சதீஷ் குமார் டோக்ரா

சதீஷ்குமார் டோக்ரா என்னும் எஸ்.கே. டோக்ரா, தமிழகக் காவல் துறை உயரதிகாரி. தமிழகக் காவல் துறையில் எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி., எனப் பல்வேறு பதவிகள் வகித்தவர். இப்பொழுது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் இயக்குநர். பஞ்சாப்பில் பிறந்த இவர், தன்னார்வத்தால் தமிழ் பயின்று, இலக்கியவாதியாக முகிழ்த்தவர். தாமே பாடலை எழுதி, இசையமைத்துப் பாட வல்லவர். பஞ்சாபி, ஹிந்தி, ரஷ்யன், உருது எனப் பல மொழிகள் அறிந்தவர். ஹார்மோனியம் வாசிப்பார். ஓவியம் தீட்டுவார். தியானப் பயிற்சியாளர். http://dogratamil.com என்பது இவரது இணையத்தளம்.