அனைத்து அன்னையர்க்காக
அன்னை என்றும் நீதானே
ஆதாரம் உலகில் அனைவர்க்கும்
இல்லை நீயும் என்றாலோ
ஈரேழ் உலகிலும் உயிர்களேது?
உள்ளத்தில் நீயே வெண்மை மொட்டு
ஊழி நீக்குதலில் மென்மைப் பட்டு
எத்தனை மொழிகள் உண்டு எனினும்
ஏகமனதாய் அம்மாவே முதல் மொழி
ஐ! நீயே அனைவரின் அன்புக்கு அரசி
ஒப்பிலா தெய்வமே தலைமகளே தாயே
ஓம்காரமாய் முதலே என்றும் நீயே
கண்ணை இமை தான் காப்பது போல்
கால நேரம் பார்க்காது காப்பாய் என்
கிள்ளை மொழி கேட்டு அகமகிழ்வாய்
கீரிடம் எனக்கு சூட்டி சும்மாடு நீ ஏற்பாய்
குறைவின்றி விளங்கும் குணவதி நீ
கூறும் ஒவ்வொரு வார்த்தையும் வேதம்
கெடுதல் கனவினிலும் நினைக்காதவளே
கேட்பாரற்று கிடக்கும் மழலையும் உன்
கை மட்டுமே பிடித்து கரைசேர ஆசைப்படும்
கொண்டவனுக்கும் அவன் கொடுத்தவைக்கும்
கோடானு கோடி நலனே என்றும் சேர்க்கும்
மாசற்ற திருவுருவே மாதவே உந்தன்
மலரடி தான் பணிவோம் மகிழ்வுடன் இந்நாளில்
அன்னையர் தின வாழ்த்துகளுடன்
– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.