காதலர் தினம்
தமிழ்த்தேனீ
இந்தக் காதலர் தினக் கொண்டாட்டமே வாலன்டைன் என்னும் ஒருவரது மரணத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
விவரங்கள் வேண்டுவோர் ; http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
என்னும் விக்கிபீடியா தளத்தில் படிக்கலாம்
To-morrow is Saint Valentine’s day,
All in the morning betime,
And I a maid at your window,
To be your Valentine.
Then up he rose, and donn’d his clothes,
And dupp’d the chamber-door;
Let in the maid, that out a maid
Never departed more.
—William Shakespeare, Hamlet, Act IV, Scene 5
என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியதை மேற்கோளாகத் தருகிறேன்
நாம் காதலிக்கும் ஒருவருக்கு ஒரு தினையளவு துன்பம் வந்தாலும் மனம் தாங்காமல் அவர் துன்பத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபடுவதுதான் உண்மைக் காதல்
காதலுக்காக காதலியையே ,அல்லது காதலனையே விட்டுக் கொடுக்கலாம், ஆமாம் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் என்று எந்த மனம் நினைக்கிறதோ அந்த மனம் கொள்வதுதான் உண்மைக் காதல்
காதலர் தினம் என்று கொண்டாடும் நாம் என்னென்ன செய்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால்
எதிர் பாலினத்தில் இருப்பவர் நம்மைக் காதலிக்கிறாரா என்றே தெரியாமல் தன் விருப்பத்தை மட்டும் தெரிவிக்கும் நாளாக நினைக்கிறோம்.
அப்படி அவர் நம் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவரை அழிக்கத் திட்டமிடுகிறோம். இதல்ல காதல்
“இன்னுமா இருக்கிறது காதல்” திருமணம் செய்து கொண்ட மனைவியை காதலித்து அவளை அன்பாக ,மரியாதையாக, நடத்தத் தெரியாத இந்த நாளில் இன்னுமா இருக்கிறது காதல்? என்றே கேட்கத் தோன்றுகிறது
பருவ ஈர்ப்பை காதல் என்று எண்ணி அதற்கு உடன்படாத பெண்ணை திராவகம் ஊற்றி துடிக்க வைக்கும் எண்ணம் கொண்ட இளைஞர்கள் இருக்கும் இக்காலத்தில் இன்னுமா இருக்கிறது காதல் ? என்றே கேட்கத் தோன்றுகிறது
“ஒருவரை ஒருவர் உண்மையாகப் புரிந்து கொளுவது “ காதல் “ அது இது வரையில் ஏற்படவே இல்லை “
-தமிழ்த்தேனீ
ஒருவரைக் காதலித்தால் அது காதல், முதல் காதல் ,இரண்டாம் காதல் என்று ஆரம்பித்தாலே ,அங்கு காதல் புனிதம் இழந்துவிடுகிறது .
“காதல் ஒரு மலர்” ,அது ஒரு முறைதான் பூக்க வேண்டும். மீண்டும் பூக்க முடியாது , காதல் தவறு என்று நான் சொல்வேயில்லை . காதலைத்தவிர இன்னும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது
காதல் என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ,ஆனால் காதலைக் காமம் என்று புரிந்துகொண்டு அதைத்தவிர வேறு ஒன்றுமே பெரிதல்ல என்று எண்ணும் இக்கால இளைஞர்களின் மனப் போக்கு தவறு என்றுதான் சொல்லுகிறேன் . அதற்கேற்றார்ப் போல் பத்திரிகைகள்,,தொலைக் காட்சிகள்,திரைப் படங்கள் எல்லாமே காதலையே மையமாக வைத்து இளைஞ்ஞர்கள் மனதைக் கெடுத்து விட்டார்கள் .
“ உலகத்திலே நீர்விழுச்சியிலிருந்து விழும் தண்ணீர் சுத்தமானது என்று கூறுவர், அந்தத் தண்ணீரும் கீழ்நோக்கிதான் விழும். அது மிக எளிது ஆனால் தண்ணீரை மேலேற்றவேண்டுமானால் ஒரு விசை தேவைப் படுகிறது
அது போல பரிசுத்தமான மனதும் கீழ்த்தரமான எண்ணங்களை நோக்கி வெகு எளிதாக ஓடும் ,அதைக் கட்டுப் படுத்தி ஒழுக்கம் என்னும் விசை கொண்டு மனதை நல் வழிப் படுத்தவேண்டும் .
அது போல காதலின் சக்தி கொண்டு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தன் காதலனை அல்லது தன் காதலியை ஒரு நல்ல உன்னதமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் நோக்கோடு காதலித்தால் அந்தக் காதலை நானும் வரவேற்கிறேன்.
நான் ஒன்றும் முனிவனல்ல ,எனக்கும் காதல்,அதாவது உண்மையான காதல்,பரஸ்பரம் இருவரும் மனம் விட்டுப் பேசி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் காதல்,சுயநலமில்லாத காதல் ,அனைத்தும் பிடிக்கும் .காதல் வாழ வைக்க வேண்டுமே தவிற பெற்றோர்களுக்கும்,அவர்களுக்கும் துன்பம் தரக்கூடியதென்றால் அதை காதல் என்று என் மனம் இடம் தரவில்லை .. காதலியுங்கள் ,கண்ணியமாக ,வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள காதலியுங்கள் .” காதல்தான் இளைஞனையும் சரி யுவதியையும் பக்குவப்படுத்துகிறது என்பது என் எண்ணம்…அது தோல்வியோ அல்லது வெற்றியோ என்பதல்ல முக்கியம்…இதன் மூலம்
அவர்கள் அடையும் அனுபவம் அது அவர்களை ” செம்மைப் படுத்தினால் பரவாயில்லை, இப்போது பல காதல்கள் அனைவரையும் சீரழிக்கிறது என்பதே உண்மை . காதல் என்பதே பருவமடைந்த பெண்ணிற்கும் , வயது வந்த ஆணுக்கும் இயல்பாய் மலர்வது.
ஆனால் இப்போது அடுத்தவன் மனைவி மேல் காதல் வருகிறது. அடுத்த பெண்ணின் கணவன் மேல் காதல் வருகிறது ? அப்படியானால் அடுத்தவன் மனைவியை கடத்திக் கொண்டு போகலாம் தவறில்லை,மேலும் அவள் அனுமதித்தால் ,உலக ஒழுக்கம் மறந்து அவளை அடையவும் அடையலாம் ,அதுவும் தவறில்லை, அப்படித்தானே….? இப்படிப் போகிறது இந்தக் காலத்து நியாயம் … இவையெல்லாம் காதலா? இன்னமும் காதல் இருக்கிறதா? இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதே உண்மை.
அச்சம் ,மடம் நாணம் அப்பிடி…இப்பிடீன்னு சொல்வதெல்லாம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான் ,அதில் தவறியவர்கள் தான் கெட்டுப் போவது மட்டுமல்லாமல் தன் வாரிசுகளுக்கும் எயிட்ஸ் போன்ற நோயைப் பரப்புகிறார்கள் நண்பரே ,நன்றாக சிந்தித்துப் பாருங்கள் .கற்பு என்பது மடமையல்ல ஒழுக்கம்.
வாலிப வயதில் பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் தனக்கு திருமணம் ஆனவுடனே தன் மனைவியைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தையே “நல்லா போர்த்திகிட்டு வா கண்டவன் கண்டபடி பாக்குறான்” என்பதே . தனக்கென்றால் ஒரு நியாயம் , அடுத்தவருக்கென்றால் ஒரு நியாயமா? தனக்கு வரும் மனைவி மட்டும் தன்னைத் தவிர வேறு யாரையும் நினைத்துகூட பார்க்கக் கூடாது ,என்று நினைக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் ஏன் தானும் ஒழுக்கமாக இருந்து ஒரு மனைவிக்கும் உண்மையானவனாக இருக்கக் கூடாது .?
பெண்கள் வீரமா இருக்கலாம் ,வீரமா இருப்பது வேறு,விவேகமா இருப்பது வேறு . பொதுவாக இருக்கட்டும். காதலிக்கும் பெண் ஜீன்ஸ் போட்டுகிட்டு வந்தால் பிடிக்கும் ஆனால் அவளே திருமணம் ஆன பின் அவளே புடவைக் கட்டிக்கிட்டு வரணும். அச்சம் என்பது எல்லாவற்றிர்க்கும் அஞ்சுவது என்று பொருளல்ல,
அஞ்சுவது அஞ்சாமை கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் பொருளே எதற்கு அஞ்சவேண்டுமோ அதற்கு அஞ்சித்தான் ஆகவேண்டும் ,எதற்கு அஞ்சக் கூடாதோ அதற்கு அஞ்சக் கூடாது என்பதுதான்
நாணம் எதற்கு எங்கு வரவேண்டுமோ அங்கு வராமலிருந்தால் அது துன்பம் பயக்கும். இந்தக் காலத்துப் பெண்கள் “ நிமிர்ந்த நன்நடை நேர் கொண்ட பார்வை “ என்று பாரதி சொன்னதை தவறாக புரிந்து கொள்கிறார்கள்
தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெண் உண்மையாக விரும்பினால் அவளின் அழகிய நகங்களும் ஆயுதமாக மாறும் என்று மஹாத்மா காந்தி சொன்னது …உண்மை . எத்தனை பேரால் அது போல தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது
முடியாமல் போவதால் தானே பல பெண்களின் வாழ்க்கையை சில மிருகங்கள் சீரழிக்கின்றன . பெண்கள் அச்சம் ,நாணம் போன்றவற்றைக் குறைத்ததனால்தான் வேலைக்குப் போக முடிகிறது என்று சொல்கிறார்கள்
அதல்ல காரணம் .பெண்கள் வேலைக்கு போக முடிகிறது என்றால் (midnight network support ) அது மட்டுமல்ல ” இன்னும் மொத்த ஆண்களுமே மிருகமாய் மாறாமலிருப்பதும் கூடத்தான். இன்னும் மனிதம் கொஞ்சம் மிச்சமிருப்பதால்தான் பெண்கள் வேலைக்கோ , கடைகளுக்கோ செல்ல முடிகிறது (midnight network support ).. செல்ல முடிகிறது
தயவு செய்து பெரியவர்கள்அக்கறையோடு,அன்போடு, சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் . இப்பொழுதும் பெண்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வரை பத்திரமாக வரவேண்டுமே என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் இப்போதைய பெண்களும் ஒரு காலத்தில் திருமணமாகி தாயாகப் போகிறவர் தான் .வருங்காலத்தில் திருமணமாகி குழந்தைகள் பிறக்கலாம் .ஆண் குழந்தையும் பிறக்கலாம்,பெண்குழந்தையும் பிறக்கலாம் நீங்களும் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டி வரலாம்
நாம் எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம், நல்லதே நினையுங்கள் நல்லது நடக்கும். every action is having a equvalant re action . எப்படி காலடி எடுத்து வைக்கிறீர்களோ அதற்கேற்றார்ப் போலதான் பலனும் கிடைக்கும் .
பல தற்கொலைகளும் ,கள்ளக் காதலுக்காக கணவனைக் கொலைசெய்வதும் , மனைவியைக் கொலை செய்வதும் இப்போதெல்லாம் அதிகமாகிவருகிறது. மிகக் கேவலமாக இருக்கிறது திருமணமான பின்னரும் ஏற்படும் கள்ளக் காதலுக்காக தாம் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு போகும் ஆணையும் ,பெண்ணையும் நினைத்தால் நாம் மீண்டும் கற்காலத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அது மட்டுமல்ல காதலை காமம் என்று தவறாக புரிந்து கொண்டதனால் ஏறப்டும் கேவலமான வாழ்க்கைத் தரம், இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டும்.
காதலிப்பதே ஒரு தற்கொலைக்கு சமமானதுதான், அதற்குப் பிறகு மீண்டும் ஒரு தற்கொலையா…? வாழ்வதற்கு தைரியம் வேண்டுமா..? அல்லது சாவதற்கு தைரியம் வேண்டுமா..? யோசித்துப் பார்த்தால் சாவதற்கு அசட்டுத் தைரியம் போதும் . ஆனால் வாழ்வதற்கு புத்திசாலித்தனமான தைரியம் வேண்டும். வாழ்வதுதான் கடினம், சாவது சுலபம் .
“கண்ணில் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் சிறு கடுகாம்”
என்னும் யுகக் கவிஞன் பாரதியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன
“ துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
காதல் பொல்லாதே” என்று கொஞ்சம் மாற்றிப் பாடத் தோன்றுகிறது
வாழ்க்கையின் நிதர்சனத்தை எதிர்கொள்ளத் தைரியமில்லாதவர்கள் காதலிக்கத் தகுதி இல்லாதவர்கள் என்பது என் கருத்து,
“வாழ்ந்து பார்ப்போம் வா நைனா
வாழ்க்கை இது சுலபம் சுலபம்
வாழத்தெரிந்தால் வா நைனா தடைகளெல்லாம் விலகும் விலகும்”
என்று பழைய பாட்டை மாற்றிப் பாடலாம்
காதலிக்கும் முன்னர் கொஞ்சம் யோசித்து திடமாக திட்டமிட்டு காதலித்தால் காதலில் இவ்வளவு அவஸ்தைகள் இல்லை.பருவ ஈர்ப்பை காதல் என்று நம்பி காதலிக்க ஆரம்பித்தால் இதுதான் கதி
அதுவும் தவிர ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு தகுதி நிர்ணயம் இருப்பதைப் போல காதலிக்கவும் சில தகுதிகள் வேண்டும். என்று ஒரு நியதி நாமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகள் இருக்கிறதா என்று ஆராயந்து அதற்குப் பின் காதலிக்கத் தொடங்கவேண்டும்.
அப்படி தகுதியில்லாத காதல் என்றால்,மறு பரிசீலனை செய்து ஏற்படப் போகும் பின் விளைவுகள் அத்தனையையும் தாங்களே சமாளிக்க வேண்டும் யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது அப்படி அழைத்தாலும் யாரும் உதவிக்கு போகக் கூடாது. என்று ஒரு கட்டுப்படு விதிக்கவேண்டும்.அப்போது முன்கூட்டியே யோசிப்பார்கள்
இன்னும் சற்று மேலே போய் சிந்தித்தால் வயதுக்கு வராத இளம் தளிர்களைக் கற்பழிப்பதும் கொல்வதும் நாமெல்லாரும் மனிதர்களா அல்லது மிருகமா என்று ஆத்திரம் வருகிறது
இப்போது புதியதாக ஒரு அசிங்கமான கலாச்சாரம் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்கள், ஆண் விபசாரிகள் என்று தலைப்பிட்டு . ஒரு ஆண் விபசாரி சொல்லுகிறார் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பாதிப்பாராம், மாதத்துக்கு 10 நாட்கள் மட்டுமே மற்ற நாட்களில் சம்பாதித்த வருமானத்தை வைத்து சந்தோஷமாக இருப்பாராம், இதை பத்திரிகைகள் வெளியிடுகின்றன , கேவலமாக இல்லையா நாட்டின் நிலைமை.
இதைப் போன்ற இழி செயல்களைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் அது அரசுக்கே கேவலமில்லையா……..? உண்மைக் காதல் வாழ்க
தற்கால இளைஞர்கள் தங்களுடைய உண்மையான மனோசக்தியை நாட்டுக்காகவோ, தங்களின் உண்மையான நல்ல நோக்கத்துக்காகவோ பயன் படுத்துவதை விட்டு எப்பொழுது பார்த்தாலும் காதல்,காதல்,காதல் என்று அலைவதைப் பார்க்கும் போது என் மனம் குமுறுகிறது ,அதனால்தான் பெரியவர்களாகிய நாம் , சிறியவர்கள் நம்மை திட்டினாலும் பரவாயில்லை
என்று கூடியமட்டும் நல்லதைச் சொல்லுவோம் , வருங்காலம் வளமாக வேண்டுமானால் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று ,நம் நாட்டை உயர்த்த கீழ்த்தரமான உணர்வுகளை களைந்து விட்டு உன்னதமான லட்ஷியத்துடன் வாழ ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் எழுதுகிறேன் . நம் நாடு முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்தது
இப்போது நம்மவர்களிடமே அடிமைப் பட்டிருக்கிறது இதை உணர்ந்து நாம் மீண்டும் ஒரு சுதந்திரத்தை அடைந்து வருங்கால வாரிசுகளுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான வளமான நாட்டைஉருவாக்க இளைஞர்கள் முன் வரவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் .
காதலுக்கு நேரம் ஒதுக்குங்கள்,இது வாலிப வயது .உலகத்தில் உள்ள மொத்த தவறையும் நாமே செய்து ,அதன் மூலமாகவரும் விளைவுகளை பட்டுத் தெரிந்து கொள்ள நம்மால் மட்டும் முடியாது,ஏனென்றால் அதற்கு நமக்கு நாம் வாழும் காலம் போதாது .அதனால் மற்றவர்கள் அனுபவத்தையும் கண்டு கேட்டு அதில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு காதலியுங்கள் .அப்போது இனிமையான காதல் வாழ்க்கை அமையும் .
உண்மையாக சொல்லுகிறேன் ஆண்களும் பெண்களும் எப்போதுமே தவறு செய்யும் நோக்கத்தோடு இருப்பதில்லை , அவர்களின் பாலின உணர்வுகள் தூண்டப்படும்போதுதான் அவர்கள் தன் வயமிழக்கிறார்கள் .ஆனால் தூண்டப் படுதலின் காரணமாகவே அப் “பாவிகள் ” ஆகின்றனர் .ஆகவே பெண்களும் ஆண்களும் “தூண்டாமலும் ,ஒழுக்கம் தாண்டாமலும் இருந்தால் ஆணும் பெண்ணும் சமமான ஒரு நல்ல சமூதாயம் மலரும்
“ஆண்களிலும் ,பெண்களிலும் இதற்கு முன்னுதாரணமும் , விதி விலக்குகளும் உண்டு ” நான் ஒட்டு மொத்த ஆண்களையும் ,ஒட்டு மொத்த பெண்களையும் குறை சொல்லவில்லை . ஆனால் சிலர் செய்யும் தவறுகளுகளால் நாம் அனைவருமே பாதிக்கப் படுகிறோம் .தார்மீகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம் .
ஆகவே காதல் இன்னும் இருக்கிறதா என்று இக்கால இளைஞர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
அது மட்டுமல்ல உண்மையாய்க் காதலிப்பவர் திருமணத்துக்கு முன்னர் யாரைக் காதலித்தார்களோ அவரையே திருமணத்துக்குப் பின்னும் உண்மையாகக் காதலிப்பார்கள். ஆகவே உண்மையாய்க் காதலியுங்கள்.காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்போது ப்ரச்சனைகள் வராது.
அல்லது நாம் காதலிப்பவர் வேறு ஒருவரைக் காதலிக்கிறார் அவருடன் வாழ்ந்தால் இன்பமாக இருப்பார் என்று தெரிந்தால் அவரை அவர் இஷ்டத்துக்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளை அளித்து அவருடைய அடிப்படை உரிமைகளை மறுக்காமல் வாழக் கற்றுக் கொள்வோம்
இப்படி ஒரு நடைமுறைக்கு நாமெல்லோரும் மாறி விட்டு அதன் பின்னர் காதலர் தினம் கொண்டாடுவோம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
படத்திற்கு நன்றி :
http://www.sonofthesouth.net/leefoundation/civil-war/1864/february/valentines-day.htm
மதிப்பிற்குறிய தமிழ்தேனீ அவர்கள் எழுதிய இந்தக் ‘காதலர்தினம்’ பற்றிய உண்மைகளை முன்வைத்து, உலக அளவில் கலாச்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற நம் நாட்டுக்கு இது தேவைதானா?…என்ற வினாவை எழுப்பினால், அனேகமாக ‘தேவையில்லை’ என்ற குரலெ எல்லாப் பக்கங்களிலிருந்தும் வெளிவரும். காதலர் தினம் வக்கிரத்திற்கும், வன்முறைக்கும், வாணிபத்திற்கும் வழிவகுக்கிறது என்று ஒருபுறம் பச்சைத் தமிழர்களும், பகுத்தறிவாளர்களும், அரசியல் தலைவர்களும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாலும், இன்றய இளைய தலைமுறையினர் இதையெல்லாம் காதில் வாங்குவதாகத் தெரியவில்லை என்பதை மெரினாவில் கூடும் கூட்டத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம். இதன் விபரீத விளைவை அறியாத பெற்றோர்கள் கூட இன்றும் இருக்கிறார்கள். காதலை விருத்தி செய்ய, பத்திரிகைகள், இணையதளம், முகநூல், அலைபேசி இவைகள் அதிகம் துணைபோகின்றன. சமீப காலமாக மிகப் பெரிய அளவில் இந்தியாவில் ‘காதலர்தினம்’ கொண்டாடப் படும் சூழ்நிலையில், சிறார் முதலே காதலின் பெயரில் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், காதல் செய்தியைக் கேட்டு பெற்றோர்கள் தற்கொலை, காதல் என்ற பெயரில் பாலியல் கொடுமை, காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை, இது போன்ற செய்திகள் இதற்கு அடுத்த நாள் ஊடகங்களில் வரும்போதுதான் ‘இது தேவையா?..’ என்ற கேள்விக்கு விடை காணமுடியவில்லை. கட்டுரை ஆசிரியர் கடைசி வரியில் சொன்னதுபோல், ஒழுக்கத்திலும், பண்பிலும், கலாச்சாரத்திலும் என்றைக்கு இளைய தலைமுறையினர் மேம்பட்டு விளங்குகிறார்களோ, அப்போது உண்மைக் காதலுக்கு மட்டும், பெற்றோர்களின் அனுமதியோடு ‘உத்தரவு’ கொடுப்போம்.
இரண்டு கால்களையும் இழந்தவர். பைபர் இழையால் செயற்கைக் கால் பொருத்தப்பட்டு, இதுவரை உலகில் யாருமே சாதிக்க முடியாத ஒரு சாதனையைச் செய்தவர். உடல்குறையைப் பொருட்படுத்தாமல், தனது சாதனையால் உலகைத் தன்பக்கம் திருப்பியவர். ஒலிம்பிக் போட்டியில் 8 முறை பதக்கம், அதில் 6 தங்கம், தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல், உலகிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்திய செய்தியில் இடம்பெற்றவர், ப்ளேட்ரன்னர் என்ற அடைமொழியால் மக்கள் மனதில் இடம்பெற்ற ஆஸ்கார் பிஸ்டோரியஸ் என்ற ஒலிம்பிக் சாம்பியன்.
ஆமாம், இப்போது இவரைப் பற்றி இங்கே ஏன் பதிவிடவேண்டும்!…காதலர் தினத்துக்கு அடுத்த நாள் என்ன நடக்கும்?…என்று யோசித்ததாலோ.. என்னவோ…14-02-13 அன்று உலக காதலர் தினம், அன்று, ஆஸ்கார் தனது உயிர்க் காதலியைச் சுட்டுக் கொன்று உலகச் செய்திகளில் இடம்பெற்றது வருத்தத்துக்குறியது. இதைப் பற்றிய விரிவான செய்திகள் அடுத்த நாள் 15-02-13 அனைத்துப் பத்திரிகைகளையும் நிரப்பியது.