Author Archive

Page 1 of 512345

வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம் – ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்.

வெங்கட் சாமிநாதன் சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் 1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான். இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட ... Full story

தி.க.சி. யின் நினைவில்

தி.க.சி. யின் நினைவில்
வெங்கட் சாமிநாதன் என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே.  தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்[போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு ;பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து ... Full story

பயணத்தின் அடுத்த கட்டம

வெங்கட் சாமிநாதன் இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின்  நிறைந்தது தான்  என்ன? ஒன்றுமில்லை தான்.  எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை எவரது சுய சரிதமும் ... Full story

ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்

ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்
வெங்கட் சாமிநாதன் தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தெரிகிறது, அவர் தன்னை மீறி, ... Full story

2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

வெங்கட் சாமிநாதன் புதியவர்கள் அறிமுகமாகின்றனர். இருப்பினும் கதைகளும் குறைந்துவிட்டன. இருப்பினும் மகிழ்ச்சி தருவது தன்னையும் தன் துறையையும் நகைச் சுவையுடன் பார்க்கும் பாங்கு. அதிலும் ஒரு கேலிச் சித்திரமாகவே எழுதியுள்ளது. இம்மாதிரி கேலியைப் படிப்பது இது தான் முதல் தடவை. இம்முறை பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார். மிகவும் இருண்ட உலகம், படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வாழ்பவர்களுக்கு எப்படி இருக்குமோ! இம்மாதமும் அவரது தான் சிறந்த கதை. அவருக்கு என் வாழ்த்துகள். அந்தியூரான் அங்கு உட்கார்ந்துகொண்டு எப்படி இவ்வளவு நெருக்கமாக அன்னிய உலகைப் பற்றி எழுத முடிகிறது? ... Full story

அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

வெங்கட் சாமிநாதன் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். ... Full story

மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!
வெங்கட் சாமிநாதன் கதைகளின் வருகை குறைந்ததற்குக் காரணம் எழுதுபவர்கள் பலருக்கு நாம்/ நான் உற்சாகம் கொடுக்கமுடியாமற் போவது தான் . வருவது முப்பது முப்பத்தைந்து கதைகளே ஆனாலும் ஒன்றிரண்டு நம்மை மிகவும் கவர்ந்து கொள்வதே பெரிய காரியம். இம்முறை கதைகள் வெகுவாகக் குறைந்த போதிலும் பலர் வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். ... Full story

ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்
வெங்கட் சாமிநாதன் இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம். இம்மாதம் வந்துள்ள கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லக் கூடியது பழையவரும் தேர்ந்த கையுமான பழமை பேசியினது தான். கொழுகொம்பு அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே சமயம் வாழும் அன்னிய ... Full story

அறுபது ரூபாய் படுத்திய பாடு!

  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 54) கொஞ்ச நாட்கள்  கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது  ஏதும் ஆர்டர் வருமா என்று  காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ... Full story

“பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை”

  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 53) புர்லா திரும்பியதும்  மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிக்கையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட  வேண்டியது. இதில் ஏதும்  சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் ... Full story

பிரக்ஞையே இல்லாத இரண்டு பாதகங்கள்!

பிரக்ஞையே இல்லாத இரண்டு பாதகங்கள்!
  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 52) சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும்  பத்திரமாகத்தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் ... Full story

தென்னாட்டு சாந்தாராம்

தென்னாட்டு சாந்தாராம்
வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 51) தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும்  பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற ... Full story

செப்டம்பர் மாத சிறுகதைப் போட்டி முடிவு

செப்டம்பர் மாத சிறுகதைப் போட்டி முடிவு
  வெங்கட் சாமிநாதன் செப்டம்பர் மாதம் போட்டிக்காக வந்துள்ள சிறுகதைகளுள் பழமைபேசி எழுதியுள்ள செவ்வந்தி என்ற கதை தான் முன்னிற்கிறது.  கிராமத்து எதிர்பார்ப்புகள், ஆசைகள். தன் மருமகள் பெற்ற இரண்டும் பொட்டைப் பிள்ளைகளாக பிறந்தது அவளுக்கு ஒரு ஆற்றாமை. அடிக்கடி சொல்லித் தீர்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் சினை கண்டிருக்கும் வீட்டுமாடு மட்டும் என்ன கிடரிக்கன்னாவா போடும், அதுவும் காளைக்கன்னைத் தான் போடும், தன் அவதியைப் பெருக்கும் என்று வேதனைப் ... Full story

“சம்பாத்திய வாழ்க்கையின் முதல் தடைக்கல்லை அகற்றியவர்.”

  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 50) நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்ஜினியராக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் என்ஜினியரிலிருந்து கீழ்மட்ட சூபர்வைசர் வரை. எல்லோரும் அதற்கு முன் சக்கர் என்ற அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அது இப்போது பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் இருக்கிறது. அனேகர் இப்போது பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிட்ட சிந்து, பஞ்சாப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். வேலையில் சேர்ந்த போது அவர்கள் நினைவுகளில் பாகிஸ்தானின் பஞ்சாப் வாழ்க்கையும் பின்னர் ... Full story

ஆயிரம் சூரியன்களைவிட பிரகாசம் மிக்கது?

ஆயிரம் சூரியன்களைவிட பிரகாசம் மிக்கது?
  வெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 49) முந்தைய பகுதியை வாசிக்க: 1956 – இது எவ்வளவு  முக்கியத்துவம் பெறும் என்று  அப்போது தெரிந்ததில்லை.  திடீரென்று என்னை இன்னொரு  செக்‌ஷனுக்கு மாற்றினார்கள்.  சொல்லலாம் தான், ஊரை விட்டுப்  போய்விடவில்லை. அலுவலகமும்  அதேதான். அதே கட்டிடம்  தான். இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் நேரம் எல்லாம் உடனிருந்து எந்நேரமும் பார்வையின் வட்டத்துக்குள் இருந்து கொண்டிருந்த சோப்ரா, மிருணால், மஞ்சு சென்குப்தா, எல்லோரையும் விட்டு வேறு தளத்துக்கும் வேறு அறைக்கும் ... Full story
Page 1 of 512345
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.