சாரதா சுப்பிரமணியன்

ஆம் இவரை இப்படிப் பள்ளிக்கூடத் தமிழ்ப்பாடலில் பாடி வணங்கியது நினைவில் வருகிறது இல்லையா? மேலும் பிரதோஷ காலத்திலும் ஆலய வழிபாட்டிலும் கண்மூடிப் பிரார்த்தனை செய்கிறோம். அந்தப் பொன்னார் மேனியனை நேரில் கண்டகாட்சியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எங்கே?! எங்கே?! என வாசகர்கள் கேட்பது காதில் விழுகிறது, அவ்வளவு சுலபமில்லை என்றாலும் மனதில் தெம்பும் புத்தியில் தூய்மையான பக்தியும் கொஞ்சம் தனமும் இருந்தால் +அதிர்ஷ்டமும்,இருந்தால் கண்டிப்பாக நமக்குக் கிட்டும்.

“அம்மா இடத்தைக் கூறாமல் சுத்தி வளைக்காதீர்கள்” என நினைப்பது தெரிகிறது, வேறெங்கும் இல்லை. நம் இந்தியச் சீன எல்லையைக் கடந்து போய்க் காணும் கையாலாய யாத்திரைதான். டூரிஸ்ட்,பாஸ்போர்ட் எல்லாம் பார்த்துச் செய்து கொள்ள வேண்டியது, பௌர்ணமி அன்று கிரிவலம் விசேஷம், அடியாளுக்குப் புத்த பௌர்ணமியன்று கிட்டியது பூர்வஜென்மப் புண்ணியம். கொஞ்சம் சிரமமான பயணம் தான், குளிர் உடலை ஊடுருவும், சிலருக்கு மூச்சு விடக் கஷ்டமாக இருக்கும். காரணம், கயிலை மலை கடல் மட்டத்தில் இருந்து15000அடிகள் உயரம். எப்பொழுதும் பனி மூடியபடிதான். ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் ஆதவனின் கிரணங்கள் கையிலைநாதனின் மேல் விழும், அப்போது பொன் போல் மின்னும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, அதுவும், கண் சிமிட்டும் நேரமே கிடைக்கும். மேகமும் பனியும் சூழ்ந்து விட்டால், மறுநாள் காலைதான். எங்களுக்கு 3 நிமிடங்கள் கிடைத்தது பெரிய பாக்யம்தான். என்ன அதிசயம் என்றால் சுற்றி இருக்கும் மற்ற மலைகளின் மீதும் சூரிய ஒளி விழும். ஆனால் பொன் நிறமாக இருக்காது.

தக தக என, அந்த ஒளி தோன்றும்போது, காற்றானது மிதமாக வீசும், ஓ…..ம் என்ற ஒலி நம் காதில் ரீங்காரமிடும், கையிலைநாதனை உமையவள் ஆவுடையாக மானசரோவர் நதியாகச் சுழன்று போகிறாள், இதன் பரப்பளவு 412 செ.மீ ஆகும். ஆழம் 300 அடிகள் ஆகும். மானஸரோவரின் கரையில் பறவைகள், உமா, உமா எனவும் சிவாசிவா எனவும் க்ரீச்சிடுகின்றன. கரையில் ஒரு மரமும் கிடையாது. இந்தப் பறவைகள் எங்கு வசிக்கின்றன? என்று தெரியவில்லை, கண்டிப்பாக வாழ்வில் ஒரு தரமாவது கையிலை யாத்திரை செய்ய வேண்டும்.

நான் இத்துடன் பொன்னார்மேனியனை ஆதவனின் கிரணங்கள் பூசிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். கண்டு மகிழுங்கள், கையிலை நாதன் சன்னதிக்குக் கதவுகளில்லை. எப்போதும் அவரைக் காணலாம். வானமே கூரை, பனிப்பொழிவே பால் அபிஷேகம், பனிச்சாரலே அர்ச்சனை, காற்றே சாமரம், ஆதவனின் கிரணங்களே கற்பூரதீபம்.

ஓம் நமசிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பொன்னார் மேனியன்

  1. Dear Sharadha,

    Thank you very much for sharing this wonderful PONNARMENIYAN article.  We expect more articles like this.

    Ramanaduli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *