திருப்பூவணப் புராணம் – பகுதி – (12)

கி.காளைராசன்

மணிகன்னிகைச் சருக்கம்

 

407      நற்கதிபெறுந்திரணாசனன்கதை

யற்புதங்கேட்டுநெஞ்சமைதிகொண்டிலன்

சொற்றகுமாதவச்சூதயான்புகல்

கிற்பனாலின்னமுங்கேட்குமாசையால்

 

408      ஓதருமுலகிலாருயிர்கள் செய்திடு

பாதகமனைத்தையும் பாறல்செய்யுமக்

கோதறுமாமணிகுண்டமேன்மையை

யேதுவினோடெடுத்தியம்பல்வேண்டுமால்

 

409      உற்றமன்பதைக்குபகாரியாவது

மற்றுநீயல்லதிவ்வையத்தில்லையாற்

சொற்றிடென்வாய்மொழிதுணிந்துநாடியே

யிற்றெனவேவிரித்தினிதினாலரோ

 

410      என்றிவைசவுனகனியம்பக்கேட்டரு

டுன்றியதுகளறுசூதன்சொல்லுவான்

கன்றிடுமறுபகைகடிந்துநாடொறும்

வென்றிகொளந்தணர் வேந்தர் வேந்தனே

 

411      அத்தலப்பெருமையையாயிரம்பெரும்

பைத்தலையனந்தனும் பங்கயத்தனுஞ்

சித்திரமலர்த்திருமாலுந்தேவரு

மித்திறமெனவுணர்ந்தியம்பலாகுமோ

 

412      ஆயினெம்மாலிமூதறையப்பாலதோ

தாயினுமுயிர்க்கருள்சவுனகாதிப

தூயவாசான்றனாற் சொல்லுமந்தண

நேயமோடதிற்சிலநிகழ்த்துவாமரோ

 

413      அண்டமோர்விராட்புருடன்றனங்கமாம்

புண்டரீகத்திருப்பொருந்தும்பூவணங்

கொண்டபேரெழில்குடிகொண்டவன்முக

மண்டலமாகவேமறைந்துவைகுமால்

 

414      பண்டைநாளமுதகும்பத்திலாரமு

தெண்டகுமணிமயமாகியிப்புனல்

விண்டலநின்றதுவீழ்தலான்மணி

குண்டமென்றொருபெயர்கொண்டிலங்குமால்

 

415      துன்னுதற்கரியவத்தூயதீர்த்தமா

மன்னதினாடினோரமுதருந்தியே

பன்னுபத்தயன்றன்கற்பம்பரிந்துதாம்

பொன்னுலகத்தினிற்பொருந்திவாழ்குவார்

 

416      அரியயனுருத்திரனமரர்கோன்கடற்

றரைபுகழ்நாரதன்சனகனாதியர்

கருடர்கந்தருவர்நற்கபிலரேனையர்

திருமணிகன்னிகைத்தீர்த்தம்வாழ்வரால்

417      கோலமன்னுதீர்த்தமாடுகுலவுபூர்வமுகமதாய்

வாலுகந்தனான்மிகுந்தவானிலங்குவெய்யவன்

சீலமோடுசெய்யிலிங்கதெரிசனஞ்செய்வோர்கொடுங்

காலன்மேனிதானிரண்டுகண்கள் கொண்டுகண்டிடார்

 

418      அந்தலிங்கதரிசனத்தினானன்முத்தியடையுமால்

வந்துநாளுநாளுமேவணங்கினோர்கள்யாவரும்

புந்தியாற்செய்பாவமும்புண்ணியம்மதாகுமா

லிந்தநீர்மையுண்மையுண்மையென்பதையமில்லையே

 

419      எண்ணிறைந்தநன்மணிகனிகையினெய்தியாடுதல்

கண்ணினண்ணுபூவணக்காசிலிங்கதரிசனம்

புண்ணியம்புரிந்துளோர்தமக்குநேர்பொருந்திடும்

பண்ணுபாதகர்க்கொர்காலமும்பலித்திடாதரோ

 

420      இருடுரந்தருள்சுருக்குமிம்மணிகன்னிகைநதி

யருடவத்தினானதானமதனினாலுமன்புகூர்

கெரிசனத்தினாலுமிக்கசீர்தயங்குகங்கையின்

பரிசனத்தினாலும் வெய்யபாதகங்களழியுமால்

 

421      தெரியினரியபிரமகத்திதீர்க்குமுரியதரிசனம்

பரவுமமுதநாளுமுண்ணல்பண்ணுமேவுபரிசன

மரியபலமெலாமளிக்குமத்திருத்தநானமே

விரவுமமுதமணிமயங்கொண்மணிகனிகையின்மான்மியம்

 

422      தந்தைதாய்தமக்கிழைத்ததணிவில்பாதகங்களும்

பந்தமாற்றுகின்றதோர்பராபரன்றுரோகமுஞ்

சுந்தரங்கொள்வேறொர்மாதர்தோளணைந்ததோடமும்

முந்தையோரைநிந்தைசெய்தமுடிவிலாதபாவமும்

 

423      வேதியர்க்குவெகுளிசெய்தன்மிசைதலல்லமிசைதல்வெம்

பாதகங்கண்மாடபத்தியங்களாதிபாதக

மோதுகோள்களாதிபாவமொழியுமாலிப்பூவணந்

தீதிலன்பினோடுவந்துதெரிசனஞ்செயளவினில்

 

424      இத்தலத்தில்வைகியேயிடும்பையில்குடும்பியா

யுத்தமகுலத்தனாகியொற்கமிக்குடையனாய்

முத்திகாமனானசீவன்முத்தனங்கையிற்றில

மத்தனைச்செழும்பொனல்கினோர்பலத்தையறைகுவாம்

 

425      தூயவுலகினேமருவுசுகமெலாமடைந்தவ

ணேயபுத்திரர்புத்திரர்களோடுநீடுவாழ்ந்

தேயநற்சிவபுரத்தினேறியின்பமுற்றதின்

மேயநாளிருந்துமேதினிக்குவேந்தராவரால்

 

426      ஊனநீங்குமையர்கையிலுள்ளொருமையோடுகோ

தானநல்கினோர்கணீடுதரையிலின்பமருவியே

தீனமின்றிவாழ்ந்துபின்றிருந்தருந்தவத்தினா

லானகாமதேனுவின்றனமுகநன்கருந்துவார்

 

427      பின்னர்நற்றவந்தனிற்பெருங்குலத்துதித்துநேர்

பன்னுபுத்திரர்பவுத்திரர்களோடுபரிவினான்

மன்னுசெல்வமுடன்மகிழ்ந்துவாழ்ந்துமீண்டுமாசிலாச்

சின்மயன்றினம்பொருந்துசிவபுரத்தையடைகுவார்

 

428      ஓதுமுத்தராயணத்தினோடுதக்கிணாயன

மீதினுற்றகதிர்கடம்மை​வெவ்வராவிழுங்குநாண்

மாதவுற்பவத்தினமதிவிரிந்தொடுங்குநா

ளாதிவாரம்பமூதொர்பக்கமவ்வெதிபாதத்தினம்

 

429      ஏலுமாறுதலையிலிட்டவெண்பமூதுசேர்ந்தநற்

காலமோடுசங்கிராந்திகாலமட்டமீதனின்

வாலசங்குதங்கிநன்குவளருமணிகன்னிகையினின்

மாலகந்தைகொன்றசூலவயிரவன்றனருளினால்

 

வேறு

430      இலகொளிபரப்புமெல்லோனெதிர்முகந்தரவிருந்து

மலருடன்றூர்வைமிக்கவண்கனிதண்டுலங்கொண்

டலகிலாப்பவங்கணாயேற்காடுமித்தீர்த்தந்தன்னாற்

றொலைவுசெய்தருளவேண்டுஞ்சோதியேயெனப்பணிந்து

 

431      சூரியவிலிங்கந்தன்னைச் சொல்லுமந்திரத்தினாலே

சீர்பெறச்செபித்துத்தேவதேவனைப்பிரார்த்தித்தன்பாற்

பேர்பெறுதீர்த்தமூழ்கிப்பிதிர்களோடிருடிகட்காங்

கேர்பெறுதர்ப்பணங்களிரவிமந்திரத்தினாலே

 

432      யாவனிம்முறையிற்செய்வானவன்கடலுடுத்தபார்மேற்

றேவர்கண்முனிவர்மிக்கதென்புலத்தவர்கடன்செய்

மேவியபிரமசாரியெனின்விருப்பறுத்தேயொல்லை

மூவுலகங்கள்போற்றமுத்தியையடைவனன்றே

 

433      அருமணமுடித்தோன்பின்றையைவகைவேள்வியாற்றிக்

கிரியைநூற்கிடக்கையானேகேடில்பூசனையமைத்தே

திருமகள்சுவர்க்கஞ்சேயாற்சேர்வனீதொருவினாலும்

பெருகுமத்தீர்த்தமூழ்கிற்பிதிர்கடன்றரும்பேறுண்டாம்

 

434      தீதிலாவேள்விசெய்தோன்றேவனாந்தன்மைபோல

வோதுமத்தீரத்தம்பொனுகவுவோனும்பனாவா

னாதலாலத்தலம்போலரும்பிதிர்கடன்கடம்மைப்

போதல்செய்தலங்களிந்தப்பூதலத்தில்லைமாதோ

 

435      இத்தலமன்றிவேறோரிருங்கதியளிக்குந்தான

மித்தலமதனிலின்றாமியம்பிடினாகையாலே

யித்தலமதிகமாமாயிரங்கோடிநற்றானத்து

ளித்தலங்கண்டாலிம்பரிருங்கதியிரண்டுமுண்டால்

 

436      கற்றுணர்வுடையோர்கண்டகண்ணிமைகைநொடித்தல்

பெற்றிடலமையுமேலும்பிறங்கிடுஞானந்தன்னா

லுற்றவஞ்ஞானந்தன்னாலோதுபூவணத்தில்வாழ்வோர்

நெற்றியிற்றிகழந்த வொற்றைநேத்திரராவரன்றே

 

437      நல்லதோர்தளிர்தானாதனவிலொருகனிதானாதல்

வில்லிலங்கியபுரூரமின்னிடையன்னைபாகம்

புல்லியபூவணத்தெம்புனிதனுக்கினிதளிப்போர்

சொல்லுருத்திரனாய்ப்பின்னர்ச்சுத்தமாமுத்திசேர்வார்

 

438      வோறொருதலத்தினின்று மெய்யுயிர்வியோகமெண்ணி

மாறிலாவித்தலத்தின்வைகுறின்மரணகாலை

கூறரிதாயசெம்பொற்கொடியிடைமடவாளோடுந்

தேறிடவந்தவன்றன்றெக்கிணகன்னந்தன்னில்

 

439      பாரிடைப்பிதாமகற்குப்பயப்பயப்பரிதல்போலச்

சீருடைக்கடவுடன்பொற்றிருமேனிசாத்திக்கொண்டு

பூரணமகிழ்ச்சியோடுபுத்திரன்றன்னைத்தேற்றித்

தாரகப்பிரமந்தன்னைத்தானுபதேசஞ்செய்வான்

 

440      சாற்றுதுமரன்றனாணைசத்தியமீதுசாற்றி

லாற்றல்சான்முனிவகேண்மோவாதலாலரிதினேனு

நாற்றிசையுலகமேத்துநற்றிருப்பூவணத்திற்

போற்றியேயெவரும்வாழ்கபுந்திகொண்டெந்தஞான்றும்

 

441      மருவியகாசிவாசமக்கண்மிக்குடல்வருந்தும்

பொருவிறென்பூவணந்தான்பொருந்திடாமெய்வருத்த

மரியனபொருளொன்றில்லையாதலாலைந்தவித்தீர்

கருதிலப்பூவணந்தான்காசியிலதிகமாகும்

 

442      பவமில்பஞ்சாமுதத்தாற்பஞ்சகவ்வியத்தான்மிக்க

சுவைதருநன்னீர்தன்னாற்சோதியையாட்டுவிப்போன்

சிவனதுவடிவமென்றேசெப்பிடுமுலகமெல்லா

மவனதுபெருமைதன்னையறிகுவனமலன்றானே

 

443      கதிர்விடுமணிகுண்டத்தின்கரையினிற்கடவுண்முன்னர்ப்

பிதிர்மகிழ்சிராத்தத்தோடும்பிண்டநற்றிலோதகத்தை

விதிமுறைபிதிர்கட்காற்றின்வெஞ்சுடர்ப்பரிதிவானோன்

மதிதருவாழ்நாள்காறுமனமிகமகிழ்ச்சியுண்டால்

 

444      பொங்குவெங்கதிர்பரப்பும்புனிதமாமணிகுண்டத்திற்

றங்குநீரிடைப்பிதிர்க்கடங்களங்கங்கிடந்தா

லங்கவர்மகிழ்ச்சிகூர்ந்தாங்கக்கணந்தன்னின்முக்க

ணெங்கணாயகனாற்பெற்றேயிடபவாகனத்தராவார்

 

445      ஆதலாலரியமைந்தரத்தியைப்பத்தியாலே

யோதிடும்பிதிர்கடாம்போயுயர்பதிகதியிற்சேர்வான்

காதலால்வருந்தியேனுங்கடைப்பிடிகருதிமாதோ

கோதிலாமணிகுண்டத்திற்கொண்டிடக்கடவரன்றே

 

446      முந்தொருகாலந்தன்னின்மொழியினோர்கங்கமங்கந்

தந்திடந்தணனங்கத்தைத்தசையெனநசையிற்கொண்டே

யந்தநற்றீர்த்தத்திட்டாங்ககன்றதக்கணத்தினன்னோ

னிந்தநற்றீர்த்தந்தன்னாலிருங்கதியேறினானால்

 

447      இந்தநற்றீர்த்தம்வேதத்தியம்பிடுஞ்சாரமாகு

மிந்தநற்பிறப்புக்கீறுசெய்திடுகடவுளாகு

மிந்தநற்கதைச்சுருக்கமியம்பினனீவிருந்தா

மிந்தநன்மாணக்கர்க்கிங்கிசைத்திடுமெந்தஞான்றும்

 

448      சந்தமாமறைதேர்கின்றசவுனகமுனிவகேண்மோ

வந்தநற்பிரமகைவர்த்தந்தருமத்தியாய

மிந்தவாறடைவிற்றேர்தியெழுபதின்மேலிரண்டாம்

புந்திகொள்புகழ்செறிந்தபூவணக்காதைமாதோ

 

வேறு

449      சேணுலாவியதிங்கடருங்குடைசேருமாமதன்றன்றனைவென்றதோ

ரேணுலாவியவின்பசுகம்பெறுமேசிலாவருடந்திடுமந்தணீர்

மாணுலாவியமண்டலமெண்டகுமாசிலாமணிகுண்டமடைந்தசீர்

பாணுலாவியசெஞ்சொல்பகர்ந்தவர்பாகசாதனன்றன்பதிதங்குவார்

மணிகன்னிகைச் சருக்க முற்றியது

ஆகச் செய்யுள் 449

*****

 

 

நாலாவது

துன்மனன்சருக்கம்

 

450      தூண்டுகின்றசெஞ்சுடர்கொள்சோதிதாள்

பூண்டவன்புசேர்பொற்பின்மேலையோன்

காண்டகுந்தவச் சூதன்கண்ணுறீஇ

மீண்டுமோர்கதைவிளம்பன்மேயினான்

 

451      வீரவேடனைவென்றசௌனக

வோர்கநீயிமூதுரைப்பக்கேட்டிடி

லாருயிர்க்கெலாமாயுணல்கிடுஞ்

சேரும்வல்வினையாவுந்தீர்க்குமால்

 

452      வேதநன்குணர்வியாதன்முன்னரே

யோதிநெஞ்சகத்துவகைகூர்தருங்

கோதிலாமணிகுண்டமான்மிய

மேதுவாற்சிறிதியம்புவாமரோ

 

453      தருமநன்கதைதஞ்செவிக்கொளார்

நரகவாதிகளாவர்நாளுமே

திருமிகுங்கதைசெவிமடுத்துளோர்

மருவிடுஞ்சுவர்க்கத்தின்வாழ்குவார்

 

454      நவிற்றுகின்றவெந்நரகமென்றுநற்

சுவர்க்கமென்றுமேற்சூதமாதவ

வௌற்றினாலிவையேயுமாலரோ

வவற்றைநீவிரித்தருளவேண்டுமால்

 

455      தந்தைதாய்புகழ்தருமதேசிகன்

முந்தைநான்மறைதன்னைமுற்றுண

ரந்தணாளரையறிஞர்தங்களை

நிந்தியார்தமைநிந்தைசெய்துளோர்

 

456      பொருவினான்மறைபுகலுமந்தண

ரானரும்பொருளபகரித்துளோர்

கருதிவந்துபொய்க்கரிபகர்ந்துளோர்

பரவுகன்னிகைதனைப்பழித்துளோர்

 

457      மதுநுகர்ந்திடுமங்கையானன

மதனைமோந்தவரவளைமேவினோர்

கதுமெனப்ப்ரமகத்திபண்ணினோர்

விதமுறுவிடர்விரவுகாதலர்

 

458      நன்குலத்திலாசாரநந்திடாத்

தன்குலக்கொடிதனிபுலம்பவே

பொன்பறிப்பவர்தோளைப்புல்குவோர்

மின்குலத்தியைப்பெட்பின்மேவுவோர்

 

459      கொழுநரைப்பிழைத்தோர்கள்கூடுறா

மழலையின்சொல்வாய்மைந்தர்பூணணி

விழைவின்வவ்வினோர்வெமூகிநன்பொருள்

பழுதிலாதுயர்பசுவைவிற்றுளோர்

 

460      புண்ணியப்புனல்புண்ணியத்தல

மெண்ணிடும்பதினெண்புராணநூ

றண்மையாகநிந்தனையிசைத்துளோ

ரண்ணலாலயமிலயமாக்குவோர்

 

461      அண்ணறன்னைநிந்தனையறைந்துளோர்

பண்ணிடுந்தருமம்பழித்துளோர்

திண்ணமாயவைசிதைவுசெய்துளோ

ரெண்ணறம்பொருளெண்ணிவிற்றுளோர்

 

462      அன்னம்விற்றுளோரதுபழித்துளோர்

முன்னைநூல்வருமுறைதிறம்பினோர்

சொன்னவாசகந்தோமுறுத்துளோர்

பன்னலாக்கொடும்பழிபகர்ந்துளோர்

 

463      கருதுகின்றதங்காரியத்தினான்

மருவினோர்கடம்மன்னுகாரியம்

பெருகுகாதலிற்பிழைபடுத்தினோர்

பரிவுகூர்ந்துளோரவரைப்பார்த்துளோர்

 

464      நந்தனவனநறியகூவனீர்

தந்திடேரிதான்றந்திடக்கருத்

துந்துகாதலினுரைத்துளோர்தமை

நிந்தைசேர்ந்தசொன்னிகழ்த்திநின்றுளோர்

 

465      தந்தைதாய்திவசஞ்செயாதவர்

வந்துநம்பினோர்தமைவதைத்துளோர்

சுந்தரந்துதைந்திலங்கு தொன்மைசால்

வெந்தநீறணியாதமெய்யினோர்

 

466      சிந்தையின்மகிழ்தந்திடுந்திரு

வைந்தெழுத்தினையவமதித்துளோ

ரெந்தைகண்டிகையினையிகழந்துளோர்

நிந்தைசேரிவர்நிரயவாணரே

 

467      திருகுசிந்தனைதீர்ந்தமாதவ

மருவுஞாலமேன்மன்பதைக்கெலாம்

பெருகிநாடொறும்பீழைமம்மர்செய்

நரகுறுந்திறநவிலுவாமரோ

 

வேறு

468      கும்பிபாகங்கராளங்கூடுவிட்டாசனத்தோ

டம்புவியிகழ்லாலாம்புசேவனமறையுங்கீலம்

பம்புவெங்கிருமியுண்டல்பகர்ந்தவிகராளங்கண்டங்

கம்பதப்ரகரங்காலசூத்திரங்கரியகாகம்

 

469      ஒட்டகம்புலியயத்தோடுறுமயிடத்தின்றுண்டம்

கொட்டிடுதத்தாங்காரங்கொல்லயபாத்திரஞ்சேர்

தட்டலகுட்டனந்தீசேர்ந்தசைகத்தினில்வறுத்தல்

பட்டுருவசிபடைத்தபத்திரமூத்ரபானம்

 

470      மன்னியரவுரவஞ்சேர்மாரவுரவங்களாதி

தன்மைகளுணருங்காலைத்தருமராசனுந்தயங்குஞ்

சின்மயனருளாற்றேருஞ்சித்திரகுத்தன்றானு

மிந்நிலைதன்னைநாடியிற்றெனக்கிளத்தலாகா

 

471      ஆதலால்யாவரேனுமரும்பெரும்பாதகங்க

டீதுறமுயலிலிந்தத்தீநரகடைவரன்றே

யாதுகாரணத்தினாலுமிகபரமியைவோர்தீய

பாதகமானவற்றைப்பாற்றிடக்கடவரன்றே

 

472      சொற்றிடுந்தருமமுந்தான்சுருக்கியேதெரித்துச்சொல்வா

மற்றதுமுனிவகேண்மோவகிஞ்சையேவாய்மைசேர்த

லுற்றிடுகளவுதீர்தலுளமகிழ்கூர்தலோடு

பொற்புறுதேகசுத்திபூசைசன்னியாசிபூசை

 

473      துறவிகடமதுபூசைசொல்லிடுமதிதிபூசை

வறியரைக்கதியிலோரைமருவுமந்தகரைக்காத்த

லுறுமனச்சழக்குத்தீர்த்தலுற்றிடுசுகன்மம்பேண

லறையகிஞ்சாதியீரேழந்தணர்விதியிற்றந்தோர்

 

474      சரணடைந்தோர்கடம்மைத்தாங்குதன்மாகமூழ்க

லானருச்சனையியற்றலதிதியர்க்கனமீவோர்க்குப்

பரவுபகாரம்பேணல்பண்ணுகன்னிகாதானத்தோ

டுரியவான்முதிரை​யெள்ளோடுயர்பலதானஞ்செய்தோர்

 

475      தருமகாலங்கடன்னிற்றண்புனற்பந்தர்செய்தோர்

பொருவில்புண்ணியம்புரிந்தோர்புங்கவர்யாரும்பூசை

யுரிமையினியற்றவுள்ளமோர்தருங்காதல்கூர்ந்தே

திருமிகுசுவர்க்கபோகத்தெரிவையர்திரட்சியோடும்

 

476      நம்பிநாடகநடிப்பநவமணித்துவசமின்னக்

கிங்கிணிமாலைத்தாமங்கெழுமியேயெங்குந்தூங்கக்

கண்கொளாத்துணைவெண்கற்றைக்கவரிக்காலசைப்பமாதர்

விண்குலாவியவிலக்கவிமானத்தினாப்பண்மேவி

 

477      தெண்டிரைக்கடற்பாற்கொண்டதிசைவிசயஞ்செலுத்தி

வண்டருநீழல்சேர்ந்துமிக்கபூந்தேன்றுளிப்ப

வெண்டகுமுலகம்போற்றவீரேழிந்திரர்கள்கால

மண்டர்களடிவணங்கவமருலகத்தில்வாழ்வார்

 

478      முண்டகனனையவேதமுனிவமுன்னிறுத்தவாற்றாற்

கண்டதையன்றிக்கேட்டகாலையிற்பவங்கடீர்க்கு

மண்டலம்பரவுமந்தமாமணிகுண்டமேன்மை

யெண்டொகைபெறவெடுத்தங்கிசைக்குவமின்னுங்கேண்மோ

 

479      நயவுணர்வறியாதானோர்நான்மறைக்குலத்தின்வந்தோ

னெயினரோடிணங்கிவாழுமிழிதொழின்முழுதுணர்ந்தோன்

கயமுறுகபிலைநன்னீர்க்கரையினிற்கருதிவாழ்வோன்

றுயர்தருதுராசாரஞ்சேர்துன்மனனென்னும்பேரோன்

 

480      சீர்த்திகளகன்றவேதத்திறங்கள்யாவுந்திறம்பி

யார்த்தநல்லறிவிழந்தேயறந்தருஞ்செயன்மறந்து

கூர்த்தவெங்குன்மநோயாற்கொலைபுரியெயினரோடுந்

தூர்த்தர்களோடுங்கூடித்தொன்னெறிமுறைதுறந்தான்

 

வேறு

481      காதலுடன்மாதர்பயில்காமகலைதன்னை

நாதமொடுபாடிமிகநாடகநடிப்போன்

றீதில்பலதேனுவொடுசெந்தழல்வளர்க்குஞ்

கோதின்மறையோரைநனிகொன்றுயிரையுண்போன்

 

482      ஏற்புடையபாலகரையிட்டிடையினோரைப்

பாற்படுவாலீசரொடுபண்புடைமையோரைச்

சீற்றமொடுதேசமிசைசென்றுநனிகொன்று

கூற்றுணவிரும்பியுயிர்கொள்ளையிடுகிற்போன்

 

483      சொற்றகையவின்னபலதொல்லுலகினோரைச்

செற்றமொடுகொன்றவர்கள்செம்பொனவைகொண்டே

வெற்றிமிகுபாதகன்விரும்பியணையாத

கற்புடையமங்கையர்கள்காசினியிலுண்டோ

 

484      கொன்றுதிரியுங்கொடியகூற்றமனையான்செய்

நன்றிகளிலொன்றறியுநன்றியதுவுண்டோ

சென்றுபடிகின்றதொருதீர்த்தமதுவுண்டோ

வன்றியிவனீந்திடுமரும்பொருளுமுண்டோ

 

485      எண்டிசைமுகத்தினமரெக்கடவுடன்னைக்

கண்டனனெனப்பரவுகட்டுரையுமுண்டோ

வுண்டலரிதாய்வளர்தலோருயிருமுண்டோ

மண்டனில்வதைக்கரியமன்பதையுமுண்டோ

 

486      திண்டிறலின்வேட்டைபுரிசிந்தைமிகுதீயோ

னெண்டகவியம்பலுறினின்றுமிவன்முன்னும்

பண்டரொருபாரினிடைபண்ணவருபாவ

முண்டெனவெடுத்தினுமுரைத்திடவுமுண்டோ

 

487      கட்களவுபொய்மைகொலைகாமமுறுகாமத்

துட்டரெனவேமருவுதூர்த்தர்தொழுமூர்க்கன்

மட்டறுகிராதரெனுமாகுலவரோடு

மிட்டமுறநாளுமுலகெங்குமுழல்கின்றான்

 

488      சத்தியமொழிச்சவுனகத்தலைவநாளுந்

துய்த்தல்பழுதென்றுபகர்தூய்மதுவுமுண்டே

பத்திதருபன்னகபணாமுடிகிடந்த

வித்தலனவன்செய்பவம்யாதெனவுரைப்பாம்

 

489      துன்றியமதங்கர்பலதூர்த்தர்புடைசூழ

வென்றிதருவேடருடன்வேட்டைமிகுதீயோன்

மன்றலவிழ்கண்டகவனங்கடொறுநாடிச்

சென்றுபலதேசமவைசிலபகல்கழித்தான்

 

490      மன்னுமிருவினையொப்புவந்தடைதலானு

மன்னதொர்திரோதமருளாய்வருதலானும்

பன்னருவிழாவணியெனப்பகர்தல்கேட்டுப்

பொன்னுலகெலாம்பரவுபூவணமடைந்தான்

 

வேறு

491      இடர்ப்பிறப்பிறப்பென்றோதுமிருங்கடற்படிந்துநாளுங்

கடைப்படாதுயிர்க்கிரங்கிக்கதியருள்புரியநீடும்

படித்தலம்போற்றுகின்றபங்குனியுத்தரத்தின்

விடைக்கொடியேற்றிமிக்கவிழாவணிநடந்ததன்றே

 

492      மதிதொடுசெம்பொற்றேரூர்மாடநீண்மறுகுதோறும்

புதுநறுங்கலவைச்சேறுபொலிதரமெழுகிக்கோலம்

விதிபெறவெழுதும்வாயில்வெண்ணிறப்பளிக்குத்திண்ணை

முதிர்நிலாவெறிப்பத்தூயமுளைகொள்பாலிகைவயங்க

 

493      சீர்மணிமாடந்தன்னிற்சித்திரகூடந்தன்னி

லேர்பெறுமாமியத்தினெழுநிலைமாடந்தன்னிற்

றோரணவீதிவாயிற்சுடர்மணிமண்டபத்திற்

பூரணகுடநற்றீபம்பொங்குவெங்கதிரிற்பொங்க

 

494      நீடுகோபுரவாயிற்கணிலாவுமிழ்நிலாமுற்றத்தி

னாடரங்கதனிற்செம்பொனம்பலந்தன்னிற்சோதி

கூடுநற்சதுக்கந்தன்னிற்கொடிமணிச்சித்திரஞ்சேர்

மாடகூடதினட்டமங்கலநின்றிலங்க

 

495      மிகுபுகழ்வேந்தர்விண்ணோர்மிண்டியவீதியின்கண்

மகுடநன்மணியின்குப்பைவயின்வயினலகிட்டெங்கும்

புகழ்பெறத்​தெளித்தவாசப்புனிதநீரொடுபுத்தேளிர்

மகிழ்வொடுபொழிமந்தாரமாமலர்வாசம்வீச

 

496      மாமணித்தேர்களெங்குமாடமண்டபங்களெங்குந்

தாமநீள்வீதியெங்குந்தக்கபூம்பந்தரெங்கும்

பூமகளுறையுளெங்கும் பூங்கமுகரம்பைநாட்டிக்

காமர்பொன்னகரமென்னக்கடிநகரலங்கரித்தார்

 

வேறு

497      செங்கமலத்திற்றிசைமுகன்மாயன்றேவர்கள்சித்தர்கண்முனிவர்

புங்கவர்யாரும்புடைபரந்தீண்டிப்போற்றிநின்றிசைத்திடப்புகழ்யாழ்

மங்கலகீதவிதத்துடன்பாடிமலர்தலையுலகமங்கையரோ

டங்கண்வானத்தினழகொழுகியநல்லரம்பையர்நாடகநடிப்ப

 

498      திண்டிறற்குலவுதிக்குபாலகர்தந்திசைதொறுஞ்சேர்ந்துசேவிப்பத்

தண்டலில்குண்டோதரனகல்வானிற்றயங்குவெண்மதிக்குடைநிழற்ற

வெண்டிசைவிளக்குமிருசுடர்மருங்கினிணைமணிச்சாமரையிரட்ட

விண்டலந்தயங்குவெள்ளிமால்வரைபோல்விடைக்கொடிமீதுநின்றலங்க

 

499      பண்டருவிபஞ்சிபாடிடுமொலியும்பல்லியந்துவைத்திடுமொலியுங்

கொண்டல்சேர்கூந்தற்குங்குமக்கொங்கைக்கொடியிடைப்பிடிநடைத்தீஞ்சொற்

றொண்டையங்கனிவாய்த்தோகையர்நடிக்குந்துணைப்பதாம்புயச்சிலம்பொலியு

மெண்டிசாமுகத்துமண்டர்வானகத்துமெங்கணுஞ்சென்றெதிரேற

 

500      திண்டிறற்குலவுதீர்த்தர்களேத்துந்திருவருணந்தியெம்பெருமான்

மண்டுகாதலிற்சேர்வானவர்செம்பொன்மணிமுடிதருபிரம்பொலியும்

பண்டருவேதப்பாடலினொலியும் பன்னுதேவாரத்தினொலியுங்

கொண்டசீர்வானத்தண்டகூடத்தின்கொழுந்துவிட்டதுபடர்ந்தேற

 

501      இன்னனவளஞ்சேரிந்திரசெல்வத்திலங்கியவீதியினலங்கூர்

பொன்னலந்தயங்குமின்னனையிடங்கொள்பூவணமேவியபெருமான்

பன்னருஞ்சிகரபந்தியின்மிக்கபைம்பொன்மால்வரையெனச்சோதி

மன்னியவலங்காரந்திகழ்ந்தோங்குமணிநெடுந்தேரினில்வந்தார்

 

வேறு

502      இந்தநல்விழாவணியிடத்தெயினர்சூழ

வந்தமலரோனுநெடுமாலுமறியாத

வெந்தைபெருமானுமிகுமின்னருளினாலே

சிந்தைமகிழ்வோடுநனிசென்றுதரிசித்தான்

 

503      நாதமுயர்விந்துவினுநாடரியநம்பன்

மேதகுவிணோருடனல்வீதிகள்கடந்தே

பூதலமெலாங்குலவுபொற்சுவருடுத்த

கோதின்மணிசோதிவிடுகோயிலிடைபுக்கான்

 

504      காதலுடன்மேவுகனகங்களவுகொள்வா

னேதுநிகழ்காலமெனவெண்ணிமனனூடே

யோதுமவணீடுதனியூசலெனவந்த

வீதிதனினின்றுவிளையாடல்புரிகின்றான்

 

505      பண்டறிவருங்கொடியபாதகனைவீதி

கண்டிடுபவத்தையுறுகாதலுடன்வெய்யோன்

றெண்டிரைகொடீர்த்தமதுசென்றொழிவனென்றுட்

கொண்டனனெனக்குடகடற்கிடைகுளித்தான்

 

506      முண்டகமிலங்குமணிகுண்டமதின்மூழ்கி

யண்டர்தொழுமுத்தியினடைந்திடுவனந்தோ

கண்டிடுவமென்றுவருகாட்சியதுமான

மண்டலம்விளங்குமதிவானவனுதித்தான்

 

வேறு

507      ஆங்கவனரையிருள்யாமத்தன்னதன்

பாங்குறுகொலைபுரிபரிசனங்களை

யீங்குநீர்வம்மினென்றெடுத்துவல்லைகூய்

நீங்கருகாதலானிகழ்த்தன்மேயினான்

 

508      நிகழ்த்தலொன்றுடையன்யானீவிர்கேண்மெனா

வுகப்புடன்யாமெலாமொருங்குகூடியே

புகழ்ச்சியினீடியபுரவலன்மனை

மிகுத்தநற்றனங்கொடுமீண்டுசெல்குவோம்

 

509      என்றவனியம்பலுமெயினர்நன்றெனா

வென்றிவேல்வேந்தனன்மனையின்மேவியே

தன்றனியிலக்கநேர்தபனியங்கொடு

மன்றல்சேர்மலர்த்திருவாயினண்ணினார்

 

510      கடைத்தலைவாயில்காவலர்கள்கண்ணுறீஇ

யடுத்தவர்யாரெனாவையுற்றோர்சில

ரிடிக்குரலெனவதிர்த்தெழுந்துசீறியே

படைத்தலைவீரர்கள்படையின்மூண்டனர்

 

511      மூண்டனர்முறைமுறைமுடுகிமுன்னரே

மாண்டகுதிறற்படைமானவேடருங்

காண்டகுகனற்பொறிகண்கள்சிந்தவே

யேண்டிகழ்வாயிலினிடைக்கணீண்டினார்

 

வேறு

512      இடங்கொள்வானகத்தெறிகுவரேற்றுவரீர்ப்பர்

தொடர்ந்துசுற்றுவர்பற்றுவரடுத்துமெய்துளைப்பர்

படர்ந்துசெல்குவர்மீள்குவர்படைக்கலன்வழங்கிக்

கொடுஞ்சமர்த்தொழில்புரிகுவர்குருதிநீர்குளிப்பார்

 

513      தெரிவருந்திறற்சாரிகைகறங்கெனத்திரிவர்

குருதிவாய்தொறுங்கொப்பளித்திடவுயிர்குறைப்பர்

வெருவியோடுவர்மீள்குவர்வெள்குறாதெதிர்ந்து

பொருவர்மீண்டுமங்கிருவருந்தோள்புடைத்தெதிர்ப்பார்

 

வேறு

514      எதிர்த்திருவிசும்பிடையெறிந்திடுவருள்ளங்

கொதித்திடுவர்செங்கைகொடுகுத்திடுவர்வெண்பல்

லுதிர்த்திடுவரென்பினையொடித்திடுவர்நெஞ்சின்

மிதித்துயிர்பதைத்திடவிதத்துடனடிப்பார்

 

515      தண்டியெதிர்சென்றுசிலர்தாடலைதுணிப்பார்

கண்டமதனைச்சிலர்கள்கண்டமதுசெய்வார்

மண்டமர்புரிந்துசிலர்வன்கரமறுப்பார்

துண்டமதனைச்சிலர்கடுண்டமதுசெய்வார்

 

516      ஏவரும்வெலற்கரியவீறில்பெருவாயிற்

காவலர்தமிற்சிலரையாயிடைகலந்தே

கூவிளிகொளக்கொலைஞர்கோறல்புரிகின்றார்

மேவும்விதிவந்தணையில்வெல்லவௌர்வல்லார்

 

வேறு

517      வீடரிதாயவெம்போர்விளைத்தலும்வேந்தன்சேர்ந்த

நீடியமணிமுகப்புநிரைதொறுமிடிந்தநீள்வான்

கூடியமணிசேர்செம்பொற்கோபுரநிலைகுலைந்த

பீடுறுகின்றமாடப்பித்திகைபிறழ்ந்ததன்றே

 

518      பொருவின்மாளிகையிடத்தும்பூம்பொழிலிடத்தும்பொங்கி

யருவிபாயமுதவெள்ளத்தகலிருவிசும்பிற்றோன்றுந்

தருணவெண்ணிலாக்கொழிக்குஞ்சந்திரகாந்தச்சோதி

பரவியவிடங்களெங்கும்பரந்தனகுருதிநீத்தம்

 

519      அந்நிலைதன்னின்மிக்கவன்னதொன்னகரினாப்பண்

கன்னவிறடந்தோள்வீரர்கம்பலைசெவிமடுப்ப

மின்னுவெம்படைஞர்யாரும்வெகுண்டனர்விரைவினீண்டி

மன்னியபுரிசைவாயில்வந்தனர்வளைந்துகொண்டார்

 

520      ஆங்கவர்வெருவியெங்ஙனடைகுவமென்றுகொண்டு

நீங்கரும்வாயினீங்கிநீள்கடைப்புறத்துப்போந்து

தாங்கரும்வெகுளிவீரர்தாந்துரத்திடத்தகைத்துத்

தீங்கறுமணிகுண்டத்திற்சென்றனர்திகைத்துவீழ்ந்தார்

 

521      இப்பெரும்புனனமக்கிங்கிருங்கதிதருமென்றேயோ

வப்பெரும்பயத்தாலந்தோவந்தநீர்குளித்தோர்யாரு

மெய்ப்படநாடியங்கண்மீண்டெழுந்திலர்களம்மா

தப்பறவக்கணத்திற்றாமுயிர்பரிந்தாரன்றே

 

வேறு

522      நெற்றிதருகண்ணர்திருநீறிலகுமெய்யர்

நற்சடிலசேகரர்கணான்குதடந்தோளார்

பெற்றமதுகைத்துவருபிஞ்சகனையன்றி

மற்றுமொர்தெய்வந்தனைமனத்தறிகிலாதோர்

 

523      சோதிவிடுகின்றதிரிசூலர்சிவதூதர்

மாதிரம்விளங்குகதிர்மன்னுமணிதுன்னுங்

கோதில்பல்விமானமவைகொண்டவண்விரைந்து

நாதனருளான்மகிழ்வினண்ணினர்கண்மன்னோ

 

524      தங்கொளியின்மிக்குயர்தனித்தனிவிமானத்

தங்கவரையந்நிலையினன்பினவைமேல்கொண்

டெங்கள்பெருமானுரியவின்னருளினேயோ

புங்கவர்தொழச்சிவபுரத்தினிடைபுக்கார்

 

525      செப்புமவரிப்புடவிதேடவருபாவ

மப்புனலொளித்ததினகற்றினர்களென்னா

வொப்பரியதீர்த்தமெனவோர்ந்துலகமாடி

னெப்பவமுமாற்றுமெனயாமொழிவதென்னோ

 

526      ஆதலினியாவர்களுமாதரவினென்றும்

வேதியர்தமக்குநிதிவேண்டியதொர்தானங்

கோதறவளித்துமணிகுண்டமதின்மூழ்கிற்

றீதில்சிவலோகமதுசென்றடைவரன்றே

 

527      பூர்வமுறுபூவணபுராணகதைதன்னைப்

பேர்பெறவழுத்துமுயர்பிரமகைவருத்தத்

தோர்வரியபேருலகுரைக்குமெழுபான்மூன்

றாரறிவளிக்குமத்தியாயமிமூதம்மா

 

வேறு

528      பரிதிமடுவுறுபான்மையைநாளுமேபரவையுடைதிகழ்பார்தனிலோதுவோ

ரொருமையுடன்மனனூடதைநாடுவோருரியசெவிநுகரூனமின்மேன்மையோர்

கருணையுறுமிகுகாமருசீர்கொடேகருதியறைகுநர்பூசைசெய்காதலோர்

மருவுமுருவசிமாமுலைமீதரோவருடமொருபதினாயிரம்வாழ்வரே

துன்மனன்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 528

*****

 

 

ஐந்தாவது

தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கம்

 

529      ஓதுநன்பலமாயுகமுறுவதாய்க்கேட்போர்

பாதகங்கணோய்பற்றாத்துடைப்பதாய்ப்பின்னுங்

காதல்கூர் மணிகன்னிகை மன்னுமோர்காதை

சூதமாதவன்சுவுனககேளெனச் சொல்வான்

 

530      தெக்கிணந்தருதிக்கினிற்றிரைபுரள்பொருநைத்

தக்கதீரநீடலைமைசேர்தாபதர்நெருங்குந்

தொக்கவஞ்சிறைப்புட்குலந்துதைந்தபூம்பொதும்பர்

மிக்கதோர்தலம்வேணுநல்வனமெனவிளங்கும்

 

531      குலவுமவ்வனங்கொண்டதோர்குடதிசைமருங்கி

னலகில்பல்புகழடைந்தகோலாகலமெனும்பேர்

நிலவுமக்கிராமத்தினோர்நேரிலந்தணனீ

டுலகம்யாவையுமொருங்குநின்றேத்திடவுதித்தான்

 

532      அந்தணர்க்கெலாந்தலைமையாயங்கமோராறுந்

தந்திடும்புகழ்தரித்தநற்சதுர்மறையுணர்ந்தோன்

முந்துகின்றவெண்ணெண்கலைமுழுதுணர்மேலோன்

சிந்தையிற்றிருவஞ்செழுத்தடைவினிற்செபிப்போன்

 

533      நித்தநன்னியமத்தொழினிரப்பிடுநெறியோன்

புத்திரர்தரும்பவுத்திரர்பொருவருகிளைஞர்

மைத்தடங்கண்மங்கையரொடும்வாழுநமென்னுஞ்

சித்தநன்குணர்வேதசன்மாவெனத்திகழ்வோன்

 

534      செங்கணேறெனத்தினந் தொறுந்தினந்தொறும் வளர்ந்து

கொங்குலாங்குழற்கோதையர்மனங்களிகூர்ந்து

துங்கமேவியகாமனேயெனவெழிறுதைந்து

மங்கலந்தருவடதிசைக்கிறையெனவாழ்நாள்

 

535      வந்தியாவருமணங்கமழ்மலர்ப்பதமிறைஞ்ச

விந்தமாநிலத்திரும்பொருள் யாவையுநுகர்ந்து

முந்தையூழ்வினைதிறம்பலான்மூப்புவந்தடைய

வந்தநான்மறையந்தணனாருயிர்துறந்தான்

 

536      அந்தவந்தணன்றந்தருளருமறைக்குலத்தோ

னிந்துவென்னநாடொறும்வளரெழிற்கலைமதியோன்

முந்தைநான்மறைசந்ததமுழங்கிடும்வாயான்

றந்தையிற்றிகழ்தருமஞ்ஞனென்னுநாமத்தோன்

 

537      சாற்றுகின்றவத்தருமஞ்ஞன்றனைத்தருதந்தைக்

கேற்றநூல்விதியிருக்கடனியாவையுமுடித்தே

நாற்றடந்திசையோடியனானிலமெங்கும்

போற்றுகங்கையிற்போதுவான்புந்தியிற்றுணிந்தான்

 

538      அத்தன்மெய்த்தகுமங்கம்யாவுந்தெரிந்தோர்கும்

பத்தமைத்துநற்படாங்கொடுபுதைத்துவாயரக்கின்

முத்திரைக்குறியிட்டுயர்முத்திதானல்கு

முத்தரத்திசைகொண்டுமாணாக்கனோடுற்றான்

 

539      வங்கவாரிதிவளாகத்துமருவியாங்காங்குத்

தங்குமாதவர்செங்கையிற்றானநன்கீந்து

பொங்குசீதநற்புண்ணியதீர்த்தங்களாடி

யங்கயற்கண்ணிபங்கன்மேவாலவாயடைந்தான்

 

540      அடைந்துமாநதியாடியேயருங்குலப்பிதிர்க

ளுடன்கலந்திடுமுனிவர்கடேவர்கட்குற்ற

கடன்கழித்துறுகண்ணிலர்கதியிலர்தரள

வடங்கொள்பூணணிமங்கையர்வனமுலையுண்போர்

 

541      விருத்தவேதியராதுலர்வேணவாவொழிய

வருத்தமேனியதழகுறவமைத்திடுஞ்சேதாப்

பெருத்தகாதன்மெய்த்தந்தைநற்பெரும்பதம்பெறுவான்

கருத்தனாகியாங்குதவியேகணிப்பருந்தானம்

 

542      வேணிமேன்மிளிர்வெண்ணிலாமிலைச்சியகூட

லேணுநாயகிதன்னைமுத்தினம்பணிந்தேத்திக்

காணுமாறரிதாகிய கடவுள்செம்பாகம்

பூணுலாமலைமங்கைசேர்பூவணமடைந்தான்

 

543      புடவிபோற்றுமப்பூவணங்கோயிலாக்கொண்ட

விடையுகைத்திடும் விண்ணவர்கோன்றனைவடுகக்

கடவுடன்பதங்கண்டுபின்கைகுவித்திறைஞ்சி

மடல்விரிந்தபூமாமணியோடையில்வந்தான்

 

வேறு

544      மண்டலம்புகழ்கொண்டமாமணிகுண்டநீரின்மணங்கமழ்

புண்டரீகமுநனையவிழ்ந்தபொதும்பர்நீடுசெய்பொழில்களு

மண்டராதியர்தானமும்புகலரியவாச்சிரமங்களும்

பண்டைநான்மறைபாடுமந்தணர்பழகிடுந்திகழ்கழகமும்

 

545      மன்னுமாச்சிரமத்தினிற்குநர்மாதவம்புரிமாட்சியும்

பன்னுநன்கலைபயிலுமந்தணர்பன்னசாலைகளும்பொறி

துன்னுமாமயிலாலவந்தெழுதூமமுந்தழலோமமுங்

கன்னல்வேடனைவென்றசவுநககண்டுகண்களிகொண்டனன்

 

546      சித்தநன்குதெவிட்டியாயிடைத்தேசுகால்வடுகேசனைச்

சுத்தமார்திலந்தூருவாக்கதைதுன்னுபூசைமுடித்துவந்

தத்திகும்பமகன்கரைக்கணமைத்தளித்தருளத்தனை

முத்திதானடைவிப்பவெய்துபுமோகமோடதின்மூழ்கினான்

 

547      மூழ்குமேல்வையினாழ்கடற்புனன்மொண்டுசூன்மழைபொழியவே

சூழ்தருந்திசைமாறிடும்படிதூவுமாலிகள்சிதறிநல்

வேழ்வியந்தணன்விசையெழுந்துசென்மிகுபதங்கடமிடறவத்

தாழ்தலத்திடைவீழ்தலுற்றதுசங்கரன்றிருவருளினால்

 

548      மிக்கவத்தடம்வீழ்தல்கண்டுளம்வெருவியோடியெடுத்தன

னக்கடத்தினினிட்டவங்கமனைத்துமக்கணமாய்மலர்

தக்கநற்சதபத்திரத்தொடுசார்ந்தவுற்பலமாகவே

தொக்கவன்பினிறைஞ்சியந்தணர்சூழலுற்றிவைசொல்லுவான்

 

549      அற்புதந்தனையென்சொல்கேன்மிகுமறவிர்காளரிதரிதரோ

பெற்றதாதைபிறங்கெலும்புபெருங்கடத்திலிருந்துதா

ளெற்றவிந்தவிலஞ்சிநாப்பணெழுந்துவீழந்தரவிந்தமோ

டுற்றபானலதாகயானொருவேனுமேதிருவுடைமையேன்

 

550      பாசமோசனதீர்த்தமென்பதுபண்டுகண்டதுகேட்டதாய்க்

காசிமாநகரத்தினும்மிதுகட்டுரைத்திடவொண்ணுமோ

பேசின்முன்னமருந்தவஞ்செய்பிதாக்களுங்கதிபெற்றனர்

பூசுராதிபர்போற்றுமிப்பதிபூர்வமாமிதுபுகலிலே

 

551      ஈதுமுன்னரிழைத்தமாதவமீண்டுகண்டனனாகவிப்

போதெனன்குலவாணரும்புகழ்பொற்பின்வந்துபொருந்தினா

ராதலாலடியேனுமுய்ந்தனனதிகசற்குருவிரதனா

னாதவேதமுனகாடைந்தனனென்றுநின்றுநடித்தனன்

 

552      இன்னதன்மையனிந்நிலத்தினினென்னின்மேலவரின்றெனா

வன்னவந்தணர்தம்மைநீங்கினனாலயந்தனையண்மியே

துன்னுநாகர்தலத்ததுநின்றுமொர்சோதிலிங்தாகியே

முன்னைநாளின்முளைத்தெழுந்தருண்மூர்த்தியைத் தொழுதேத்தினான்

 

வேறு

553      அருண்மேனிதரித்தருள்வாய்சரணமறிவுக்கறிவாமானேசரண

முரகாபரணாசரணஞ்சரணமொருமூவிலைவேற்கரனேசரணம்

பொருளேயடியார்புகலேசரணம்பூதப்படையாய்சரணஞ்சரணந்

திருமாலயனறிவரியாய்சரணந்திகழ்பாற்கரபுரவசிவனேசரணம்

 

554      கழைவேளையெரித்தருள்வாய்சரணங்கனகாசலவிற்கரனேசரணம்

பொழில்சேரநிறைந்தருள்வாய்சரணம்பூர்வந்தருபுண்ணியனேசரண

மொழியாவுலகமொளிப்பாய்சரணமொருவெஞ்சமனையுதைத்தாய்சரணஞ்

செழுநான்மறையின்முடிவேசரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்

 

555      ஒருமானிலகோருருவாய்சரணமோதுந்தொழிலைந்துடையாய்சரணம்

புரமூன்றெரிசெய்தருள்வாய்சரணம்பொருமால்விடைமேல்வருவாய்சரணம்

பெருகாதரவேபிரியாய்சரணம்பிறைவேணியனேசரணஞ்சரணந்

திரையார்புனல்சேர்சடையாய்சரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்

 

556      அடைவார்வினைதிர்த்தருள்வாய்சரணமருளாலறியும்பொருளேசரணங்

கடல்சேர்விடமுண்டவனேசரணங்கமலன்றருகங்கையனேசரணஞ்

சுடர்சேர்சுடலைப்பொடிபூசிடுநற்சுகரூபமதையுடையாய்சரணஞ்

செடிசூழ்மிகுகற்பகநன்னிழலிற்றிகழ்பாற்கரபுரசிவனேசரணம்

 

557      மாயாவுருவாரமலாசரணமாலானவர்பாலேலாய்சரணந்

தாயாயுலகந்தருவாய்சரணந்தன்னடியார்கட்கருள்வாய்சரணம்

பேயோடாடும்பெருமான்சரணம்பிரிவருதிவ்வியவுருவாசரணந்

தீயேந்திய செங்கரனே சரணந்திகழ்பாற்கரபுரசிவனே சரணம்

 

558      பொருமதகரியுரிபோர்த்தாய்சரணம்பொதுவினினடமிடுபுனிதாசரணம்

வெருவரல்விடவருள்விகிர்தாசரணம்வேதபராயணநாதாசரண

மரியயனடிபரவமலாசரணமடல்விடைதருகொடியரனேசரணந்

திருமணியுமிழ்கட்செவியணிமகுடந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்

 

559      பத்தர்விரும்புவரத்தினைநித்தம்பரிவான்மிகவுந்தருவாய்சரணம்

புத்திகொளுத்தமர்புந்திபுகுந்தவர்பூசனைகொண்டருளீசாசரணம்

தத்துவஞானமளிப்பாய்சரணஞ்சஞ்சிதபாசமறுப்பாய்சரணஞ்

சித்தியுமுத்தியுமிக்கருள்புரியுந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்

 

560      அட்டகுணஞ்சேரமலாசரணமாதுலர்தம்மையளிப்பாய்சரண

மெட்டுருவாகியவிறைவாசரணமெங்குநிறைந்தருளெந்தாய்சரணங்

கட்டமுநோயுங்கவர்வாய்சரணங்கதியருள்பரபதமானாய்சரணஞ்

சிட்டர்தினந்தொழுந்தேவேசரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்

 

வேறு

561      என்றின்னனபன்னியிறைஞ்சுதலுமிமவானருளுமுமையாளிடமாம்

பின்றங்கியசெஞ்சடையெம்பெருமான்பெரிதுந்திருவுள்ளமலர்ந்தருளி

நின்றன்புமனத்துறுதருமஞ்ஞனேர்கண்டிடநல்விழிநல்கியரோ

வன்றங்கலராசனன்மாலறியாவத்தன்பரமுத்தியளித்தனனே

 

562      அந்தன்பரமுத்தியளித்தருளியமரும்பொழுதினருடங்கியநற்

சித்தங்களிகூர்செழுநான்மறைதேர்திகழ்ஞானசுகோதயமாதவர்காண்

முத்தந்திரைதத்தியதன்கரையின்மோதுங்கடல்சூழ்முதுபாருலக

மித்தன்மையையுனித்தர்மஞ்ஞனேத்துந்துதிபன்னிவியந்தனரால்

 

563      தருமஞ்ஞனைச்சந்ததமும்புகழ்வோர்சாமீபமதிற்றானெய்திடுவா

ரிருதஞ்செவிகொண்டிடுவோர்கையினல்லிலகும்பரமுத்தியையெய்திடுவார்

பரவுந்தரையிற்படர்கின்றிடுவோர்பரிவாலிவைபன்னினரேலவர்தா

முரைதங்குடல்வீடுறுகாலரன்வந்துறுதாரகமந்திரமோதுவனால்

 

வேறு

564      அங்கவருபதேசந்தனையுற்றேயரியவிமானத்துரிமையினேறிச்

சங்கரனருள்கூர்கிங்கரராவார்சரதமிதருள்வழிசெவியினிறைப்போர்

வெங்கனலாயிரம் வேள்வியர்வேள்விமேயநல்வாசபேயம்மோர்நூறு

பொங்குலகஞ்செய்தபுண்ணியநண்ணுவர்பொழில்புரிபாவமுமொழிகுவரன்றே

 

வேறு

565      பிரமகைவர்த்தமாம்பெரும்புராணத்திற்

றருமஞ்ஞன்காதையத்தியாயஞ்சாற்றிடி

னருமையிங்கெழுபமூதந்தநாலதிற்

கரைதருசவுனககருத்திற்காண்டியால்

 

வேறு

566      தருணமெய்ச்செழுந்தழல்வளர்த்ததர்மஞ்ஞனுக்குநற்கதியளித்தநீள்

பரிதிதொட்டபைந்தடமதுற்றசீர்ப்பரவைசுற்றிடும்படியிடத்தரோ

கருதியிற்பெருங்கதைபடித்துளோர்கருணையிற்றினஞ்செவிநிறைத்துளோ

ரருணலத்தினங்கணனுருக்கொடேயரனிடத்துவந்தருகிருப்பரே

தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்க முற்றியது

ஆகச் செய்யுள்  566

*****

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.