காதல் வீடு!
பாகம்பிரியாள்
தொலைவில் அலுவலகம், எல்லா நாளும்,
ஓடுதலும், துரத்துதலுமாய் முடியும்.
சுவரெங்கும், நாம் போட்ட யுத்தக் கணக்கும்,
பெற்ற முத்தக் கணக்கும் சிதறிக் கிடக்கும்.
அடுக்களைக்குள் உதவி செய்கிறேன் என்கிற சாக்கில்
நம் காதலை நான் புதுப்பித்துக் கொள்கிறேன்.
அலுவலகக் கணினியைச் சீர் செய்வதாகச் சொல்லி,
அகன்ற விழிகளால், எனை நீ சிறை பிடிப்பாய்.
ஓராயிரம் நாட்களுக்கு நம்மை அலுவலகத்திற்கு
அனுப்பிய பெருமை கடிகார முட்களுக்குத்தான்!
செல்லச் சண்டை எட்டிப்பார்க்கும் நாளெல்லாம்,
சிவப்பு ரோஜாவும் வந்து சேரும், சமாதானத்திற்காக.
அருமை மனைவியாய் நீ அணிந்து செல்லும்
ஆடைகளுக்கு அழகு சேர்ப்பது நம் அன்பு!
கம்பீரக் கணவனாய் நான் நடந்து செல்கிறேன்
நம் காதலைக் கையில் பிடித்துக் கொண்டு!
* * * * *
அன்(பின்) குறிப்பு!
அருகில் அலுவலகம், அரைச் சம்பளம் என்றாலும்,
வேலைக்குச் செல்பவர் விரும்பி ஒத்துக் கொள்ளலாம்!
ஏனெனில் எங்களுக்குக் கிடைத்ததைப் போல்,
ஓர் காதல் வீடு உங்களுக்கும் கிடைக்கலாம்!
படத்திற்கு நன்றி:http://sacredlove.com/membership/couples
காதலைக் கையில்பிடித்துக்கொண்டு
கவிதை நடைபயில்வது நன்று…!
-செண்பக ஜெகதீசன்…