சத்திய மணி

 

கல்யாணமோடு கச்சேரி வருமே கலகலப்பு
கல்யாணமோடு கலாட்டா த‌ருமே சலசலப்பு
இதில் கண்காட்சி அணிகளும் அணிவகுக்கும்
இதைக் கண்டுக்காத‌ அணிகளும் பலயிருக்கும்()

கெட்டிமேளம் கொட்டச் சொல்லி மாமனாரு பறக்க‌
பெட்டிநகைப் போட்டுகிட்டு மாமியாரு மினுக்க‌
முட்டி தாலி முடிச்சிட நாத்தனாரு நுழைய‌
பட்டி கட்டி மாடுபோல மாப்பிள்ளை குழைய‌
தட்டு களில் அசத்திடும் சீருகளைப் பாத்து
எட்டு கட்டி போடுதம்மா ஊருகதை சேத்து()
பந்திக்கு முந்திவரும் பசியோடு கூட்டம்
தொந்தி க்குமேல்முழுங்கி ஏந்திரிக்க ஆட்டம்
சந்திக்க வந்தவர்க்கோ வம்புகதை யூட்டம்
சிந்திக்க வேளையின்றி பொட்டியுடன் ஓட்டம்
மண்ணுலகில் இன்றும் இந்தக் கல்யாணம்வாழ‌
கண்ணுபடப் போவுதென‌ சூடம் சுத்தி போடும்()

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கல்யாணமோ கல்யாணம்

  1. வல்லமையில் ஒரு கல்யாணத்தையே நடத்தி காட்டிவிட்டீர்கள். நல்ல கலகலப்பான கவிதை. ஒரு கல்யாணத்துக்கு போனால் இத்தனை விஷயங்களையும் கவனிக்க முடிகிறதோ இல்லையோ இத்தனையையும் இந்தக்கவிதையில் ஃபோகஸ் செய்து கலக்கிவிடீர்கள். அருமை.

  2. கல்யாண வைபோகம்தான்..
    மாப்பிள்ளை பெண்ணுக்கும் சொல்லியிருந்தால்
    இன்னும்
    களைகட்டியிருக்கும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *