மற்றுமோர் அவதாரம்
சாந்தி மாரியப்பன்
ஓரம் கிழிந்த புத்தகங்கள்
மேலும் கிழிக்கப்பட்டன
பொட்டலம் கட்டப்படவென..
இதயத்தின் அருகிலோ அல்லது
ஏதோ ஓர் மூலையிலோ,
மாறுபடவும் கூடும்,
அதன் முக்கியத்துவமும் இருப்பிடமும்
உள்ளடக்கத்தினைப் பொறுத்து..
கடலையோ வைரமோ
அல்லது
சுமக்க நேரிட்ட எண்ணக் குவியல்களோ;
ஏதோவொன்றின்
உபயோகம் தீர்ந்த பின்
கசக்கி வீசப்பட்டாலும்
உபயோகப் படவெனக் காத்திருக்கின்றன,
கோணியும் பசியும்
சுமந்தலையும்
இருகால் மற்றும் நாற்கால் உயிர்களுக்காய்,
குப்பையென அவதாரமெடுத்து..
கசக்கி வீசப்பட்டாலும்,
காத்திருக்கும் பயன்பாட்டைக்
கச்சிதமாய்ச் சொன்ன
நாஞ்சில்(ஊர்?) சாந்திக்கு
நல்வாழ்த்துக்கள்…!
-செண்பக ஜெகதீசன்…
(vsnjag@yahoo.com)
கருத்துக்கு நன்றி செண்பக ஜெகதீசன் ..