பரிசு
மதியழகன்
எனக்கு விடுமுறை தான்.
மேலதிகாரியின்
நச்சரிப்புகளையோ,
சக பணியாளர்களின்
கிண்டல் பேச்சுக்களையோ
இனி கேட்க வேண்டியதில்லை;
அலாரம் வைத்து
எழுந்திருப்பதிலிருந்தும்,
அவசரமாக
குளிப்பதிலிருந்தும்,
பேருந்து கூட்ட நெரிசலில்
சிக்கித் தவிப்பதிலிருந்தும்,
இனி விடுதலை.
பயணத்தின் போது
அவசரப்பட வேண்டியதில்லை..
பணிக்கு திரும்ப வேண்டுமேயென
வேலைப் பளுவால்
வீட்டில் உள்ளவர்கள் மேல்
எரிந்து விழும் சந்தர்ப்பம்
இனி நேராது,
கோப்புகள் அடுக்கப்பட்ட
மேஜையை
இனி நினைத்துப் பார்க்க
முடியாது.
பதவி உயர்வுக்காக
இனி ஏங்கித் தவிக்க
வேண்டியதில்லை,
கவர்மெண்ட் மாறினாலும்
கவலைப்படத் தேவையில்லை..
டிரான்ஸ்பர் செய்து விடுவேன்
என யாரும் மிரட்டப்
போவதில்லை,
ஒற்றை வரியில் சொன்னால்
நான் பணிஓய்வு பெறுகிறேன்…
நீங்க ஒண்ணு! பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தான் எனக்கு நேரம் போதவில்லை. அதற்கு முன்னால்! ஆனால், ஒன்று. பதவி உயர்வு/மாற்றல் போன்ற பிச்சல்/பிடுங்கல்களை உதறி விட்டதால், மேலதிகாரிகளால் விரட்டவும் முடியவில்லை.