திருப்பூவணப் புராணம் – பகுதி – (14)

0

கி.காளைராசன்

ஒன்பதாவது

பிரமசாபமோசனச்சருக்கம்

 

694      ஆயுநான்மறையுமங்கமோராறுமாகியவமுதகானனநீர்

பாயுநாவுடையசவுநகமுநிவன்படுகலியுடைதிரைப்பரவை

மாயிருஞாலந்தன்னினீரொன்பான்மருவியபுராணமோர்வடிவாந்

தூயமாதவத்தின்றுறைபெறுஞானசூதனைநோக்கினன்சொல்வான்

695      பூர்வநன்குறவேயோரொருபதினெண்புராணநின்னானன்மிகக்கேட்டோ

மோர்வுடைத்தின்றுமுரைக்குவதுண்டாலுரைக்குமிப்புராணத்தினியல்பைப்

பாரிடைநீயேபகரயான்கேட்கப்பாக்கியம்படைத்தனனாகி

லார்பதமரியவிருதயகமலமனையநின்னான்மலர்ந்தன்றே

 

696      ஓங்குவான்கங்கைமாநதிமதிகண்டுவட்டெடுத்தெழுந்தலைபுரட்டத்

தூங்குவார்சடிலந்துதைந்த செம்பவளச்சுடர்விடுசோதிவானவனைப்

பூங்குழலுமைமுன்பூசையாற்றியபின்போந்தருச்சித்தனர்தம்மைத்

தாங்கருவெகுளிதணந்தமாதவநீசாற்றெனச்சவுநகற்குரைப்பான்

 

697      அங்கண்வானத்தினகடுபோழ்ந்தவிருமணிமணிச்சிகரபந்திகளும் பங்கமில்பாரிசாதவாசப்பூம்பணைதிகழ்பராரைமாமரமுந்

துங்கமேவியநன்மடங்கலேமுதலாத்தொகுவிலங்கீட்டமுந்துலங்கு

கங்கைமாநதியினருவியின்முழக்குங்கதித்திடுங்கயிலைமால்வரையில்

 

698      கண்ணகன்புவியிற்களைகணாகியநற்கற்பகக்கடவுள்காங்கேய

னெண்வகைவசுக்களெண்டிசாமுகத்தரிராக்கதர்மருத்துவரிருவர்

நண்ணுகிம்புருடர்கின்னரர்மணிகணகுபணந்தருமுரகேசர்

வண்ணமேவியநல்வெண்ணிலாக்கொழிக்கும்வளைந்திடுமிளம்பிறைமுடித்தோர்

 

699      மாதிரம்புகழுமாதிகேசவன்கார்வண்டிசைகொண்டமாமலரோன்

றீதறுதேவர்கருடர்கந்தருவர்சித்தர்வித்தியாதரரியக்கர்

பூதலத்திருளைவிழுங்கிவானோங்குபொங்குவெங்கதிர்கள்பன்னிருவர்

காதல்கூரீரெண்கலைதிகழமிர்தகதிர்விடுமுடுபதிக்கடவுள்

 

700      சித்திரக்கலினச்செருவயப்பரியூர்திகழ்வளைசெண்டுகைக்கொண்டோ

னத்திரிவசிட்டன்முற்கலன்புகழ்பாரத்துவாசன்கவுண்டினியன்

சுத்தப்ருங்கிருடிகண்ணுவன்பாரிற்றுகளறுசுகன்சதுர்வேத

வித்தகவிணைநாரதன்சநகாதியமுநிகணமிடைந்தேத்த

 

701      பரவரிதாயவுருவங்கொண்டரியபண்டரும்வேதங்களோத

மருவியேதிருமுன்வணங்கியேழ்கோடிமந்திரநாயகர்வழுத்த

வருளினாற்கண்டவடியவர்நிருத்தவாநந்தவாரியிலழுந்தப்

பொருவில் பூதங்கள் புடைபரந்தீண்டிப்புகழ்ந்துடன்பாடிநின்றாட

 

702      அந்தரதலத்தில்வந்துதிக்கின்றவந்திமாமதியமோர்கோடி

சுந்தரந்துதைந்துசுடர்விடும்வெய்ய சூரியரோரொருகோடி

வந்திடுஞ்சென்னிவளர்ந்தெழுந்தூய வடவையங்கனலொருகோடி

தந்தவைதிரண்டொன்றாய்வளர்சோதிதருந்திருமேனியினொருபால்

 

703      கழையுநன்பாலுங்கண்டும்வார்தேனுங்கருங்குயிலிசையுமேழிசையுங்

குழலினதிசையுங்கோதிலாவமுதுங்குழைத்திடுகுதலையந்தீஞ்சொற்

பழமறைப்பொருளைப்பவளவாய்கொழிக்கும்பத்திசேர்நித்திலமுறுவ

லிழைதருமருங்குலேந்திளங்கொங்கையிமயமால்வரைமயிலிலங்க

 

704      விட்டெறிகின்றவெண்மதிக்குழாமும்வெய்யவரநேகரும்போல

மட்டறுவயிரமன்னுசெம்மணிசேர்மகுடநன்மாமுடிவயங்கக்

கிட்டியேநுதலைக்கிழித்தெழும்விழித்தீக்கொழுந்துவிட்டதுகிளர்ந்தோங்கக்

கட்செவிப்பகுவாய்க்கடுவுமிழரவகங்கணமணிக்கதிர்பரப்ப

 

705      முழங்கிவந்தலைகள்புரண்டிடக்கரத்தான்முடித்தசெஞ்சடாமுடிக்கிடந்த

குழந்தைவெண்மதியின்கோடுழக்குற்றகுளிர்புனற்குறுந்துளிசிதறச்

சுழன்றுவீழ்ந்திசைகண்முரன்றுறுவாசந்துதைந்துதாதரடியுண்மகிழ்ந்து

வழிந்தநற்பசுந்தேன்வண்டுணுங்கொன்றைவாசமெண்டிசாமுகம்வீச

 

706      காசினிபுகழுங்கலைதிகழ்மதிபோற்கருணைநற்றிருமுகம்பொழியப்

பூசும்வெண்ணீறும்பொருந்துமார்பகத்திற்பொங்குமாரங்கணின்றிலங்க

மாசறுசோதிவயிரகேயூரமன்னியவாகுவின்வயங்க

வீசியகிரணவெம்படைக்கலங்கண்மேவியகரங்களில்விளங்க

 

707      நினைவருஞ்சங்கக்குழைநிலவுமிழ்ந்துநீண்டவார்காதுபூண்டெறிப்பக்

கனைகடல்வயிறுகலங்கவன்றெழுந்தகடுவிடங்கந்தரங்காட்டப்

புனிதமாகியநற்புள்ளிசேர்தருவெம்பொருபுலித்தோலுடைபொலியப்

பனகமாமுதரபந்தநன்மணிகள்பரவரும்பாயிருள்பருக

 

708      தங்குமால்வரையிற்றகுமருவியெனச்சார்ந்தவுத்தரீயமார்பிலங்க

வங்கையிலபயவனாமிகாங்குலியிலணிபவித்திரமழகொழுகப்

பங்கமுற்றிரைத்துப்பாய்திரைசுருட்டும்பரவைசூழ்பாரெலாமிடந்துஞ்

செங்கண்மாலின்னுந்தேடரிதாயதிருவடித்தாமரைதிகழ

 

709      சோதிசேர்வயிரத்தூணிரைநிறுவிச்சூழ்ந்தபொற்பித்திகையமைத்து

மீதுசேர்பவளப்போதிகையிருத்திமிகுந்தநன்மரகதந்தயங்கு

மோதுமுத்தரத்தோடுறுதுலாஞ்சேர்த்தியொளிமணிகிளர்தரவழுத்தித்

தீதில்சந்திரகாந்தந்தரைப்படுத்துச்சித்திரமழகுறச்சேர்த்தி

 

710      விளங்குமண்டபத்தின்மேவியேநாப்பண்மிக்கநல்லெழிலரிசுமந்த

வளர்ந்தெழுஞ்சோதிவழங்கிடக்குயிற்றுமாறிலாமணித்தவிசேறி

யளந்தறிவரியவருமறைப்பொருளாயானந்தமேதிருவுருவா

யிளம்பிறைமுடித்தவெம்பிரானமரர்தம்பிரானினிதுவீற்றிருந்தான்

 

711      அந்தவேலையினினந்தியெம்பெருமானங்கையிற்பிரம்பினைக்கொண்டே

வந்தவண்மிடைந்தவானவர்முனிவர்தம்மைநேர்வரன்முறைசேர்த்தி

யந்தமிலவுணர்தங்களைக்கொண்டேயணிபெறநிறுவியேயொருபாற்

சிந்தையின்மகிழ்கூர்ந்தெந்தைதன்றிருமுன்றிரிந்துநல்லருந்துதிசெய்ய

 

712      அரம்பைமேனகையூர்வசியழகொழுகுமரியசீர்த்திலோத்தமைமுதல

வரம்பெறுமுயர்வான்மகளிர்மந்திரஞ்சேர்மத்திமைதாரகமரபிற்

றிரம்பெறவெழுதுசித்திரமென்னத்திகழ்ந்துசெம்பவளவாய்திறந்து

நரம்புறுவீணைநன்முலைதாங்கிநாதகீதத்துடனடித்தார்

 

713      தீதறுகின்றதேவமாபரதஞ்சித்திரசேனனோடுலக

மோதிடுமந்தவுருப்பசிநடித்தேயுற்றிடுநாதகீதஞ்சேர்

வேதமேநுகருமிக்கநன்செவிக்குவீணையேயிசைவிருந்தளிப்ப

மாதினைமணந்துவாமபாகங்கொள்வானவன்றிருவுளமகிழ்ந்தான்

 

714      நானிலத்துயிர்கணன்கதிபெறுவானான்முகன்வரநினைந்தேயோ

வானகஞ்சுழலவருங்கொடுஞ்சண்டமாருதம்வந்தவைபுகுந்தே

யூனநீங்கியவவ்வுருப்பசிமருங்குலுடுத்தவொண்டுகிலினைநீக்கா

வானகாலையினிலாயிடைவெருவியனைவருமவநிதரானார்

 

715      உறுபெருங்காதலுள்ளமீக்கொள்ளவோங்குபேரெழினலந்தாங்கு

முறையறுகன்னன்மூரிவிற்காமன்முடுகினன்மலர்க்கணைதொடுப்பக்

கறையணற்கொடியகட்செவிப்பாந்தட்கணமணாடவியவளல்குற்

குறியிடந்தன்னைநோக்கினன்கமலக்கோயில்வீற்றிருந்திடுங்குரிசில்

 

716      ஆங்கதுகாணூஉவளவிலண்டத்துமகண்டிதமாயசஞ்சலமா

யோங்குபேரொளியாயுயிர்க்குயிராகியுன்னுமுன்னுணர்ந்திடுமொருவ

னீங்குகநம்பானீயெனலோடுநிலமிசைவீழ்ந்தடிபணியப்

பாங்குறுநந்திபணியினாலெழவப்பரஞ்சுடர்பங்கயற்குரைப்பான்

 

717      உருப்பசியெனும்பேரொண்டொடியிவடனுரைப்பருமூருமூலத்தில்

விருப்புடனின்கண்பரப்பிணையதனான்மிக்கநன்சபைவிடப்பணித்தாந்

திருத்தகுமெமதுதெய்வநற்சபையிற்றிருகியசிந்தனையதனைப்

பொருக்கெனநினைந்தபுந்தியிலாதாய்புகல்வதொன்றுண்டதுகேண்மோ

 

718      அரனருட்குரவனங்கிசேர்தலத்திலாகமவேதமோதிடத்தி

னொருமைசேருள்ளத்துணர்வினிற்றூங்குமோங்குநல்லுறுவர்களிடத்து

மருமலர்க்குழலார்வனப்பினைநாடிமயங்குவார்யாவரேயெனிது

மிருடருநரகரிவர்பெரியோராலிகந்திடப்படுவரெஞ்ஞான்றும்

 

719      இத்தகைமையினானிற்புறம்பாகவிசைத்தனமீங்குநீயெம்பால்

வைத்தபேரன்பின்மகிழ்ந்தனமின்னேமனத்திடைமதித்திநன்மைந்த

புத்திபூருவத்தாற்பொருந்துநம்மிலிங்கபூசனைபுரிந்திடின்மாதோ

வத்தகுகணத்திலடைந்தவத்தோடமகன்றிடுமஞ்சனீயஞ்சல்

 

720      இன்னமுதங்கான்றிருட்குறும்பெறியுமிந்துவின்மரபினில்வந்த

பன்னுசெந்தமிழ்த்தென்பாண்டிநன்னாட்டிற்பயின்றிடும்பதிபலவுளவா

மன்னதின்மேலாயறைந்திடுங்கூடலாலவாய்ப்பதிக்குயோசனையின்

மன்னிடும்வன்னிதிக்கினோர்தலம்பூவணமெனுமணிதிகழ்நகரம்

 

721      உரைசெயுமந்தவோங்கெயின்மூதூரோரொருமூவுலகேத்த

மருவிடுமதன்கண்மத்திமைவயங்குவான்முகடணவுவண்பணைசூழ்

பரவரும்பாரிசாதமொன்றுண்டப்பராரைமாமரத்திருநீழற்

புரிகுழலுமைமுன்புரிதருசெயலாற்பூசைசெயிலிங்கமொன்றுண்டால்

 

722      அச்சிவிலங்கமருள்வடிவாகியாம்பிலத்தலத்தினின்றளிசேர்

முச்சகம்புகழமுளைத்திடுமூவாமுதலுமாய்முழுதுலகிறைஞ்ச

நிச்சயப்பொருளாய்நிமலமாய்நிறைந்துநிகழ்ந்துநங்கண்மணிவடிவாய்ப்

பச்சைமாமயிலோர்பாதிநின்றிலங்கப்பரம்பொருளாகியேவிளங்கும்

 

723      ஆதலாலரியவச்சிவலிங்கத்தன்பினாயிரஞ்சதுர்யுகங்கள்

பூதலமதனிற்பொருந்தியாங்கெம்மைப்பொற்புடன்பூசனைபுரியி

னீதியின்யாமுநிகழ்ந்துமுன்றோன்றிநினக்கருள்புரிகுதுமென்னா

வோதிநீபோதிமாதொடுமென்றானுயிர்க்குயிராகியவொருவன்

 

724      அன்னகாலையினிலன்னவாகனனுமஞ்சியேயஞ்சலிசெய்து

முன்னைநாளிழைத்தமுதிர்வினைவந்துமூண்டிடும்விதியிதுவென்னாப்

பன்னுநாமகன்றபரிசனஞ்சூழப்பதங்களிற்படிந்தெழுந்தன்பாற்

பொன்னலர்கடுக்கைப்புரிசடைப்பிரானைப்போற்றினன்விடைகொடுபோந்தான்

 

725      பன்னகாபரணப்பரஞ்சுடராயபண்ணவன்பண்ணவர்தமக்குந்

தன்னிகர்தத்தம்பதியிடைச்செல்வான்றக்கநல்விடைகொடுத்தருளி

மன்னியநந்திவானவன்கோயின்மணிக்கடைவாயின்முன்காப்ப

மின்னிகர்மருங்குன்மெல்லியலோடும்வெள்ளிமால்வரையில்வீற்றிருந்தான்

 

 

வேறு

726      சுந்தரமேனிதுளங்கனல்கொண்ட

வந்திவணத்தனநுக்கிரகத்தாற்

புந்திமகிழ்ந்துயர்புட்பவனத்திற்

கந்தமலர்க்கடவுள்கடிதுற்றான்

 

727      பண்டருவேதபராயணர்மேவுந்

தண்டலைசூழ்பனசாலைகளும்பொற்

புண்டரிகந்திகழ்பூந்தடமியாவுங்

கண்டனனெண்டருகண்கள்களித்தான்

 

728      ஓசைகொளந்தவுருப்பசிதன்மே

லாசையளித்தவரும்பவநீப்பான்

றேசுமிகுந்ததொர்தெய்விகலிங்கம்

பூசைசெயும்படிபுந்திநினைந்தான்

 

729      நாமகள்சேர்தருநான்முகனன்காற்

பூமகள்போற்றிசெய்பொற்கொடிமுன்னர்க்

காமியமிக்கருள்கங்கைகலந்த

மாமணிகன்னிகைவந்துபடிந்தான்

 

730      வாய்மொழியொன்றும்வழங்கலனாகி

யாய்மலர்கொண்டுநலங்கணன்வைகுங்

கோயினன்வாயில்கொளுங்குணதிக்கிற்

றூய்மையுடன்சதுரங்கம்வகுத்து

 

731      தன்கைதரித்ததொர்தண்டதுகொண்டே

யன்பொடுகல்லினனங்கைகள்செய்ய

நன்குறுதீர்த்தநயப்பொடுகண்டே

பொன்பயிலுந்திருக்கோயில்புகுந்தான்

 

732      காருலவுந்திகழ்கற்பகநீழற்

சேர்தருகின்றதொர்தெய்விகலிங்க

நேர்விழிகாண்டலுநேரின்மெய்ஞ்ஞான

வாரிபடிந்துமுயங்கினன்மாதோ

 

733      அண்டமடங்கலுமன்னமதாகித்

திண்டிறலானனிதேடியுநானே

பண்டறியாதபரஞ்சுடர்தன்னைக்

கண்டனனென்றுகளித்தனனம்மா

 

734      பூருவமாயருள்பொங்குமிலிங்கத்

தேருறுமின்புருவத்திலிருத்தி

நேரில்கொடும்பவநீக்கிடுகிற்பா

னாரணபூசனைசெய்தனனன்பால்

 

735      சோடசபூசைதொடங்கிமுடித்தே

பாடலொடாடல்பயின்றாமங்கை

தாடனிலேவழிபாடதுசெய்வா

னாடிவருந்தினனானிலமெல்லாம்

 

736      மன்றவனந்துளவோன்மலருந்தி

யன்றுபிறந்தருளன்னமுயர்த்தோ

யொன்றுநல்வாய்மையுரைப்பதுகேட்டி

யென்றசொல்வானினெழுந்ததையன்றே

 

737      நன்மலையீன்றருணாயகிமேனாண்

முன்னவன்வாய்மைமொழிந்திடுமாற்றாற்

றன்னுறுமின்னறணந்திடவிங்ஙன்

மன்னுதவம்புரிகின்றனண்மாதோ

 

738      புல்லுமரன்கழல்பூசைசெய்தம்பொன்

வல்லிமணற்கண்மறைந்துறைகின்றா

ளொல்லையினீக்கியுஞற்றுதிபூசை

செல்வநலெண்டிகழ்சித்திகளுண்டாம்

 

739      செந்தழன்மாதவர்செப்பியசாப

நந்திடவெந்தையைநாயகியோடும்

புந்திமகிழ்ந்துசெய்பூசனையாலே

யிந்திரைதன்னையியைந்தனன்மாயோன்

 

740      ஆதலினின்னபராதமுமிந்த

நாதனருச்சனையாலதுநந்துஞ்

சோதியும்வந்துநினக்கெதிர்தோன்றும்

போதுதியென்றதுபோயதேயன்றே

 

741      அன்னதுளங்கொடரன்னருளாலே

மன்னியபொற்கொடிமாதைமறைத்த

நன்மணலுக்கிடைநாடருஞானப்

பொன்னுறுபூங்கொடிபோலெதிர்நின்றாள்

 

742      வெளிப்படுகின்றபொன்மின்னனையாளை

யளப்பரிதாகியவன்பொடுகண்டு

களித்தனனீள்கருணைக்கடல்சென்று

குளித்தனனின்பொடுகூடினனன்றே

 

743      சொற்றரிதாயசுகோதயநல்கும்

வெற்றிதருங்கதிர்வீசுமெய்ஞ்ஞான

பொற்கொடியைப்புகழ்புந்திநினைந்தே

யற்புதமெய்தியருச்சனைசெய்தான்

 

744      ஓதருமோங்கொளியுற்றதொர்பாரி

சாதமதின்னிழற்சார்தரலால்வெம்

போதகநீக்குநர்பொற்புறுபாரி

சாதவனேசனெனப்பெயர்சாற்றும்

 

745      பூவுலகம்புகழ்பொற்புறுரேகை

மேவியரூபம்விளங்குதலாலே

பூவுலகந்திகழ்பொற்கொடியென்று

மேவியநாமம்விளம்பியதன்றே

 

746      பொன்னுலகந்திகழ்பொன்னனையான்பான்

மன்னுசெவ்வானிடைவந்தொளிர்கின்ற

மின்னெனநின்றுவிளங்குதலாலே

மின்னனையென்றுவிளம்பினர்மேலோர்

 

747      நாடொறுமிம்முறைநல்லமுதஞ்சே

ரோடையினுந்தனதோடையினுஞ்சென்

றாடியருச்சனைக்காவனகொண்டன்

பூடுருகச்சிவபூசையுழந்தே

 

748      கோலமதாமணிகுண்டநனிருதி

மூலையினன்பரைமூண்டதலத்தோ

ராலநிழற்கணமைத்தொருலிங்க

நாலுமுகன்வழிபட்டனனன்றே

 

749      அத்தருநீழலினண்ணலைநண்ணிச்

சித்தமகிழ்ச்சியுடன்றெரிசிக்கிற்

புத்திகொள்பூருவமாய்ப்புரிபிரம

கத்தியென்​வெவ்வினைக்கட்டறுமன்றே

 

750      அன்னியமாமனையாளையணைத்த

றொன்முறையல்லதுதுய்த்திடுதோடஞ்

சென்மமொர்நூறுசெய்தீவினைதீரு

மன்னதனாற்பினரன்பதிசேர்வார்

 

751      சிற்சிலநாளவைசென்றொழியப்பின்

புற்றருளெந்தைக்குத்தரதிக்கி

னெற்றருமெண்டலையிட்டதொர்நூறு

விற்கிடையெல்லையின்விண்டுவைக்கண்டான்

 

752      கண்டகவன்னவனைக்கைகுவித்தே

மண்டனில்வந்திடும்வாய்மைவழங்கி

யெண்டிசைபோற்றிடவேய்ந்திருவோரு

மண்டர்பிரான்கழல்கண்டமர்நாளில்

 

வேறு

753      திருமிகுமுரோமசன்சிறந்தகௌதமன்

பரவுமாங்கீரசன்பரத்துவாசனெண்

டரைபுகழ்வசிட்டனற்சனகனாதியர்

மருவினரயன்றனைவணங்கியேத்தினார்

 

754      ஆங்கவரனைவருமந்திவான்மதி

தாங்குசெம்பவளவார்சடிலசேகரன்

பூங்கழலருச்சனைபுரிந்துவைகலா

லோங்குமித்தலமயனுலகமொத்ததே

 

755      எம்மையாளிறைவனுக்கினியவாலயஞ்

செம்மையிற்குயிற்றுவான்சிறந்ததெய்வநற்

கம்மியன்றனைவரக்கருதியாங்கொரு

மும்முறைவிளித்தனன்முளரிவேந்தனே

 

756      அந்தநல்லுரைசெவியணைதலோடும்வந்

தெந்தைநீவிளித்ததென்னியம்புகென்றலுஞ்

சுந்தரவரியளிதுதைந்துதேனுகர்

கந்தமாமலருறைகடவுள்கூறுவான்

 

757      காவிசேருந்தடங்கட்படாமுலைத்

தேவியோர்பங்குறைதெய்வநாயகன்

மேவியாருயிர்க்கெலாம்வீடுநல்குவான்

கோவினீயணிபெறக்குயிற்றுகென்னவே

 

758      அருடருமரியபஞ்சாக்கரப்பெருந்

திருமதிலாலயஞ்சிகரமண்டபங்

குருமணிதயங்குநீள்கோபுரங்கள் சீர்ப்

பரமனாடகந்தினம்பயிலுமண்டபம்

 

759      கரிமுகன்கந்தவேள்கருணையேபொழி

திருமுகமண்டலஞ்சிறந்திலங்கவான்

பெருகொளிபரப்பிடும்பிரமதாண்டவ

மருள்புரிதரவெழுந்தருளுநாயகன்

 

760      இன்னநல்விக்கிரகங்களெண்டிசை

துன்னுசெங்கதிரொளிதுதைந்திலங்குசீர்ப்

பன்னருநவமணிபயின்றுபைம்பொனீள்

பொன்னணிமகுடவான்பொருந்துமண்டபம்

 

761      மன்னுதேரூர்மணிமறுகுதோறுநீள்

பன்னுமெண்ணெண்கலைபயிலுமண்டப

மன்னமன்னவர்நடமாடுமண்டபந்

தன்னிகர்தரவருதானமண்டபம்

 

762      நந்தனவனங்களுநறியபொய்கையுங்

கொந்துலாவுங்குயில்கூவுஞ்சோலையு

மந்தணர்மனைகளுமன்னசாலையுஞ்

சந்ததமிம்முறைதயங்கக்கண்டனன்

 

763      கண்டபின்றனதுளங்களித்துக்கம்மிய

னண்டநாயகன்றனக்கணிகொளாலய

மெண்டொகைபெறவினிதியற்றினேனெனாப்

புண்டரீகன்பதம்போற்றிப்போயினான்

 

764      போயபினுடனெழீஇப்புண்டரீகனற்

றாயினுமுயிர்க்கருடம்பிரான்றிருக்

கோயில்களியாவையுங்குறித்துளங்கொளா

வேயவெண்கண்களாலினிதுகண்டனன்

 

765      வன்னியோரைந்துமுன்வளர்த்துநேர்வளி

தன்னையுள்ளடக்கியைம்புலன்கடாங்கியே

பொன்னனையானடிப்பூசைசெய்துபி

னுன்னரும்பரசிவயோகுற்றானரோ

 

766      பாவமானவையெலாம்பற்றறுத்துமே

லாவமாணவையெலாமாகமப்படி

மாபரன்வடிவமாய்வயங்கவாங்கவை

தாபனஞ்செய்தனன்சதுர்முகப்பிரான்

 

767      தேனலர்கொன்றையஞ்சிகழிவானவன்

றானருள்செய்தநாட்டணந்துமாண்டதும்

பான்மைசேர்சத்திநிபாதமுற்றது

ஞானநாயகன்றிருவுளத்துநாடினான்

 

768      இன்னநற்றவங்கள்கண்டிரங்கியெம்பிரான்

பன்னகபணமணிப்பணிகடாங்கியே

மன்னும்வானவர்கள்பூமழைபொழிந்திட

மின்னனையாளுடன்விடையிற்றோன்றினான்

 

769      தோன்றலும்விழித்துமெய்துணுக்கமுற்றுமீ

வான்றொடுபராரைமாமரந்தன்வேரறத்

தான்றரைவீழ்வபோற்சதுர்முகன்கதிர்

கான்றிடுங்கண்ணுதல்கழலிறைஞ்சினான்

 

770      இறைஞ்சிடுமயன்றனையெழுகெனாவெழுந்

தறிந்தடியேன்பிழைத்தவற்றைநீக்குவான்

வெறுத்தமியேன்முனம்வெளிநின்றாயெனாச்

சிறந்தநன்மறைத்துதிசெப்பலுற்றனன்

 

வேறு

771      ஈசாசரணமெந்தாய்சரண

நேசாசரணநிமலாசரண

மாசானவைதீர்த்தடியார்க்கருளுந்

தேசாசரணஞ்சிவனேசரணம்

 

772      மூவாமுடியாமுதலேசரண

மேவாதவர்பான்மேவாய்சரணங்

காவாயெனவேகடனஞ்சயிலுந்

தேவாதியர்தந்தேவேசரணம்

 

773      அகிலந்தருகாரணனேசரணம்

புகலும்புவனாதிபனேசரண

மகிழ்மன்மதவேண்மாண்டேயெரியத்

திகழ்வெங்கணனேசிவனேசரணம்

 

774      உலகெங்கணுமோருருவாசரண

மலர்செங்கதிரோனதிதாகமுடன்

வலம்வந்துழலும்மகமேருவெனுஞ்

சிலைதங்கியகைச்சிவனேசரணம்

 

775      உலகாதரநல்லொருவாசரண

மலமாயைகளைந்தருள்வாய்சரண

மலையாழியின்மேவமுதாசரணந்

திலகாபரணாசிவனேசரணம்

 

வேறு

776      இன்னபன்னியேயெம்பிரான்றிரு

முன்னர்மாணநன்முறையினேத்தியே

சென்னிமீதினிற்சேர்த்தசெங்கையா

னன்னவாகனனறைதன்மேயினான்

 

777      பூருவத்தியான்புரிந்தபாதகந்

தீருமாறருள்செய்துதீதிலாச்

சோர்விலாதசாத்துவிகநற்குண

நேரிலென்பதநீயளித்தரோ

 

778      இந்தநற்பதியெம்பிராட்டிதன்

முந்தைநாமத்தான்மொழிந்ததாயினு

மெந்தையோருகமென்றனாமத்தாற்

றந்திடும்வரந்தருதல்வேண்டுமால்

 

779      என்றனாலுனையிழைத்தபூசனை

நன்றதாக்கொளும்வரமுநல்குவா

யொன்றுமித்தலத்துறைவபவர்க்கெலாங்

கன்றுபாதகங்கழிதல்வேண்டுமால்

 

780      இரதவீதியானினிதியற்றிநின்

றிருவுளம்மகிழ்செய்யவேண்டுமாற்

பரவுபன்னகாபரணநீயெனாக்

கருணையங்கடல்கருணைசெய்குவான்

 

781      கந்தமேவுநற்கமலயோநிகேண்

முந்தைநாண்முயன்முடிவில்பாதக

நந்துகின்றதானன்கினீநவி

லந்தநல்வரமவையளித்தனம்

 

782      வித்தகந்தருவெள்ளைமேனியாள்

சத்தமாதவத்தலைவர்சூழநீ

பத்தியோடுநின்பதத்திலேகெனா

வத்தனந்தலிங்கத்தமர்ந்தனன்

 

783      அத்தனந்தலிங்கத்தமர்ந்தபின்

பத்தியாலயன்படியிற்றாழ்ந்தெழீஇ

வித்தகந்தருவிழாநடத்தியே

சத்தியவ்வுலகத்திற்சார்ந்தனன்

 

784      மன்னுபிரமகைவர்த்தந்தன்னினற்

பொன்னுலாவுதென்பூவணக்கதை

யின்னதேழ்தலையிட்டவெழுபதாய்ப்

பன்னுமத்தியாயம்பகர்ந்திடில்

 

வேறு

785      பிரமசாபமகற்றிடுமிக்கதைபெருகுகாதலினித்தமுமோதுவோ

ருரியஞானவுரைப்பொருள்செப்பினரொருமையோடுசெவிகொடுத்தோர்குவோர்

கருணையால்வரைகுற்றநர்கற்குநர்கழறுகாதைகருத்தினினாடுவோர்

மருவிநீடுசுவர்க்கமதுற்றரமகளிர்சூழவிருப்பரெந்நாளுமே

பிரமசாபமோசனச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 785

*****

 

 

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *