பாகம்பிரியாள்
பழைய பற்பசையின் மூடியெல்லாம் ,
பாந்தமான  அடுப்பாய்  மாறுவது இங்கேதான்!
அம்மா ஒதுக்கிய காய்கறி  எல்லாம்
உருமாறி  கூட்டாஞ்சோறாய்க் கொதிக்கும்!
உணவு பரிமாற, கரண்டியும்,  தட்டும் தேட வேண்டாம்.
வெண்டைக்காய்க் காம்பும், ஈர்க்குச்சியும், கரண்டியாகி
வண்ணக் காகிதத் தட்டில்  உணவைப் பரிமாறும்!
அப்பாவிற்குத் தெரியாமல் எடுத்த பேனா மூடி
அழகான நீர்க் குவளையாய் அமர்ந்திருக்கும்!
கிடைத்ததில் விளையாடி மகிழும் நேரத்தில் ,
கண்ணில் களைப்பின் ரேகை  இருந்தாலும்,
களிப்பினை நெஞ்சில்   சுமந்து கொண்டிருக்கும்
குழந்தைகள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!

படத்திற்கு நன்றி: http://depositphotos.com/6414005/stock-photo-Child-playing-with-plastic-kitchen-utensils.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.