மிஸ்டர் கிளீன்மேன் – ஆணழகன் போட்டி 2023
‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பது திருமூலர் வாக்கு. அவர் வழியில் உடம்பைச் சிக்கென வளர்த்திருக்கும் இளைய தலைமுறை இதோ. 55 கிலோ எடைப்பிரிவுக்கான ஆணழகன் போட்டி.
40 வயதைக் கடந்தவர்களும் ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்ட முடியும்.
சாதனைக்கு வயது ஒரு தடையில்லை. 50 வயதைக் கடந்தவர்களும் ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்ட முடியும். கோப்பைகள் வெல்ல முடியும் என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள்.
சாதிக்க, உடல்நிலை ஒரு தடையில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்டும் அடலேறுகளைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)