பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்
அன்பினிய நண்பர்களே,
வணக்கம். சென்ற [ஜூலை, 2015] மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள்.
ஐயப்பன் கிருஷ்ணன்
மூன்று கட்டுரைகளில் இரண்டின் பேசு பொருள் ஒன்றாக இருக்கிறது.
திருமதி. சிவானந்தம் கனகராஜ். மற்றும் – எஸ். நித்யலக்ஷ்மி. இருவரும் இணையத்தில் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தல் குறித்து தங்கள் பார்வையை வைத்திருக்கிறார்கள். இதில் திருமதி சிவானந்தம் கனகராஜ் தெளிவாக பல இணையத் தளங்களைக் குறித்து விளக்கமான பார்வையை வைத்திருப்பது சிறப்பு.
இதையும் தவிர்த்த மிக முக்கியமான தளங்கள் உள்ளன. அவற்றையும் கட்டுரைகளில் கொண்டு வந்திருக்கலாம்.
நித்தியலக்ஷ்மி தன்னுடைய இன்னொரு கட்டுரையில் தேடுபொறியின் நுட்பங்களை விவரித்துச் சென்றிருப்பது மிகுந்த பயனளிக்கும் ஒன்றாகும்.
நித்தியலக்ஷ்மி மற்றும் திருமதி. சிவானந்தம் கனகராஜ். இருவரின் கட்டுரைகளுமே பயனுடையவை. ஆகவே இவ்விருவருக்கும் இந்த வெற்றியை சமமாக பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.
வாழ்த்துகள்.