திருமால் திருப்புகழ் (33)
கிரேசி மோகன்
‘’ஏறு மயிலேறு விளையாடும் முகமொன்று’’ அருணகிரியார் சந்தத்தில்….
———————————————————————————————————–
இராமன் திருப்புகழ்….
“கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
ஆதிகவி ஓதுமிதி காசபெரு மாளே”
———————————————————————————————————-