நான் அறிந்த சிலம்பு – 59
மலர் சபா
புகார்க் காண்டம் -07. கானல் வரி
குறியிடத்துத் தலைமகளைக் கண்ட பாங்கன் கூற்று அல்லது தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், அவளை விடுத்தல் அருமையால்,
ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்
(20)
கையால் பற்றிக் கொண்டு
வெண்மையான முத்துகளைக் குற்றுகிறாளே,
இவளுடைய செவ்வரி படர்ந்த
கண்கள்தாமும் குவளை மலர்களோ?அல்ல! அல்ல! குவளை மலர்கள் அல்ல!
இவை மிகவும் கொடியவை!
(21)
புன்னை மரத்தின் நிழலில்
புலால் நாறும் அலைமீதினில்
அன்னப்பறவையது போன்று
அசைந்து நடக்கிறாளே,
இவளின் சிவந்த கண்கள், கண்களா?
அல்ல! அல்ல! கண்கள் அல்ல!
மிகவும் கொடிய கூற்றமாகும்!
(22)
தேனைத் தன் வாயிடத்துக் கொண்ட
நீல மலரினைக் கையில் ஏந்தி
மீன் வற்றலைத் தின்ன வரும்
பறவைகளை ஓட்டுகிறாளே!
இவளின் சிவந்த கண்கள்தாமும்
வெள்ளிய வேல்களோ?
அல்ல! அல்ல! வேல்கள் அல்ல!
அதனினும் கொடிது கொடிது!
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
படத்துக்கு நன்றி:

சிலம்போசையை மிக இனிமையாகத் தருகிறீர்கள். மிக அருமை. மிக்க நன்றி.
சிலப்பதிகாரம் அனைவருக்கும் புரியும் நடையில் எளிமைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. நன்றி.
இருவருக்கும் நன்றி…ஊக்கமளிக்கிறது உங்கள் வார்த்தைகள்