-பாஸ்கர் சேஷாத்ரி

என்றோ கேட்ட நாதம் இன்னும் செவிப்பறையில்
என்றோ பெய்த மழை நினைவின் ஓட்டையில்
என்றோ ஓடிய பள்ளி கிழிந்த சட்டை தொங்கி நிற்கும் .
என்றோ உடைந்த பல் துருத்தி துருத்தி தலை நீட்டும்
என்றோ உணர்ந்த ஸ்பரிசம் முதுமையை கோபிக்கும்
என்றோ கிழிந்த தாடை வலி வருஷம் தவி நிற்கும்
என்றோவில் வாழ்ந்து என்றோவில் நனைந்து
என்றோவில் செல்லும் காலம் .

மூச்சுப்பைக்கு ஒன்றும் தெரியாது – கடைசி வரை .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *