பால் நிலவாய் வண்ணம் கொண்டேன் பருவம் மாறக் கனவு கண்டேன் கார்முகில் வண்ணன் கரம் பிடித்தேன் காவிரி நதியில் சங்கமித்தேன் யுத்த பூமியாய் மாறி நிற்கப் பூத்ததோ புதிய பூ ஒன்று! புன்னகை சிந்திட நிற்குது இங்கு கவலை இல்லாது வாழ்ந்திட்டேன் காலம் முழுவதும் மகிழ்ந்திட்டேன் காலன் வந்ததும் கலங்கிட்டேன் வாழ்ந்த வாழ்க்கை நினைத்திட்டேன் இதுவே போதுமென்று அமைதியுற்றேன் கல்லறை தனிலே உறங்குகின்றேன்!