiter-exoplanet-quadruple-star-system-02565.html  [March 5, 2015]

    49.  http://www.spacedaily.com/reports/Planet_Reared_by_Four_Parent_Stars_999.html  [March 5, 2015]

    50. http://www.sott.net/article/293482-Second-exoplanet-with-four-stars-discovered [March 4, 2014

     

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  March 7, 2015

    http://jayabarathan.wordpress.com/

    Attachments area
    Preview YouTube video Our Binary Star System: the Great Cycle Hindu Yugas 2012

    Our Binary Star System: the Great Cycle Hindu Yugas 2012

    Preview YouTube video Using India made instrument, Nasa discovers planet in 4 star system

    Using India made instrument, Nasa discovers planet in 4 star system

    Preview YouTube video WEIRD PLANETS

    WEIRD PLANETS

    Preview YouTube video UA Astronomers Discover Planet That Shouldn’t Be There

    UA Astronomers Discover Planet That Shouldn’t Be There

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 9, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திருமிகு அனிதா சத்யம் அவர்கள்

     

    Anita Sathiam

     

     

    வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் புகைப்படக் கலைஞரான திருமிகு அனிதா சத்யம் அவர்கள். உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் இவர் வெளியிட்ட, பெண்களை…குறிப்பாக வளரும் சிறுமியரை ஊக்கப்படுத்தும் கருத்துமிக்க அழகிய படமொன்றிற்காக இவ்வார வல்லமையாளராக அனிதா பாராட்டப்படுகிறார்.

    பூனே, மகாராஷ்ட்ராவில் வசிக்கும் அனிதா சத்யம் வல்லமை மின்னிதழுக்கும், “வல்லமை” மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்திற்கும், வல்லமையின் ஃபேஸ்புக் குழுமத்திற்கும் புதியவரல்ல.

    வல்லமை இதழ் படக்கவிதைப் போட்டியைத் துவக்கியபொழுது, முதல் படமாக “மங்கையர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும்” கருத்தைக் கவரும்காட்சி கொண்ட இவரது படம்தான் “வல்லமை” மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் சாந்தி மாரியப்பன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வல்லமை ஆசிரியர் குழுவிற்கு வழங்கப்பட்டது. அப்படம் தந்த தாக்கத்தில் 25 கவிதைகள் வல்லமை வாசகர்களால் போட்டிக்கு அனுப்பப்பட்டதில் புனிதா கணேசனின் கவிதை சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது.

    Anita Sathiam 4

    அனிதா ஃபோட்டோகிராஃபி (Anita’s Photography) என்ற புகைப்பட நிறுவனத்தின் உரிமையாளரான, தொழில்முறை புகைப்படக் கலைஞரான அனிதா வழங்கிய உலக மகளிர் தின சிறப்புப் படத்தின் கருத்து நூல்களிலும் பத்திரிக்கைகளிலும் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வெளிவர வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் கொண்ட பெண்களின் கனவைச் சித்தரிக்கிறது. பள்ளிச் சிறுமி ஒருத்தி விண்வெளி வீராங்கனையான “சுனிதா வில்லியம்ஸ்” பற்றிய நூல் ஒன்றைப் பார்த்து கற்பனையில் திளைப்பதையும், முக மலர்ச்சியுடன் இருப்பதையும் காட்சிப்படுத்தியதுடன் அருமையான வாசகம் ஒன்றையும் படக்குறிப்பாக இணைத்துள்ளார்.

    Anita Sathiam 0

    “அனைவரும் பாராட்டும் வண்ணம் புகழ் பெற்ற நிலையை அடைய வேண்டும் என்பதும், பத்திரிக்கைகளில் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வரவேண்டும் என்பதும் பெண்கள் எல்லோரின் கனவாகும். ஆகவே, (பெண்ணே) முன்னேறுவதை நிறுத்திவிடாதே. தடைகளைக் களையும் போராட்டத்தைக் கைவிடாதே, வெற்றிக் கனவு காணுவதை நிறுத்திவிடாதே. ஒருநாள் உனது கனவு நினைவாகும் … உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம் … “

    என்ற உற்சாகமூட்டும் வாக்கியமும், ஆயிரம் வார்த்தைகளில் விளக்க வேண்டியதை ஒரு படம் விளக்கிவிடும் என்ற சொல்வழக்கை நிரூபிக்கும் வண்ணம், புகைப்படத்தில் பெண்ணின் முகம் காட்டும் உணர்வை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டார் அனிதா. “கனவு காணுங்கள்” என்று இளைய சமுதாயத்தை உற்சாகப்படுத்துவதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இதில் கைகோர்த்துள்ளார். அந்தப் பெண் கையில் வைத்திருக்கும் அறிவியல் சார்ந்த நூலை எழுதியவர், சமீபத்தில் வல்லமைக்குழுவினரால் வல்லமையாளராகப் பாராட்டப்பட்ட அறிவியல் எழுத்தாளர் “ஏற்காடு இளங்கோ”   என்பது ஒரு மேலதிகத் தகவல்.

    உற்சாகமூட்டும் மனப்பான்மை இவர் வாழ்விலேயே இவருக்கு எவ்வாறு உதவியது என்பதையும், தனது துயர நிலையில் தாம் ஆர்வம் காட்டிய புகைப்படக்கலையே எவ்வாறு தம்மை துயரத்தில் இருந்து மீட்டது என்பதையும் இவர் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். வல்லமையின் மற்றொரு வல்லமையாளரான வைதேகி புற்று நோயுடன் போராடி மீண்டதைப் போலவே இவரும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நோயுடனும் உடல்நலக் குறைவுடனும் போராடி மீண்டதைக் குறிப்பிட்டிருந்தார். நோய்க்கான காரணமும் கண்டுபிடிக்க இயலாமல், மருத்துவமனையில் மாதக்கணக்காக இருந்த நாட்களில் மகனையும் மகளையும் பார்க்க இயலாது பிரிந்திருந்ததையும், உடலில் நிணநீர் மண்டலத்தில் ஏற்பட்ட கோளாறினால் காய்ச்சல், பிறகு சிக்கிசையின் பொழுது எலும்பு வலி, பார்வைக் குறைவு போன்று மருந்து தந்த பக்க விளைவுகள் பலவும் இவரைத் தொடர்ந்து  வாட்டியிருக்கிறது. பரிசோதனைகளும் சிகிச்சைகளும் என சற்றொப்ப மூன்றாண்டுகள் பட்ட அல்லலின் போது, இவருக்கு ஆர்வமளித்த புகைப்படம் எடுக்கும் பொழுதுபோக்கை தொடர்ந்து கைவிடாது செய்து தம் மனதை வேறுவழியில் திசை திருப்பி இருக்கிறார். உதவி இன்றி எழுந்து நடமாடவும் முடியாத உடல்நிலை இருந்த பொழுதுகூட, கையில் காமெரா இருந்துவிட்டால் படமெடுக்கும் ஆர்வத்தின் காரணமாக எழுந்து நடமாட முயன்றதைக் குறிப்பிட்டு, தமது ஆர்வமே தம் நோயைத் தாங்கி எதிர்க்கும் சக்தியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    வலிமிகுந்த துன்பமான நேரங்களில் ஒருவர் தனக்கு ஆர்வமான பணிகளில் மனதை செலுத்துவது வலியை மறக்கச் செய்யும், வாழ்வதற்கு நம்பிக்கையை அளிக்கும் என்பது இவர் தனது அனுபவத்தின் மூலம் கண்ட பாடம். தனது வாழ்க்கைப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டாரோ அது போலவே; சோர்ந்துவிட வேண்டாம், போராடும் குணத்தையும், நம்பிக்கையையும் கைவிட வேண்டாம், வெற்றி நிச்சயம் என்ற அறிவுரை கூறி, உற்சாகமூட்டி நம்பிக்கைத்தரும் வாசகத்தையும் தனது படத்துடன் வழங்கியுள்ளார். ஒரு பெண் தனது குறிக்கோளை கல்வியின் மூலம் அடையும் வழியை சிறந்த படத்தின் வழி கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். வளரும் பெண்களுக்கு ஊக்கமூட்டும் தமது நோக்கத்தை தமது  புகைப்படக்கருவியின் உதவியுடன் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

    மனிதர்களின் உணர்வுகளை மிகவும் திறம்பட படமாக்குவது அனிதாவின் தனிச்சிறப்பு. இவரது தொடர்ந்த கலைப்பயணத்தில் இவர் எடுக்கும் புகைப்படங்கள் பலரையும் கவர்கிறது என்பதையும் அறிய முடிகிறது. ஃபேஸ்புக்கில் , ~ 20,000 புகைப்பட ஆர்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு  இயங்கி வரும் ‘புகைப்படப்பிரியன்’ குழுமம்  தனது மூன்றாம் ஆண்டு கூட்டத்தை “எக்ஸ்போஷர் 15” எனும் புகைப்படக் கண்காட்சியாக சென்ற சனி-ஞாயிறு (மார்ச் 7, 8ஆம் தேதிகளில்) நடத்தியது.  நாகர்கோவிலில் நடைபெற்ற இக்கண்காட்சியில் உலகெங்கிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள், பற்பல பிரிவுகளில் தேர்வாகிக் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றோடு “ஃபோட்டோ ஆஃப் தி டே” எனக் கடந்த 45 நாட்களில் தினம் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்களும் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவில் அனிதாவின் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவரது படங்கள் பலவும் காட்சியிலும் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது.

    Anita Sathiam 1

     

    Anita Sathiam 2

    கீழே அனிதாவின் புகைப்படங்கள் சில பார்வைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது:

    Anita Sathiam 5

     

    தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மறு உருவமான அனிதா புகைப்படக் கலையில் மேலும் பல சிகரங்களைத் தொடக்கூடிய திறமை கொண்டவர் என்பதை இவர் பெற்று வரும் பாராட்டுகள் காட்டுகின்றன. இவர் தனது வாழ்வில் மேலும் பல சாதனைகள்  செய்ய வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    படங்களும் செய்திகளும் பெறப்பட்ட தளங்கள்: 
    Celebrating Woman’s Day
    https://scontent.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/11004632_797455013680132_2660827701843388004_o.jpg

    Exposure 2015 – Photography Exhibition’s Photo of the Day
    https://scontent.xx.fbcdn.net/hphotos-xpa1/t31.0-8/10530653_786743984712561_8778096198208339583_o.jpg

    Padak Kavithai Potti
    https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/10830794_1024126740936314_3854470771912612369_o.jpg

    Anita’s Photography (Anita’s Click)
    https://www.facebook.com/pages/Anitas-Photography/744799132202411?pnref=lhc

    Anita Sathiam
    https://www.facebook.com/anitasathiam

     

    நாகர்கோவிலில் 7,8 தேதிகளில் புகைப்படக் கண்காட்சி – தி இந்து   –   http://tamil.thehindu.com/tamilnadu/article6962689.ece

    புகைப்படப்பிரியன் – https://www.facebook.com/profile.php?id=100008964732801

    Nellai Weekend Clickers Nwc- https://www.facebook.com/profile.php?id=100008368991065&fref=photo

    Share
  • காதல் நாற்பது – 34

    jay

    உன்னை நாடும் என்னிதயம்

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

    அதே குழந்தை உளத்துடன் பதில் உனக்கு

    அளிப்பதாய்ச் சொன்னேன்,

    பிறரைப் போல் நீயும் என்

    பேர் சொல்லி அழைப்பதால் !

    வீணான வாக்குறுதி அது !

    அதுவே தான் !

    வாழ்க்கைச் சூழ்நிலையால் கொந்தளித்துக்

    குழப்பம் அடைவதா ?

    முன்பு நீ என்னைக்

    காண வரும் போது பதறி

    நானோடி வந்ததும்

    புன்சிரிப்போடு

    பூக்களை உடனே நழுவ விட்டதும்,

    விளையாட்டில்

    கலந்திடாமல் சட்டென விட்டு

    விலகியதும்

    உனக்குச் சொன்னேன் !

    பின்பு நாடக முடிவில் தணிந்து போய்

    என் போக்கிலே போனேன் !

    இப்போது நான்

    அப்படிப் பதில் கூற நேர்ந்தால்

    மரண எண்ணத்தை அறவே

    துறப்பேன் !

    தனிமைத் தவிப்பி லிருந்து

    நான் விடுபடுவேன் !

    ஆயினும் இன்னும்

    உன்னைத்தான் நாடிச் செல்லும்

    என்னிதயம் !

    ஏனெனச் சிந்திப்பாய் !

    நல்வினை ஒன்று மட்டுமின்றி எனது

    எல்லா

    நல்வினை களையும் எண்ணிப்பார் !

    உன் கை ஆசி வழங்கட்டும்

    என் உன்னத பணிக்கு !

    குருதி போல் எந்தக்

    குழந்தை காலும் விரையாமல்

    உலவ விடு !

    ************

    Poem -34

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    With the same heart, I said, I’ll answer thee

    As those, when thou shalt call me by my name–

    Lo, the vain promise! is the same, the same,

    Perplexed and ruffled by life’s strategy?

    When called before, I told how hastily

    I dropped my flowers or brake off from a game,

    To run and answer with the smile that came

    At play last moment, and went on with me

    Through my obedience. When I answer now,

    I drop a grave thought, break from solitude;

    Yet still my heart goes to thee–ponder how–

    Not as to a single good, but all my good–

    Lay thy hand on it, best one, and allow

    That no child’s foot could run fast as this blood.

    **********

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 156

    மலர் சபா.

     

    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    1382096459

    பதியிலாரின் இரு பெரு வீதிகள்
    குடிப்பழி இல்லாச் சிறப்பினையுடைய,
    முடிசூடிய அரசரும் கூடப் பிறர் அறியாவண்ணம்
    வந்திருந்து தங்குகின்ற தன்மை உடைய மனைகளில்
    குற்றம் ஏதும் செய்யாத காரணத்தால்
    செங்கல் தலையில் சுமக்கும் தண்டனை அனுபவித்திடாத
    நாடகக் கணிகையர் வாழ்ந்து வந்தனர்.
    வேத்தியல் பொதுவியல் எனும்
    இருவகைக் கூத்தின் திறமறிந்து,
    அவை மயங்காமல் ஆடும்
    முறைமையான ஆடலும் பாடலும் தாளங்களும்
    தாளங்களின் வழிவரும் ஏழுவகைத் தூக்குகளும்
    இவற்றுடன் சேர்ந்து இசைக்கும்
    குயிலுவக் கருவியும் தெளிவாக உணர்ந்தவர்கள்.

    நால்வகைப்படும் அபிநயங்களில் வித்தகர்கள்.
    குரல் முதலாய் ஏழ்வகைச் சுரங்களும் பொருந்திய
    ஆடல் பாடல்களை எங்கேயும் நிகழ்த்தும் இயல்புடையவர்கள்.
    அனைவரும் கண்டு மலைத்து வியக்கும் வண்ணம்
    தலைக்கோலி பட்டம் பெற்ற கூத்தாடுபவர்களும்
    வாரப்பாட்டினைப் பாடும் தோரிய மடந்தையும்
    தலைப்பாட்டைப் பாடும் கூத்தியும்
    இடைப்பாட்டைப் பாடும் கூத்தியும்..
    இத்தகைய நால்வகை மரபினரும்
    அம்மனைகளில் இருந்தனர்.

    அவர்களுடன்
    அனைவரும் விரும்பும் வண்ணம்
    நாள்தோறு ஆயிரத்தெட்டு கழஞ்சுப்பொன்னைத்
    தவறாமல் பரிசாகப் பெறும்
    பிறரைத் தம் அழகால் தாக்கும் கணிகையர் பலரும்
    அங்கே இருந்தனர்.

    இவர்கள் கண்களாகிய வலைகளில் அகப்பட்டு,
    பெறுவதற்கு அரியதான அறிவைத் தொலைத்துவிட்டு,
    தவநெறியில் ஒழுகுவோராயினும்,
    அழகிய மலர்தோறும் சென்று
    தேனைப் பருகும் வண்டு போல,
    புதுப்புதுப் பரத்தையரைப் புணரும்
    இளையவராக இருந்தாலும்,
    காம இன்பத்தை முனு அனுபவித்திராத
    புதியவராக இருந்தாலும்,
    நாள்தோறும் அனுபவிக்கும் புணர்ச்சியில்
    மயங்கி இன்பத் துயில் கொள்வார்கள்.
    அவர்கள் பண்ணினையும்
    கிளியின் மொழியையும் பழிக்கும் வண்ணம்
    இனிய சொல்லை உடையவர்கள்.
    அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத்
    தேர்ந்து விளங்கினர் அப்பெண்கள்.
    இத்தகையோர் இருந்த இருவகை வீதிகளைக்
    கடந்து சென்றான் கோவலன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 146 – 167

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகிள்

    Share
  • என் செல்லமே!

    -ஆர். எஸ். கலா, மலேசியா

    கட்டித் தங்கமே நீ  என்
    செல்லக் குட்டிதான்.
    வெட்டி எடுத்தேன் விழி
                                  woman
    வாள் கொண்டுதான்.
    வட்டி கொடுப்பேன் என்

    இதழ் கொண்டுதான்.
    முத்தாரமாகப் பதிப்பேன்

    நான் முத்தம் கொண்டுதான்.

    என் கண் வியக்க ரசிப்பேன்
    உன் முகம் மட்டுந்தான்.
    தாரை வார்த்து மாமன்

    கொடுத்த பின்னே.
    இடை தொட தடை ஏதடா

    என் செல்லக்குட்டி.
    கட்டிக்கிட்ட பின்னே

    நான் உன் சக்கரைக் கட்டி.
    விரட்டி அடிக்க மாட்டேன்

    நீ என் இதயத் துடிப்பு.
    வாட்டி வதைக்கின்றதே

    உன் நினைப்பு.

     

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    -ஆர். எஸ். கலா, மலேசியா

    மக்களின் பாட்டாளி
    மக்களின் கூட்டாளி
    மகத்துவம் நிறைந்த சோக்காளி
    மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி
    மாறாத மனம் கொண்ட அறிவாளி
    கண்ணியம் தவறாத மாமனிதன்                      mgr
    கடமையிலே மகாமனிதன்!

    பூப் போன்ற மனசு
    புதையல் போன்ற உள்ளம்
    புன்னகை மாறாத  முகம்
    ஏழைகளின் குடிசைக்கு  விளக்கு ஒளி
    ஏமாற்ற எண்ணும் கொடியவனுக்குக்
    கை விலங்கு!

    ஆட்சியில் கிடைத்த காட்சி
    அழிக்க முடியாத ராச்சியம்
    கடமை கண்ணியம் கட்டுப்பட்டை
    உடையாக உடுத்திய கொடை வள்ளல்
    உழைப்பாளிகளின் அடிமைத்தனத்தை
    மீட்டார்!

    வறுமையின் பிடியில் வாடிய
    மழலைகளுக்கு
    மதிய உணவு திட்டத்தைக் கொடுத்தார்
    வாரிச் சுருட்டி எடுக்கும் அரசியலை
    வெறுத்துத்
    தன் வாழ்க்கையையே அரசியலுக்காக
    அர்ப்பணித்தார்!
    கொள்ளை அடித்தார் சொல்லாமலே
    பலஉள்ளங்களின் அன்பை!

    ஒன்றே குலம் என்று கூறி வாழ்ந்தார்
    ஒரு தாய் மக்களாக அரவணைத்தார்!
    சாதி மதம் பாராது பணம் படிப்பு பாராது
    பதவி பட்டம் ஏழை எளியோர் பாராது
    அனைவரும் மனிதரே என உரைத்தார்!
    இறந்தும் இறவா வரம் பெற்றார்
    கோடான கோடி மக்கள் மனதிலே
    ஒரு நிலையான இடம் பிடித்தார்!

    கொடை வள்ளலாக
    இதயக்கனியாக
    மக்கள் நண்பனாகப்
    புரட்சித் தலைவனாக
    ஒளி விளக்காக
    வாழ்ந்து மறைந்தார்!

    மறக்க முடியாத அச்சகத்திலே அச்சடித்தார்
    அவர் பேச்சு மொழியைக் கிளிபோல் பேசியே
    மக்கள் மறக்கவோ வெறுக்கவோ விரும்பாத
    நூலகத்திலே முதல் இடத்தையே
    அடைந்தார்!

    கலை உலகில் பல சாதனை படைத்து
    ஆட்சியில்  அதையே நிஜமாக்கி விட்டார்
    நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர்முன்
    அதில் வரும் பல காட்சிக்கு நிஜத்தில்
    உயிர் கொடுத்து விட்டார் பலர் வியக்கும்
    வண்ணம்!

    அவர் மூச்சு போனபின்னரும் பேச்சு
    மாறாமல்
    பலர் குரலிலும் வாழ்விலும் இதயக்
    கோயிலாக
    வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்
    எங்கள்
    இதயக் கனி மக்கள்  திலகம்!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(62)

    -செண்பக ஜெகதீசன்

    எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (திருக்குறள்:896 – பெரியாரைப் பிழையாமை)

    புதுக் கவிதையில்…

    தீப்புண் பட்டாலும்
    தப்பித்துக்கொள்ளலாம்
    பிழைத்து…
    பிழைசெய்தால் பெரியவர்களிடம்,
    பிழைப்பது அரிது…!

    குறும்பாவில்…

    தீயில் கருகிடினும் பிழைத்துக்கொள்ளலாம்,
    தப்பிக்க வழியேயில்லை
    தவறாய் நடந்தால் பெரியோர்களிடம்…!

    மரபுக் கவிதையில்…

    பற்றி யெரியும் தீபட்டுப்
       புண்ணா யான உடலுடனே
    குற்றுயி ராகக் கிடந்தாலும்
       காண்பாய் சிலரும் பிழைப்பதையே,
    குற்ற மில்லாப் பெரியோர்மனம்
       குமுறிடப் பிழையது செய்திட்டால்,
    பெற்ற வாழ்வும் பயனில்லை
       பிழைப்ப தென்பது முயற்கொம்பே…!

    லிமரைக்கூ…

    பிழைத்திடலாம் பட்டாலும் உடலெல்லாம் தீ,
    பிழைப்ப தென்பதே இல்லை
    பிழைத்திட்டால் உண்மைப் பெரியோரிடம் நீ…!

    கிராமிய பாணியில்…

    சுட்டுப்புடும் சுட்டுப்புடும்
    பட்டதீயும் சுட்டுப்புடும்,
    சுட்டாலும் பௌச்சிக்கலாம்
    சுட்டபுண்ணும் ஆறிப்போவும்
    பட்டவடுவு மாறிப்போவும்…

    ஆனா,
    போவாதய்யா போவாது
    பாவமது போவாது,
    பெருசுகளுக்குக் கெடுதல்செஞ்சா
    பெரும்பாவம் போவாது
    பொளப்பெல்லாம் மண்ணாப்போவும்,
    நிக்காதய்யா நிக்காது
    ஒன்
    உசிரதுவும் நிக்காது…!

     

    Share
  • விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே – கவிஞர் ஆத்மநாதன்

    காவிரி மைந்தன்

    காற்றினிலே மிதக்கும் கானங்கள் ஆயிரம்.. அந்தக் காற்றே காதலிக்கும் கானங்களும் அதில் உண்டு! இந்தப் பாடல் அந்த ரகம்!  இன்ப லயம்! இயற்கையின் வடிவில் இன்பத்தை எடுத்துச்சொல்லும் அற்புதக் கவிதைவளம்.. ஆத்மநாதன் அவர்களுக்கு!

    athmanathanகற்பனைக் கடிவாளமில்லாமல் வானிலே பறக்க.. சொற்களும் அதற்கேற்ப வந்து கவிதை படிக்க.. காதலுக்கு வேறேது வேண்டும்! அன்பின்கரம் இணையும் நேரம் ஆகிவிடும் அந்தப்புரம் சொந்தமதே சொர்க்கமென்று சுவைதேடும் காதலர்க்கு..  அவர்தம் மனம் சொல்ல விரும்புவதை கவிஞர் தன் பாடலில் சொல்லிவிடுவதுதானே வழக்கம்!  சிலநேரங்களில் சராசரி பாடலாய் அமைந்துவிடாமல் சரித்திரப் பாடலாய் அமைந்துவிடும்!  ஆம்..  இன்னிசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் குரலில் இந்தப் பாடல் பெற்றுவிடும் உன்னதத்தால்  – உலகக் காதலர்களுக்கான ஒட்டுமொத்த காணிக்கையாக்கலாம் இப்பாடலை!

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பில் புதையல் திரைப்படத்திற்காக இசைச் சித்தருடன் இணைசேர்கிறார் இன்னிசைக்குயில் பி.சுசீலா!

    58 ஆண்டுகளுக்குப் பின்னும் இப்பாடல் ஒலிக்கப்படும் போதெல்லாம் காதுகள் கேட்கப்பிரியப்படும் பாடலாய் பவனி வருவதன் ரகசியம் என்ன? இசையா? கவிதையா? குரலா?  வாசகர்களே இப்பாடலை இன்னொரு முறை கேட்டுச் சொல்லுங்கள்!!

    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

    Pudhayalவிண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே

    அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ
    விளையாடி.. இசை பாடி….
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே

    தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
    ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
    காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
    ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
    விளையாடி.. இசை பாடி..

    சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    மங்காத தங்கமிது மாறாத வைரமிது
    ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
    விளையாடி…… இசைபாடி……
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

    திரைப்படம்: புதையல் (1957)
    பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
    வரிகள் : ஆத்மநாதன்
    பாடல் : விண்ணோடும் முகிலோடும்

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    –வெ.சந்திரமணி.

    கண்டி டூ கும்பகோணம்…

    சினிமாத் துறையிலும், பின்னர் அரசியல் துறையிலும் சகாப்தம் படைத்து, தமிழக முதல்வராக 10 ஆண்டுக் காலம் பணியாற்றிய எம்.ஜி.ஆர்., இலங்கையில் உள்ள கண்டியில் 1917 ஜனவரி 17ம் தேதி பிறந்தார். தந்தை கோபால மேனன். தாயார் சத்தியபாமா. கோபாலமேனன், கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், திருச்சூர், அரூர், கரூர், எர்ணாகுளம் முதலிய இடங்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். பின்னர் இலங்கைக்குச் சென்று ஒரு கல்லூரியில் முதல்வராக அமர்ந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆர்., பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ராமச்சந்திரன்.

    திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும் அழைக்கப்பட்டார். திரை வாழ்க்கையில் சிகரத்தை அடைந்த பின் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்’ ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,’ என்றும் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு இருண்டரை வயதாகும்போது தந்தை இறந்து விட்டார். எம்.ஜி.ஆருக்கு கமலாட்சி, சுமித்ரா என்ற 2 மூத்த சகோதரிகளும், பாலகிருஷ்ணன், எம்.ஜி. சக்ரபாணி என்ற இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு. குடும்பத்தில் 5வதாக பிறந்தவர் எம்.ஜி.ஆர். கோபாலமேனன் காலமானதும், சத்தியபாமா, குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார். கும்பகோணத்தில் உள்ள அணையாடி பள்ளிக்கூடத்தில் எம்.ஜி.ஆர் சேர்க்கப்பட்டார். வறுமையுடன் போராடிக் கொண்டு, குழந்தைகளை அன்புடன் வளர்த்தார் சத்தியபாமா. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி கமலாட்சி 16 வயதில் மரணம் அடைந்தார்.

    படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றி:
    ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., காங்கிரசில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கதர் வேட்டி, சட்டைதான் அணிவார். 1952ல் எம்.ஜி.ஆரை அறிஞர் அண்ணாவிடம் டி.வி.நாராயணசாமி அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது கலைஞர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்படவே, அவர்கள் பங்குதாரர்களாக மேகலா பிக்சர்ஸ் படக் கம்பெனியை தொடங்கினார்கள். பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரை சிகரத்துக்கு உயர்த்தயது. சினிமாத்துறையில் புகழேணயில் உயரே உயரே சென்று கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அரசியலிலும் உயர்ந்து கொண்ட போனார். திமுகவிலிருந்த இளைஞர்களின் நெஞ்சில் இடம் பெற்றார். தி.மு.க., கொடியை தன் படங்களின் தொடக்கத்தில் காட்டினார்.

    திமுக பொதுக் கூட்டங்களில் பேசினார். நன்கொடைகளை வாரி வழங்கினார். இதன் காரணமாக அண்ணா எம்.ஜி.ஆரை இதயக்கனி என்று குறிப்பிட்டார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர்., துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர்., கழுத்தில் பாய்ந்த குண்டு, ஆபரேஷனில் அகற்றப்பட்டது. மறுபிறவி எடுத்தார். அப்போது எம்.ஜி.ஆர்., ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. அண்ணா முதல்வரானார். 1969ல் அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வரானார். அந்தநேரத்தில் எம்.ஜி.ஆர்., திமுக பொருளாளனார்.கருணாநிதி முதல்வரான பிறகு திரை உலகிலும், அரசியலிலும் உயிர் நண்பர்களாக இருந்த இருவர் நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. அதனால், திமுக சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., பகிரங்கமாகப் பேசினார். அதைத் தொடர்ந்து 1972 அக்டோபர் 18ம் தேதி ‘அண்ணா திமுக’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். 1977ல் நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1980 ஜனவரியில் நடந்த லோக்சபாத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவே எம்.ஜி.ஆர்., மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குப் பின் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எம்.ஜி.ஆர்., மீண்டும் முதல்வரானார்.

    எமனை வென்றவர்:
    1984ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, உடலில் வலது பக்கம் செயல் இழந்தது. நவம்பர் 5ம் தேதி அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சிறுநீரகம் அளித்தவர், அண்ணன் சக்ரபாணியின் மகள் லீலாவதி. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருக்கும்போதே, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருக்க, தமிழ்நாட்டில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எமனை வென்ற எம்.ஜி.ஆர்., 1985 பிப்ரவரி 4ம் தேதி சென்னை திரும்பி, 10ம் தேதி 3வது முறையாக தமிழக முதல்வரானார். அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஆரோக்கியமாக இருந்தாலும், அவருக்கு பேச்சு வரவில்லை. என்றாலும் விடா முயற்சியுடன் பயிற்சிகள் பெற்று ஓரளவு பேசினார். இந்நிலையில் 1987 டிசம்பர் 23ம் தேதி அவர் உடல்நிலை மோசமடைந்நது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 24ம் தேதி எம்.ஜி.ஆர்., மறைந்தார். திரை உலகிலும், அரசியலிலும் ஒரு சகாப்தம் முடிந்தது.

    எம்.ஜி.ஆருக்கு ரசிகர்களும், தொண்டர்களும் ஏராளம், அவர் எதை செய்தாலும், அதை வேதவாக்காக ஏற்று செயல்பட்டார்கள். ‘கையில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியதும், அனைவரும் பச்சை குத்திக் கொண்டனர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, பல சோதனைகளில் வெற்றி கண்டு, சாதரண நடிகராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, அரசியலில் மும்முறை முதல்வரான எம்.ஜி.ஆர் மறைந்தாலும், மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

     

     

     

    வெ.சந்திரமணி
    பெரிய காஞ்சிபுரம்.

     

    Share
  • நடைபாதை கண்ணீர்த் துளி!

    -தனு

    இவள் எத்தனை மக்களைப் பெற்ற மகராசியோ?
    பெறாத மக்களிடம் கையேந்திக் கொண்டு
    இமையும் நடுங்கும் நடுநிசிக் குளிரில்
    நடைபாதையில் !

    அன்று நடைபழகக் கற்றுக்கொடுத்தவள்      Poor Mom
    இன்று ஆறுஅங்குல நடைபாதை ஏற
    அறுநூறு நொடிகள் அவகாசம் தேவைப்பட
    மீண்டும் ஒரு குழந்தையாய் நடைவண்டி இன்றி
    நடைபாதையில் !

    மடியில் வைத்திருந்த சில்லறைக் காசுகள் அவள்
    மனபாரத்தை மிஞ்சிவிட்டதோ என்னவோ !
    மடிகனம் தாளாமல் கொட்டிவிட்டன !
    முக்கால்வாசிக் கண்ணொளியைக் கடவுள் பறித்துவிட…
    கால்வாசி இருள் பறித்துவிட…
    கொட்டியது குப்பையில் என அறியாமல்
    சிந்திய சில்லறை வேறு பக்கம் இருக்க
    இல்லாத காசைத் தேடிக்கொண்டு
    தொலைத்துவிட்ட ஒற்றை நாணயத்துக்காக
    விசனப்பட்டு விரக்தியுடன்
    நடைபாதையில் !

    இல்லாதவன் ஆடையும்
    இருக்கப்பட்டவன் ஆடையும்
    கிழிந்தேதான் இருக்கின்றது !
    ஒன்று நாகரிகம் !
    மற்றொன்று ஏழ்மை !

    யார் வடிவமைத்தானோ இவளது ஆடையை
    ஏழ்மையின் மொத்தச் சொத்தையும்கொண்டு
    தான் பெற்ற மக்களைக் கரையேற்றிவிட்டுக்
    கறைபட்ட ஆடையுடன்
    நடைபாதையில் !

    இறைவா இன்று இருக்க இடம் கொடு என
    இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு போனாள்
    ஏழ்மை வடிவமைத்த ஆடைகளை
    வாழ்க்கையில் நைந்துபோன ஆடையாய்
    நடைபாதையில் !

    காற்றுக்குக்கூட கரிசனம் இல்லை அவள்மேல்
    ஜன்னல் வைத்த அந்தப் போர்வையைச் சீறிவிட்டுப் போனது!
    இற்றுப்போனது ஆடையா இல்லை மனதா?
    இரண்டையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு
    இருளில் கடைசியாய் இடம் கிடைத்தது
    கால்நடைகள் உறங்கிக்கொண்டிருந்த
    நடைபாதையில்!

    சில காட்சிகள் கணநேரம் நினைவாட்கொள்ளும் – ஆனால்
    கனமாகிப்போனது இந்நேரம் என்னுள்
    இடம்தேடி அமர்ந்தது உறங்க என்று நினைத்திருக்க
    இறைவன் இன்றும் படியளக்கவில்லை போலும்
    ஒருகை தலையில் கொண்டு
    மறுகை மீண்டும் உயர்த்தி யாசித்தாள்
    உறக்கம் கண்களைத் தழுவினாலும்
    ஏந்திய கைகள் ஏந்தியபடி
    யாரும் நடவாத நடைபாதையில்!

    ஏந்திய கைகள் ஏந்தியபடி
    யாசிக்கிறாள்
    யாரிடம்?
    கடந்து செல்லும் கனவான்களிடம் காசா
    இல்லை…
    காலனிடம் மரணத்தையா ?

    உறவுகள் அற்றுப்போன நாகரிக நகர (நரக) வாழ்க்கையின்
    மறக்கப்பட்ட தாயின் கண்ணீர் !
    விரக்தியின் விளிம்பில் கண்ணீர் வற்றிப்போனது அவளிடம் !
    வழிப்போக்கனாய்ப் பார்த்த காட்சியில்
    விழிநிரம்பி வழி மறந்து போனேன் !
    இன்றும் உறக்கமற்றுப் போகிறேன்
    என்னுள் உறைந்துபோன உண்மைக் காட்சிகளை எண்ணி !

     

    Share
  • தேடல்

    -மணிமுத்து

    மாலை வேளையில்
    மனமோ எதிலும் ஒன்றாமல் போக,
    நொடிகளை நெட்டித்தள்ள
    புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன்…                open book

    எழுத்துக்களின் சுவாரசியத்தில்
    என்னை மறந்து
    பக்கங்களைத் திருப்பினேன்
    ஒன்றன்பின் ஒன்றாக!
    நானும் அதில் ஒன்றிப்போனேன்
    ஒரு பக்கமாக!

    பக்கங்கள் பாதி திரும்பிய நிலையில்,
    மீதி பக்கத்திற்கான தெரியாத முடிவுகளும்,
    அடுத்த பக்கத்திற்கான தேடல்களும்  ஒருபுறம் இருக்க –
    கடிகாரம் மணி பன்னிரெண்டைக் காட்டியது!
    வலுக்கட்டாயமாக இரவு உறக்கத்திற்குச் செல்லத் திரும்பினேன்…
    பாதி படித்த நிலையில்
    திறந்த பக்கங்கள் அப்படியே இருக்க!
    சிறிது தூரம் சென்றபின் – திரும்பியபோது,
    மின்விசிறியின் காற்றில்
    படிக்காத பக்கங்கள் மட்டும் வேகமாகத் திரும்பியது
    “என்னை ஒதுக்கிவிட்டுச் செல்லாதே என்று கூச்சலிடுவதைப் போல!”

    மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன் விட்ட இடத்திலிருந்து
    தூக்கம் எங்கோ தொலைந்துபோக!

    இப்படித்தான்!
    ஒவ்வொருவரின் வாழ்க்கையும்
    ஒவ்வொரு கதையாய்!
    புரட்டப் புரட்ட எல்லாப் பக்கங்களும்
    சுவாரசியமானவைகளாய்!
    ஒவ்வொரு பக்கமும் தேடல்கள் நிரம்பியதாய்
    கதைக்குத் தகுந்தாற் போல!

    எல்லாத் தேடல்களுக்கும் பதில் அடுத்த பக்கத்தில்!
    பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் புரட்டுபவனுக்கோ
    ஒவ்வொரு நாளும் சுவாரசியமான தேடல்களாய்,
    நேற்றைய தேடலின் பதிலாய் அமைந்துவிடுகிறது!
    தேடல் இல்லாதவனோ
    விடை தெரியாத கேள்வியாகவே மடிந்துவிடுகிறான்!

     

    Share
  • வழிவகுத்தல் நல்லதல்ல !

           -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

           விண்ணதிர மண்ணதிர வெளிப்பட்ட விஞ்ஞானம்
           கண்ணெதிரே பலவித்தைக் காட்டிநிற்கும் விஞ்ஞானம்
           எண்ணிநாம் முடிக்குமுன்னம் இயக்கிநிற்கும் விஞ்ஞானம்
           மண்ணுலகில் மனிதனது வாழ்வோடு நிற்கிறது !

          பார்க்கின்ற இடமெல்லாம் பலநிலையில் விஞ்ஞானம்
          பலபேரின் சிந்தனைக்கு மெருகூட்டும் விஞ்ஞானம்
          ஆர்ப்பரிக்கும் கடலையே ஆராயும் விஞ்ஞானம்
          அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிநிற்கும் விஞ்ஞானம் !

          மெய்ஞ்ஞானச் சிந்தனைகள் விரைவாகப் பரவுதற்கு
          விஞ்ஞானம் தானிப்போ வித்தாகி நிற்கிறது
          அஞ்ஞானம் கொண்டோரின் அகந்தையைப் போக்குதற்கு
          விஞ்ஞானம் ஊடாக மெய்ஞ்ஞானம் விரைகிறது !

          கணனியெனும் சாதனத்தால் கருத்துக்கள் விரிகிறது
          நினைவிலுள்ள விஷயமெல்லாம் நினைத்தவுடன் செல்கிறது
          உலகிலுள்ள மனிதரிடம் ஓர்நொடியில் கருத்தையெல்லாம்
          உவப்புடனே கொண்டுசெல உதவுதிங்கே கணனியிப்போ !

          மேலோங்கும் விஞ்ஞானம் விந்தைபல புரிந்தாலும்
          நாமதனை நன்குணர்ந்து நல்லவழி காட்டவேண்டும்
          வீணான பாதைதனில் விஞ்ஞானம் போவதற்கு
          வாழ்நாளில் நாமென்றும் வழிவகுத்தல் நல்லதல்ல !

          பணம்பண்ணும் நோக்கமொடு பலபேரும் திரிகின்றார்
          பிணம்விற்றும் காசாக்கும் பித்தருமே வருகின்றார்
          தினம்தினமும் ஆராய்ச்சி தீயவரின் வசமானால்
          நமதருமை விஞ்ஞானம் நலனெல்லாம் இழந்துநிற்கும் !

     

    Share