தேனம்மை லக்ஷ்மணன்

விளிம்பு மடிக்கப்படாதவை
பாதுகாப்பானவை அல்ல.
தம்ளர்களில் தட்டுக்களில்
கீறக்கூடிய அபாயமுடையவை

மலைப்பிரதேசங்களில்
பாதுகாப்பு விளிம்புகளைப் போல
திருமண விளிம்புக்குள் நிற்பது
உடலை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.

பொருளாதார விளிம்புகளில்
ஒதுக்கப்பட்டவர்கள் ஏழைகளாகவும்
சமூக விளிம்புகளில் ஒதுக்கப்பட்டவர்கள்
பாலியல் தொழிலாளியாகவும்

பால் மதிப்பீடு விளிம்புகளில்
தள்ளப்பட்டவர்கள் பால் சுயம்புகளாகவும்
ஒடுக்குமுறை விளிம்புகளில் ஒதுக்கப்பட்டவர்கள்
சமூக விரோதிகளாகவும்

விளிம்புநிலை மனிதர்களை
விளிம்பு அற்ற வெளியில்
வீசிக் கொண்டிருக்கிறது சமூகம்.

தம்ளர் விளிம்புகளில் ஏடுகளையும்
தட்டு விளிம்புகளில் கருவேப்பிலையும்
இன்னபிறவும்..

விளிம்பு மடக்கப்பட்டவை
பலசமயம் பாதுகாப்பானவை
சில சமயம் மழுங்கடிப்பட்டவை.

 

படத்திற்கு நன்றி:http://www.funbull.com/Funny-Pictures/Edge-Of-The-World-1373.asp 

4 thoughts on “விளிம்பற்றவை

 1. //விளிம்பு மடக்கப்பட்டவை
  பலசமயம் பாதுகாப்பானவை
  சில சமயம் மழுங்கடிப்பட்டவை.//

  உண்மை! நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

 2. பாராட்டுக்கள் எனது மனவிளிம்பிற்குள் நிற்க மறுக்கின்றன!
  சீராட்டும் பல தளங்கள் உங்களை, உங்கள் கவிதைகளை!
  தொடரட்டும் உங்கள் பணி; கிடைக்கட்டும் எங்களுக்குத் தேனான கவிதைகள்.
  நன்றி வல்லமைக்கும் உரித்தாகுக! – எசேக்கியல் காளியப்பன் @ காளியப்பன்.E

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க