திருமால் திருப்புகழ் (32)
கிரேசி மோகன்
தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன-தனதான….
———————————————————————————————————————–
“மரத்தடி குளக்கரை
படித்துறை தவத்தினில் -கழியாது
வலப்புற மனத்திரு
விரற்கடை புறத்தினில் -நிலையான
இருப்பினை நெருக்கிட
மலைப்புற சிவக்கனி -ரமணேசன்
உரைத்ததை தினப்படி
உளத்தினில் உறைத்திட -அருள்வாயே
விரற்கடை பொருப்பினை
உயர்த்திட இடைக்குடி -மழையாலே
தவிப்பினை விரட்டிவ
யிரத்தினை மிரட்டிய -கருநீல
நிறத்தவ ,விடத்தலை
நிருத்தியம் நிகழ்த்திய -முலையேறி
அரக்கியை அழித்தவ
இடைக்குடி ஜனித்திடும் -பெருமாளே”
——————————————————————————————————————
பின்குறிப்பு-ஆன்மீக இதயம் இரண்டு விரற்கடை தள்ளி வலதுபுறம் இருப்பதாக பகவான் ரமணர் அனுபவம்….’’விரட்டி வயிரத்தினை’’-வஜ்ஜிராயுதம் ஏந்தும் இந்திரனைக் குறிப்பது….
படங்களுக்கு நன்றி:
http://sdgonline.org/viraha/satsvarupa_goswami/poem-for-february-12-2