பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

16720185552_5ebd517bcb_o

புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

17 thoughts on “படக் கவிதைப் போட்டி – 3

 1. சாமி !  அம்மாவை காப்பாத்து !
  படுத்துக் கிடக்கிறா பாயில 
  வயித்து வலியில்
  நாலு நாலா சாப்பிடல,
  குடிச்சுட்டு அப்பன் தூங்குறாரு !
  என்னால எதுவும் முடியல. 
  அம்மாவை காப்பத்து.சாமி !
  உடைக்க தேங்கா இல்லே. 
  உன்னைத் தவிர
  உதவ யாரு மில்லே.

  சி. ஜெயபாரதன்  

 2. ஒரு தெய்வம் கடவுளை வணங்குகிறது…!

 3. இறைவா…இதோ இந்த பக்தன் மழலையாய் இருக்கும்போதே அருளிவிடு ஆம் அவனது கோரிக்கை எதார்த்தமாய் இருக்கும்.!
  மனிதனாக வளர்ந்து விட்டால் அவர் வேண்டுதலை கேட்டு உனக்கும் கூட பணத்தின் மீது மோகம் வரலாம் பக்தி என்ற பெயரோடு…!

 4. கடவுளே, அம்மாவும், அப்பாவும் நீயே!
  பிழைப்பிற்காக என்னை விட்டு சென்றார்கள் தனியே !
  என் மனம் அறிந்து, என் குறைத்  தீர்ப்பாயா,
  பணத்திற்காக பாசத்தை தவிர்ப்பவரை மன்னிப்பாயா 
  நான் வாழ்வில் வளமுற வழி சொல்வாயா.
  உன்னையே கைகூப்பி  வேண்டி நிற்கின்றேன் எனக்கருள்வாயா!  

  ரா.பார்த்தசாரதி 

 5. அப்பா(வு)க்கு அடுத்த வாரம்
      ஆதார் அட்டை வந்திடணும்
  இப்போது எரியும்காஸ் தீருமுன்னே
      இன்னொரு சிலிண்டர் வந்திடணும்
  தப்பாது எல்கேஜி சீட்டு
      தம்பிக்கு உடனே வாங்கிடணும்
  எப்போதும் இதையே பேசிடாமல்
      என்னை அவர்கள் கொஞ்சிடணும்

 6. குழந்தையும் தெய்வமும்
  குணத்தால் ஒன்று
  அதையே நாமும்
  உணர்ந்தால் நன்று!
  இரண்டும் ஒன்றே
  இயற்கையின் படைப்பில்
  போற்றலும் தூற்றலுமே
  நமது முடிவில்!
  பேசாமொழிகள் அத்தனையும்
  பேசிவிடும் தம்வடிவில்
  அவற்றை புரிந்துகொள்வதில்தான்
  இடர்படுகிறோம் நம்வாழ்வில்!

 7. ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
  சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
  சுகமாய் தான் வாழனும்
  பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே !

  கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்

  பருந்து காக்கையிடம் இருந்து

  பத்திரமா காக்க வேணும் – அவையும்

  என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும் !

  கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்

  என்னைக் கண்ட மறு நொடியே

  துள்ளி ஓடி வந்திடனும்

  அன்புடன் நானும் அணைத்திடனும் !

  சின்னச் சின்ன ஆசைகளின்

  சின்னஞ்சிறு பட்டியலிது

  பட்டியல் வளரும் வேளைதனில்

  பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே !

  பொய் பொறாமை புரட்டும் தான்

  என் மனதை அண்டாது காத்திடனும்

  அன்பும் பண்பும் எந்நாளும்

  குறையாது நானும் வாழ்ந்திடனும் !

  நாளும் உன்னைச் சந்தித்தே

  நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்

  நலமும் வளமும் உலகமெலாம்

  நிலைத்திடவே வேண்டிடுவேன் !

 8.  
  நானும் ஒரு ஞான சம்பந்தன் 

  குடி இருந்த கோவில் இல்லை 
  குலம் சொல்ல தந்தை இல்லை 
  பிணைப்பு கொடி அறுத்த தாயும் இல்லை 
  படி அளக்க பாரில் யாருமே இல்லை
  மிடி கொடுத்த இலங்கை அதிபன் தந்த  
  அடியின் வலி இன்னும் ஆறவில்லை
  தொப்புள் கொடி உறவு என்று சொல்லி 
  தேடி வந்தேன் நானும் இங்கே 
  மோடி அலை வீசியது 
  கோடிகளும் இடம் மாறியது   
  நாடி வந்த எந்தனுக்கு 
  நல்லதொன்றும் நடக்கவில்லை
  பாடி பாடி வருந்துகின்றேன் இறைவா 
  பால் கொடுத்த உன்னவளிடம்  சொல்லு 
  பாலன் நானும் ஒரு ஞான சம்பந்தன் என்று ,,,,,,, 

 9. தீ பழகா
  நீ மறக்கா
  நோய் தீண்டா
  பொய் அன்டா
  நூல் மறக்கா
  நாள் பேனி
  களி நிறைத்து
  வலி அகற்றி
  வண் போக்கி
  மென் சேர்த்து
  சுடுமொழி எரித்து
  கடுமனம் நொறுக்கி
  பழி விலக்கி
  தாய் வணங்கி
  பெயரெடுக்க
  அடக்கமாய் 
  உன்னிடம் அடைக்கலமாகிறேன்
  எனக்கு நீ
  யாவும்

  ஈசா!

 10. குழந்தையும் தெய்வமும்
  ஒன்றாம்
  நான் மட்டும் வறுமையில்……..

 11. சாமி…! கடவுளே…!
  நான் நல்லா படிக்குவேன்
  நல்ல புள்ளயா இருப்பேன்
  குறும்பு பண்னமாட்டேன்
  குட்டி பாப்பா கிட்ட சண்ட போடமாட்டேன்..!

  உன்கிட்ட இருக்குற
  என்னோட
  அம்மா -அப்பாவை
  அனுப்பிவிடேன் திருப்பி
  எங்க வீட்டுக்கே…ப்லீஸ்…!

 12. வேண்டுதல்…

  அன்னை தந்தையைக் காணவில்லை
       அடுத்தவர் எவரும் பேணவில்லை,
  அன்பைக் காட்டிட யாருமில்லை
       அறியச் சொந்த ஊருமில்லை,
  என்னைப் போலப் பலருண்டு
       எங்களுக் குதவவும் சிலருண்டு,
  உன்னை வேண்டுவேன் படைத்தவனே
       உலகினில் வேண்டாம் அனாதைகளே…!

  -செண்பக ஜெகதீசன்…

 13. கண் முன்னே நானிருக்கையில் 
  கண்ணில் ஏக்கம் என்னடா
  கண்மணியே..!

  யாருக்காக வரம் வேண்டி
  யாசிக்கிறாய் என்னிடம்
  யாழிசையே…!

  பால்மனப் பார்வையிலே எனக்கு
  பாலாபிஷேகம் செய்கிறாயே
  பனித்துளியே…!

  மழழை மொழி கேட்டு
  மனமிரங்கி போனதடா
  மான்குட்டியே…!

  கல்லாய் மண்ணாய் நானிருந்தும் 
  கரைந்துதான் போனேனடா
  கடவுள் நானும்…! நீ
  கைகூப்பி வணங்குகையில்…!

  குறைகளை எனக்கு சொல்லிவிட்டு
  குதூகலமாய் ஆடப்போடா
  குட்டிச்செல்லமே…!
  கூடவே நானிருப்பேன் – உன்
  குட்டித்தோழனாக…! 

 14. கண்ணை குத்திடு சாமி!

  சாமி, 
  நீ தப்பு செய்றவங்களை எல்லாம் 
  கண்ணை குத்திடுவானு எங்க அப்பா சொன்னாரு!

  அப்போ,
  என் சாமி எங்க கணக்கு வாத்தியாரு 
  கண்ணை குத்தல!

  அவரு 
  ராகுலை அடிச்சுட்டாரு தெரியுமா, 
  பாவம் அவன் கையெல்லாம் சிவந்து போச்சு!

  அடிவாங்கிட்டு நேத்து அவன் ஸ்கூலுக்கு வரலை
  இன்னிக்கு நான் அவங்கிட்ட சொல்லிடறேன் 
  நீ அவரு கண்ணை குத்திடுவேனு!
  மறக்கமா கண்ணை குத்திடு சாமி!
                                                                      “மணிமுத்து“

 15. இறைவா உன் முன்னே என்னிரு கை கூப்பி நின்றேன் > நிறைவாய் வரும் சோதனைகள் யாவினிலும் – இலகுவாய் > குறைவற்று சிறப்புடன் எழுதிடவே > பிறைசூடிப் பெருமானே அருள்

 16. ஆண்டென்னை அருள் செய்

  தெய்வமே உன்னிடம்

  தேம்பி நான் சொல்லும்

  துன்பம் கேட்கிறதோ?

  தூணிலும் இருப்பாயாம்
  >
  துரும்பிலும் இருப்பாயாம்

  பாட்டி கதை கேட்டேன் >

  பாடமும் படித்தேன்
  >

  பரிசோதனை வைத்தே
  >
  பாடசாலையில் எமக்கு >

  அறிவை அளக்கிறார்
  >
  அரிய ஆசிரியர் !
  >
  மூளை வலிக்கிறது
  >
  முழு மனனம் செய்து!>

  தலை பாரம் கூடி >

  தலை வலி தாங்கவில்லை
  >
  சிலையாய் நீ இருந்தால் >

  சொல்லு -என்ன பயன்?
  >
  கை கூப்பி நிற்கும் என்
  >
  கை வழியே நீ இருந்து >

  மறு மொழிகள் வினாக்களிற்கு >

  சிறப்பாக எழுதிடச் செய் >

  கல்லானாலும் கடவுள் நீ

  > சொல்லுகிறேன் கேட்டுக் கொள் >

  கண்மூடி கைகூப்பி
  >
  கண்ணியமாய் வேண்டுகிறேன் >

  ஆண்டவனே இரங்கி விடு

  > ஆண்டென்னை அருள் செய்! >

  புனிதா கணேசன்

  13.03.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *