முனைவா் ரா. மூா்த்தி

 

 

நாகரிக உலகத்தில்
நாகரிகத்தை அழித்து
நடைப் பயணம் மிடுகிறேன் – நகரும்
சுமைதாங்கிக் கல்லாக……

மண்ணை மலடாக்கி
மண் கலயத்தை மரபாக்கி
மாயத் தோற்றத்தில்
வட்டிலும், வாளியுமாக
சுனை நீரை சுழற்சி செய்து
சுத்திகரித்து வாட்டா் பாட்டிலோடு
வலம் வருகிறேன் – நகரும்
சுமை தாங்கிப் பெண்ணாக………

விளையும் நிலத்தை
வீடுகட்ட விற்றுவிட்டு
வீதியெல்லாம் விதவிதப்பட்டு
காடு மேடெல்லாம் தடம் பதித்த கால்கள்
கானமஞ்ஞையைப் போன்று
கஞ்சிப் பாத்திரத்தைத் தலையில் ஏந்தி
தனிமையில் சுமக்கிறேன்
வாய்பேசா வன்மமாக……..

கோமகன் கோட்டையாளவும்
கோடித்துணி கொண்டு வரவும்
கோலோச்சமிடுகிறேன். – அதனால் நான்
சுமை தாங்கவில்லை, சுமை ஏற்கிறேன்……..

நானும் கல்லும் ஒன்றென்று
நாகரிகம் சொல்லுது அதனால் தான்
ஒவ்வொரு நாளும் தேய்ந்து கொண்டிருக்கிறேன்………..

முனைவா் ரா. மூா்த்தி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
Email: ramvini2009@gmail.com

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *