முனைவர் ப.திருஞானசம்பந்தம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலத்தின் முதுமுனைவர் பட்ட ஆய்வாளர். பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி என்ற தலைப்பில் ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து இளம் அறிஞர் விருது பெற்றவர். இராமசாமி நினைவு பல்கலைக்கழகம் (SRM) வழங்கிய ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இளந்தமிழ் ஆய்வறிஞர் விருது பெற்றவர். பின்வரும் ஆய்வு நூல்களின் ஆசிரியர்: 1. மொழியியல் ஆய்வு வரலாறு: பேரா.ச.அகத்தியலிங்கம் பங்களிப்புகள், இளவேனில் பதிப்பகம், பள்ளிப்பாளையம் - சென்னை, 2012, ISBN: 978-81- 926200-7-7. 2. பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி, சந்தியா பதிப்பகம், சென்னை, 2015, ISBN: 978-93-84915-58-2. 3. ஆய்வுப் பதிவுகள் (யாப்பியல் ஆய்வுகளும் பிற கட்டுரைகளும்), இளவேனில் பதிப்பகம், பள்ளிப்பாளையம் - சென்னை, 2016, ISBN: 978-81-926200-5-3. 4. தமிழியல் ஆய்வு வரலாறு: பேரா.ய.மணிகண்டன் - ஆசிரியம் - ஆய்வுகள் - உரைப் பதிவுகள், சந்தியா பதிப்பகம், சென்னை, 2017, ISBN:978-9384915-94-0. 5. பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும், நெய்தல் பதிப்பகம், சென்னை, 2018, ISBN:978-9380890-80-7. 6. பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பும் வாசிப்பும், நெய்தல் பதிப்பம், சென்னை, 2018, ISBN:978-9380890-79-1.