எஸ். கருணானந்தராஜா

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க இதழாசியரியர் 1977, கொழும்புத் தமிழ்ச்சங்க ஆயுட்கால உறுப்பினர், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க ஆயுட்கால உறுப்பினர். லண்டன் வித்துவான் வேலன் இலக்கியவட்ட ஆரம்பகால ஸ்தாபக உறுப்பினர், லண்டன் ஈழவர் இலக்கியக் கழக ஸ்தாபக உறுப்பினர். பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளேன். கவிஞன், சிறுகதை, நாடக ஆசிரியர், பத்தி எழுத்தாளர். இசையமைத்துச் சிடி வெளியிட்டவன். நடிகன். எனது பாரதியின் ‘குயில் பாட்டின் தத்வ ரகஷ்யம்‘ நூலுக்காக தமிழ்நாட்டில் ஸ்ரீ ராம் சிட் பண்ட் கம்பனியாரால் “பாரதி இலக்கியச் செல்வர் ” என்ற விருது பெற்றேன். புதுவைப் பல்கலைக் கழக பாரதி 125 விழாவிற்கு பேராளராக அழைக்கப்பட்டேன். 1986 வீரகேசரி சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றவன். கவிதைகளுக்கும் பல பரிசுகள் பெற்றவன். தமிழ் நாடு காவியன் இலக்கியப் பரிசுத் திட்டத்தினாரால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் எனது கதையும் தெரிவாகி இந்திய ரூபா 1500 பரிசும் சான்றிதழும் கிடைத்தது. ஜொ்மனி புலம்பெயர்ந்த தமிழெழுத்தாளர் ஒன்றியத்தினரால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு கிடைத்தது. இலண்டனிலிருந்து வெளியான ஒரு பேப்பர் பத்திரிகையில்; ஆரம்பகாலந்தொட்டு ஓர் பத்தி எழுத்தாளராக இருந்துள்ளேன். கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன (வெவ்வேறு புனைபெயர்களில்). வெளியீடுகள் – 1. பாரதியின் குயில்பாட்டின் தத்துவ மர்மம் 2. பாரதியின் குயில்பாட்டின் தத்வ ரகஷ்யம் (இது முதநூலின் இரண்டாம் பதிப்பு) 3. வள்ளுவன் காதல் 4. ஈழத்தாய் சபதம் நூல் 5. ஈழத்தாய் சபதம் -சுருக்கிய இசைவடிவம்(சிடியில்) 6. பிரித்தானிய ஈழவர் இலக்கியக் கழகத்தினரால் வெளியிடப்பட்ட ‘பூந்துணர்‘ வருடாந்த தொகுப்பு நூல்களில் பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. கல்வி பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானமாணி (BSc), தாய்லாந்து கசற்சாட் பல்கலைக்கழகத்தில் விவசாய ஆராய்ச்சியில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, பேராதனைப் பல்கலைக்கழக விவசாயப் பட்ட மேற்படிப்பு நிறுவனத்திலும் தொடர்ந்து நெதர்லாந்து வாகனிங்கன் சர்வதேச விவசாய நிறுவனத்திலும் பயிருற்பத்தி தொடர்பில் விஞ்ஞான முதுமாணி(MPhil) கற்கை, இலண்டன் கிரீன்விச் பல்ககைக் கழகத்தில் வணிக தகவல் தொழில் நுட்ப முகாமைத்துவத்தில் விஞ்ஞான முதுமாணி(MSc) பட்டம். உட்பட கணனி வலையமைப்ப முகாமைத்துவக் கற்கைகளிலும் டிப்ளோமாக்களைப் பெற்றுள்ளேன். தற்போதைய தொழில் – மொழிபெயர்ப்பாளர்.