திருப்பூவணப் புராணம் – பகுதி – (20)

0

கி.காளைராசன்

பதினாறாவது

சுச்சோதிபிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்

 

1232    பொங்கர்தொறுமங்குறவழ்பொழிறிகழும்பூவணத்திற்பொருந்திமன்னன்

றங்குகருமங்கண்முதற்றானிழைத்ததியாவையுநீ சாற்றுகென்னா

வெங்கொடுங்காமாதிகளை யொறுத்தொழித்தசவுனகன்றான்வினவலோடுந்

துங்கமறைவடித்தெடுத்ததூயவியாதனைநினைந்துசூதன்சொல்வான்

1233    கூடியநான்மறைவாணர்குலுத்துதித்தகுருபரநீகுலவுகின்ற

கேடிலருங்கதை மேலாக்கிளத்திடுநன்புராணமிகுங்கேள்வியோய்நீ

வாடியடைகுநர்தமக்குமகிழ்ந்தளிக்கும்வள்ளலுநீயதனானிற்கு

நாடிலிணையின்றென்றுநரபதிசெய்கையைச்சுருக்கிநவில்வதானான்

 

1234    சதுர்மறையோர்குரவருடன்றமிழ்மதுரைதணந்தேழ்பைம்புரவிபூட்டி

யுதயமால்வரைமுகட்டினோராழித்தேர்வெய்யோனுதிக்கும்வேலை

யிதயமதினொருமையுடனியல்வீணைநாரதன்றானியம்புமாற்றா

லதிர்கழற்காலரசர்பிரானரும்பாரிசாதவனத்தடைந்துமாதோ

 

1235    வண்டினந்துதையுமண்டலப்பொகுட்டுமலர்தருமணியொளிபரப்புங்

குண்டநீர்படிந்துகோதில்செம்பவளக்கோலமேனிச்சிவக்கொழுந்தைக்

கண்டடிபணிந்துகருதரும்பிதிர்கள் கடன்கழித்தடைந்தவனோர்நாட்

பண்டருவேதபராயணரோடும்பரிந்துநற்றொழின்முறைபுரிந்து

 

1236    வந்திடுமளவின்வானவர்பெருமான்மாபெருங்கோபுரவாயின்

முந்தைநான்மறையுமுழுதொருங்குணர்ந்துமூவுலகேத்திடுநெறிசேர்

சுந்தரநீறுதுதைந்தமெய்யழகுந்தூயவற்கலையுடையழகுந்

தந்தகாலவனைக்கண்டவன்றாளிற்றடமணிமுடிபடத்தாழ்ந்தான்

 

1237    தாழ்ந்தெழுமன்னன்றன்னைநேர்நோக்கித்தவமுனியாசிகள்கூறி

வாழ்ந்தனைகொல்லோமன்னநீயென்னாவளம்பெறமாற்றநன்கறையப்

போழ்ந்திடுமதியம்பொதிந்தபொற்சடிலப்பூவணமேவுமாரமுதைச்

சூழ்ந்தமாதவர்கள்குழாங்கண்முன்றுதைந்துதித்திடத்தொழுதுகைகுவித்தான்

 

1238    தொழுதகைதலைமேற்சுமப்பமெய்பொடிப்பத்துதித்திடுகின்றசொற்றருநாத்

தழுதழுத்திடச்செந்தபனியப்பொகுட்டுத்தாமரைக்கண்கணீரருவி

பொழிதரவுள்ளமுருகிடவன்பிற்பொருந்தியானந்தவாரிதியின்

முழுகிமெய்ஞ்ஞானவிழியினாற்கண்டுமூண்டெழுகாதலின்மீண்டே

 

1239    பாலின்வெண்டரளந்தனைத்திரைசுருட்டிப்பந்தெறிந்தேவிளையாடுஞ்

சீலமார்வைகைத்திகழ்புனலிடத்துஞ்சேர்ந்த​தெள்ளமுததீர்த்ததுஞ்

சாலநீள்வான்றோய்சந்திரதடத்துஞ்சங்கரன்கோயிலினன்பாற்

கோலவாளியிரண்டிட்டதோரெல்லைகொண்டமார்க்கண்டதீர்த்தத்தும்

 

1240    நானமுந்தருமதானமும்புரிந்துநவிலுநல்லைந்தினங்காறு

மானபண்பாடியறுபதமுரன்றே யணிமுகைவிண்டிடவலர்த்தித்

தேனிருந்துண்டுதேக்கிடுமிதழிச்சிகழிகைதிகழ்ந்துசெஞ்சடில

வானவன்பூசைமறைமுறைநடாத்திவைகினன்வையகங்காப்போன்

 

1241    முறைமையினங்ஙனுறையுநாடோறுமொழியுமூவாயிரமுனிவர்க்

கறுசுவையடிசிலளித்துவான்மதியமருங்கலையொடுங்குநாட்டீர்த்தத்

துறைதொறும்படிந்துதூயமாதவர்தந்துணையடிதொழுதுயர்பிதிர்கள்

பெறுதிலோதகமும்பிண்டமுமளிப்பான்பிஞ்ஞகன்பூசையும்பேணி

 

1242    மாமணிவரன்றிமறிதிரைகொழிக்குமருமலர்க்குருமணிவாவி

நாமவேலரசனண்ணுருவுணர்ந்தேநன்முநிகணத்தவர்நாகர்

தேமலரலங்கற்றிண்மனுவேந்தர்சித்தர்விஞ்சையர்கள்கின்னரர்க

ளேமுறுபிதிர்களெண்டிசாமுகத்தரியாவருமீண்டினரன்றே

 

1243    நாந்தகத்தடக்கைநரபதியந்தநன்புனன்மூழ்கியேயன்பாற்

சேர்ந்ததக்கிணாபிமுகத்தனாய்முன்னூற்றிகழிடம்பூண்டுநன்குசையி

னேய்ந்தமாமறையோரிசைத்திடுமாற்றாலிருந்துசங்கற்பநேர்புரிந்தாங்

காய்ந்திடுதருப்பைதன்னிலாவாகித்தருங்குலப்பிதிர்களையம்மா

 

1244    வழுவிலாச்சிறப்பின்மன்னியமரபின்வந்தருள்கின்றவென்றந்தை

கழிபெருங்காதற்காளையானாகிற்கலைக்கடல்கடந்தனனாகின்

மொழிவருந்தவங்கண்முயன்றனனாகின்முனியுரைதவறிலனாகிற்

பொழிதருங்காதற்பொருவிடைப்பாகன்பூசனைபுரிந்தனனாகில்

 

1245    அரியநற்றீர்த்தத்துறைதொறுமன்பினடைந்தியான்படிந்தனனாகிற்

றருமமுந்தவமுந்தானொருவடிவாந்தந்தைசொற்றவறிலனாகிற்

பிரிவரும்பிதிர்நன்பிதாமகன்பிதாவாம்பெருங்குலப்பிதிர்கள்யாவருமே

யிருநிலம்புகழவெட்டருப்பணங்கொண்டெதிர்முகமாகவேவேண்டும்

 

வேறு

1246    ஈங்கடைந்தேயாவருமேயெதிர்முகந்தந்தியானளித்தவிரும்பிண்டத்தை

வாங்கியருந்தாதொழியின்வல்லையிலாருயிர்துரப்பன்மன்றவாய்மை

நீங்கலருமனுகுலத்தினிந்திக்கப்பட்டேனாய்நேர்வனென்னா

வாங்கணைந்தோர்செவிநிறைப்பவறைந்துதிலோதகமதனையவர்கட்கீந்தான்

 

1247    ஈந்திடுமவ்வேலைதனிலிருநிலவேந்தன்பிதிர்களின்புற்றேவான்

றோய்ந்துயர்பொன்னுலகமுறுஞ்சுரர்வடிவங்கொண்டவன்முன்றோன்றியேனோர்

தாந்தெரியாவகையடைந்துதக்ககரபாத்திரத்திற்றந்தயாவு

மாந்தரங்கமுடன்றேவரமுதருந்துமாபோலவருந்தினாரால்

 

வேறு

1248    அந்தவேலையின்மன்னனரியபிதிர்கடம்மை

முந்துறவேகாண்டலுமேமுதிருங்காதன்மூண்டே

நந்தம்பிதிர்கள்காணநானன்குடையேனென்னாச்

சிந்தைமகிழ்ந்தாங்கன்னோர்செப்புமாசிபெற்றான்

 

1249    பூணார்மைந்தர்தந்தபுதல்வர்சூழந்துபோற்ற

வீணாள்படுதலன்றிவீடுவிசயத்தோடு

நீணாளுடன்வாழ்கென்னாநேர்ந்ததவமீந்தயன்மால்

காணவரனல்லதிருங்கழற்சேவடியிற்கலந்தார்

 

1250    இந்தத்தலமான்மியத்தினிறும்பூததனாலிறையோ

னந்தமற்றவறஞ்சேர்ந்தரியபுகழைநாட்டி

யுந்துங்காதற்பிதிர்கட்குயருங்கதிநன்குறவே

தந்தபுரமென்பதனைத்தாவில்விளக்கந்தந்தான்

 

1251    வாவிதிகழ்பூவணத்துமாணிக்கம்மாமலைக்கு

மேவுசெம்பொன்கொடிக்கும்வேணவாவினீந்து

பூவலையந்தான்போற்றும்போன்னனையானல்லருளாற்

றேவவன்மனருள்சேய்சீவன்முத்தனானான்

 

1252    ஆனமூவாயிரநல்லரியமுனிவரந்த

மானவேற்கைமன்னன்வண்மைகண்டுமிக்க

தானந்தன்னைநல்கத்தத்தம்பிதிர்கடுய்த்து

மோனஞானவின்பமுத்திதன்னிலுற்றார்

 

1253    பன்னவரும்பராரைப்பாரிசாதவனத்தின்

வன்னமிகுநன்மணிப்பூண்மன்னன்றன்மைகாணூஉ

வுன்னவரியகாதலுள்ளம்பிடித்தாங்குந்தப்

பொன்னுலகத்தினும்பர்பூமழைமிகவேபொழிந்தார்

 

1254    பண்ணுபாவமனைத்தும்பாறல்செய்வதாகிப்

புண்ணியமாய்மேலாகிப்பொருந்தும்புட்பகானத்

தண்ணனண்ணுகோயிற்கரியநிருதிதிசையிற்

றண்ணந்துளபமாயோன்றனக்குப்பச்சிமத்தில்

 

1255    தாவில்புகழ்நற்றந்தைசகலவுலகும்பெறுவான்

றேவதேவனருளாற்றேவவன்மலிங்க

மோவின்மறையோர்தம்மாலொன்றையங்கேதாபித்

தாவதானதானமந்தமறையோர்க்குதவி

 

1256    கோடிசெம்பொனந்தக்குழகன்றனக்குங்கொடுத்தாங்

காடல்வயமாமன்னனருந்தவஞ்செய்தமர்நாட்

டேடுங்கதிகணல்குந்தீர்த்தந்தோறும்படிந்து

மாடுநல்லவீணைவல்லமுனிவந்துற்றான்

 

1257    உற்றமுனிவனுரைப்பானுரைசெய்யிந்தப்பதியி

னற்றமறுநன்மகிமையறிந்தனைகொல்லென்னா

மற்றையந்தத்தலத்தின்வைகன்மூன்றுவைகிப்

பொற்பினோங்குங்கயிலைப்பூதரத்திற்போந்தான்

 

1258    அழிவில்புகழ்மன்னன்பினானதானையோடு

மெழுதாமறைதேர்மூவாயிரமாமுனிவரேத்த

மழையினகடுகிழிக்குமதில்சூழ்மாடநீடும்

பொழில்சேர்ந்தோங்கும்பொற்பிற்போகவதியிற்போந்தான்

 

 

வேறு

1259    தாவிலத்தலத்திலெட்டருப்பணஞ்செய்து

தேவவன்மேசனைத்தெரிசனஞ்செய்வோர்

மேவுமெண்டலைவர்வான்முறைவிருப்பியே

யாவருந்தொழச்சிவபுரியினேறுவார்

 

1260    பரவுபஞ்சாமிர்தம்பஞ்சகவ்விய

மருவியபலோதகமஞ்சனத்தினா

லரியபூவணேசனுக்காட்டுவோர்பலன்

கரியகண்டப்பிரான்கழறல்வேண்டுமால்

 

1261    ஆடல்செய்பூவணத்தரனுக்கானெய்யாற்

பீடுறவோர்விளக்கேற்றும்பெற்றியோர்

தேடருங்கதியருள்சிவபுரத்தினிற்

கோடிநன்குலத்துடன்கூடிவாழ்வரால்

 

1262    நந்தனவனமணிமாலைநற்றுகி

லந்தனமாதியீசனுக்களித்துளோ

ருந்துசீர்க்கோடிநல்லுகமொரொன்றினுக்

கெந்தைசேர்கயிலையினினிதுவாழ்வரால்

 

1263    குழந்தைவெண்மதிச்சடைக்குழகனுக்குமுன்

பழிந்திடுமாலயந்தனையுண்டாக்குநர்க்

கெழுந்தவன்புடன்புதிதியற்றுமன்னதின்

வழங்கிடுமதிகநான்மடங்குபுண்ணியம்

 

1264    தவலருந்தினவிழாத்தங்குந்திங்களி

னிவறலினெழுச்சிநன்கியற்றுவோரியாண்

டவர்மணித்தேர்விழாவணிநடத்துவோர்

சிவபிரானுடன்சிவபுரியிற்சேர்குவார்

 

1265    உற்றவித்தலத்திடையுயிர்மெய்யொத்துறக்

கற்றுணர்கலைவலோர்கண்டமாத்திரை

பொற்புடன்பொருந்தினோர்புனிதமேனியாய்

நற்பெருங்கயிலையினண்ணிவாழ்வரே

 

1266    ஆயினோரணுவளவறையுமித்தலத்

தேயநான்மறையவர்க்கீந்தவப்பொருள்

சேயுயர்விசும்புதோய்சிகரபந்திகண்

மேயசெம்பொறிகழ்மேருவாகுமால்

 

1267    உறுமொர்நன்பிடியனமுதலவினோரவண்

குறைவினான்மறைதெரிகோடியந்தணர்க்

கறுசுவையடிசிலன்னியதலங்களிற்

பெறவுவந்தருள்பலப்பேறுண்டாகுமால்

 

வேறு

1268    சதுர்முகக்கடவுளன்னசவுனகமுனிவவிந்தப்

பதிதனிற்றிலோதகஞ்செய்பான்மையோர்பலனையாமோ

துதிதரலரிதுமாதோசொற்றிடின்மன்றவாய்மை

மதிபொதிசடிலத்தெங்கள்வானவனறிவனன்றே

 

1269    புகலுநல்லின்பமிக்கபுண்ணியமளிப்பதாகி

நிகழ்தலம்புகழ்வதாகிநீள்பவந்துடைப்பதாகி

யகமகிழ்தரவெம்மானுக்கானந்தகானமென்றுந்

திகழ்வுறுநாமம்பெற்றித்திருநகர்சேர்ந்திலங்கும்

 

1270    தகுந்திருமுனிவீர்காணுஞ்சந்நிதிதன்னில்யானு

மிகுந்திருவுடைமைபெற்றேன்மேலையோர்தம்முன்யாவர்

புகுந்துதாம்பொருந்தின்மிக்கபுண்ணியந்தன்னாலன்னோ

ரகந்​தெளிந்தருளினீடுமறிவினாலும்பராவார்

 

வேறு

1271    சீருலாவுபிதிர்களுறுங்கதிசேருமாகதைசெப்புறுகிற்பவ

ரேருலாவுபொருட்பகர்கின்றவரீதுகாதினிறைத்திடுமன்பினோ

ரூர்கள்யாவுமொடுக்கிவிரைந்துவிணூடுலாவிடுமுப்புரம்வெந்திட

மூரன்முன்னம்விளைத்திடுமெம்பிரான்மோனஞானநன்முத்திபொருந்துவார்

 

சுச்சோதிபிதிர்களைமுத்தியடைவித்தசருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1271

*****

 

 

பதினேழாவது

தீர்த்தச்சருக்கம்

 

1272    மறைநான்குமனங்கிடந்தவழுவிலருட்சவுனகவன்னக்கலாபப்

பொறிமயினின்றனவரதநடனமிடும்பொழிறிகழும் பூவணத்தி

னறைதருதீர்த்தங்கடமிலரும்பவநீங்கிடவாடுமான்மியத்தின்

முறைமைதனைமூவாறுபுராணமுனியுரைப்பனெனமொழிவதானான்

 

1273    சீரார்ந்தகார்த்திகைநற்றிங்களுறுந்தினந்தன்னிற்சேர்முன்வாரத்

தோராழித்தேர்வெய்யோனுதிப்பதன்முன்மணிகுண்டத்துந்தித்தான

நேராகநின்றவன்மந்திரநவிற்றிமூழ்குநர்தாநினைந்ததேய்ந்து

பேராதபெரும்பவநோய்பெயர்ந்ததன்பின்சிவலோகம்பெறுவரன்றே

 

1274    வனசமலர்மாளிகையின்வண்டிருந்தின்னிசைபாடும்வண்டானஞ்சேர்

தனைநிகரத்தடம்படிந்துதருங்கிருதமறையவர்க்குத்தானஞ் செய்வோர்

நினைவுதருநெஞ்சாலுநினைப்பருங்குன்மாதிவெந்நோய்நீங்கிவான்றோய்

கனைகதிராயிரம்பரப்புகனலிதனதுலகத்திற்கலந்துவாழ்வார்

 

1275    இரவிமணித்தேர்பூண்டவேழ்புரவியுததிநடுவேறும்வேலை

மருவியவத்தீர்த்தத்தின்மார்கழித்திங்கட்டிங்கண்மாதினோடு

மொருமையுடன்படிந்தாடுமுத்தமர்நற்புத்திரர்ப்பெற்றுவந்துவாழ்வார்

பரவுசிவமந்திரத்தைப் பன்னிமுன்னாட்படியிலரன்பதியிற்சேர்வார்

 

1276    உறைதருமத்திங்கடனிலொண்கலைசேர்பூரணையினோரைதன்னின்

மருவியவன்புடன்பிரமதாண்டவர்மாபூசைசெய்வோர்மகேசலோகத்

தொருபிரமகற்பமுறைந்துகாந்தத்தினுருத்திரனோடுற்றுப்பின்றைக்

குருமணிநல்விமானமேல்கொண்டுசிவலோகமதிற்குடியாய்வாழ்வார்

 

1277    பங்கமில்சீர்தருமாகத்திங்கடனில்விசேடித்தெண்டிசைபரப்பும்

பொருங்குகதிரோனுதயப்பொருப்பினிலேழ்பசும்பரித்தேர்பூட்டும்வேலை

யங்கவன்மந்திரநவிற்றியரன்றிருமுன்னருத்தியினோடாடுமாந்தர்

துங்கமுடன்பவமொழிந்துசுந்தமாயத்துவிதமுத்திசேர்வார்

 

1278    மைக்கிடமாங்கடன்முகட்டின்மான்றேரில்வாளிரவிதோறான்முன்சீர்

மிக்கசிவநிசியினந்தவேகவதிதனின்மூழ்கிவிழிதுஞ்சாது

நக்கனைநான்கியாமத்துநன்கருச்சித்தருந்தானநயந்தீவோரெண்

டிக்குபாலகர்பூசைதினம்புரியச்சிவபுரியிற்சேர்ந்துவாழ்வார்

 

1279    இப்பரிசங்கமர்ந்துறையுமெல்லையினெம்மீசனருளிருந்தவாறோ

மைப்படியுந்திருநயனவல்லிதவம்புரிதலத்தின்வண்மையேயோ

வொப்பரியநவமணிசேருயர்விமானமதேறியும்பர்சூழச்

செப்பரியவுலகமெலாந்திசைவிசயஞ்செய்தின்பந்திளைத்துவாழ்வார்

 

1280    மானவுயரிடபரவிதன்னின்மணிகன்னிகைவைசாகமாக

நானமதுபண்ணினர்கணவில்பலதானப்பலமுநண்ணிவாழ்வா

ரானவமுதோதகமாமத்தீர்த்தத்துற்றதக்கிணாயனத்திற்

பானுமதிதனையரவம்பற்றிடுநாண்மூழ்கினரப்பலத்தைச்சேர்வார்

 

1281    கொடுமறலிதனையிடறுங்குரைகழற்காங்கவனுயிரைக்கொள்ளையீந்த

கடுவடக்குங்கந்தரத்தெங்கண்ணுதலோன்றிருமுனிருகணைபோமெல்லை

நடுவறுநன்மாதவத்துவசிட்ட முனிவன்கண்டவசிட்டதீர்த்தம்

படிபவர்பண்பாடியறுபதந்துவைக்கும்பங்கயன்றன்பதத்தைச்சேர்வார்

 

1282    கனைகதிரோன்கடன்முகட்டேழ்கடும்பரிபூண்டிடுமான்றேர்கடாவும்வேலைத்

தினம்பொருபோர்க்களத்தசுரர்செங்குருதிமுடைநாறும்வச்சிரத்தான்

மனமகிழ்விற்றருகிருதமாலைமேலணிந்திலங்குமிந்த்ரதீர்த்தந்

தனிலுயர்பங்குனிதருமுத்தரமாடினோர்யாகபலத்தைச்சார்வார்

 

1283    பார்புகழீராறுதினம்படிந்தாடிற்சாகமகப்பலன்படைப்பார்

சோர்வறநற்றிங்களுவந்தாடினரச்சுவமேதபலத்தைத்துய்ப்பா

ரோர்கரநீரருந்தினரக்கினிட்டோமபலந்தன்னையுறுவர்நாளும்

பேர்பெறும்யாகாதிகன்மம்பேணாதபலன்மூழ்கிற்பெறுவரன்றே

 

1284    பூரணையிற்கலையொடுங்குங்குகுவதனிற்சங்கிரமந்தன்னிலிந்து

வாரமதினெடுத்துரைத்தமாதீர்த்தந்தொறுமூழ்குமாந்தரேய்ந்த

வார்கலிசூழுலகத்திலன்னையர்தம்முதரத்திலணுகாரம்ம

வோரினவருமாபதிதனுருவமடைந்திடுவரிமூதுண்மையாமால்

 

1285    மிக்கவறம்பொருளின்பம்வீடருள்வதாய்மேலாய்விமலமாகித்

தொக்கவரும்புண்ணியமாய்த்தொல்பதியாய்ப்பிதிர்கள்பவந்துடைப்பதாகித்

தக்கனருடவக்கொடிநற்றகுந்திருமால்சதுர்முகன்செங்கதிர்மார்க்கண்டன்

றிக்குலகம்வழிபடுமத்திருநகர்சேர்குநர்க்கரிதுசெப்பினின்றாம்

 

1286    நவின்றிடுவர்ணாச்சிரமநன்கடைவுபெறநாளுநாடியுள்ள

முவந்துபுரிகுற்றனரேலுரைக்கரிய பரமசிவனுருவமாவார்

தவந்தருமித்தலந்தன்னிற்றகுமிடையூறமூதடையாவகைகணேசன்

சிவந்தமுருகன்வடுகனிவர்பூசைசெய்யினிகறீர்ந்துவாழ்வார்

 

1287    புகலரியகேதாரமலைகாசிமாகாளம்புட்கரஞ்சீர்

திகழ்கமலாலயந்தில்லைவனந்தீதில்வேதவனந்திருவெண்காடு

மகிழ்தருதென்மதுரைதனின்மருவுகதியைப்பெறுவான்வைகுவோர்சேர்

மிகுபலமானவையனைத்துமேவுவர்பூவணநகரின்மேவுவோரே

 

1288    ஆதலினித்தலமெல்லாமத்தலங்கட்கதிகமெனவறையுமிந்தக்

காதைபுகழ்தருபிரமகைவர்த்தத்திரண்டுதலையிட்டவென்ப

தோதிடுமத்தியாயத்தினோர்ந்திடுகசவுனகவென்றுரைத்தான்மிக்க

மூதுணர்வின்மேதகுநல்வியாதனருண்மாணாக்கமுனிவர்கோமான்

 

 

வேறு

1289    ஆரிரும்பவமாற்றியவாக்கினாலாரணந்​தெளிவுற்றிடுமந்தணீர்

சேருநன்பலதீர்த்தவிசேடமாஞ்சீர்தருங்கதைசெப்பிடுஞ்செஞ்சொலோ

ரோர்வுறும்படியோதியமேன்மையோரோர்ந்துசிந்தைகொளுத்திடுமன்பினோர்

பார்புரந்தருள்பார்த்திவராகியேபரவரும்பரமுத்திபொருந்துவார்

 

தீர்த்தச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1289

*****

 

 

பதினெட்டாவது

நளன்கலிமோசனச்சருக்கம்

 

1290    அரியவிரதம்பூண்டவந்தணராவையத்தோரங்கமாக

வுரைதருநல்லோருயிராயுறைகின்றசவுனகனையுற்றுநோக்கிப்

பரிவினுடன்பௌராணிகோத்தமனாம்பன்னுதவப்படிவச்சூத

னரபதியாநளன்கலிமோசனமானகாதைதனைநவில்வதானான்

 

1291    அருளுடனெண்டிசாமுகஞ்சூழங்கணுலகெங்கணுஞ்சென்றளப்பச்சொங்கோன்

மருவியமண்டலங்கொண்டமாகீர்த்திபுனைந்துமறைவரம்பினின்றோன்

விரவுமறம்பொருளின்பம்வீடடைவானருச்சனைசெய்விருப்பின்மேலோன்

கருதரியபரராசர்கனகமணிமுடியிடறுங்கமலத்தாளான்

 

1292    முழுதுலகந்தனிலேட்டினெழுதரியசதுர்வேதமுற்றுநாவோ

னழிவிலரனரியதிருவஞ்செழுத்தையுபதேசமருளாசானைப்

பொழிதருநன்மதுவாசப்புதுமலரிட்டருச்சித்துப்போற்றிநாளுங்

குழைவுறுமன்புடனகத்துக்குடியிருத்துங்கோதிறவக்குணக்குன்றன்னான்

 

1293    அடன்மிகுவெம்படைகாத்தலமைச்சரணட்புடனூக்கமறிவஞ்சாமை

தொடைபெறுநல்லியற்கல்விதூங்காமைதூய்மைதுணிவுடைமைவாய்மை

யுடனுரியகுடிபுறங்காத்தோம்பல்பகையொடுக்கலிவையுடைமைபூண்ட

கொடைமடம்பட்டிடுகோதில்குவலயங்கொள்குங்குமப்பொற்குவவுத்தோளான்

 

1294    முழங்குதிரைக்கடலுலகமுழுதுமொருமதிக்கவிகைமுறையிற்காத்து

வழங்குகலிவலிதொலைத்துமருவலர்தம்மாருயிரைவாங்கிமாந்திக்

கொழுங்கனற்செங்குருதிதனைக்குடித்துமிகக்குமட்டியெதிர்கொப்பளிக்குந்

தழங்கிலைவேனெடுந்தடக்கைதாங்குநளனென்றுரைக்குமோங்குபேரான்

 

1295    ஆளுமறைக்குலத்தினன்பினவதரித்தவருங்குலத்தினரசர்கோமா

னீளுமருளுடனோர்நாணித்தநியமக்கடன்கணிரப்பிச்செம்பொன்

வாளுறைசேர்நீள்சுரிகைமன்னீளக்கச்சையுடைமருங்குசேர்த்தித்

தாளதனிற்றொடுதோலுந்தகவீக்கிச்சட்டகமேற்கவசந்தொட்டு

 

 

வேறு

1296    கோட்டியசிலைக்கைதாங்கிக்கோதையங்குலியிற்சேர்த்தி

மூட்டியபேராவந்தான்முதுகுறப்பிணித்தியங்க

ளீட்டமெங்கணுந்துவைப்பவெண்ணருங்கருவிபம்ப

வேட்டையின்விரும்பிவேட்டுவேந்தர்களோடும்போந்தான்

 

1297    முடங்குவாலுளைமடங்கன்முருக்கியபுகர்முகஞ்சூழ்

கடங்களுங்கொடிகள்பின்னுங்கண்டகவனமுஞ்செந்தீப்

படர்ந்தெரிவதிற்செங்கஞ்சம்பலமலர்கின்றநற்பூந்

தடந்தருமிடங்களெங்குந்தகுவலைக்கண்ணிசேர்த்து

 

1298    பூண்டநாண்டொடர்ச்சிநீங்கிப்பொங்குகானெங்குந்தாண்டி

நீண்டவாலினைக்கொழித்துநேர்கடுங்காலினோடிக்

காண்டகுசெவிசிலிர்த்துக்கடுங்குரன்ஞமலிசூழத்

தூண்டியேதொகுவிலங்கின்றொகையெலாந்தொலைவுசெய்தே

 

1299    பச்சைவாம்பரியேழ்பூண்டபாழியோராழித்தேரோ

னுச்சியினேறும்வேலையுறுகதிர்தெறுதலாலே

நச்சிலையயில்வேலங்கைநளனனிவேட்டையாடி

யச்சிலைவேடரோடுமரும்பசியால்வருந்தி

 

 

வேறு

1300    நேடிப்பசுந்தேனிறைமலரினீடுஞ்சுரும்புபண்பாடு

மோடைப்புனலினாடியுவந்துச்சிக்கடன்றீர்த்துயர்தருக்கீ

ழாடற்பரியூரரசர்பிரானங்ஙன்பொதிசோறருந்தியுடன்

வேடப்படைகள்சூழ்தரவேவிரவோர்கன்னல்விழிதுயின்றான்

 

வேறு

1301    மாயிருஞாலத்தின்னல்வந்தடைந்திடவுமாக

மீயுயர்தருவினின்றுமேதனினிவீழ்வதாயுங்

காய்சினத்தரவந்தீண்டிக்காளிமங்கஞலத்தன்மெய்

தோயவுங்கனவுகாணூஉத்துண்ணெனத்துயிலுணர்ந்தான்

 

1302    துண்ணெனத்துயிலெழாமுன்சூழ்ந்திடுமமைச்சர்பாவ

புண்ணியம்புகலுமேனைப்புரோகிதர்விரவிப்போர்வே

லண்ணலிங்குற்றதென்கொலருளுதியென்னமன்னன்

கண்ணுறக்கண்டதீயகனாநிலைகட்டுரைத்தான்

 

1303    ஆங்கதுகேட்டோர்யாருமரசர்கோன்றன்மேற்பார்வை

தாங்கியோர்சரதமாற்றஞ்சாற்றுவார்தலைவவிந்தத்

தீங்குறுகனவுகண்டதீமைநீங்கிடநற்சாந்தி

பாங்கினாற்புரிதிபின்​றேற்பலித்திடும்பகற்கனாவே

 

1304    ஆதலாலரும்பகற்கணரசர்கண்டுயிறலாகா

வோதிடின்வாதபித்தமுறுகனவந்தியாமத்

தேதமாம்வெந்நோய்சிந்தையெண்ணியதிடையினெய்துங்

காதல்கூரிராக்கடைக்கண்கண்டதுகருதினுண்டாம்

 

1305    கனைகடன்முகட்டின்வெய்யோன்கடும்பரித்தேரூர்காலை

நினைவுறுங்கனவோர்திங்கணிகழ்த்திடும்பகற்கணேருந்

தனைநிகர்தருமசேதாதனைவிடுகின்றவேலை

யினிவருகனவியம்பிலீரைந்துதினந்திற்சேரும்

 

1306    கழிதருகனவின்செய்திகாண்டியீதரசரேறே

வழுவறவியன்றதானம்வழங்கிடல்வேண்டுமின்றே

லழிதராதருளல்வேண்டுமறிகவெம்மரசென்றன்னோர்

மொழிதருசாந்திமன்னன்முடித்திலன்முந்தையூழால்

 

1307    சில்பகல்கழிந்தபின்னர்த்திகழ்மணிப்பூணினானுந்

தொல்பெருந்தானிகோட்டிச்சூதாடியாவுந்தோற்றே

யல்லலுற்றருஞ்சிறாரோடாந்தமையந்தியென்னும்

வல்லிமான்றனையுநீத்துமல்லல்சேர்வனம்புகுந்தான்

 

1308    புகுந்துகானகத்துநாப்பட்புந்தியையொருப்படுத்துத்

தகுந்திறன்மன்னன்றன்னந்தனியுடன்சாரும்வேலைப்

பகுந்தவாய்ப்பாம்பதாகிப்பகைகொடுநகுடனென்பான்

றிகழ்ந்தமெய்ப்புகழ்மான்றன்னைச்சீறியேதீண்டினானே

 

1309    சீறியேதீண்டலோடுந்தீவருமரம்போற்செந்தீ

வீறுயிர்நளன்றனக்கு​வெவ்வராவிடத்தைவீட்டிக்

கூறரிதாகியோங்கிக்கொழுந்துவிட்டெழுந்துமண்டி

மாறுசெய்நகுடன்றானும்வனந்தனின்மறைந்துபோனான்

 

1310    திவ்வியவழகின்மேலோன்றேசெலாமழுங்கிமாசாய்

​வெவ்வராத்தீண்டியங்கம்விகிர்தமிக்குறவேமேவு

மவ்வினைதுஞ்சப்பின்னரறம்பிடித்துந்தலாலே

யெவ்வமுற்றிருதுபன்னனிடத்தவன்றொண்டினேய்ந்தான்

 

1311    அன்னவன்சின்னாளேகவருந்ததிகற்பினென்னத்

தன்னிகரெழிலினோங்குந்தமயந்திசொயம்வரத்துக்

கின்னருட்டலைவனாகியின்னறீர்ந்திருதுபன்ன

மன்னவன்றன்னோடேகிமாதினைவல்லைசேர்ந்தான்

 

1312    ஆங்கவன்பின்னுஞ்சூதங்காடிமுன்னவனைவென்ற

பாங்குடன்றனதுதொல்சீர்ப்படியெலாமடைவிற்கொண்டு

தீங்குறுங்கனவுவந்தித்தீமையைப்புரிந்ததென்னாத்

தாங்கியபூந்தார்மார்பன்றன்னுளங்கொண்டுமன்னோ

 

1313    தங்குதீர்த்தங்கடோய்வான்றமயந்தியென்னுமாது

மங்கலந்தருநன்மைந்தர்மந்திரித்தலைவர்சூழ

வெங்கணும்பரவுஞ்செம்பொனினமணித்தேரினேற்றிப்

பொங்குவெம்படையினோடும்புரவலன்கொண்டுபோந்தான்

 

 

வேறு

1314    கேதாரமவிமுத்தங்கிளத்துகயைபிரயாகைகிளர்வானோங்கும்

போதார்ந்தவடகானம்பொங்கியெழுங்காளிந்திபுகலவந்தி

காதார்ந்தகுழையனரித்துவாரமிகுமாளவமாகதங்கரகோல

மாதாரமாத்திநகர்பஞ்சாப்சரத்தோடாரணநற்கானம்

 

1315    பிறங்குகிருட்டினகானஞ்சடாயுதலஞ்சோமேசம்பீமகானஞ்

சிறந்திடுமஞ்சேசுரஞ்சல்லிகாயாவனங்கோகுரரேசந்தீதி

லறங்கரைநால்வேதவியாதாச்சிரமம்வெதிரிகாச்சிரமமாதி

கறங்குதிரைக்காவிரிசூழ்கருதுதிரிசிராக்கியமுங்கண்டுமன்னோ

 

1316    தெண்டிரைமோதிக்கறங்குந்தீர்த்தமவையாடியவன்மூர்த்திபேணிப்

பண்டருநற்குறுமுனிவன்பன்னுதமிழ்ச்சொன்மணக்கும்பாண்டிநாட்டில்

வண்டலெடுத்தலைபுரட்டும்வைகைநதியுடுத்தமதுராபுரேசன்

கண்டுறுசொற்சயனயனகர்ப்பூரநாயகிதாள்கண்டுபோற்றி

 

1317    கொடிமாடமதிற்கூடற்குணதிசையோசனையெல்லைகொண்டிலங்கும்

பொடிமூடுதழலெனவேபொருந்தியதென்பூவணத்திற்பொருந்திநாளும்

படிநீடுபுகழ்கொண்டபாதாளநாதனையும்பங்கிற்பச்சை

வடிவோடுமுடனாகிவளர்நாதவதிதனையும்வந்தித்தேத்தி

 

1318    முழுதுலகும்புகழ்தரமும்முரசுநின்றுமுழங்குமுன்றின்முழுவுத்தோளான்

வழுவில்பதிமகிமையையுமனத்துறுநின்மலத்தினையுங்கண்டுமுன்ன

மழிவுறவெஞ்சூதாடியலமரவெங்கலிநலியவகன்றிடாவெம்

பழிகழுவும்படிகுறித்துப்பரிமேதயாகத்தைப்பண்ணலுற்றான்

 

 

வேறு

1319    ஆதியந்தமிலாதவரன்றிருக்

கோதிலாதபொற்கோயிற்குடதிசை

யோதுகூவிளியெல்லையினோங்கவே

காதல்கூர்கனகத்தலக்கம்மியர்

 

1320    மாகநீணவமாமணிகொண்டுவே

தாகமப்படியாயிரந்தூணிறீஇப்

போகமன்னியபொன்னகரென்னவே

யாகமண்டபமேத்தவியற்றினார்

 

1321    மந்தமாருதமூரும்வசந்தநாட்

கந்துகம்பட்டங்கட்டிவிடுத்திசை

நந்தும்வேதியரோடுமந்நன்னளன்

றந்தவேள்வியஞ்சாலையிலேறினான்

 

1322    ஓடுவாம்பரியுற்றகுளப்படி

நாடியோமநயந்துபுரிந்துபொன்

னாடையாபரணங்களணிந்தணி

நீடுவேள்வித்தறியைநிறுவியே

 

1323    ஆண்டுதானென்றறைவபையாதியான்

மாண்டருங்கனல்வேள்வியமைத்தபின்

வேண்டுமாறுசுவையின்மிதவைமெய்

பூண்டவேதியர்பூசைபுரிந்தனன்

 

1324    ஆசிலவ்வருடாந்தத்தருந்தமிழ்

வாசமாமலயத்துமந்தாநிலம்

வீசுங்காலத்துமின்னனையோடும்வந்

தீசன்விண்ணவரேத்தவங்கெய்தியே

 

1325    மேவுமந்தமிகுந்திரையாயுக

மோவில்பல்புகழோங்குநளன்றனக்

கியாவுநல்கியிருங்கலிதீர்த்தருள்

பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன்

 

1326    எந்தஞான்றுமிருந்துவிளைத்திடு

முந்துகாதலரோடுறுவைகையி

னந்தவேந்தனவபிருதப்பெயர்

தந்தநானமுந்தானமுஞ்செய்துபின்

 

1327    செங்கனற்றனைச்செய்துத்தியாபனம்

பொங்குபூவணத்தெம்புனிதன்றனக்

கங்கண்மாநிலமெங்கணுமாற்றவே

மங்கலோற்சவமன்னனுண்டாக்கினான்

 

1328    பிரமகைவர்த்தமாமிப்பெருங்கதை

சரதமூன்றுதலையிட்டவெண்பதா

முரியவத்தியாயந்தனிலோரர்திநீ

நரநளேந்திரநன்கலிமோசனம்

 

1329    இந்தநளன்கதை

சந்தமுடன்புகல்

சிந்தையுவந்தனர்

வெந்துயர்சிந்துவார்

 

நளன்கலிமோசனச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1329

*****

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *