முனைவர். புஷ்ப ரெஜினா

நான் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றேன். தங்கள் இதழில் துணை ஆசிரியர்களுள் ஒருவரான காயத்ரி பூபதி அவர்களும் நானும் முதுகலையில் ஒன்றாகப் பயின்றவர்கள் என்பது எனக்கு பெருமையளிப்பதாக உள்ளது. மாநில மற்றும் தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். சுமார் 11 ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றி வருகிறேன்.. மேன்மேலும் கற்க வேண்டும் என்ற பேரவா நிறைந்துள்ளது.