கி.காளைராசன்

மேலாளர்,பல்கலைக்கழகம். கி.காளைராசன் அவர்களது படைப்புகளை ஆன்மிகம், ஆன்மிக அறிவியல் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவரது திருப்பூவணக் காசி என்ற முதல் நூல் திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவி பெற்று அச்சிடப்பட்டு 24-09-2007 அன்று தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளார் அவர்களால் திருப்பூவணநாதர் திருக்கோயிலில் வைத்து வெளியிடப்பெற்றது. இவரது கட்டுரைகள் தினபூமி, தினமலர், மஞ்சரி, தமிழ் மாருதம், செந்தமிழ்ச் செல்வி, ஓம்சக்தி, மெய்கண்டார், கண்ணியம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.