Blog

  • சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

     

    சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
    ————————————————————————————————————-

    film1

    தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும், முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பத்திரிகைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைபெற்றது.
    · விளம்பர படங்கள் (Ad film)

    · குறும்படங்கள் (Short film)

    · முழு நீளத்திரைப்படம் (Featurefilm)

    · விளக்கத்திரைப்படம் ((Documentary film)

    film2

    (CWIFF) பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அனைத்து வகையான படங்களையும் வரவேற்கிறது. இவ்விழாவில் ஆண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்கள் அனுப்பும் திரைப்படங்களுக்கு பதிவுத் தொகையில் சிறப்பு சலுகை உண்டு. மேலும் மாணவர்கள் தரும் திரைப்படங்களுக்கு தனி முன்னுரிமை அளிக்கப்படுவதோடு அவர்கள் திரைப்படங்களை ஒரு நாள் முழுவதும் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் நீதிபதிகள் குழுவினரால் தேர்வுசெய்யப்படும். இத்திரைப்பட விழாவுக்கான திரைப்படங்கள் பிவிஆர் திரையரங்கிலும்ஆர்.கே.வி ,ரிவ்யு அரங்கிலும் திரையிடப்படும்.

    film3

    திரைப்படங்களை பதிவு அஞ்சல் மற்றும் www.cwiff.com என்ற இணையத்தளம் மூலமாக அனுப்பலாம். படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 15, 2014.இத்திரைப்பட விழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசு தொகையும், விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

    இலங்கையை சேர்ந்த படைப்பாளிகள் மேலதிக விபரங்களுக்கு இந்த நிகழ்வின் ஆலோசனை சபை உறுப்பினராகவும் சர்வதேச ஊடக இணைப்பாளராகவும் இருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினுடன் தொடர்புகொள்ளலாம் (0094 771600795,vtvasmin@gmail.com)

    Ø விபரங்களுக்கு

    P.G.Udhayakumar,

    Festival Director

    Chennai Women’s International Film Festival,

    O/o Eventaa SouthIndia Productions,

    A division of M/s Dollphin Interactive Sciences pvt. ltd.,

    Ph: +91 98844 28927
    URL : www.cwiff.com,

    E-mail: info@cwiff.com

    Facebook: https://www.facebook.com/CWIFF2014

    twitter: https://twitter.com/CWIFF2014

     

    Share
  • திருமால் திருப்புகழ் (33)

     

    கிரேசி மோகன்

    Tamil-daily-news-paper_31147402525
    ‘’ஏறு மயிலேறு விளையாடும் முகமொன்று’’ அருணகிரியார் சந்தத்தில்….
    ———————————————————————————————————–blogger-image-1144768691

    இராமன் திருப்புகழ்….

    “கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
    தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
    கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
    கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
    ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
    வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
    ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
    ஆதிகவி ஓதுமிதி காசபெரு மாளே”
    ———————————————————————————————————-

     

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (1)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு அன்னா ஹசாரே அவர்களே,

    ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக அதாவது அவர்களின் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி சமீபத்தில் தலைநகரில் நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். ஊழலுக்கு எதிரான சட்ட முன் வடிவம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதை நிறைவேற்றிய ஆளும் கட்சியினரும் இதற்குத் துணை நின்ற எதிர் கட்சியினரும் ஊழலை ஒழிப்பதில் உண்மையாக அக்கறை உடையவராக இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? தேர்தல் சமயமான இந்த நேரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஊழலில் திளைத்தவர்களை தங்களுடைய வேட்பாளராக அறிவித்துள்ளனரே, நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அண்ணல் காந்தியடிகள் போல் போராடாமல் அமைதி காப்பதற்கு என்ன காரணம். நீங்கள் போராட வேண்டிய இத்தகைய நேரத்தில் அலட்சியப் போக்குக் காட்டுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

    இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளும், பதில் சொல்ல வேண்டிய தலைவர்களும் நிறையவே இருக்கிறார்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • திருமால் திருப்புகழ் (32)

     

     

    கிரேசி மோகன்

    Sri-Krishna-is-seen-as-the-searing-fire-of-destruction-by-the-demons-the-supreme-object-of-filial-love-by-His-parents-and-the-dark-worshipable-Lord-of-Srimati-Radharanis-heart
    தனத்தன தனத்தன
    தனத்தன தனத்தன-தனதான….

    ———————————————————————————————————————–
    “மரத்தடி குளக்கரை இந்திரன்
    படித்துறை தவத்தினில் -கழியாது
    வலப்புற மனத்திரு
    விரற்கடை புறத்தினில் -நிலையான

    இருப்பினை நெருக்கிட
    மலைப்புற சிவக்கனி -ரமணேசன்
    உரைத்ததை தினப்படி
    உளத்தினில் உறைத்திட -அருள்வாயே

    விரற்கடை பொருப்பினை
    உயர்த்திட இடைக்குடி -மழையாலே
    தவிப்பினை விரட்டிவ
    யிரத்தினை மிரட்டிய -கருநீல

    நிறத்தவ ,விடத்தலை
    நிருத்தியம் நிகழ்த்திய -முலையேறி
    அரக்கியை அழித்தவ
    இடைக்குடி ஜனித்திடும் -பெருமாளே”

    ——————————————————————————————————————

    பின்குறிப்பு-ஆன்மீக இதயம் இரண்டு விரற்கடை தள்ளி வலதுபுறம் இருப்பதாக பகவான் ரமணர் அனுபவம்….’’விரட்டி வயிரத்தினை’’-வஜ்ஜிராயுதம் ஏந்தும் இந்திரனைக் குறிப்பது….

     

    படங்களுக்கு நன்றி:

    http://sdgonline.org/viraha/satsvarupa_goswami/poem-for-february-12-2

    Share
  • அன்புத் தோழி மணிமொழிக்கு

    சுலோச்சனா

    அன்புள்ள மணிமொழிக்கு நட்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய தோழி,

    தொலைபேசி வாயிலாக உன்னைத் தொல்லை செய்யாமல் விஷயத்தை ஓரிரண்டு வரிகளில் சொல்லிவிடாமல் – “இதென்ன வள வளவென்று கடிதம் எழுதிக்கொண்டு” என்று நினைக்கின்றாயா?

    மணிமொழி வளவள கடிதமல்ல வளமான கடிதம் எழுதுதல் ஒரு கனவு என்பதை நினைவூட்டும் நெகிழ்வான கடிதமாக்கும்.

    நேற்று ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்குள்ள படங்களை பார்த்துக்கொண்டே வந்தபொழுது ஒரு அழகிய படத்தைப் பார்த்தேன். அது என்ன படம் எனில் “சாகுந்தலம் கதையின் நாயகி சகுந்தலை தன் அன்பிற்குரிய துஷ்யந்தனுக்கு கடிதம் எழுதும் காட்சி அழகிய ஓவியமாக வரையப்பட்டிருந்தது. தன் எண்ணங்களை கடிதத்தில்தான் எளிதாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும் என்ற உண்மை சகுந்தலைக்கும் தெரிந்துள்ளது பார்த்தாயா? அரசர்கள்கூட தங்கள் எண்ணத்தை லிகிதமாக எழுதி புறாவின் மூலம் அனுப்பினார்கள். அதுமட்டுமன்றி கடிதம் கொண்டுவரும் தூதுவருக்கு தனி மரியாதை. பகைவனுக்கும் கூட கடிதம் அனுப்பலாம் கொண்டு செல்பவர் எந்த ஆபத்தும் இன்றி திரும்பி வந்துவிடுவர். கடிதத்திற்கும், தூது வருபவருக்கும் அவ்வளவு மரியாதை. ‘புவன சுந்தர’ என கிருஷ்ணனை அழைத்து ருக்மணி எழுதிய காதல் மடல் ருக்மணி தன் சரணாகதியை கடித்தத்தில் அன்றி வேறு எந்த வழியில் கிருஷ்ணன் பகவானிடம் சமர்ப்பிக்க இயலும்?

    மனித மனத்தின் பாகங்களை நேசங்களை அறிஞர் பெருமக்களின் அறிவுரைகளை வெளியிட கடிதம் எத்தனை பெரிய, அரிய ஒரு மொழி. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் சிறையில் இருந்தபொழுது தன்னுடைய ஒரே அன்பு மகள் “இந்திராவிற்கு கடிதங்கள் மூலமே தன் அன்பை தெரியப்படுத்தினார். அதில் தந்தையின் ‘பாச’ வெளிப்பாடு மட்டுமன்றி உலக வரலாறும் மகளுக்கு போதிக்கப்பட்டது அல்லவா? மகாத்மா காந்தியும் வினோபாபாவேயும் எழுதிக்கொண்ட கடிதங்களில் ஆன்மீகமும் அரசியலும் எவ்வளவு நகைச்சுவை உணர்வோடு வெளிப்பட்டது எவ்வளவு தூய இலக்கியம்.

    தமிழ் அறிஞர் மு. வரதராசனார் அவர்கள் அண்ணனுக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்களுக்கு என்று பல தலைப்பில் எழுதிய கடிதங்களில் அறிவுரைகள் மட்டுமா வெளிப்பட்டன. தமிழ் பண்பாடும் பழக்க வழக்கங்களும் எவ்வளவு துல்லியமாக அறியக் கிடைத்தன.

    அன்பு மணிமொழி,

    தொலைபேசியில் உன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் ஆனாலும் ஏனோ ஓரிரு நிமிட அளவளாவளில் திருப்தி இலை. மனதோடு மனம் பேச ஆவலாக இருக்கிறது. அந்த ஆவலைத் தணிப்பதற்கு கடிதம் எழுதுவது ஒரு கருவியாக உள்ளது. உன் வயதில் ஒன்று கூடும்போது அறிவும், அன்பும் பல மடங்கு கூடட்டும். உடல் வளர்ச்சியோடு உயரிய எண்ணங்களும் வளரட்டும்.

    புதுமைப் பெண்ணிவள் சொல்லும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்கும் புதிது என்ற பாரதியார் வாக்கிற்கேற்ப நீ வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். வீட்டில் அனைவருக்கும் என் அன்பு, உன் அன்பான பதில் கடிதத்தையே ஆவலோடு எதிர்நோக்கும் அன்புத் தோழி,

    உன் தேன்மொழி.

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 2​5​ ​​

     

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    jay1

     

    jay2

    தகவல் :
    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7. http://jayabarathan.wordpress.com/seethayanam/ [நெஞ்சின் அலைகள்]​

    8. ​http://www.vallamai.com/?p=21424 [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • வல்லமையாளர் விருது!

    வல்லமையாளர்களுக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய
    ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    1. ராமலக்ஷ்மி
    2. மறவன்புலவு சச்சிதானந்தம்
    3. அவ்வை மகள்
    4. ஷைலஜா
    5. வெ. சா
    6. நித்தி ஆனந்த்
    7. நாகேஸ்வரி அண்ணாமலை
    8. கவிநயா
    9. சு. கோதண்டராமன்
    10. ராமஸ்வாமி ஸம்பத்
    11. சாந்தி மாரியப்பன்
    12. பெருவை பார்த்தசாரதி
    13. மலர்சபா
    14. தமிழ்த்தேனீ
    15. பாகம் பிரியாள்
    16. ஜெயஸ்ரீ சங்கர்
    17. இரவி வேணு
    18. விசாலம்
    19. சக்தி சக்திதாசன்
    20. சிலம்பொலி அருண்
    21. சி. ஜெயபாரதன்
    22. சிங்கப்பூர் விஜயகுமார்
    23. சிரிப்பானந்தா
    24. ஸ்ரீஜா வெங்கடேஷ்
    25. பழமைபேசி
    26. செல்வன்
    27. நூ.த.லோகசுந்தரம்
    28. கீதா சாம்பசிவம்
    29. அரவிந்த் சச்சிதானந்தம்
    30. பர்வதவர்தினி
    31. உதயன்
    32. வித்யாசாகர்
    33. சுபாஷினி
    34. பெருவை பார்த்தசாரதி
    35. தமிழ்முகில் நீலமேகம்
    36. தோழர் ஜோ
    37. தேமொழி
    38. துரை
    39. ரிஷி ரவீந்திரன்
    40. மாதவன் இளங்கோ
    41. கோபி சரபோஜி
    42. கலிங்கா பாலு
    43. மேகலா இராமமூர்த்தி
    44. டி. சச்சிதானந்தன்
    45. சத்தியமணி
    46. பேராசிரியர் நாகராஜன்
    47. ஈரோடு கதிர்
    48. டாக்டர் செம்மல்
    49. சங்கர ராமசாமி
    50. பொன் இராம்
    51. காயத்ரி பாலசுப்பிரமணியம்
    52. கல்பட்டு நடராஜன்
    53. ஹரிகி
    54. லோகநாதன்
    55. சாந்தினி பீ
    56. சு. ரவி
    57. வேணுகோபாலன்
    58. நரசய்யா
    59. அப்பாதுரை
    60. சுந்தர்ஜி
    61. திவாஜி
    62. வே. ம. அருச்சுணன்
    63. சி.டி. சனத் குமார்
    64. காளைராஜன்
    65. திருவள்ளுவன் இலக்குவனார்
    66. பானுமதி/ஆதிரா முல்லை
    67. தமிழ்ச்செல்வி
    68. சு. கோபாலன்
    69. பசுபதி
    70. கிருஷ்ணன்
    71. வெ.கோபாலன்
    72. எஸ். ஜெயபாரதி
    73. கமலாதேவி
    74. குரு பிரசாத்
    75. செங்கை பொதுவன்
    76. தீனா வேணு/காப்பியக் கவிஞர்
    77. இராஜ ராஜேஸ்வரி
    78. பார்வதி ராமச்சந்திரன்
    79. காப்பியக் கவிஞர் மீனவன்
    80. பாண்டியராஜா
    81. தேவ்
    82. நிர்மலா ராகவன்
    83. ஒய்.ஜி. மகேந்திரா
    84. டி. சச்சிதானந்தன்
    85. கிருஷ்ணமூர்த்தி
    86. வனிலா பாலாஜி
    87. சத்யா
    88. காவிரி மைந்தன்
    89. வை.கோபாலகிருஷ்ணன்
    90. இப்னு ஹம்துன்
    91. திண்டுக்கல் தனபாலன்
    92. மாலன்
    93. சதீஷ்குமார் டோக்ரா
    94. ஸ்ரீனிவாசன்
    95. சி. ராஜேந்திரன்
    96. முத்துசாமி
    97. விப்ரநாராயணன் திருமலை
    98. நந்திதா
    99. தி.சுபாஷிணி
    100. நா. கணேசன்
    101. முனைவர். ராஜம் ராமமூர்த்தி
    102. எம்.ரிஷான் ஷெரீப்
    103. சொ. வினைதீர்த்தான் 
    104. எம்.மணிகண்டன்
    105. பிச்சினிக்காடு இளங்கோ
    106. ராஜா கார்த்திக் கண்ட்டா
    107. கே.எஸ்.சுதாகர்
    108. ‘ரீச்’ சந்திரா
    109. பூவை. பி. தயாபரன்
    110. கேசவ் வெங்கட்ராகவன்
    111. கீதா மதிவாணன்
    112. பெனோ செபீன்
    113. வாசு ரெங்கநாதன்
    114. எல். கனக சுப்பிரமணி
    115. செண்பக ஜெகதீசன்
    116. கிரேசி மோகன்
    117. சீதா நடராஜன்
    118. கவிஞர் குட்டி ரேவதி
    119. காமாட்சி மகாலிங்கம்
    120. “வழிகாட்டும் ஒளி” குழுவினர் பிரேமா, ரேவதி, சுஜாதா, வைதேகி
    121. ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
    122. ஹீடி எப்ஸ்டீன்
    123. வைதேகி ஹெர்பர்ட்
    124. திரு. பாலமுருகன்
    125. எம்.ஜெயராமசர்மா
    126. செ. இரா. செல்வக்குமார்
    127. இஸ்ரோ அறிவியலாளர்கள்
    128. இந்திராணி
    129. பிரியம்வதா நடராஜன்
    130. மருத்துவர் சிதம்பரம் வீரப்பன்
    131. திவாகர்
    132. இன்னம்பூரான்
    133. டாக்டர் ஆர்த்தி பிரபாகர்
    134. சீதாலட்சுமி
    135. கீதா இளங்கோவன்
    136. எஸ்.கணேசன்
    137. அனுராதா கொய்ராலா
    138. கே. ரவி
    139. வையவன்
    140. ஜாதவ் பயேங்
    141. ஏற்காடு இளங்கோ
    142. கவிஞர் ருத்ரா
    143. இல. சுந்தரம்
    144. முனைவர் மு.பழனியப்பன்
    145. கவிஞர் கலைமகள் ஹிதாயா
    146. மு​னைவர் சி.​சேதுராமன்
    147. ரா. பார்த்தசாரதி
    148. வைதேகி
    149. முனைவர் எல்மார் நிப்ரத்
    150. அனிதா சத்யம்
    151. முனைவர் ந. சுந்தரம்
    152. “பாடம்” நாராயணன்
    153. முனைவர் கு.கல்யாணசுந்தரம்
    154. ஜோதிர்லதா கிரிஜா
    155. கவிஞர் வைகைச்செல்வி
    156. கவிஞர் றியாஸ்முஹமட்
    157. “குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள் – செல்வா சரவணா, பெனிடிக்ட் சேவியோ
    158. பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்
    159. நீதிபதி ராஜ ராஜேஸ்வரி
    160. இளம் அறிவாளி விசாலினி
    161. சட்டக்கல்லூரி மாணவி நந்தினி
    162. மருத்துவர் இரா. கலைக்கோவன்
    163. ராதிகா கண்ணன்
    164. மல்ட்டி ஃபன் மாணவர் குழுவினர்
    165. சூப்பர் 30 – ஆனந்த் குமார்
    166. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்
    167. விளையாட்டு வீரர் திரு. வருண் ராம்
    168. தாஷி – நான்சி மாலிக் சகோதரிகள்
    169. இசைக்கவி இரமணன்
    170. எம். ஆர். ஹப்பர்ட்
    171. ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்
    172. மீனாட்சி பாலகணேஷ்
    173. டாக்டர் டெஸ்ஸி தாமஸ்
    174. இயக்குநர் நந்தினி
    175. அன்பு ஜெயா
    176. பி.சங்கர் மகாதேவன்
    177. மணற்கேணி திரு. ரவிக்குமார்
    178. தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி
    179. கிரண் சேத்தி
    180. அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி
    181. லட்சுமி
    182. சேசாத்திரி சிறீதரன்
    183. லெ. சொக்கலிங்கம்
    184. பேராசிரியர் டி. நாகராஜன்
    185. முனைவர் நா. கண்ணன்
    186. நீச்சல்காரன் ராஜாராமன்
    187. கே. பிரித்திகா யாசினி, எஸ். ஐ.
    188. ஆர். பி. ரமேஷ்
    189. மாணவி நிகிதா ஆசாத்
    190. அமுதா ஐ.ஏ.எஸ், கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்
    191. மாணவர் ஆக்சாத் பிரகாஷ்
    192. மாணவர்கள் தனய் டாண்டன், தீபிகா போடபட்டி
    193. மாணவர் மகிஷன் ஞானசேகரன்
    194. மாணவர் ரிஃபாத் ஷாருக்
    195. இ. மயூரநாதன்
    196. கோட்டலாங்கோ லியோன்
    197. மாணவர் ஆண்டனி எடிசன்
    198. மாணவர் உதயகீர்த்திகா
    199. மு. இளங்கோவன்
    200. ரூபாதேவி
    201. கம்சாயினி குணரத்தினம் 
    202. க. பாசுக்கரன் 
    203. சா. அர. சீனிவாச வரதன் 
    204. வினோது கண்ணப்பன் 
    205. ஃகெப்சிபா 
    206. ந. இரவிக்கிரண் 
    207. மீனா செகதீசன் 
    208. பேராசிரியர் இராசு செட்டி 
    209. பிரீத்தி சீனிவாசன் 
    210. ப. அருளி 
    211. இல. பாலசுந்தரராமன் 
    212. ஆ.க. இராமகிருட்டிணன் 
    213. அலெக்சாந்தர் துபியன்சுக்கி 
    214. சோ. ந. கந்தசாமியார் 
    215. கே. சிவக்குமார் 
    216. ஃபெட்னா 
    217. செயபாண்டியன் கோட்டாளம் 
    218. அரி சீனிவாசன் 
    219. பு. வே. சிந்து 
    220. நித்தியா துரைசாமி 
    221. எஸ்.எஸ். ராஜமவுலி
    222. பெட்ஸி டிவோஸ்
    223. சுந்தர் ஐயர்
    224.  கே.வி. மாமா 
    225. உம்முல் கர்
    226. பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)
    227. வீர வாஞ்சிநாதன்
    228. விஷ்வேச தீர்த்த ஸ்வாமி
    229. கிம் யாங் – ஷிக்
    230. சஹா நாதன்
    231. இந்திய விஞ்ஞானிகள் (IUCAA)
    232. கலைஞானி கமலஹாசன்
    233. என்.சொக்கன்
    234. எவிடென்ஸ் கதிர்
    235. பெஜவாடா வில்சன்
    236. நடிகர் அல்வா வாசு
    237. எழுத்தாளர் பாலகுமாரன் 
    238. அரிசோனன் மகாதேவன்
    239. வேந்தன் அரசு
    240. திலகவதி மதனகோபால்
    241. மலேசியா கமலநாதன்
    242. இரா. பானுகுமார்
    243. சவுமியா சாமிநாதன்
    244. யது கிருஷ்ணா
    245. குமார் துரைசாமி
    246. பா. ராகவன்
    247. மலாலா யூசுப்சையி
    248. முனாப் கபாடியா
    249. அஜீத் பாய் (Ajith pai)
    250. நூஃப் மர்வாய் 
    251. தாரிகா பானு
    252. பாக்கியம் ராமசாமி
    253. சமுத்திரகனி
    254.  சிற்பி இராசன்
    255. கவுதம சன்னா
    256. திருத்தம் சரவணன்
    257. விஞ்ஞானி சிவன்
    258. பைக் ரைடர் சைபி
    259. தகடூர் கோபி
    260. பேராசிரியர் கண்மணி
    261. டிராபிக் ராமசாமி
    262. சுமிதா மித்ரா
    263. ஸ்ரீதேவி
    264. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 
    265. தென்னிந்திய திரைத்துறை மையம் 
    266. கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 
    267. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
    268. சற்குணா பாக்கியராஜ்
    269. அ.முத்துலிங்கம்
    270. டொனால்ட் டிரம்ப் 
    271. ‘சிவசிவா’ வி. சுப்பிரமணியன்
    272. திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப
    273. பேரா.  அக்‌ஷய் வெங்கடேஷ்
    274. கலைஞர் மு. கருணாநிதி
    275. அடல் பிகாரி வாய்பாய்
    276. கவிஞர் சுகதகுமாரி
    277. கவிஞர் வைரமுத்து
    278. பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள்
    279. விஞ்ஞானி ஜாசிலின் பர்னல்
    280. கி. ராஜநாராயணன்
    281. விஞ்ஞானி குசலா ராஜேந்திரன்
    282. ஐராவதம் மகாதேவன்
    283. சமூகப் போராளி ‘தரனா பர்க்
    284. மெங் ஃபான்சாவ்
    285. ராம் சுதார்
    286. சு. தியடோர் பாஸ்கரன்
    287. ரா  முத்துசாமி
    288. பாவலர் மா வரதராசன்
    289. விட்டல் நாராயணன்
    290. சேவாலயா முரளி
    291. சுகந்தி நாடார்
    Share
  • பரம்பொருள் பாமாலை-5

    நெல்வி ளையும் தென்னாட்டில் பூத்தவனை,

    வில்வ இலை வடிநீரால் பூசித்து,

    செல்வ நிலை கல்விபுகழ் பெற்று,

    வல்ல மையும் நல்வாழ்வும் பெறுவோம்!                                                                      25

     

    நாட்டிய வேதத்தில் தோன்றிய நாயகனே,

    நீட்டிய பாதத்தால் தேவியை வென்றவனே,

    ஆட்டிய அரவத்தின் நஞ்சினை உண்டவனே,

    வாட்டிடும் துன்பத்தைப் போக்கிடும் ஆண்டவனே!                                                        26

     

    நீருக்குள் ஊடுருவும் சூரிய ஒளியாய்,

    உயிருக்குள் ஊடுருவும் வீரிய ஒளியே,

    பாருக்குள் நீயுலவிக் காப்பதை உணர்ந்தால்,

    யாருக்கும் துன்பங்கள் தோன்றுதல் அரிது!                                                                     27

     

    செவ்வேளின் வடிவத்தில் சிகரத்தில் நின்றாய்,

    வெவ்வேறு வடிவத்தில் அகிலத்தில் வந்தாய்,

    ஒவ்வாத மனதிலும் ஒளியாக மலர்ந்தாய்,

    இவ்வேழை உள்ளத்தில் இசையாக நிறைந்தாய்!                                                          28

     

    குற்றாலக் குறவஞ்சி வழியாக வந்தாய்,

    கற்றாடக் கவின்மிகு தமிழாக வந்தாய்,

    பொற்பாதம் தனைத்தூக்கிப் புயலாக வந்தாய்,

    உற்றாடும் அடியவருள் தென்றலாய் நின்றாய்!                                                              29

     

    இல்லாமல் இருக்கும் நாதனின் பேரருள்,

    இல்லாமல் இல்லை ஈரேழு உலகம்,

    புல்லாகப் பிறக்கும் பிறவி என்றாலும்,

    தில்லையின் நாதனே நீர்தந்து காப்பான்!                                                             30

     

     

    நிலைத்து நிற்கும் நாதனை வணங்கி,

    மலைத்து நிற்கும் மனதின் மாயையைத்,

    தொலைத்து நிற்கும் தூயவர் அடிகளை,

    நினைத்து வாழ்ந்தால் வீடுபேறடைய லாம்!                                                                   31

     

    மானைக் கையில் ஏந்திய நாதனே,

    கூனை நிமிர்த்திய பாண்டியன் தேவனே,

    தூணைப் பிளந்த சிம்மந் தன்னிலும்,

    வானைப் போல விரிந்த ராசனே!                                           32

    Share
  • மணிமொழிக்கு ஒரு மடல்!

    திருச்சிராப்பள்ளி

    19/03/2014

    அன்புக்குரிய மணிமொழிக்கு,

    உன்னுடைய  அம்மான்* எழுதிக்கொண்டது. நலம்.

    நேற்று தொலைபேசியில், உனக்கு உங்கள் நகரத்தின் சிறந்த பள்ளியில் அனுமதி கிடைத்திருப்பதை, உன் அம்மா மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டாள்.

    மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    இதனை அடைவதற்காக உந்தன் பெற்றோரும் நீயும் செய்த முயற்சியையும், அயர்ச்சியையும் நன்கு அறிந்துகொண்டேன்.

    விண்ணப்பம் பெறுவதற்கு அதிகாலையிலிருந்தே கால்கடுக்க வரிசையில் நின்றதில் ஆரம்பித்து, நீ நுழைவுத்தேர்வில் சிறப்பான முறையில் தேறியது வரை உன் அம்மா விவரித்தாள்.

    கல்விக்கட்டணம் அதிகம் என்று கருதினாலும், அது உன்னுடைய புத்தகப்பையின் சுமையைவிட தங்களுக்கு அதிக சுமையில்லை எனவும், தங்களின் வாழ்வே உனக்காகத்தான் என்ற கருத்தில் உறுதியாகவும் உவகையாகவும் இருக்கிறாள்.

    ஆனால், அவளுக்கு ஒரு முக்கியமான கவலை; நியாயமான கவலை; கவனத்தில் கொள்ளவேண்டிய கவலை. அது என்னவென்றால், உன் பள்ளியின் தூரம்.

    விபத்துகள் மலிந்த இந்த காலக்கட்டத்தில், நாளிதழ்களில் நாளும் தென்படும் செய்தி,  பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகள் பற்றித்தான். அதனைப்பற்றி கலந்துரையாடும்பொழுது, அதிகாரபூர்வமாகவும், என் சொந்த அனுபவத்திலும் சாலை  விபத்துகளுக்கான முக்கிய காரணமாக அமைவது 77% தனிமனித தவறுகளால்தான் என்பதனை தெரிவித்தேன்.

    அவள் என்னிடம், அந்தத் தவறுகளை களைவதற்கான வழிமுறைகளையும், வருமுன் காக்கும் நடைமுறைகளையும் உனக்கு அறிவுறுத்துமாறு வேண்டிகொண்டதன் விளைவுதான் இந்த கடிதம்.

    நீ மிகுந்த பொறுப்பானவள், பணிவானவள் என்பதில் எங்களுக்கு எந்தவித ஐயமும் இல்லை. அதே வேளையில், நீ செவிமடுத்து மேன்மைப்படுத்திக்கொள்ளும் இயல்பினள் என்ற காரணத்தினால் சில ஆலோசனைகளை பகிர்ந்துகொள்கிறேன்

    உன் பள்ளிப்போக்குவரத்திற்கு மூன்றுவித வாகன வசதிகள் இருப்பதாகவும் – ஆட்டோ, தனியார் வேன் மற்றும் பள்ளிப்பேருந்து- அதனதன் சாதகபாதகங்களையும் தெரிவித்தாள்.

    எந்தவித வாகனங்களாக இருந்தாலும், சாலைவிதிகள் பொதுவானவை தானே. அடிப்படை சாலைவிதிகள் பற்றி நீ முற்றிலும் அறிந்திருப்பாய் என்று நம்புகிறேன்.

    *அம்மான் – தாய்மாமன்

    விதிகள் மீறும்பொழுதும் மீறப்படும்பொழுதும் நாம் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிவிட்டு கலைந்துவிடுகிறோம். செயல் மாற்றம் என்பது நம் ஒவ்வொரிடம் இருந்து தொடங்கவேண்டும். அதன் நல் விளைவுகளையும் நோக்கங்களையும், நம் சக மனிதர்கள் கண்டுணர்ந்து செயல்படுத்த தொடங்கிவிட்டால், சமூக நல் மாற்றம் விளைந்துவிடும். அடுத்த சக மனிதருடைய பாதுகாப்பு என்பது நம் கடமை என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணமிட்டாலே போதும், நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுவிடும். அன்றாட மன சஞ்சலங்களும், பாதுகாப்பற்ற உணர்வுகளுக்கும் தீர்வு ஏற்படும்.

    இந்த தீர்வு என்பது ஒரே நாளிலோ ஒரு நபராலோ ஏற்பட்டுவிடமுடியாது; நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இன்றியமையாதன. வந்தபின் பார்த்துக்கொள்வதைவிட, வருமுன் காப்பதே சாலச் சிறந்தது.

    பள்ளி வாகனங்களின் அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டிற்கு, பள்ளி வாகன ஓட்டுநரின் தவறைவிட அதில் ஏறும் நம் மனப்பான்மை தவறுக்குதான் அதிக இடம் இருக்கிறது. முக்கியமாக பெற்றோர்களையே குறிப்பிடுவேன். இதனைப் பற்றி உன் அம்மாவிடம் விரிவாக எடுத்துரைத்தாலும், உன்னிடமும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

    இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் எங்களைப்போன்ற பெற்றோர்கள்  என்பதனை முதலில் உணரவேண்டும். வாகன ஒட்டுநர்க்கோ பல குழந்தைகளில் நீங்கள் ஒரு  குழந்தை. பெற்றோருக்கோ அந்த  ஒரு குழந்தைதான் எல்லாம். அதிகமான எண்ணிக்கையில் பயணப்படும் வாகனங்களில் நம் குழந்தைகளை அனுப்புவதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். அனுமதித்த அளவு குழந்தைகளை ஏற்றும் வாகன அமைப்பாளர்களுக்கு, அவர்களுக்கும் கட்டுபடியாகும் அளவிற்கு சற்று கூடுதல் கட்டணத்தை, நம் குழந்தைகளின் பாதுகாப்பு பொருட்டு செலுத்துவதில் நாம் குறைந்துபோய்விடமட்டோம்.

    மற்றபடி உன் தந்தையாரிடம் இரண்டு குறிப்பான பாதுகாப்பு சரிபார்த்தலை வலியுறுத்தி இருக்கிறேன். ஒன்று, வாகன ஓட்டுநரின் கண் பார்வை உள்ளிட்ட மருத்துவ சான்றிதழ். இரண்டு, வாகனத்தின் சக்கரத்தின் (டயர்) அமைப்புத்தன்மையை உறுதிப்படுத்துதல். (என் அனுபவத்தில், மேற்கூறிய இரண்டு அம்சங்களின் பழுதினால் நிறைய விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனை  யாரும் குறிப்பாக கவனிப்பதில்லை; வலியுறுத்துவது இல்லை.)

    பல வாகனங்களில் டயர்களை பார்த்தால், வழவழப்பாக (சாலைகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்க வைக்கும் அளவுக்கு) இருப்பதை அறியமுடியும். இவை மிகுந்த ஆபத்தானது என்பதை ஓட்டுனரும், பயணிகளும் கவனத்தில் கொள்வதே இல்லை. டயர்களின் சீரான பயன்பாட்டிற்கு குறிப்பாக மூன்று அளவுகோல்களை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – டயர் பிரஷர் (அழுத்தம்), ட்ரட் (Tread), சமசீர்த்தன்மை (alignment).

    என்னைபோன்ற ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர், தான் அறுவை சிகிச்சை செய்யும் ஒரு குறிப்பிட்ட நோயாளிகளின் உயிர்நலனுக்கு பொறுப்பாகிறார். ஆனால் ஒரு ஒட்டுநரோ, அது எந்தவித வாகனமாக இருந்தாலும் ஒரு நடைக்கு குறைந்தப்பட்சம் 4 முதல் 60 பயணிக்கும் குழந்தைகளின் உயிர்நலனுக்கு பொறுப்பேற்கிறார்.

    அவருடைய பொறுப்புணர்ச்சியை உணரச்செய்தால், முறையாக அங்கீகரித்தால் கண்டிப்பாக அவருடைய மனப்பான்மையில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். ஒரு பயணம் முடிந்தவுடன், நாம் ஒவ்வொருவரும் அவரை அணுகி, பாதுகாப்பான பயணத்திற்கு  தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்லலாம் என்பது திண்ணம்.

     இந்த பழக்கத்தை நீ உடனடியாக கடைபிடிக்கவேண்டும். உன் சக மாணாக்கர்களுக்கும் இதனை நயம்பட எடுத்துரைக்கவேண்டும்.

    மற்றபடி, வரிசையில் ஏறுவது இறங்குவது, நின்றவுடன் இறங்குவது போன்ற அடிப்படை பாதுகாப்பு கோட்பாடுகளை நீ நன்றாக அறிவாய். அதனை செயல் படுத்துவதில்தான் பாதுகாப்பு உறுதியாகும்.

    எப்படியாகினும், “சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்,

         சொல்லிய வண்ணம் செயல்.” (திருக்குறள் –664 – வினைத்திட்பம்)

    என்ற குறளை மனதில் நிறுத்தவும்.

    மேற்கூறிய அனைத்தும் தற்காலிக நடைமுறைக்கான வழிகாடுதல்கள்தான்.

    இதற்குரிய  நிரந்தர எளிய தீர்வுகளை பற்றி சிந்தித்தபொழுது எழுந்த என் எண்ணவோட்டங்களை  உன்னிடம் பகிர்ந்துக்கொள்ள விளைகிறேன்.

    நான் என்னதான் எவ்வளவுதான் எடுத்துரைத்து பட்டியலிட்டாலும், என் தலைமுறையினரின் சார்பாக ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக தற்கால வளரும் தலைமுறையினர் ஆகிய உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

    எதற்காகவென்றால், எங்களுக்கு முன் தலைமுறையினர், எங்களிடம் தாங்கள் கல்வி கற்ற சிரமங்களை விவரிப்பதுண்டு. குறிப்பாக அந்த காலத்தில் பள்ளிகள் அவர்களின் இருப்பிடத்தை விட்டு தூரமாக இருந்ததையும், அதற்காக அவர்களின் தினந்தோற பயண சிரமப்பாடுகள் பற்றியும்தான் இருக்கும். அவற்றில் அவர்கள் ஒருமுறையேனும் பாதுகாப்பு குறைபாடு அல்லது அச்சம் பற்றியும் தெரிவித்ததே இல்லை.

    அந்த நடைமுறை சிரமங்களை குறைப்பதற்காகத்தான் கிட்டத்தட்ட ஊர்தோரும் பள்ளிகள் அமையவும், பள்ளிகள் மேனிலைப்படுத்தவும் அந்தக்கால கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் சீரிய முயற்சிகள் மேற்கொண்டு ஓரளவு வெற்றியும் கண்டனர்.

    அதனை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் தவறிவிட்ட தலைமுறையாய் நாங்கள் தலைகுனிகிறோம்.

    உலகளாவிய போக்கிலும், வளர்ந்த நாடுகளும் ஒருமித்து செயல்படுத்தும் “அருகமை பள்ளிகள்” என்ற உயர்ந்த கல்விக்கோட்பாட்டை நிலைநிறுத்தத் தவறிவிட்டோம். எங்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு தூரம்தான் தடையாக இருந்தது. ஆனால் உங்களுக்கு, தூரம் போக பாதுகாப்பின்மையையும், விளையாட்டின்மையையும், நேரமின்மையையும், சோர்வையும், மனவழுத்ததையும் கூடுதலாக திணித்துவிட்டோம். ஊருக்கு வெளியே இருந்த மதுக்கடைகளை ஊருக்குள் வைத்துவிட்டு, ஊருக்குள் இருந்த பள்ளிகளை வெளியற்றிவிட்டோம். முன்பு சமூகச்சூழலால் கிட்டாத கல்வியை, இன்று புறச்சூழலால் கிட்டாமலே வைத்துள்ளோம்.

    பாதுகாப்பான உன்னதமான கல்விச்சூழல் அருகமை பள்ளிகளில்தான் அமையக்கூடும். அதுதான் நிரந்தர தீர்வாக அமையும். அன்றாட பாதுகாப்புகள் பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் கல்வியிலும், விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களாகிய நாங்களும் நிம்மதியாக எங்கள் அலுவல்களை மேற்கொள்ளமுடியும்.

    நாங்கள் தெரிந்தே செய்த தவறு. மன்னித்துக்கொள்ளுங்கள்.

    தவறிழைத்தவர்தான் தவறைக் களைய முனையவேண்டும். ஒரு பக்கம் குறைகள் மிகுந்து காணப்பட்டாலும், ஒவ்வொரு தனிமனிதனின் மனப்பான்மை, தவறுகளைத்  திருத்திக்கொள்ளும் பக்குவம், சரியான புரிதல்கள் மூலம், நம் அன்றாட நல்வாழ்வையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் அமைத்துகொள்ளலாம் . அதற்கான முயற்சிகளை வல்லமை படைத்த அனைவரும் மேற்கொள்வோம்.

    இதற்கிடையில் உன்னைப் போன்றோர் நன்கு தூய கல்வி கற்று, எங்களின் முனைதலையும், முயற்சிகளையும் முன்னெடுத்து செல்வீர்கள், உங்களுக்கு  பின்வரும் தலைமுறையினருக்கு பாதுகாப்பான ஒரு உலகத்தை அமைத்துகொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதில்தான் அறிவுசார் மனிதகுல வளர்ச்சியின் வெற்றி இருக்கிறது.

    என்றும் அன்புடன்

    உன் அம்மான்

    Dr. சுப. திருப்பதி

    Share
  • மணிமொழிக் கொரு மடல்

    நடராஜன் கல்பட்டு

    சென்னை – 64

    19-03-2013

     

    எனது அன்பு மணிமொழி,

    உன்னிடம் இருந்து கடைசியாய் வந்த கடிதத்தில் நீ கேள்வி ஒன்று கேட்டிருந்தாய், “உனது கையெழுத்து ஏன் இப்படி ஆகி விட்டது?  வகுப்பிலேயே அழகான கையெழுத்து கொண்டவள் நீ தானே.  உன் கை விரல்களிலே நடுக்கம் இருக்கிறதா?  உடனே நீ வைத்தியரைப் பார்” என்று.

    உண்மைதான்.  அப்போதெல்லாம் எட்டாம் வகுப்புக்கு வரும் வரை நமக்கு காப்பீ ரைடிங் என ஒரு வேலை இருக்கும்.  பள்ளிப் புத்தகங்கள் வாங்கும்போதே அவற்றில் காப்பீ ரைடிங் என்ற ஒரு நோட்டுப் புத்தகமும் இருக்கும். அதில் எல்லாப் பக்கங்களிலும் நான்கு நான்கு வரிகளாக அச்சடிக்கப் பட்டு இருக்கும்.  ஒவ்வொரு பக்கத்திலும் முதல் வரியில் அழகாக ஆங்கிலத்திலோ தமிழிலோ வார்த்தைகளோ அல்லது ஒரு வாசகமோ அச்சடிக்கப்பட்டு இருக்கும்.  அந்த முதல் வரியில் உள்ளது போலவே நாம் கீழ் வரிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

    உனக்கு நினைவு இருக்கும்.  எனது காப்பீ நோட்டில் டீச்சர் போடும் “குட்”டைப் பார்த்து, “டீ நீ பெரிய ஆளா வருவேடீ” ன்னு சொல்லுவே.  ஆனா கையெழுத்துக்கும் தலெ எழுத்துக்கும் இருக்கற பொருத்தம் ‘அஷ்டாஷ்டக’ பொருத்தம்னு சொல்லணுமோன்னு தோணுறது எனக்கு.

    கையெழுத்து நன்னா இருக்கறவாளுக்கு தலெ எழுத்து நன்னா இருக்காதோ?

    கல்யாணம் ஆன புதுசுலெ என் மாமியார், “என்ன சீரு செஞ்சிருக்கார் ஒங்க அப்பா?  இது சரியா இல்லே.  அது சரியா இல்லே” ன்னு சொல்லி என்னையும் என்னோட அப்பாவையும் திட்டுவா..  மாமியார் போய்ச் சேந்தா புண்ணியவதி.  மழெ நின்னாலும் தூரல் உடலேன்னு சொல்லுவாளே அது போல மாமியார் செஞ்சிண்டு இருந்த வேலெயெ நாத்தனார் எடுத்துண்டா.

    வீட்டோடு நாத்தனாரான்னு கேக்கறயா?  இல்லே.  அப்பொப்ப வருவா பெரிய லிஸ்ட்டெ எடுத்துண்டு.  அண்ணாதான் இருக்காரே ஆபத் பாந்தவன், கையிலெ அக்ஷய பாத்திரத்தோட.

    நான் எதாவது வேணும்னு கேட்டா, “அதுக்கென்ன இப்பொ அவசரம்.  நமக்கு வேணுங்கெறதெ எப்பொ வாணா வாங்கிக்கலாம்” னு சொல்லி என் வாயெ அடெச்சுடுவார்.  என்னோட ஆசெயெல்லாம் அடக்கி வெச்சு அடக்கி வெச்சே அழிஞ்சு போச்சு.

    இப்போ பையனும் பொண்ணும் வளந்தூட்டா.  நான் எதாவது சொன்னா, “அம்மா நீ சும்ம இரு.  ஒனக்கு ஒண்ணும் தெரியாது” ன்னு சொல்லி என்னெ அடக்கறா.

    மணிமொழீ எனக்கு சில சமயம் தோணறதுடீ ரெஃப்ரீஜிரேட்டர்லெ ஃப்ரீஸர்னு ஒண்ணு இருக்கே அது போல நம்மெ சின்னவாளாவே ஃப்ரீஸ் பண்ணி வைக்க ஒண்ண விஞ்ஞானிங்க கண்டு புடிச்சிருக்க மாட்டாங்களான்னு தோணறதுடீ.

    இத்தோடு நிறுத்திக்கறேன் என் கதெயெ.  நீ எப்படி இருக்கெ?  அதெ சொல்லு.

    இப்படிக்கு,

    கழிந்த இன்ப நாட்களை எண்ணி துன்ப நாட்களைக் கழித்திடும்

    உன் அன்புத் தோழி,

    அனுசுயா

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 11

    இவள் பாரதி

    ஓங்கியடித்துவிடுகிறாள்

    அம்மாகுட்டி

    அடிப்பதா அழுவதா

    என சுதாரிப்பதற்குள்

    சிரித்துவிடுகிறாள்

    (more…)

    Share
  • மண்ணுமே பொறுக்குமா!

    எம்.ஜெயராமசர்மாb-index

    காந்திய தேசத்தில் கணக்கிலா அரக்கர்கள்
    கண்ணியம் எல்லாமே காற்றிலே பறக்குது
    நீதியை வேண்டியே போவது யாரிடம்
    நிம்மதி இன்றியே நிற்குது தாய்க்குலம்

    பாரத பூமியை அன்னையாய் பார்த்தவர்
    ஊரெலாம் பெண்ணினை தெய்வமாய் கண்டவர்
    தோலினை உரித்துமே பெண்மையை குலைப்பதா
    யாருளார் பெண்ணினை தாங்கியே காத்திட

    கட்டிடம் பெருகுது கல்வியும் வளருது
    துட்டரும் வருகிறார் துயரமும் பெருகுது
    சட்டமோ இருட்டினில் தானுமே நிற்குது
    நட்டமே நாளுமே பெண்களின் வாழ்விலே

    வாய்மையின் வடிவமாய் வள்ளுவன் வந்தனன்
    தாய்மையின் உருவமாய் சாரதா வாழ்ந்தனள்
    ஏழ்மையில் இறைவனை கண்டநம் இந்தியா
    எப்படி தொலைத்தது இரக்கத்தைப் பெண்ணிடம்

    காணுகின்ற இடமெங்கும் காமுகரின் கூட்டம்
    கற்பு பறிபோயிடுமோ பெண்கள் பெருஏக்கம்
    ஏனிந்த நிலையென்று ஏக்கமொரு பக்கம்
    இவை தடுக்க யாருள்ளார் என்பதேயேக்கம்

    பெண்ணினை வதைப்பது பேதமை அல்லவா
    கண்ணென பெண்ணினை காத்திடல் வேண்டுமே
    எண்ணியே பார்க்காது இருந்துமே விட்டிடில்
    மண்ணிலே வாழ்வதில் என்னதான் இருக்குது!

    http://www.gender-focus.com/2010/05/22/women-behind-bars/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…100

    சக்தி சக்திதாசன்

     

    Sakthy

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் உங்களோடு உறவாட வந்திருக்கும் எனது இந்த மடல் உங்களுக்கு வரையும் நூறாவது மடல் எனும் நினைப்பே தித்திக்கிறது.

    இனிய அன்பான வாசக உள்ளங்களுடன் நூறு வாரங்களாக வாரம் ஒருமுறை என் மனக்கருத்தினைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் அமைத்துக் கொடுத்த “வல்லமை” இதழின் வல்லமையாளர்களுக்கும், எனது மடலினை அன்பு கூர்ந்து ஆதரிக்கும் அன்பு வாசக நெஞ்சங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு காலத்தின் எழுத்துக்கள், பதிவுகள் அக்காலத்தின் கண்ணாடியாக அக்காலத்தின் நடப்புகளை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு கருவியாகச் செயற்படுகிறது..

    காலம் எனும் காற்றில் அடிபட்டுச் செல்லும் சருகாக புலம் பெயர்ந்து வாழும் என் போன்ற சாதாரணமானவர்களின் மனதில் நாம் வாழும் எம்மை அண்டியுள்ள சமுதாயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் அந்நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பன எத்தகையதோர் பார்வையைக் கொடுக்கிறதோ அதையே உங்களுடன் இம்மடல் வழியாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

    இது ஒரு கோணப் பார்வையே ! இதே நிகழ்வினை மற்றொரு கோணத்தில் பார்க்கும் பலர் இருப்பார்கள். எது சரி, எது பிழை என்று வாதிடுவதல்ல எனது நோக்கம். நடக்கும் நிகழ்வு என் பார்வையில் எத்தகையதோர் நிலையை எடுத்தது என்பதை எடுத்துக் காட்டுவதே நோக்கமாகும்.

    sakஉலகத்தில் என்னை என் அன்னை விழுத்திய 57 வருட காலத்திலே கடந்த சுமார் 40ன் வருடங்களை இங்கிலாந்திலே புலம்பெயர் வாழ்க்கையிலே கழித்து விட்ட எனக்கு வாழ்க்கையின் பல நிகழ்வுகள் கொடுக்கும் அர்த்தங்கள் எனது தாய்நாட்டு குறுகிய கால வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது.

    அது மட்டுமின்றி கடந்த பத்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் சென்னை வந்து செல்லுவதோடு 35 வருடங்களின் பின்னர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் என் தாய் மண்ணாம் யாழ்நகரின் மண்ணை மிதித்தது என்பது பல நினைவு அசைவுகளுக்கு ஒரு பின்னோட்டத்தைக் கொடுத்தது.

    ஒரு சிறு ஊற்றாக யாழ்நகரில் முகிழ்த்த என் வாழ்க்கைப் பாதையை வகுத்துத் தந்த அந்த யாருக்கும் புரியாத மாபெரும் சக்தி இன்னும் அவிழ்க்காத முடிச்சுக்களாய் என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறதோ யானறியேன்.

    இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்துத் தமிழ் சமூகத்திலே எனது முகவரியைத் தொலைத்துத் திரிந்த காலம் சில முகவரியைத் தேடி ஓடிய காலங்கள் சில இன்று கண்டெடுத்த முகவரியோடு மோதி நிற்கும் காலம்.

    கலாச்சாரம் எமக்குக் கொடுத்த அடையாளங்கள் எம்மைப் பாதுகாக்கும் கவசங்களா இல்லை எமது முன்னேற்றத்திற்குத் தடைபோடும் கால் விலங்குகளா? என்பது இன்றைய எமது புலம்பெயர் சமூகத்தினிடையே நிலவி வரும் மாபெரும் கேள்வியாகி நிற்கிறது..

    சந்ததி இடைவெளி அன்றி generation gap எனும் பதத்தின் அர்த்தம் இன்று பலமாக பலரின் காதுகளிலும் ஒலிக்கிறது. எனது சமகால புலம்பெயர்ந்தோர் தமது கலாச்சார அடையாளங்களை வெள்ளத்தோடு அடிபட்டுச்செல்லும் ஒருவன் தனது ஆடைகளைக் காப்பாற்ற போராடுவது போல பலமான போராட்டத்தின் வாயிலாக சிறிது தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.

    ஆனால் எமது அடுத்த சந்ததி தமது பெற்றோரின் வற்புறுத்தலுக்கிணங்கி கலாச்சாரத்தைப் பேணுவதற்கு முயற்சிப்பது போலக் காட்டினாலும் பெரும்பான்மையோர் தாம் தமது சொந்தக்காலில் நிற்கும் நிலை வந்ததும் அதனை அப்படியே காற்றில் பறக்க விட்டு விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஆனால் இவற்றில் எவை சரி அல்லது எவை பிழை என்று எவரால் வரையறுத்துக் கூறமுடிகிறது ?

    அடுத்த சந்ததியினரின் நிலை கையொன்றைப் பின்னால் இழுத்துக் கட்டி விட்டு போருக்கு அனுப்புவதைப் போலவே தென்படுகிறது.

    இன்றைய இங்கிலாந்தில் வாழ்க்கைப் போராட்டத்தின் முனைப்பு படுபயங்கரமான தீவிர நிலையை அடைந்து இருக்கிறது. நிறவேற்றுமை எனும் எல்லைகளைக் கடந்து எமது அடுத்த சந்ததி வெள்ளை இனத்தவருடன் சமதளத்தில் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டிய தேவையுள்ளது.

    இங்கேதான் கலாச்சாரம், பண்பு எனும் இரண்டுக்கிடையிலே உள்ள மெல்லிய எல்லைக்கோடு காணாமல் போவதன் சங்கடம் தெரிகிறது.

    நாம் புலம்பெயர் தேசத்தில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக வாழ்ப்போகிறோம் எனும் போர்வையில் மது, மாது, போதைப்பொருட்கள் பாவனை எனும் சீரழிவிற்குள் தம்மை உட்படுத்திக் கொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டு விடுமோ எனும் அச்சமும் மேலோங்கத்தான் செய்கிறது.

    இருப்பினும் மேற்கூறிய இத்தீவினைப் பழக்கங்களுக்கு கலாச்சார அடையாளங்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவது உசிதமாகாது.

    பண்பான வாழ்க்கையில் தம்மை உட்படுத்திக் கொள்வோர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவர்களாயிருந்தாலும் எவ்வகையான கலாச்சார அடையாளங்களால் தம்மை அடையாளப்படுத்தினாலும் மேற்கூறிய தீயபழக்கங்களுக்கு தம்மை அடிமையாக்க மாட்டார்கள் என்பதை நன் பல இடங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. நாடுகளுக்கு இடையில் உள்ள தூரம் நவீன போக்குவரத்து முறைகளினால் மிகவும் சிறிதாகியுள்ளது.

    உலமயமாக்கல் அதாவது globalization எனும் அதிவேக சர்வதேச முன்னெடுப்புகளால் மக்கள் நாடு விட்டு நாடு பெயர்ந்து வாழ்வது மிகவும் சுலபமாகி விட்டது.

    மேலைநாடுகளின் முற்போக்கான வாழ்க்கை முறைகளைத் தவறாக நாகரீகம் எனும் பார்க்கும் மனோபாவம் எமது பின்புல நாடுகளில் நிலவி வந்த காரணத்தினால் எதைக் கலாச்சார சீரழிவு அல்லது பண்பற்ற வாழ்க்கை என்று விபரிக்கின்றோமோ அது எமது பின்புலநாடுகளில் அதாவது கலாச்சாரங்களை வலிமையாக கடைப்பிடித்து வரும் சமுதாயத்தில் வெகுவேகமாக உள்வாங்கப்பட்டு வருவதைப் பார்க்கும் போதுதான் உண்மையிலே கலாச்சாரத்திற்கும், பண்பிற்குமுள்ள வித்தியாசம் விளங்குகிறது..

    ஒரு மனிதனுடைய அடையாளம், அவனின் கலாச்சாரச் செறிவு அவன் மற்றவர்களுடன் பழகும் பண்பிலும், அடுத்தவரிடத்தில் காட்டும் அன்பிலும் அவனிடம் குடிகொண்டிருக்கும் மனிதாபிமானத்திலுமே தங்கியுள்ளது.

    கலாச்சாரத்தை பாதுகாப்பதில் முன்னனியில் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு அடையாள ஆடைகளை அணிந்து கொண்டு இனவிரோதத்தையும் இனக் குரோதத்தையும் வளர்த்து குழுநிலை மனப்பான்மையில் வாழ்வதென்பது ஒரு பண்பான சமூகத்தின் நாகரீகமாகாது.

    அதேபோல அரைகுறை ஆடையணிந்து மனம்போன போக்கிலே வாழ்வதுதான் நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கு எடுத்துக்காட்டு என்று எண்ணிக் கொள்வதும் தவறாகும்.

    நாம் வாழும் இடங்களில், பணிபுரியும் தளங்களில் மற்றவர்களோடு பழகும் வகையிலும், நாம் பண்பாக நடந்து கொள்ளும் முறையிலும் “: அடடா , இவர்தான் ஒரு தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்” என மற்றவர்கள் கெளரவத்துடன் பார்ப்பது ஒன்றே நாம் பிறந்த மண்ணுக்கும் எமது தொப்புள்கொடி உறவுகளுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்..

    என் இனிய அன்பு உள்ளங்களே ! இன்னும் ஒரு நூறுவாரம் உங்களுடன் இம்மடல் வழியாகத் தொடர்பு கொள்ளும் அளவிற்கு என் விரல்களில் வலிமையையும், இச்சிறிய சாதாரணமான ஒரு புலம்பெயர் தமிழனின் மடலைப் பிரசுரிக்கும் அன்பு மனதை வல்லமையினருக்கும் கொடுக்க அந்த எல்லாம் வல்ல என் மனம் வாழும் அண்ணாமலையான் துணை வேண்டி இம்மடலில் விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பான வணக்கத்துடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சடுதியில் உருப்படியாக முடிச்சவிழ்க்க…[2]

    இன்னம்பூரான்

    inna 1
    ஆங்கிலத்தில் ‘the plot thickens’ என்பார்கள். அதாவது மர்மங்கள் கூடுகின்றன. மாஜி அதிகார வர்க்கம் CBI யின் தடாலடி செயலைக் கண்டித்தால் ‘இனம் இனத்தோடு சேர்கிறது என்று சால்ஜாப்பலாம். ஆனால் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் CBI யின் தடாலடி செயலைக் கண்டிக்கிறார். நிதியமைச்சர் ப.சிதம்பரனார் CBI யின் தடாலடி செயல், முழு விவரங்கள் அறியாமையிலே அமைந்து விட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார். என்னடா இது? இவர்கள் சேம்ஸைட் கோல் போடுகிறார்களா அல்லது ‘the plot thickensaa?’ என்ற ஐயம் எழுகிறது. மேற்படி அரசியல்வாதிகள் யாதும் அறிந்த அரசியல் ஞானிகள். சேம்ஸைட் கோல் போடமாட்டார்கள். அது திண்ணம். ஆக மொத்தம், மர்மங்கள் கூடுகின்றன.

    கொஞ்சம் புரிந்து கொள்ள SEBIயின் மாஜி தலைவர் பவே அவர்கள் சொல்வதை பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.

    MCX-SX மேல் வைக்கப்பட்ட வருமானவரி குற்றத்தில் சத்து ஒன்றுமில்லை என்று நிதித்துறையே அறிவித்ததை, CBI ஏன் கண்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது?

    அவர்கள் ஏன் மகளுக்கு ஒரு நீதி, மருமகளுக்கு ஒரு நீதி என்று இயங்குகிறார்கள்?

    என்னிடம் உள்ள சில மர்மங்களை பொது மன்றத்தில் வைக்கும் காலம் வந்து விட்டது.

    சஹாரா நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதிற்கு, இது தண்டனையா என்று கேட்டதற்கு, ‘இருக்கலாம். நான் ஊடகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்கிறேன்’ என்றார்.

    FTIL/MCX-SX உரிமங்கள் முறைகேடாகக் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்களுக்கு ஆதாயம் இல்லை. அரசு கொள்கைக்கு உகந்தவாறு, போட்டி வரவேற்கப்பட்டது என்றார். குற்றச்சாட்டு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்றார்.

    அவருடைய ஐந்தாவது பதிலுக்கு சான்று, அவருடைய கண்காணிப்பும், தரமுயர்ந்த நாணயமான புதுமை உத்திகளே. இதை CBI கூட மறுக்கவில்லை.

    ஆட்டுவிப்பது யாரு?

    ஒரு பழைய தகவல் நினைவுக்கு வருகிறது. ‘The Craft of Audit’ என்ற என் ஆய்வுக்கட்டுரையை ஒரு பன்னாட்டு ஆடிட் இதழுக்கு கேட்டிருந்தார்கள் அதன் சாராம்சம்:

    உன்னால் தணிக்கை செய்யப்படுவர்களில் மூன்று வகை உண்டு. முதல் வகை விதிப்படி இயங்குவர். சின்ன சின்ன விதிவிலக்கு இருக்கலாம். அதை பெரிது படுத்தாமல், இடம், பொருள் , ஏவல் கருதி தணிக்கை செய்யவும். இரண்டாவது வகை எல்லா விதிகளையும், சரியோ தப்போ, கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு, இயக்கி இருப்பான். அவனை இரக்கமில்லாமல் தணிக்கை செய். பெருங்குற்றங்களை மறைக்க விதி வைக்கப்போர் கை கொடுக்கும். அவன் பாயில் புகுபவன் என்றால், நீ கோலத்தில் புகுந்து ஆடிட் செய். மூன்றாவது வகை விதியின் இலக்கணத்தை மீறாவிடினும், இட்ட காரியத்தை முடிப்பதில் கருமமே கண்ணாயிருப்பர். மதி குறைந்த விதியை அவர்கள் மீறிருப்பர். தாரதம்யம் அறிந்து அவர்களை ஆடிட் செய். தொழில் விவரங்கள் அறிந்து இயங்கு.

    (தொடரும்)

    சித்திரத்துக்கு நன்றி: http://kccollegegameday.com/wp-content/uploads/2013/11/theplotthickens.jpg

    Share
  • வர்ணங்களில் மட்டுமல்ல ஓவியங்கள்

    பத்மநாபபுரம் அரவிந்தன்h-index

    அப்பழைய பெருவீட்டில்

    ஆங்காங்கே வர்ணம் இளகிய

    சுவர்களில்த் தெரிகிறது

    பல உருவங்கள்,  உற்று நோக்க

    கூந்தல் விரித்தப் பெண்ணொருத்தி,

    புல்மேயும் பசுக்கள்,

    நெடும்பெருந் தடாகம்,

    வாள் ஏந்தியப் போர் வீரன்,

    முன்னங்கால்கள் தூக்கியக் குதிரை,

    இலையுதிர்ந்த மரம்,

    மரணப் படுக்கையில் ஒரு முதியவர்..

    இன்னும் எத்தனையோ அவ்வப்போது

    மனநிலைக்கு ஏற்றவாறு..

    உசிந்து பாருங்கள்

    வர்ணம் உதிர்ந்த சுவர்களை

    அப்பொழுது புரிய வரும்

    வர்ணங்களில் மட்டுமல்ல

    ஓவியங்கள் என்பது…

    http://www.thehindu.com/news/cities/bangalore/gullies-over-the-high-street/article4580921.ece

    Share