பாகம்பிரியாள்

காலை எழுந்ததிலிருந்து
இரவு வரை பம்பரமாய்,ஓடியாடி
அம்மா சுற்றுவதை அறியாத மகள்,
அவள் ஓய்ந்து ஓய்வு எடுப்பதைக்கண்டு,
அலுப்பாய்ச் சொல்கிறாள், எவரிடமோ,
“அம்மா, வீட்ல சும்மாத்தாங்க இருக்காங்க!
* * * *
தாய் செய்யும் வேலை அனைத்தையும் ,
பகுதியாய் பிரித்துக் கொண்டு , வாரம் முழுக்கச்
செய்கிறாள் மகள், மீத வேலை, மூட்டையாய்,
தாயின் முதுகுக்கே வந்தாலும், அம்மா
அதனை சுமந்து கொண்டே , அக்கம்
பக்கத்தாரிடம் பெருமையாய் சொல்கிறாள்,,
“என் மகள் , வேலைக்குப் போறாங்க!
* * *
இருவருக்கும் நடுவில்,
அகம் அடங்க வேலை செய்தால்,
விரல் மடக்க நேரமிராது என்ற
பழமொழி, திசை தெரியாது
திருதிருவென விழித்துக் கொண்டு இருக்கிறது!

படத்திற்கு நன்றி : http://www.loughderg.org/pilgrimage-and-retreats/mother-and-daughter-retreat-

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தாயும், மகளும்!

 1. உண்மை. தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதோடு கூடவே, வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் கணக்கிடுவது கடினம்.

 2. இளமை
  இப்படித்தான் சொல்லும்..
  எதையும்
  தாங்கிக்கொள்வதுதானே 
  தாய்மை..
  இடையில் என்ன பழமொழி…!
  நன்று…!
         -செண்பக ஜெகதீசன்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *