சுவாமி விவேகானந்தர் வழியேற்போம்

 

சத்திய மணி

 

தேசத்தை நேசித்தான் பாசத்தை சுவாசித்தான்Swamiji_Wallpaper03_1920X1080

வாசத்தில் வாசம் கொண்டு சத்சங்கம்  போதித்தான் ()

 

புவனியின் மைந்தனாக பிறந்திடினும் சிங்கம்தான்

பவனிவரும் போதினிலோ உரமேற்றும் வங்கம்தான்

இவனுரையைக் கேட்டாலே பலமேற்றும் அங்கம்தான்

அவன்கருத்தை ஏற்றாலே இளங்கன்றும் பொங்கும்தான்()

 

குருவான ராமகிருஷ்ண பதங்கண்டு கற்றிட்டான்

கருவானக் காவியங்களை உரையிட்டு முற்றிட்டான்

தருவாக மடங்களென்னும் பள்ளிகளை கட்டிட்டான்

உருவாக இளையபாரதம் எழுகவென்று தட்டிட்டான்()

 

 

பூமியிலே சொர்க்கம் எங்கள் நாடென்று சாதித்தான்

காவியிலே இருந்தாலும் தான் கற்பூரம் ஆகிட்டான்

ஆன்மீக  ஆற்றினில் வெள்ளப் பெருக்காக ஓடிட்டான்

வான்போல‌  நினைவு திறனால்  புவியோரை மயக்கிட்டான்()

 

வேகத்தின் வலிமை பேச்சில் விவேகன் ஆனந்தம்

மேகத்தை முடியில் தரித்த நரேந்தர மாணிக்கம்

யோகமுடன் தேகவலிமை நீதிநெறி தனைக்காப்போம்

ஆகமுடன் தேசபக்தி போதித்த வழியேற்போம்()

 

படத்திற்கு நன்றி: http://www.sv150.info/wp-content/uploads/2011/11/Swamiji_Wallpaper03_1920X1080.jpg

 

1 thought on “சுவாமி விவேகானந்தர் வழியேற்போம்

  1. //பூமியிலே சொர்க்கம் எங்கள் நாடென்று சாதித்தான்

    காவியிலே இருந்தாலும் தான் கற்பூரம் ஆகிட்டான்//

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள் திரு.சத்திய மணி ஐயா!

Leave a Reply

Your email address will not be published.