பாகம்பிரியாள்

விட்டு விட்டுப் பெய்த மழையெல்லாம்
வெட்டி விட்டது என் வியாபாரத்தை.
உதிர்ந்த பூக்களின் குவியலோடு,
ஓரமாய் வாடியது என் அன்றாட வரவும்,
“ஏங்க பூக்காரரே, இந்தாப்பா பூ”, -இதில்
ஏதும் என் செவிக்குள்ளே செல்லவில்லை.
துயர உலகில் சஞ்சரித்த என்னை,
துள்ளிக் குதிக்கவே  வைத்தது
‘பூக்கார்”    என்று காற்றிலே மிதந்து வந்த
பிஞ்சுக் குரலொடு ஒட்டி வந்த கையசைப்பும்!
அண்ணாந்து பார்த்தேன். பூத்திருந்தது பூ முகம்!
பூவுக்குப் பூ தரச் செல்லும்  பெருமிதத்தில் நான்!


படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பூவுக்குப் பூ

  1. பூவுக்குப் பூதரச்செல்லும்..                                                                                 கவிதைக்குக் கவிதை   நன்று…!                                                                                                      -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published.