விசாலம்

நிலா என்பது  கவிதையில் எல்லோரலும் உபயோகப்படுத்தப்  படுகிறது சின்ன பாப்பாவுக்கு அதன் அம்மா “நிலா நிலா வா வா ,நில்லாமல் ஓடிவா மலை மேலெ ஏறி வா மல்லிகைப் பூ கொண்டுவா  என்று  பாடி சாதம் ஊட்டுகிறாள் காதலர்கள் நிலவை ரசித்து தன்னை மறக்கின்றனர் உலகம் துறந்தவர் அல்லது சன்யாசிகளும் நிலாவின் குளுமையில் வெற்று வெளிச்சத்தில் அமர்ந்து தியானம்  செய்கின்றனர் ,முழுநிலாவின் போது அதாவது   பௌர்ணமி அன்றுதான்  ஸ்ரீ சத்யநாராயண பூஜையும் மாலை நேரம் நடக்கிறது ,

மஹாகவி பாரதியார் வெண்ணிலவைக் குறித்து கவிதை இயற்றி இருக்கிறார்
“எல்லைக் யில்லாததோர்  வானக் கடலிடை
வெண்ணிலாவே! –விழிக்
கின்ப மளிப்பதோர்  தீவென் றிலகுவை
வெண்ணிலாவே
நல்ல ஒளியின்  வகைபல  கண்டிலன்
வெண்ணிலாவே—இந்த
நனவை மறந்திட செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே !
தீது  புரிந்திட  வந்திடும்  தீயர்க்கும்
வெண்ணிலாவே –நலஞ்
செய்தொளி  நல்குவர்  மேலவ  ராமன்றோ
வெண்ணிலாவே ,,,,
சினிமாவிலும் நிலாவை  வைத்து பல பாடல்கள் உள்ளன , பழையக் கால பாடல் ”  அமுதைப் பொழியும் நிலவே  நீ அருகில்  வராததேனோ?” மிகவும்  ரசிக்கப்பட்டது இதேபோல் நிலவே என்னிடம் நெருங்காதே ” என்ற பாடலும் ஹிட் ஆனது இந்தக்கால படங்களிலும் பல பாடல்கள் நிலாவைக்குறித்து பாடபடுகின்றன குறித்து பாடப் படுகின்றன.
சரி நிலா எங்கேயாவது கீழே விழுமா? விழுந்ததே ,,,,,  ஒரு பெரிய மரத்தின் கீழ்  குரங்குகள் அடித்த லூட்டியைக்  ஒரு கவிதை மூலம் பார்க்கலாம்
என்  நிலா உடைந்து போனதே,,,,,
பௌர்ணமி நிலவில்
ஒரு நாள்
ஆலமரத்தின் கீழ்
ஒரு  வானரப் பட்டாளம்
தாவித் தாவிக் களித்தன
வம்புச் சண்டை போட்டன
வாலைப் பிடித்து இழுத்தன
முதுகில் சவாரி செய்தன ,
பழங்களைப் பிடுங்கின
கிளைகளை உலுக்கின .
ஒரு  குட்டிக்குரங்கு
கிணற்றில் தாவ
கண்டது முழுநிலவைத்தான்
“ஐயோ காபாற்றுங்கள்
நிலா விழுந்து விட்டது நீரில்”
அலறிபுடைத்துக்கொண்டு
வந்தது ஒரு பட்டாளம்
நீரிலிருந்து எடுத்தது நிலாவை
நிலவும் கலைந்து போனது
குட்டிக்குரங்கின் அழுகை
வானத்தை எட்டியது .
“ஐயோ என் நிலா
இப்படி உடைந்து போனதே “!
வ்ந்தது அங்கு வயதான வானரம்
“அட முட்டாள்1
வானத்தைப் பார்
நிலா உடையவில்லை
நிலா மாறவில்லை
நிலா அழியவில்லை
அதோ பார் வெண்நிலா
பவனி வரும் அதன்
அழகைப் பார் !..

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நிலா ! . . .

  1. பழுத்த வார்த்தைகள் இல்லாமல் பழக்க வழக்க வார்த்தையிலேயே இனிமையான நிலவின் கவிதை.

    பார்க்க பார்க்க புளிக்காத விஷயங்களில் நிலவும் ஒன்று. நிலவை எழுதாத கவிஞன் யாரும் இருக்க மாட்டார். நிலா அனைவருக்கும் விருந்து வைக்கும் அழகி.

    நிலவைப்பற்றி ஒரு சின்ன ஹைக்கூ

    நிலவே
    அழகிப்போட்டிகளை
    ஏன்
    அரங்கத்திற்குள் நடத்துகிறார்கள் தெரியுமா?

    வெளிப்புறத்தில்
    நடத்தினால்
    முதல் பரிசை நீ வென்றுவிடுவாய் என்பதால்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *