2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

10

வெங்கட் சாமிநாதன்

புதியவர்கள் அறிமுகமாகின்றனர். இருப்பினும் கதைகளும் குறைந்துவிட்டன. இருப்பினும் மகிழ்ச்சி தருவது தன்னையும் தன் துறையையும் நகைச் சுவையுடன் பார்க்கும் பாங்கு. அதிலும் ஒரு கேலிச் சித்திரமாகவே எழுதியுள்ளது. இம்மாதிரி கேலியைப் படிப்பது இது தான் முதல் தடவை.

இம்முறை பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார். மிகவும் இருண்ட உலகம், படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வாழ்பவர்களுக்கு எப்படி இருக்குமோ! இம்மாதமும் அவரது தான் சிறந்த கதை. அவருக்கு என் வாழ்த்துகள். அந்தியூரான் அங்கு உட்கார்ந்துகொண்டு எப்படி இவ்வளவு நெருக்கமாக அன்னிய உலகைப் பற்றி எழுத முடிகிறது? மணவாளன் தான் எனது தேர்வு.

பழமைபேசி2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டியில் பங்கேற்ற சிறுகதைகள்:

 

(பழமைபேசிக்குப் பாராட்டுகள்; பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இன்னும் ஒரு மாதத்துடன் இந்தப் போட்டி நிறைவு பெறுகிறது; எனவே, விருப்பமுள்ளோர் விரைந்து பங்கேற்றிட அழைக்கிறோம். – ஆசிரியர்)

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on "2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்"

  1. இம்மாதத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தேர்வு செய்யப்பட்ட அன்பு பழமைபேசிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள்.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  2. ஐரோப்பாவில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, எனது கைபேசியில் கவிதை, துணுக்கு, அனுபவக் குறிப்பு, கட்டுரை, கதை என்று ஏதாவது ஒரு வடிவில் தோன்றி, கிட்டத்தட்ட 24×7 என்னுடன் இணைந்து இருக்கும் சகோதரர் பழமை பேசி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
    உங்கள் படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கையில், மூழ்கி, திணறி முடிவில் மரித்து உயிரற்ற உடலாக மிதப்பது போல் உணர்கிறேன். (பணவிடையில் ஆரம்பித்து, உங்கள் படைப்புலகில் புகுந்து மணவாளன் வரை). தொடர்ந்து எழுதவும்! Keep Rocking!!!
    வல்லமை சிறுகதை போட்டி முடிவுக்கு வருவது சிறிது  வருத்தமளித்தாலும், ஒரு வாசகனாகிய எனக்கு பழமைபேசி போன்ற பல நல்ல படைப்பாளிகளை (list is big) அறிமுகப்படுத்திவைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. 
    தொடர்ந்து படைப்புகளை வாசித்து ஊக்கமளித்து வரும் திரு வெ.சா ஐயா அவர்களுக்கு நன்றி.

  3. இந்த வருடத்துக்கான போட்டி தான் அடுத்த மாதச் சிறுகதையோடு முடிகிறது.  அதன் பின் அடுத்த வருடத்துக்கான போட்டி தொடரும் என்றே எண்ணுகிறேன்.  போட்டியாளர் வர வர குறைந்தாலும், பழமை பேசி, மாதவன், மணி, இன்னம் இரண்டு பெயர்கள் மறந்து விட்டது, இவர்களைக் கண்டு பிடிக்க உதவியதே இந்த போட்டி. அந்த அளவில் இது நல்ல பயன் தந்த ஒன்று. 

    அடுத்த முறை நான் இல்லாது வேறு ஒருவர் இருக்கலாம். திவாகர், இன்னம்பூரான் போன்று ஒருபெரியவர். ஏன் ஸ்தாபகர்  அண்ணா கண்ணனே கூட அந்தப் பொறுப்பை ஏற்கலாம்.  யார் இருந்தால் என்ன? புதிய திறமைகள் வெளிவரத்தானே செய்யும்.

  4. வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம் பெற்ற

    பழமை பேசிக்கு மனமுவந்த வாழ்த்துகள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  5. அனைவருக்கும் எனது பணிவார்ந்த வணக்கமும் நன்றியும்!!

  6. அன்பு பழமைப்பேசி, ஹாட் ட்ரிக் என்பது போல் வரிசையாகச் சிறந்த கதைப் பட்டியலில் உங்கள் கதை தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒரு போட்டாச்சு. மனதுக்கு ரொம்ப சந்தோஷம். மேலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, என் நல் வாழ்த்துகள்.   

  7. வாழ்த்துகள் திரு.பழமைபேசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.