அண்ணாமலை தீபம்
விசாலம்
ஆறுமுகம் அவதரித்த சுப நாள் இது
கார்த்திகை மாதத் திருநாள் இது
தீபங்கள் ஏற்றும் நன்னாள் இது
சிவன் . சக்தி சேர்ந்த பொன்னாள் இது,
பரணி தீபம் எங்கும் சுடர
கார்த்திகைத் தீபம் மறுநாள் ஒளிர,
அண்ணாமலையில் விளக்குகள் மின்ன ,
மக்கள் கடலலை மோதி வழிய ,
ரதோத்சவம் சக்கைப்போடு போட ,
ரிஷப வாஹனத்தில் சிவனும் அமர
அண்ணாமலையார் பல்லக்கில் ஆட
அர்த்தநாரீஸ்வரருக்கு தீபார்த்தனைக்காட்ட
கூடவே அண்ணாமலை ஜோதியும் எரிய
எங்கும் கோஷம் எங்கும் பரவசம் .
எங்கும் உத்சவம் எங்கும் உத்சாஹம் ,
அண்ணாமலையானுக்கு அரஹரோஹரா ‘
ஓம் நமசிவாய ,ஓம் நமசிவாய ,
நாமும் சேர்ந்து முழங்குவோம்
அவன் தாளைப் பற்றுவோம் ,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
படத்திற்கு நன்றி :
http://www.maalaimalar.com/2012/11/26141612/thiruvannamalai-karthigai-deep.html
அண்ணாமலையானை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள். நன்றி. அருமை.