பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
[49]
விந்தை இல்லையா ? ஆயிரக் கணக்கான பேரில்
நம்கண்முன் இருட்கதவைக் கடந்தோர் இதுவரை
நமக்குப் பாதை காட்ட ஒருவர் கூட மீண்டிலர்;
நாமே பயணம் செய்து தான் காண வேண்டும்.
[49]
Strange, is it not? that of the myriads who
Before us pass’d the door of Darkness through
Not one returns to tell us of the Road,
Which to discover we must travel too.
[50]
நமக்கு முன் பிறந்தோர், தீக்கிரை யானோர்
போதகர், மேதையர் ஓதிய திருமறைகள்
அனைத்தும் கதையே. கல்லறையில் எழுந்து
கனைத்தனர், தோழர்க்கு வந்தது தூக்கம் !
[50]
The Revelations of Devout and Learn’d
Who rose before us, and as Prophets burn’d,
Are all but Stories, which, awoke from Sleep,
They told their fellows, and to Sleep return’d.
[51]
ஆத்மா புழுதி மண் வீசி ஒதுங்கு மென்றால்
வானகக் காற்றின் மீது மிதக்கும் போது
மான மில்லையா, அதற்கு மான மில்லையா
இந்தக் களிமண்ணில் புதைந்து போவதற்கு ?
[51]
Why, if the Soul can fling the Dust aside,
And naked on the Air of Heaven ride,
Is’t not a shame – Is’t not a shame for him
So long in this Clay suburb to abide?

Leave a Reply