அறிவோம் பாரதியை!
பவள சங்கரி
தமிழருக்கு புதிய
உயிர் அளித்து
சிந்தனையினைத்
தெளிவாக்கி
தலை நிமிர்ந்து
நடக்கச் செய்ய
பாரதியைப்
படித்திடுவோம்
மகாகவி பாரதியின் 135 ஆம் ஆண்டு பிறந்த தினம் தொடங்கி 2017ஆம் ஆண்டு முழுவதும் பாரதியின் கருத்துகளை பாரெங்கும் பரப்ப திருவையாறு பாரதி இயக்கத்தின் பாரதி இலக்கியப் பயிலகம் “அறிவோம் பாரதியை” என்ற இயக்கத்தினை நடத்திவருகின்றது.
கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாரதியின் கருத்துகளை இந்த சமூகத்தில் விதைத்துக் கொண்டிருக்கும் திருவையாறு பாரதி இயக்கம் பெருமுயற்சியோடு கல்லூரி மாணவ மாணவியர், பள்ளிக் குழந்தைகள், பெரியோர், பெண்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாரதியைக் கொண்டுசேர்ப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
பாரதியின் கருத்துகளை துண்டு பிரசுரங்கள் மூலமும், பாரதியின் நூல்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மாணவர்களுக்கு பயிலரங்கம், போட்டிகள், கருத்தரங்கம் நடத்துவது, பாரதி புகழ் பரப்பிய சான்றோர்களுக்கு விழா எடுத்தல், அனைத்திற்கும் மேலாக பாரதி வாழ்ந்த இடங்களுக்குச் சென்று பாரதி வரலாறு பற்றி சொற்பொழிவாற்றுதல் போன்ற அரிய பணிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (12/11/2017) பாரதி இறுதியாகப் பயணம் செய்து, ‘மரணமிலாப் பெருவாழ்வு’ குறித்த சொற்பொழிவாற்றிய ஈரோடு கருங்கல்பாளையம் பாரதி புத்தகாலயத்திற்கு திருமிகு கோபாலன் வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் 12 பேர்கள் கொண்ட குழு வந்திருந்தனர். திருமிகு கோபாலன் வெங்கட்ராமன் அவர்களின் அருமையான சொற்பொழிவைக் கீழ்கண்ட தொடுப்புகள் மூலம் கேட்கலாம்.
திரு தஞ்சை வெ. கோபாலன் அவர்கள் நம் வல்லமைக்கு ஏற்கனவே அறிமுகமானவர். புத்தக மதிப்புரை போட்டியில் ஐயா வெங்கட் சாமிநாதன் மூலம் முதல் பரிசு வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்க பாரதி! (பகுதி – 3)