கந்திற் பாவை!
பவள சங்கரி
உரித்து வைத்த சட்டையும்
பளபளப்பாய்த்தான்
இருக்கிறது.
சட்டை இல்லாத
நிர்வாணமும்
பாரமற்ற சுகம்தானே.
எளிமையாய் இருப்பதால்
வலிமை இல்லாத
சடமாய் ஆகிவிடவில்லை.
இறக்கி வைத்த பாரம்
எளிதாக்கிவிட்டது
உள்ளதையும், உள்ளத்தையும்.
தோற்றத்தில் பகட்டு இருந்தாலும்
பகட்டு இல்லாத தோற்றமும்
அழகாய்த்தானே இருக்கிறது?
சிறகே ஒரு சுமையானபோது
போதிதந்த ஞானமாய்
புத்தி வந்தது.
புத்தி வந்த நேரம்
ஆணவமலம்
அறவே ஒழிந்தது!
படத்திற்கு நன்றி : http://www.gardenornaments.com/ItalPark/Statues/469.jpg
எளிமையின் அழகுதான்
எப்போதும்
நிலைக்கும்,
நினைக்கவைக்கும் ஆழமாய்..
போதும் என்பதுதானே
‘போதி’த்துவம்…!
நன்று…!
-செண்பக ஜெகதீசன்…
//எளிமையாய் இருப்பதால்
வலிமை இல்லாத
சடமாய் ஆகிவிடவில்லை.//
சரியே. எளிமை வேறு, வலிமை வேறுதான்.
கவிதை தலைப்பு மிக அழகு.