மோகன்குமார் 

கேள்வி: குமார்,  கோவை 

ஒரு தனியார் வங்கியில் 2008ல் நான் கடன் வாங்கினேன். அடுத்த எட்டு மாதங்களுக்கு மாதாமாதம் செலுத்த வேண்டிய பணத்தை சரியாகக் கட்டி வந்தேன். அதன் பின் எனக்கு வேலை போனதால் தொடர்ந்து பணம் கட்ட முடியவில்லை. விலாசம் மாறிய என்னை அந்த வங்கி தொடர்பு கொள்ளவே இல்லை. இப்போது மூன்று ஆண்டுகள் கழித்து அந்த வங்கி என்னை அணுகி பணம் கட்ட சொல்கிறது.

வட்டி முதல் சேர்ந்து ஒரு லட்சம் வருகிற இடத்தில் பாதி பணம் கட்டினால் போதும் என்கிறது வங்கி. மூன்று ஆண்டுகள் தாண்டினால் பணம் கட்ட வேண்டாம் என நண்பர்கள் சொல்கின்றனர். நான் கடைசியாய் பணம் கட்டியது மார்ச் 2009. இப்போது நான் பணம் கட்டாவிடில் அவர்களால் என் மீது வழக்கு தொடர முடியுமா? பணம் கட்டாமல் இருப்பதால் வேறு என்ன பிரச்சனைகள் உள்ளன?

 
பதில்: 

பொதுவாய் கடன் திரும்ப பெற மூன்று ஆண்டுகள் அவகாசம என்றாலும், அவைபுரோ நோட்டு போன்றவற்றுக்குதான் செல்லும். இந்த விஷயத்தில் வங்கிகள் இக்கடனை வேறுவிதமாய் டாகுமென்ட் செய்திருக்கும். அநேகமாய் அதை “Unsecured loan” என்கிற வகையில் ஏழு ஆண்டு வரை பணம் திரும்ப கேட்கும் விதத்தில்தான் டாகுமென்ட் தயார் செய்து உங்களிடம் எல்லா பேப்பர்களிலும் கையெழுத்து வாங்கியிருப்பார்கள். மேலும் நீதிமன்றங்களும் இத்தகைய வழக்குகளில் வங்கிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகின்றன. “கடன் வாங்கினீர்கள் அல்லவா? திருப்பி கொடுங்கள்” என்பதே வங்கிகளின் நிலைப்பாடாய் உள்ளது.ஆக மொத்தம் வழக்கு என தொடரப்பட்டால் வங்கி பக்கம் தீர்ப்பு வரவே வாய்ப்புகள் அதிகம்.

மேலும் நீங்கள் பணம் கட்டவில்லை என்பதால் உங்கள் பெயர் சிபில் (CIBIL-Credit Information Bureau (India) Limited) ரிப்போர்ட்டில் வந்து விடும். இப்படி சிபில் ரிப்போர்டில் பணம் திரும்ப தராதவர் எனில், மறுபடி வேறு வங்கிகளில் வீடு கட்டவோ, மற்ற விஷயங்களுக்கோ நீங்கள் கடன் வாங்குவது சிரமம்.

ஒரு லட்சம் தரவேண்டிய இடத்தில் வங்கி இப்போது 50,000 தான் கேட்கிறது. வங்கி தானாகவே இறங்கி வரும்போது பிரச்னையை முடிப்பது நல்லது. எனவே வங்கியிடம் நீங்கள் எந்த விதத்தில் (மாதம் எவ்வளவு கட்ட முடியும் etc ) பேசி இந்த கடனை அடைத்து விடுவது நல்லது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சட்டம் ஆலோசனைகள் (15)

  1. வணக்கம், Sir,
                   ,எனக்கு கிடைத்த பூர்வீகசொத்தில் வீடு கட்ட கடன், தனியார் வங்கியில் வாங்கும் போது எனது மனைவி மகள், கடன் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமா? எனது மகளுக்கு வயது 18.அந்த இடம் எனது தம்பியும்,அப்பாவும் எனது நலன் பொருட்டு குறைந்த விலைக்கு எனக்கு கொடுத்ததாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.தங்கள் பதில் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்
                                                                        .நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *