மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!
வெங்கட் சாமிநாதன்
கதைகளின் வருகை குறைந்ததற்குக் காரணம் எழுதுபவர்கள் பலருக்கு நாம்/ நான் உற்சாகம் கொடுக்கமுடியாமற் போவது தான் . வருவது முப்பது முப்பத்தைந்து கதைகளே ஆனாலும் ஒன்றிரண்டு நம்மை மிகவும் கவர்ந்து கொள்வதே பெரிய காரியம்.
இம்முறை கதைகள் வெகுவாகக் குறைந்த போதிலும் பலர் வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப் புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது. மே மாத சிறுகதைப் போட்டியின் வெற்றியாளராக தேமொழியைத் தேர்ந்தெடுக்கிறேன்.
தேமொழிக்கு என் பாராட்டுக்கள்.
இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற சிறுகதைகள்:
1.முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)
மற்றுமொரு அமெரிக்க கதைக்கு வாழ்த்துகள்!
சுவாரசியமான சிறுகதையை படைத்து மேமாதத்தின் சிறந்த கதாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேமொழி அவர்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துகள்!!!
தொடர்ந்து எங்கள் படைப்புகளை வாசித்து ஊக்குவித்து வரும் திரு.வெ.சா ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றியும், அன்பும்!
வெற்றி பெற்ற திருமதி. தேமொழி அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்….
திருமதி. தேமொழி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.
அன்பின் இனிய தேமொழி,
என் மனமார்ந்த வாழ்த்துகள்!
சு.ரவி
வாழ்த்துக்கள் தேமொழி. கதை,கவிதை,கட்டுரை என எதை எழுதினாலும் தாங்களின் தனித்திறன் அதில் தெரியும். தொடர்ந்து மர்மக்கதை எழுதி மர்மக்கதை மங்கை எனும் அடைமொழி பெற வாழ்த்துக்கள்.
தமிழ் இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களால் என் கதை படிக்கப்பட்டு கதை “… படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது. மே மாத சிறுகதைப் போட்டியின் வெற்றியாளராக தேமொழியைத் தேர்ந்தெடுக்கிறேன்” குறிப்பிடப்பட்டதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். அவருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழில் எண்ணற்ற கதை எழுதுவோருக்கு அவரால் தங்கள் கதை படிக்கப் படவேண்டும் என்பது நிறைவேறாத ஆசையாக இருக்கும் பொழுது, எனக்கு அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் வகையில் என் கதையினை வெளியிட்ட வல்லமை இதழுக்கும், இதழின் நிர்வாக மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதையினைப் படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், அக்கதை பரிசு பெற்ற கதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாராட்டிய திருவாளர்கள் பழமைபேசி, இளங்கோ, ராஜ்ப்ரியன், சச்சிதானந்தம், சு.ரவி, தனுசு, இன்னம்பூரான் ஐயா ஆகியோருக்கும், அவர்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
….. தேமொழி
இப்பொழுதுதான் பார்த்தேன். சகோதரி தேமொழியின் கதை வெங்கட் சாமிநாதனால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்ற செய்தியை. வாழ்த்துக்கள்.