காற்று நமது இணைப்புப் பாலம்

0

காற்றின் மூன்று போக்குமே
எனக்கும் பிடிக்கும்
உன்னைப் போலவே
காற்று இலையை அசைப்பது
இலையோடு கிளையை
இலையும் கிளையுமான மரத்தை.
என்னிடம் காற்று பாடும் ஸ்தாயிகளை
நீ கவனித்திருப்பது போலவே
நானும் கவனித்திருக்கிறேன்
நீ ஈரக் கூந்தலை அடித்து ஆற்றும்போது
வீதியில் கை வீசி நடக்கும்போது புடவை அசைகையில்
உன் உணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகளில்
மார்பு விம்மித் தாழும் சுவாசத்தில்
எல்லா   ஸ்தாயிகளையும்
 நான் ரசித்திருக்கிறேன்
காற்று நம் இணைப்புப் பாலம்

படத்திற்கு நன்றி
http://aoao2.deviantart.com/art/A-gust-of-wind-199334285                
              

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *