மாறாத வறுமை
-மீனாகுமாரி கண்ணதாசன்
விண்ணில் பறக்கும் ஏவுகணைகளும்,
நவீனமாக மாறிவரும் அங்காடிகளும்,
சீட்டுக் கட்டுகளைப் போல் பறக்கும் பணக்கட்டுகளும்,
பளிங்குப் பாலங்களும்,பல்லைக் காட்டும் பளிச்சென்ற விளக்குகளும்
பகட்டான மனிதர்களின் பறந்தோடிக் கொண்டிருக்கும் சொகுசு வாகனங்களும், நாகரிகமாக உலாவரும் நவயுக காலத்தில்
மாறிவிட்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கும் வேளையில்…
வறுமை நிலையோடு, வயிற்றுக்கு உணவின்றிக்
கேட்பாரற்று, கேள்விக்குறிகளோடு
உடலை மறைக்க உடையின்றி, உடலில் சதையின்றிப்
பட்டினியால் வாடி, பரிதவிக்கும் மனிதர்களும்
வளர்ச்சிபெற்ற திருநாட்டில்
வறுமையும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது இன்னும் இந்நாட்டில்…
மாறுமோ இந்நிலை? மாறத்தான் வேண்டும் வறுமை நிலை!