திருப்பூவணப் புராணம் – பகுதி – (19)

0

கி.காளைராசன்

பதினாலாவது

உமைவருசருக்கம்

 

1154    பூங்குழலுமைபின் பூவணந்தன்னிற்பொருந்தி நற்றவஞ்செயுமாறு

மோங்கியகாதலுவந்திடத்தானமுத்தமர்க்குதவிடுமாறுந்

தாங்கரும்வெகுளிதணந்திடுஞானச்சவுனககேளெனவருளிற்

றூங்கியேமிகுவெந்தீங்கெறிந்தோங்குஞ்சூதமாமுனிவரன்சொல்வான்

1155    இம்முறைமகிழ்கூர்ந்திமமயமால்வரையினின்பநற்கடிமணம்புணர்ந்து

செம்மையினோங்குந்திருக்கயிலாயச்சிலம்பினிற்சேர்ந்தபினோர்நாட்

கொம்மைசேர்வெம்மைக்கோங்கரும்பெனவேகுவிந்தபொற்குங்குமக்கொங்கை

வெம்முனைமிளிர்வேல்விளங்கியநயனமெல்லியற்கெம்பிரான்விளம்பும்

 

1156    தழுவுதற்கெட்டாத்தபனியவரைசேர்சந்தனக்குங்குமக்கொங்கைக்

குழைகிழித்தோடிக்கொடுஞ்சமர்விளைக்குங்கூரிலைவேனெடுங்கண்ணாய்

விழையுநீயாமுன்விளம்புரைமறுத்துமிக்கதக்கன்வயிற்சென்ற

பிழைதனையொழிவான்வழிமதியென்னாப்பேசினன்பிறையணிபெருமான்

 

1157    பார்தனின்மேலாம்பரதகண்டத்திற்பாண்டி நன்னாட்டினிற்பரந்த

வார்புனைச்சங்கூர்வைகைசூழ்கிடந்தமாடநீண்மதுரைமூதூர்சேர்

பூர்வதிக்கதன்கட்புகலும்யோசனையிற்பொங்கர்சூழ்கற்பகவனத்தி

லோர்தருவளர்த்தேயுறுதவமுஞற்றிலோர்சிவலிங்கமங்குண்டாம்

 

1158    அத்ததருநீழலமர்ந்தலிங்கத்தினழகுடன்பழமறைவிதியிற்

பத்திமிக்குயர்ந்தபூசனைபயிற்றிற் பண்டைநாளண்டர்கண்டறியாச்

சுத்தமாமந்தத்தொல்லிலிங்கத்திற்றோன்றியாநினக்கருள்புரிதுஞ்

சித்திரபடம்போற்றிகழ்புறவடிமேற்செஞ்சிலம்பரற்றுசீறடியாய்

 

1159    என்றருள்புரிந்தேயேகெனவடியேற்கிப்பரிசிருந்தவாறென்னாக்

கொன்றையஞ்சடிலக்குழகனாணையையுட்கொண்டுதாழ்ந்துடன்விடைகொண்டு

துன்றியபாரிசாதமாவனத்திற்றோன்றுபல்லுலகெலாமீன்றுந்

தன்றனித்துணையாநின்றமெய்ஞ்ஞானசங்கரியடைந்தனளன்றே

 

1160    தேவதேவன்றனருளினாலோர்நற்றேவதாரத்தினைப்பதித்து

மூவுலகேத்தமுறைமையின்வளர்ப்பாண்முண்டகச்சூடகக்கரத்தாற்

கூவலின்வடிவங்கொண்டிடத்தேவிகுண்டமென்றொருபெருந்தீர்த்த

மேவொரைந்தெனுந்தூரத்தினிற்கண்டாளீசனுக்குத்தரதிசைப்பால்

 

1161    கூறிடுந்தேவிகுண்டதீரத்தின்குணதிசைகுறித்திடுமெல்லை

யாறுவெம்பகையுமறவெறித்துதறியரும்பன்னசாலைசெய்ததன்கட்

சீறுகாலருந்திச்சிலபகலதுவுஞ்சிறிதருந்தாதுதேவாண்டி

னூறுமன்புடனோராயிரவருடமொண்டொடியுறுதவமுழந்தாள்

 

1162    அப்பரிசந்தவருந்தவமுழந்தேயாயிரமாண்டுமாண்டதற்பி

னொப்பரிதாயவுமையவள்வளர்த்தவோங்குமந்தாரமூலத்திற்

பைப்பெரும்பாந்தட்பாதலத்துதித்துப்படியினைக்கீண்டுமேன்முளைத்துத்

திப்பியமாகத்திருவருளுருவாய்ச்சேர்ந்ததோர்திகழ்சிவலிங்கம்

 

1163    வாலுகமயமாய்வானுறநிமிர்ந்து மன்னியசோதியாய்மேலா

யோலிடுமறைகளுரைத்திடுமிலிங்கவுற்பவந்தனதுகற்பகத்தின்

மூலநேர்வந்துமுளைத்தலுங்கண்டுமுழங்கழன்மெழுகெனவுருக

ஞாலமேல்விழுந்துபணிந்தெழுந்தயர்ந்துஞானநாயகியிதுநவில்வாள்

 

1164    ஆயிரந்தேவாயனந்தனிலடியேனருவினைப்பயத்தினாலறியாச்

சேயதாளெனதுசென்னிமேற்பதித்துன்றிருவருள்புரிந்திடநினைத்தோ

மாயிருஞாலந்தன்னினீமுளைத்துவந்தெழுந்தருளினையென்னா

நீயருள்கெனக்கண்ணீர்முலைமுன்றினிறைந்திடநிமலனுக்குரைத்தே

 

1165    மருவலங்காரவல்லிசொல்லருஞ்சீர்மன்னியமாதவந்தன்னாற்

பரவுமாசாரம்படைத்தபண்பதனாற்பர்த்தலங்கனத்துறுதோடம்

பொருவருபூசைமறைமுறைபுரிந்துபோற்றிசெய்தன்பினான்மாற்றி

யருளுடன்முன்போலானந்தகானத்தரன்றொழில்புரிந்தமர்ந்திருந்தாள்

 

1166    வன்னமாமளிகண்மதுவுணும்வட்டமட்டறாதுயர்ந்தநன்முட்டாட்

பொன்னிதழ்க்கமலப்பொகுட்டில்வீற்றிருக்கும்பொறிநிறப்புயல்வணமூர்த்தி

யன்னவாகனனேயாதிவானவர்களருந்தவராயிரங்கதிரோன்

பின்னுமவ்விலிங்கந்தன்னின்மெய்யன்பின்பெருக்கெழவேயருச்சித்தார்

 

1167    இந்தநல்லிலிங்கத்தியல்பினைநாடியெண்ணருமாதவர்நண்ணி

யந்தநற்பாரிசாதமூலத்தினணைந்திடுமுகந்தொறுமாங்காங்

கெந்தைதாண்மலரையிதயநாண்மலரிலிருத்தியேவேறுவேறாகத்

தந்தருளிலிங்கந்தாபனஞ்செய்துசந்ததம்வழிபடலுற்றார்

 

 

வேறு

1168    எத்தலமும்புகழித்தலமேவியவியல்பாலே

பத்திகொள்பாரிசாதநிழற்கட்பரமேசன்

சித்திரமேவியசேவடிகண்டுதினந்தோறு

முத்தியடைந்திடமோனமடைந்தனரொருசாரார்

 

1169    வெங்கனலாகுதிவேள்விவிரும்பினரொருசாரார்

தங்கியயோகசமாதியடைந்தனரொருசாரார்

பொங்குதவம்புரிபொற்பின்விளங்கினரொருசாரா

ரங்கணரன்றனருச்சனைசெய்குநரொருசாரார்

 

1170    பரிசனர்பமூறொழில்பரிவுகொடடைகுநரொருசாரார்

குருவினைவழிபடவகமகிழ்கூருநரொருசாரா

…..   ……

(இப்பாடல்வரிகளையடுத்து  உள்ள பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை !)

 

1185    ….     …. புரிகுழலுமையொடுபொருமடல்விடைவருமநகன்மேல்

வருபவமறும்வகையருளினனொருதனிவரமன்னோ

 

1186    அடகதுதனைநன்குடன்மிசைதருமந்தணனுக்கு

முடலுயிர்விடுபொழுதும்பரினுயர்கயிலாயத்தின்

விடநுகர்தருவெள்விடைதருகொடியவன்மெய்யன்பாற்

றிடமுறவேதிகழ்மறைமுடிதனையுபதேசித்தான்

 

1187    கோடுதிகழ்ந்தகுழந்தைமதிச்சடைகொண்டென்று

மாடுமரன்றிகழ்பூவணநகரமதன்பாலே

பீடுறுதானமளிப்பவரங்கதுபெற்றோர்க

ணீடுமரும்பலநாடிநிறத்திடினிகராகும்

 

1188    அன்னியதானமதன்கணளிக்குமருந்தான

மன்னுபலங்கள்வழங்குநர்கட்கவைவந்தெய்து

மின்னருளாலமூதேற்குநர்க்கென்றுமிரும்பாவந்

தன்னிகர்சவுனகசத்தியமாமிதுசாற்றுங்கால்

 

1189    மெய்ப்படுதானமளித்திடுமந்தநன்மேலோர்கட்

கொப்பறுநற்பலனுண்டெனவோதுதலேற்றோர்கள்

செப்பருதீநரகத்திடைசேர்குவரென்னுஞ்சொ

லிப்பதியின்கணதில்லையிரண்டுமிணையாமால்

 

1190    இத்தலமெங்கணுமித்தலநேர்சொலவின்றாகு

மித்தலநல்குமையுந்தவமுற்றவிருந்தான

மித்தலமேயெனிலித்தலமன்னுமுயிர்க்கெல்லா

மித்தலநன்கெனவுரைசெயவேண்டுவதின்றாமால்

 

1191    புரிகுழலுமைதிகழ்பூவணம்வந்துபொருந்துஞ்சீ

ருரைதருபிரமகைவர்த்தபுராணத்தொன்றூன

மருவியவெண்பமூதாகவழுத்துநலத்தியாய

மருளுறுசவுனகமுனிவவருந்தவவறவீர்காள்

 

வேறு

1192    சிமயமாலிமயாசலமேவியசிவமனோன்மனிசேர்கவுமாரிதேர்

சமயநாயகிசௌரிசகோதரிசகலகாரணநாரணியாயிதழ்க்

கமலலோசனிகாதையையோதுநர்கருதியேசெவிவாய்வழியோர்குவோ

ரமலநாயகனார்பதமாகியவரியதாமரைநீழலில்வாழ்வரே

 

உமைவருசருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 1192

*****

 

 

பதினைந்தாவது

சுச்சோதிதீர்த்தயாத்திரைச்சருக்கம்

 

1193    படர்செழுந்தகட்டுப்பையவிழ்துத்திப்பாந்தளின்றலையின்மேற்படுத்த

வுடைதிரைக்கடற்சீருலகினில்மேலாயுரைதருமித்தலப்பெருமை

தடைபடாதருளிற்சார்ந்திடுமின்பச்சவுனகமுனிவகேளென்னா

முடிவிலானந்தவாரிதிமூழ்குமுதிர்தவச்சூதன்பின்மொழிவான்

 

1194    திரைபுரள்கோதாவிரிதருதீரஞ்சேர்ந்திடும்பலவளனார்ந்த

பொருவருபோகவதியெனவோங்கும்பொற்சுவருடுத்தநற்புரியி

னரசர்கணெருங்கியறுதினந்தத்தமருந்திறையளந்துவீழ்ந்திறைஞ்சப்

பரவருமகுடமணியொளிபரப்பும் பரிபுரமருவியபதத்தான்

 

1195    அருமறையாளர்க்கருச்சனையன்பினாற்றியேயறங்கள்கைக்கொண்டோன்

பெருகுநற்றீர்த்தத்துறைதொறுந்தோய்ந்துபெருங்குலப்பிதிர்கடன்றீர்த்தோ

னிருநிதியதனையிரவலர்க்காற்றியிரப்பெனுமிருள்வலிதுறந்தோன்

கருதரிதாயகலைபலதெரிந்துகடக்கருங்கலைக்கடல்கடந்தோன்

 

1196    காமனிற்சிறந்தகட்டழகுடையோன்காமமாதியகளைகட்டோன்

றாமநீள்புயஞ்சேர்தரையுயிர்க்கெல்லாந்தாயினினூங்குதண்ணளியோன்

சேமமாகியசெஞ்சுடர்வடிவேலாற்றெவ்வலியடக்கியதிறலோ

னேமியந்தடக்கைநீனிறச்செங்கணீண்டமாலெனவருள்பூண்டோன்

 

1197    செப்புமாயிரநற்றிருந்துமந்திரத்தாற்சிரித்துமுப்புரந்தனையெரித்த

முப்பரம்பொருளாமுக்கணெம்பிரானைமுப்பொழுதருச்சனைமுயல்வோன்

பைப்பெரும்பாந்தட்பமூறலைசுமந்தபடியெலாங்கண்ணிமைபோல

வொப்பருமதியமுறழ்கவிகைக்கீழோங்குசெங்கோனடாத்துரவோன்

 

1198    மதிவளர்ந்தொடுங்கிவந்திடுநாளின்மன்னியவட்டமிதன்னிற்

றுதிதருமர்த்தோதயமகோதயத்திற்சொல்விதிபாதநன்னாளி

னுதயநாடனிலோராயிரமோரொன்றுளங்களிதூங்கவெஞ்ஞான்றுந்

திதமுறுதானவிதமிகவளிக்குந்தேவவன்மாவெனும்பெயரோன்

 

1199    அன்னதொல்புகழ்சேர்மன்னர்மன்னவனுக்கழிதலின்முழுதுலகேத்த

மன்னுசுச்சோதிமாநீதிமுகனல்வதானியன்றேவமித்திரச

னென்னுநன்மைந்தரீரிருவோருமிகலறுமகரமேலுயர்த்த

கன்னலஞ்சிலையிற்காமனேயென்னக்கண்ணகன்புவியினண்ணினரால்

 

1200    சாலவுங்கற்றோர்தங்கள்பாற்கலைகடாந்தெரிந்திருமுதுகுரவர்

சீலநற்குரவன்செப்பியமாற்றந்தினந்தொறுந்திறம்பிடாத்திறத்தோர்

ஞாலமேற்றிகிரிபுருட்டிநன்களிப்பாரைபதியெனவளர்ந்ததற்பின்

மாலுமெய்த்திருவும்போலவர்க்கின்பமணம்புணர்வித்தனன்மன்னன்

 

1201    மன்னவனந்தமைந்தர்நால்வருக்குமணம்புணர்வித்தபின்மரபான்

முன்னவன்றனக்குமுழுதுலகளிப்பான்மொய்த்திடுமணிமுடிகவித்துப்

பன்னுமந்திரிகடம்மைநம்புதல்வர்ப்பாதுகாத்திடுமெனப்பணிந்துத்

தன்னுடைமடவாடன்னொடும்பொதும்பர்தான்றிகழ்வனத்திடைச்சார்ந்தான்

 

1202    சார்ந்துபூதங்கடகுபொறிதணந்துதடுப்பரும்வளியையுந்தடுத்து

நேர்ந்தமெய்ஞ்ஞானநிட்டையிற்கூடிநேயமோடுற்றுடனீத்தான்

சேர்ந்திடுந்தருமசீலையுங்கணவன்செல்வழிக்கொடுசெலத்திருநன்

கார்ந்திடுமுன்னோனனுசரோடவர்க்காங்கந்தியக்கடன்முடித்தன்னால்

 

1203    அதுபொழுதங்கண்ணைந்துமுன்னவனையாரருள்வீணைநாரதன்றான்

றுதிபலபுனைந்துசொல்லுவதுடையேன்றூயநற்பாரெலாந்தோண்மேன்

மதுமலர்மாலையென்னவேசுமந்தமன்னநின்மனத்திடைமதித்தே

யிதுபுரிவைகுயேலாழிசூழுலகத்தின்றுனக்கிணையிலையென்றான்

 

1204    இந்தநற்றலத்தினிருங்குலப்பிதிர்களியைந்துநிற்கெதிர்முகந்தரவே

வந்துநீவழங்குந்திலதருப்பணத்தைவாங்கிடின்மற்றையதலத்தை

முந்துறக்காண்டியத்தலம்பிதிர்கண்முத்தியினடைந்திடும்புரமா

மந்தநற்றலமேயரும்பெருந்தலத்தினதிகவுத்தமதலமாமால்

 

1205    அன்றியும்பிதிர்களனைவருமேலாமரும்பெருங்கங்கையின்கரையி

னொன்றியமகிழ்ச்சியுற்றினிதிருப்பருரைக்குமெட்டருப்பணமதனை

மன்றவப்பிதிர்கள்வளங்கையில்வழங்கின்மற்றையர்நற்கதியடைவ

ரென்றதையானிங்கியம்பவேண்டின்றேயிகல்கடிந்திலங்கியவேலோய்

 

1206    ஆதலாலிந்தவோதநீர்ஞாலத்தருங்குலப்பிதிர்கள்யாவருமே

காதலினினைந்துதிலதருப்பணத்தைக்கைக்கொளும்பதியைநீகருத்தின்

மேதகக்காண்டியென்றுநன்மகதிவீணைநாரதனியம்பிடலும்

பூதலமன்னன்பொருவருந்தவத்துப்புரோகிதற்கின்னன்புகல்வான்

 

1207    ஆரழல்வளர்க்குமந்தணீர்நுந்தமம்புயப்பாதநுண்டுகளாற்

பேர்பெறுமெமதுபெருங்குலத்தோர்கள்பெருங்கதிபெற்றனரதனா

லோரினத்துகளுக்குரியம்யாநீவிருகந்தருள்புரிகுதிரென்னா

நாரதற்பணிந்துநற்றவத்தலைவனானிலவேந்தனுக்குரைப்பான்

 

1208    தொடுகடலுலகிற்றுன்றிருடுருவுஞ்சுடரவன்றொல்குலத்தோன்றல்

வடுவறுசிறப்பின்மறிதிரைக்கங்கைமாநதியாகியதீர்த்தத்

தடைவினிற்சென்றேயாடுதியாயினருத்தியினாரதனுரைத்த

படிநினக்குண்டாம்பகர்குவமின்னும்படியையோரடியினாலளந்தோய்

 

1209    கடஞ்சொரிகரடக்கவுளுடைக்கறைக்காற்கசரததுரகமாசேனை

மடந்தையரங்கிவளர்த்திடுமறையோர்மன்னுமாணாக்கர்பாங்காகத்

தொடர்ந்துபின்செல்லத்தூமணிகனகஞ்சுடர்விடுமாளிகைக்கொண்டு

படர்ந்திடுகென்னாப்படிவன்றான்பகர்ந்தபான்மையிற்பார்த்திவன்படர்ந்தான்

 

 

வேறு

1210    திக்குலகெலாம்பரவுதீர்த்தமதின்மேலாய்த்தேசுபெறுகின்றநலிராசமாய்வீறி

மிக்கபிரயாகையினின்மெய்முனிவரோடும்வேந்தர்தொழும்வேந்தன்மகிழ்வோங்குபிதிர்கணமு

முக்கணிமலக்கடவுண்முண்டகமலர்த்தாண்முத்திபெறவேவிரதமுண்டனமதாயே

தக்கபுகழ்சேர்திலதருப்பணமுநல்கித்தண்புனல்படிந்துரியதானமுமளித்தே

 

1211    மன்னியவரித்துவாரந்திகழவந்திமாளவங்காகோலமாநிலகண்டந்

தன்னிகரில்சோமேசுரஞ்சிலாதலநீள்சதுர்வேதவீசங்கோமதிதீர்த்தவாரம்

பன்னகேசம்பான்மைபகர்பர்ப்பரேசம்பகருமதுகண்டேசுரம்பரவருஞ்சீர்

துன்னுமாரணியங்கோமளமருவிநாளுஞ்சூருலவுகின்றகௌமாரகாந்தாரம்

 

1212    கதிரொழுகுநாககானம்பீமகானங்காசறுசெழுங்கவுசிகம்புகழ்காளிங்க

மதனமகிழ்கூரவருள்பாராவதேசம்வான்முகடுதொடவெழுசிலாசநாகஞ்சே

ரதிகநல்வராகமெய்த்துதியமர்கோகன்னமாத்தியேசுரம்வேகதரிசனம்வருஞ்சீர்

விதமருவுமங்கிசாலாவனம்விளங்குமேவுமதுவாரணியமிக்கவடகானம்

 

1213    மாவுலவுசரவணேசுரமருவியோங்கும்வானந்தொடுஞ்சுத்தவானந்தகானந்

தேவர்தொழுதெழுநன்மரீசிவனமோரெண்டிசைசென்றுபுகழ்கொண்டதிகழ்சங்கமேசந்

தாவிலருண்மிகுபிராசாபத்தியசுரந்தசைமைபெறுமாவேணிதீரமகிழ்கூரும்

பூவுலகெலாம்பரவுபூம்புனஞ்சேரும்பூசுரர்கணேசமூறுசீசயிலமம்மா

 

1214    சம்பராலயநீடருங்கதலிகானந்தருஞ்சீர்விரூபாக்கங்தகுகோடியீச

மம்புவிதொழும்வசிட்டாச்சிரமமன்பாமருங்கபிலையீசுரமருட்காளகண்டம்

வம்புலவுகின்றமாவனநகரமேவான்வாளுற்றுவளமிக்ககாளத்திமலைசே

ரெம்பிரான்மகிழ்தங்குபம்பாதியீசமிருளோடவருண்மேவுதிரிகூடவீசம்

 

1215    கருதரியவண்காஞ்சிநகர்கந்தமேவுகணகண்டவிசமிகுகடலமுதகானம்

பரவுமவிமுத்தநற்பாராவதேசம்பரசுறுநிருத்தகங்கன்மாடகளரி

திருமேவுசோணாசலங்கோமுகேசந்தென்றமிழ்மணங்குலவுகின்றமுதுகுன்றங்

குருமணிகொள்கோபருப்பதம்விண்டுகிரியேகோலமதிமேலுலவுகின்றவிசுவேசம்

 

1216    விசதமிகுதில்லைவனமிக்கிலகுகின்றவேதனசலம்மெழின்மேவுதிருவெண்கா

டிசைவயித்தியநாதமென்சாயையடவியேமமுறுமின்பமருளாமிரவனஞ்சேர்

வசையில்கல்லியாணமங்கலமகிழ்சிறந்தமருவுதிரிகோடீசமன்றிமாகேசந்

திசைகடொறுமிசைநிறுவுகோமுத்தியீசஞ்சித்திதருபூமீசமத்தியார்ச்சுனமே

 

1217    பரவரியநாகநாதங்கும்பகோணம்பட்டீசமேவுசந்திரசேகரஞ்சூழ்

திரிசிராவெல்லையிறுவாயுறுதலஞ்சேர்தீர்த்தமவையாடியுடன்மூர்த்தியடிபேணிப்

பெருகார்வமொடுதிலதருப்பணமுநன்காற்பேராதகாதலிற்பிதிர்கட்களித்தே

யருளாளனங்கயற்கண்ணியொடமர்ந்தவாலவாயின்கண்மிகுமன்புடனடைந்தான்

 

 

வேறு

1218    அடைந்ததன்பின்மிடைந்தளிசேரலர்ந்தசெந்தாமரைப்பூவினழகுபூத்த

தடங்குடைந்துபடிந்தாடித்தக்கபிதிர்கடனீந்துதழலிற்காய்ந்தே

யுடைந்தபைம்பொனணிசுமந்தவுமையாளோடெமையாளுமிமையாமுக்கட்

படர்ந்தசடைப்பரஞ்சுடர்செம்பரிபுரப்பொற்பதங்கடமைப்பணிந்துபாங்கால்

 

1219    ஏர்பெறுநற்றீர்த்தங்களியாவையுந்தோய்ந்தேய்ந்தபிதிர்கடன்களீந்து

பேர்பெறுமத்தலங்கடொறும்பிரியாதபிரான்றனடிபேணியன்னோர்

நேர்படலிலாமையினானிகழ்த்துமுனியுரைத்தமொழிவிநோதமென்னாத்

தார்புனைந்ததடந்தோளான்றாமரைக்கண்ணீர்ததும்பத்தானங்குற்றான்

 

1220    அப்பரிசங்கரசர்பிரானழுங்குதலுமரனருளினங்கைதாங்குஞ்

செப்பருந்தந்திரிவீணைத்திருமுனிவனன்பினெதிர்சேர்ந்தகாலை

யொப்பரியகடன்முகட்டிலுதயவாதபனெனவேயுலகிற்றோன்றுந்

தப்பறுமன்னவன்முனிவன்சரண்பணிந்துமகிழ்ந்துமுகஞ்சாம்பிநின்றான்

 

1221    நின்றிடலுநிருபன்முகமெதிர்நோக்கிவீணைமுனிநிகழ்த்துகின்றா

னுன்றனதுதந்தையுவந்துனற்கரும்புண்ணியகன்மமுஞற்றலாலே

துன்றியசெஞ்சுடர்வேலோய்சொற்றருமப்பலன்புசித்துத்தொலைத்தல்வேண்டு

மென்றதனா​லெளிவந்திங்கின்பிருத்தியெதிர்முகந்தந்திலனாலம்மா

 

1222    ஆதலினாலினியிரங்கேலாதபன்றன்குலத்துதித்தவரசர்கோவே

யோதலுறுகாரணமொன்றுண்டதனையுரைத்திடுவமோர்தியிந்தக்

கோதிலுயர்மதிற்கூடற்குணதிசையோசனையெல்லைகொண்டபாரி

சாதவனந்தனிலுலகந்தந்தருள்சுந்தரிதவஞ்செய்தலமொன்றுண்டால்

 

1223    அங்கணமர்கின்றசிவலிங்கமதொன்றரசநினதருங்குலத்துப்

பொங்குகதிரோன்பூசைபுரிந்திடுபொற்பினதாகிப்போகமுத்தி

செங்கைகுவித்தெரேனுந்தெரிசனஞ்செய்தளவிலருள்செய்வதாய்வெண்

சங்குலவும்வேகவதித்தடங்கரையின்றென்மேல்பாற்சார்ந்துவைகும்

 

1224    அந்தமணற்றந்தசிவலிங்கமதற்காயபுகழ்வாயுதிக்கிற்

சுந்தரமூன்றம்புதொடுதூரத்திலிரவினொளிதுதைந்திலங்குஞ்

சந்திரன்வந்தருச்சனைசெய்சந்திரலிங்கமதொன்றுதன்னேரின்றி

யிந்தவொருமூவுலகுமெஞ்ஞான்றுமினிதேத்தவிருக்குமாதோ

 

1225    அத்தலந்தானரன்றனக்குமருந்தவர்க்குமரும்பிதிர்களாயினோர்க்குஞ்

சித்தமகிழ்தலமதனிற்சென்றடைந்துன்பிதிர்களுக்குத்திலோதகத்தைப்

புத்தமுதத்தடம்பொருந்துபுனலாடியளிக்கினெதிர்பொருந்திவாங்கி

முத்தியடைகுவரதனான்முயன்றிடுதியிமூதுண்மைமுழவுத்தோளாய்

 

1226    மேதகுமிந்நாள்காறுமிக்ககருமத்தொடர்ச்சிமேவலாலே

யோதிடுநின்னாற்பிதிர்களுறக்காண்டற்கரிதாகிற்றுழந்தகன்ம

மாதரவிற்பரிபாகமடைந்தமலமடைந்தவதனாலேயங்கண்

டீதறுபூந்திருமடந்தைசெல்வனீயேயிமூதுதிண்ணமாதோ

 

1227    மலர்தலையிவ்வுலகத்துமைந்தரினின்னிகராகுமைந்தரின்றாற்

றலைமைபெறுநின்றந்தைதன்னைநிகர்மாந்தருமோசாற்றினின்றா

னிலவிடவேநீவிருந்தாநீள்புகழினொடுதருமநிறுவுநீரா

லிலகுபருந்திருந்துசுவைத்தருந்துதசைந்திடுநெடுங்கூரிலைகொள்வேலோய்

 

1228    மதியுடனன்மாதவரைவழுத்திமன்வல்வினைநீங்குமதனிலும்மைத்

துதிகொடுபோற்றினர்யாருந்தொல்பவங்கடொலைக்குவர்யாஞ்சொற்றவாற்றாற்

கதிர்விடுபாற்கரபுரத்திற்கருதுதிலோதகம்பிண்டஞ்சிராத்தநல்கிச்

சதுர்மறையோரருச்சனையுந்தானதருமங்களுநீதயங்கச்செய்வாய்

 

1229    மலங்கிடுநின்மலர்க்கண்ணீர்மாற்றிடவந்தனமிங்ஙன்வல்லைவந்தத்

தலந்தனிலேகுதியாமுந்தகுந்தீர்த்தத்துறைகடொறுஞ்சார்துமென்னா

விலங்கையர்கோன்சிரமரிந்தவிராமனிரும்பழியொழியவிறைஞ்சுஞ்சேது

தலந்தனைநற்புண்ணியதீர்த்தம்மாடநாரதனுந்தணந்துபோனான்

 

1230    நினைவரியபுகழ்நிருபனிகழமுதகானமணிமகதிவீணை

முனிவனுரைசெவிமடுத்துமுழுதுணர்மூவாயிரமாமுனிவரோடுந்

தனதுபிதிர்கடன்கழித்துத்தங்குபலதானதருமங்கள்செய்வான்

புனிதமிகுந்திலங்கியபொற்புரிசைசூழ்பூவணத்திற்பொருந்துகின்றான்

 

வேறு

1231    பேசுமிக்கபுனலதுமூழ்குசீர்பேர்கொளெட்டுறுபமூதுயர்காதையீ

தோசைபெற்றவுலகினிலோதுவோரோதுசொற்கள்செவிகொடுதேர்குவோர்

நேசமுற்றபுதல்வர்கண்மேன்மையார்நீடுபத்திநிகழும்விவேகநேர்

தேசுசுத்தியடைவர்பினீறில்வான்சீர்மிகுத்தசிவகதிசேர்வரே

 

சுச்தோதிதீர்த்தயாத்திரைச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1231

*****

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *