தேனம்மை லக்ஷ்மணன்

பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிதாயினி, சிறப்புப் பேச்சாளர், பாடலாசிரியர், ஸ்க்ரிப்ட் எழுத்தாளர் என்ற பன்முகங்களைக் கொண்ட இவரது படைப்புகள் வராத இணையப்பத்திரிகைகளோ, வெகு ஜனப்பத்திரிகைகளோ இல்லை எனலாம். தொலைக்காட்சி மற்றும் எஃப்.எம் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார். http://honeylaksh.blogspot.com என்ற வலைப்பூவிலும் http://thenusdiary.blogspot.com என்ற இன்னொரு வலைப்பூவிலும் கவிதைகளையும், http://thenoos.blogspot.com என்ற வலைப்பூவில் தன்னுடைய சமையல் திறனையும் படைத்து வருகிறார் இந்தப் பன்முக நாயகி. இவரது சமீபத்திய வெளியீட்டுப் புத்தகங்கள்: சாதனை அரசிகள், ங்கா.