விசாகை மனோகரன்

 

கடந்து போன பாதையின்,
வழி நடந்த வாழ்க்கையின்
விபரீத விளையாட்டுகளை
நினைத்துப் பார்க்கிறேன்.

இளமைப் பிராயத்தின் இளரத்த வேகத்தில்
செய்யக் கூடாது என் தெரிந்தும் செய்த தவறுகள்
நிகழக்கூடாது என தெரிந்தும் நிகழ்ந்த நிகழ்வுகள்
மாட்டோம் என நினைத்தும் புகைத்த பெட்டிகள்
தொடவே கூடாது  என் நினைத்தும் திறந்த புட்டிகள்

நண்பர்களை சந்தேகித்து, பகைவர்களை சம்பாதித்த
விபரீதங்கள்
கேளிக்கையை பிரதானமாக்கி செலவான நிமிடங்கள்
நாணயங்கள்

கேளிக்கையான வாழ்க்கையின் நடுவில் திடீர் மாற்றம்
அனைத்தும் மாறிவிட்டன எனக்கென வந்த ஒருத்தியால்
அன்று தாய் சொன்னதை கேட்க மனதில்லை
இன்று இவள் சொல்வதை மறுக்க முடியவில்லை
தாயால் முடியாதது தாரத்தால் முடியும்
என இதைத் தான் சொன்னார்களோ?

புகையை விட்டேன், மதுவையும் விட்டேன்
நண்பர்கள் வந்தனர், நல்ல நட்பும் வந்தது,
காரணம், அன்றே சொன்னானே  அந்த தெய்வக் கவிஞன்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று
நினைவலைகள் நீங்க மனதிற்குள் ஒரு பாட்டு கேட்டது
நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்!!!

 

படத்திற்க்கு நன்றி: கூகுள்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நினைவுகள்

 1. செய்யக் கூடாது  ” என் ” தெரிந்தும் செய்த தவறுகள்

  தொடவே கூடாது  “என்” நினைத்தும் திறந்த புட்டிகள்

  என் , என  என்று தவறுகள் ?

  ஒரு production specialist , ice cream production ஆரம்பித்து விட்டார்

  மாமியார் மருமகள் தகராறுகளுக்கு காரணவாதியாகிறார்

  எனினும், நல்ல கருத்துக்கள், தெளிவான நடை

  வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *