இலக்கியம்கவிதைகள்

வர்ணங்களில் மட்டுமல்ல ஓவியங்கள்

பத்மநாபபுரம் அரவிந்தன்h-index

அப்பழைய பெருவீட்டில்

ஆங்காங்கே வர்ணம் இளகிய

சுவர்களில்த் தெரிகிறது

பல உருவங்கள்,  உற்று நோக்க

கூந்தல் விரித்தப் பெண்ணொருத்தி,

புல்மேயும் பசுக்கள்,

நெடும்பெருந் தடாகம்,

வாள் ஏந்தியப் போர் வீரன்,

முன்னங்கால்கள் தூக்கியக் குதிரை,

இலையுதிர்ந்த மரம்,

மரணப் படுக்கையில் ஒரு முதியவர்..

இன்னும் எத்தனையோ அவ்வப்போது

மனநிலைக்கு ஏற்றவாறு..

உசிந்து பாருங்கள்

வர்ணம் உதிர்ந்த சுவர்களை

அப்பொழுது புரிய வரும்

வர்ணங்களில் மட்டுமல்ல

ஓவியங்கள் என்பது…

http://www.thehindu.com/news/cities/bangalore/gullies-over-the-high-street/article4580921.ece

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க