திருப்பூவணப் புராணம் – பகுதி – (25)

கி.காளைராசன்

10. இந்நூலாசிரியரின் பிற கட்டுரைகள்

 

இந்நூல் ஆசிரியர் கி.காளைராசன் அவர்களது படைப்புகளை ஆன்மிகம், ஆன்மிக அறிவியல் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

இவரது திருப்பூவணக் காசி என்ற முதல் நூல் திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவி பெற்று அச்சிடப்பட்டு 24-09-2007 அன்று தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளார் அவர்களால் திருப்பூவணநாதர் திருக்கோயிலில் வைத்து வெளியிடப்பெற்றது.

இவரது கட்டுரைகள் தினபூமி, தினமலர், மஞ்சரி, தமிழ் மாருதம், செந்தமிழ்ச் செல்வி, ஓம்சக்தி, மெய்கண்டார், கண்ணியம்  ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

ஆன்மிகக் கட்டுரைகள்

1          ஐயாவிடம் சொல்லிவிட்டேன் அவர் பார்த்துக்கொள்வார்        காரைக்குடி-கோட்டையூர் அருகில் உள்ள வேலங்குடி கிராமத்தில் வீற்றிருந்து அருளும் _ சொற்கேட்ட விநாயகரின் திருவருள்  பற்றியது

2          என்பிழை பொறுப்பாய் எம்மானே            திருப்பூவணத்தில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு வரம் அருளியது

3          பாவம் போக்கும் பூவணம்   திருப்பூவணத்திருத்தலத்தின் பெருமைகள் குறித்து

4          சித்தர் வடிவில் சிவபெருமான்        36வது திருவிளையாடற் புராணம் – சித்தர் வடிவில் சிவபெருமான் திருப்பூவணத்தில் எழுந்தருளி இரசவாதம் செய்தருளியது

5          ஆற்றின் குறுக்கே 1008 லிங்கம்     திருப்பூவணத்தில் திருக்கோயில் எதிரே ஓடும்  வைகை ஆற்றில் லிங்கங்கள் புதையுண்டிருப்பது பற்றிய கட்டுரை

6          கல்லா? கடவுளா?     கல்லால் ஆன வடிவங்கள் எப்படிக் கடவுள் போன்று செயல்பட முடியும் என்பதற்கான விளக்கம்

7          சாமி என்ன சாப்பிடவா செய்கிறார்?         கடவுளுக்குப் படைக்கப்படுபவை அவரை எவ்வாறு சென்றடைகின்றன என்பதற்கான விளக்கம்

8          ஐயனாரா? அய்யனாரா?     ஐயனார் தெய்வத்தின் பிறப்பு வளர்ப்பு பெயர்க்காரணம் அருளும் தன்மை ஆகியனவற்றை விளக்குவது

 

ஆன்மிக அறிவியல் கட்டுரைகள்

9          சிவனும் பெருமாளும் ACயும் DCயும்          இறைவடிவங்களும் மின்சாரத்தின் வடிவங்களும் ஒன்றாய் உள்ளன  என்று விளக்கும்  கட்டுரை

10        ஆடல்வல்லானே அறிவியல் இறைவன்   தனி ஊசல் விதிகளுக்கு ஏற்ப ஆடல்வல்லானின் (நடராசரின்) ஆட்டம் உள்ளது என்பதை விளக்கும்  கட்டுரை

11        விஞ்ஞானத் தொலைகாட்சிப்பெட்டியும் மெய்ஞ்ஞானக் கோயில்களும்

தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள காட்சிக் குழாயின் (Picture Tube) வடிவமும் செயலும், நடராசரின் வடிவத்துடனும் செயலுடனும்  ஒற்றுமையாய் இருப்பதை விளக்கும் கட்டுரை

 

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்

12        வள்ளுவரும் வாஸ்துவும்      திருக்குறளின் பாயிர அதிகார அமைப்பு முறையானது வாஸ்து இலக்கணப்படி உள்ளது  என்பதை விளக்கும் கட்டுரை

13        திசைதெய்வங்களைத் தொழும் திருவள்ளுவர்     திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்களும் திசை தெய்வங்களை வணங்கி எழுதப்பெற்றுள்ளன என்பதை விளக்கும் கட்டுரை.

14        ஆனை முகத்தானே(னோ) ஆதிபகவன்    முதற் குறளில் குறிப்பிடப்பெற்றுள்ள  “ஆதிபகவன்” என்பது விநாயகப் பெருமானையே குறிக்கும் என்பது பற்றியது

15        குறளிலும் சோதிடம்            இராகு, கேது இவற்றின் சோதிட அமைப்பில் ஐந்தாவது குறள் எழுதப்பட்டுள்ளது என்பதை விளக்கும் கட்டுரை

16        திருக்குறளில் சனீஸ்வரர் வழிபாடு            வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர் யார்? என்பது பற்றிய விளக்கம்

17        குறள் கூறும் இறைவன்       பத்தாவது குறளில் கூறப்பெற்றுள்ள இறைவன் அனந்த சயனப் பெருமாளாகும்.

 

 

 

 

 

 

திருப்பூவணப் புராணம்

https://picasaweb.google.com/107969044627021352784/qCXSOE

 

 

 

 

 

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.