இலக்கியம்கவிதைகள்

மனித (எம்) மதம்

சுகியன்

பிறந்த மேனியாக வந்து

ஆடை அலங்காரம் செய்து

வாழ்க்கை என்ற படுக்கையை விரித்து

கர்வம் என்ற போர்வையைப் போர்த்தி

மதம் என்ற குறட்டையை உறுமுகிறாயே!

பூமி என்ற சவப்பெட்டியில்

உன் திறந்த மேனி கூட

சாம்பலாக மிஞ்சப் போவதில்லை!

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    கவிதை வரிகள் சிறப்பாக இருந்தது தோழா

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க