பழையன புகுதலும்

புமா

 

மண் விளக்குகள் மகுடமேறுகின்றன
எண்ணெய்களின் கொண்டாட்டத்திற்கு
எல்லைகளே இல்லை.
பனை ஓலைகள் விசிறிகளில்
சிரிக்கின்றன.
மெழுகுவர்த்திகள் உருகி நிற்கின்றன
ஆனந்தக் கண்ணீரில்.

மத்தியதரக் குடும்பத்தலைவனிடம்
கட்டணச் செலவு
குறைந்து போன மகிழ்ச்சி.
படிப்புத் தொல்லையிலிருந்து
விடுபட்ட களிப்பில்
குழந்தைகள் கூட்டம்.

துன்பத்தில் புதைந்திருக்கும்
இன்பத்தைக் கொண்டாடினாலும்
கற்கால மனிதர்களாகாமல்
காப்பாற்றப்பட வேண்டுமென்று
தவிக்கத்தான்
செய்கிறது மனசு

 

படத்திற்கு நன்றி:http://www.campfirecapers.com/caper_4.html

1 thought on “பழையன புகுதலும்

 1. துன்பத்திலும் புதைந்திருக்கும்
  இன்பத்தைத்
  தோண்டி எடுக்கும்
  துணிவும், தவிப்பும்..
  நன்று…!
         -செண்பக ஜெகதீசன்… 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க